ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2021
பார்வையிட்டோர்: 2,546 
 

அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 | அத்தியாயம்-27

ரகுராமன் “ரமா,இந்த வயசுக்குஅப்புறமா எனக்கு என்ன சௌக்கியம் வேண்டிக் கிடக்கு.அத்தி ம்பேர் இல்லாத இந்த ஆம் எனக்கு சூனியமா இருக்கு.எங்கே திரும்பினாலும் அவர் இருக்கார் போல வே இருக்கு.என்னாலே அவரே மறக்கவே முடியலே.நீ உன் உடம்பே ஜாக்கிறதையா வச்சுண்டு வா.நீ எங்கோ வடக்கே இருந்துண்டு வறே.எனக்கு அங்கே எல்லாம் வறத் தெரியாது.உனக்கு சமைச்சுப் போடணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.ஆனா அது முடியாதே.எனக்கு நீ அடிக்கடி ‘போன்’ பண்ணீ பேசிண்டு இரு.அப்பா தான் இந்த ஆத்லே இல்லையேன்னு நினைச்சுண்டு இந்த மாமாவை மறந்துடாதே” என்று அழுதுக் கொண்டே சொன்னான்.

உடனே ரமா “மாமா,நீங்க கவலைப் படாம இருந்துண்டு வாங்கோ.நீங்கோ வடக்கே எல்லாம் கஷ்டப் பட்டுண்டு வர வேணாம்.நான் அடிக்கடி உங்களுக்கு ‘போன்’ பண்ணிப் பேசறேன்” என்று சொல்லி விட்டு ‘போனை’க் ‘கட்’ பண்ணினாள்.

ரமாவுக்கு அம்மா அப்பா இருந்த வீட்டுக்குப் போகவே மனம் இஷ்டப் படவில்லை.

மாசம் ஒரு தடவை மாமாவுக்கு ‘போன்’ பண்ணி அவர் சௌக்கியத்தை விசாரித்துக் கொண்டு வந்தாள் ரமா.

கிரணுக்கு நாலு வயது ஆனதும் சுரேஷ் அவன் தெரு ஓரத்தில் இருந்த ஒரு ‘நர்ஸரி’ பள்ளீக் கூடத்தில் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டு இருந்தான்.காலையிலே அவன் ‘ஆபீஸ்’ போகும் போது கிரணை பள்ளி கூடத்தில் விட்டு விட்டு போய்க் கொண்டு இருந்தான்.

மதியம் பன்னண்டு மணிக்கு வரதன் அந்த ‘நர்ஸரி’ பள்ளிக் கூடத்துக்குப் போய் கிரணை வீட் டுக்கு அழைத்து வந்துக் கொண்டு இருந்தார்.

ஒரு நாள் திடீரென்று ரகுராமன் ரமாவுக்கு ‘போன்’ பண்ணினான்.

”ரமா,எனக்கு இவ்வளவு பெரிய ஆத்லே இருந்து வர பிடிக்கவே இல்லே.இவ்வளவு பணத்தே வச்சுண்டு வரவும் பிடிக்கலே.அதனாலே நான் இந்த ஆத்தை என்ன விலைக்குப் போறதோ அந்த விலைக்கு வித்துட்டு,அந்த பணத்தையும்,அத்திம்பேர் ‘பாங்க்லே’ வச்சுட்டுப் போன பணத்தையும் ஒன்னா சேத்து அக்கா அத்திம்மேர் பேர்லே ‘காஞ்சி மடத்துக்கு’’டொனேஷனா’ குடுத்துட்டு,அந்த மடத்லே ஒரு சமையல் காரனா இருந்து வரலாம் முடிவு பண்ணி இருக்கேன்.அதனால்லே நீ எப்போ தாவது சென்னைக்கு வந்தா,நான் இந்த ஆத்லே இருக்க மாட்டேன்.முடிஞ்சா என்னே ‘காஞ்சி மடத் லே’ வந்து பாரு” என்று சொன்னான்.

உடனே ரமா “மாமா,நீங்க ரொம்ப நல்ல காரியம் பண்ணப் போறேள்.அம்மா அப்பா பேர்லே ‘காஞ்சி மடத்துக்கு’ ‘டொனேஷன்’குடுத்தா அவா ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷப் படுவா.நான் சென்னைக்கு வந்தா நிச்சியமா ‘காஞ்சி மடத்துக்கு’ வந்து உங்களே பாக்கறேன்” என்று சொல்லி விட் டு ‘போனை’ ‘கட்’ பண்ணினாள்.

ரொம்ப நேரம் ரமா தன் மாமா பண்ணி இருக்கும் நல்ல காரியத்தை நினைத்து மனதில் சந் தோஷப் பட்டாள்.

’ரகு மாமாவுக்கு எவ்வளவு பெரிய மனசு.அப்பா வச்சுட்டுப் போய் இருக்கும் ஆத்தையும் பணத் தையும் வச்சுண்டு சந்தோஷமா இருந்துண்டு வராம,அப்பா அம்மா பேர்லே ‘காஞ்சி மடத்துக்கு’ ‘டொ னேஷனா’க் குடுத்துட்டு,தன்னுடைய பழைய சமையல் கார வாழ்க்கைக்கு போக முடிவு பண்ணீ இருக்காரே’ என்று நினைத்து ஆச்சரியப் பட்டாள்.
ரமா வழக்கம் போல தன் கலெக்டர் வேலையை செய்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந் தாள்.அடிக்கடி அவளுக்கு ‘எப்போ நாம டெல்லிக்குப் போய் தன் கணவனையும் குழந்தையையும் பாக்கப் போறோம்’ என்று ஏங்கி வந்துக் கொண்டு இருந்தாள்.

’நாம ஒரு கலெக்டர் ஆகியும் டெல்லிக்குப் போக முடியவில்லையே’ என்று நினைத்து மனம் வருந்தி வந்தாள் ரமா.

‘ஏன் நாம மேலிடத்துக்கு ஒரு விண்ணப்பம் எழுதி டெல்லிக்கு மாற்றல் கேட்கக் கூடாது’ என்று ஆசைப் பட்டாள்.

அதற்கான ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அன்று சாயங்காலம் கோவிலுக்குப் போய் விட்டு,தெரு ஓரமாக வந்துக் கொண்டு இருந்த ராஜ த்தை வேகமாக ‘ஸ்கூட்டரை’ ஓட்டிக் கொண்டு வந்த ஒரு இருபது வயசுப் பையன் மோதி கீழே தள்ளி விட்டு, ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிக் கொண்டு போய் விட்டான்.

ராஜம் இடித்த வேகம் தாங்காமல் தடாலேன்று தெரு ஓரத்திலே இருந்த நடைப் பாதையிலே இருந்த ஒரு கல் மேலே விழுந்து விட்டாள்.அவள் தலையிலே பலத்த அடிப் பட்டு தலையிலே இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டு இருந்தது.

இதை கவனித்த ஒரு நல்லவர் உடனே ஓடி வந்து ராஜத்தை மெல்ல தூக்கி உட்கார வைத்து, அவள் தலையிலே தன் கை குட்டையை இறுக்கக கட்டினார்.

கட்டியும் ராஜத்தின் தலையில் இருந்து ரத்தம் வந்துக் கொண்டு இருந்தது.உடனே அவர் ராஜ த்தின் விலாசத்தை கேட்டு,ஒரு ஆட்டோவை வைத்துக் கொண்டு ராஜத்தை மெல்ல பிடித்து அவள் வீட்டில் விட்டுப் விட்டுப் போனார்.

தலையிலே கட்டுடன் வந்த ராஜத்தைப் பார்த்த வரதன் பதறிப் போனார்.

ராஜத்தின் தலையில் இருந்து இன்னும் ரத்தம் கசிந்துக் கொண்டு இருந்தது.அந்த நேரம் பார் த்து சுரேஷ் வேலையில் இருந்து வீட்டு வந்தான்.

அம்மா தலைலே கட்டும்,ரத்தம் கசிந்துக் கொண்டு இருப்பதையும் பார்த்து விட்டு சுரேஷ் பதறிப் போய்,அப்பாவை வீட்டிலே இருக்கச் சொல்லி விட்டு,வாசலில் போய்க் கொண்டு இருந்த ஒரு ஆட்டோவை அழைத்து,அம்மாவை அருலில் இருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு போ ய் காட்டினான்.

ராஜத்திற்கு தலையிலே இருந்து அதிகமான ரத்தம் போய் விட்டு இருந்ததால் அவள் மயக்கம் ஆகி இருந்தாள்.

ராஜத்தை பா¢சோதனை பண்ணீன டாக்டர் சுரேஷைப் பார்த்து “இவங்களுக்கு, நிறைய ரத்தம் போய் விட்டு இருக்கு.உடனே இவங்களுக்கு ரத்தம் செலுத்தி ஆகணும்”என்று சொல்லி விட்டு ராஜத் தை அந்த ஆஸ்பத்திரியிலே ‘அட்மிட்’ பண்ணி, ராஜத்தின் ரத்த ‘க்ரூப்’என்ன என்று கண்டு பிடித்து அந்த ரத்ததை ‘ப்ளட் பாங்கில்’ இருந்து வர வழைத்து ராஜத்துக்கு ஏற்ற ஆரம்பித்தார்கள்.

சுரேஷ் உடனே அப்பாவுக்கு எல்லா விஷயத்தையும் ‘போனி’ல் சொன்னான்.

வரதன் மிகவும் கவலைப் பட்டு “சுரேஷ்,அம்மாவுக்கு ஒன்னும் ஆகாதே.அவ பிழைச்சுண்டு வாளான்னோ” என்று ஒரு சின்ன குழந்தையைப் போல கேட்டார்.

சுரேஷ் “அப்பா.இப்போ தான் அம்மாவுக்கு ரத்தம் குடுக்க ஆரம்பிச்சு இருக்கா.நான் உங்களுக் கு அடிக்கடி ‘போன்’ பண்ணீ அம்மா கண்டிஷனை பத்தி சொல்றேன்” என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீனான்.

வரதன் சுவாமியை வேண்டிக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.

ஒரு அரை மணி நேரம் கழித்து ரத்தம் செலுத்திக் கொண்டு இருந்த டாக்டர் சுரேஷூடம்” சார், அவங்களுக்கு நாங்க குடுக்கற ரத்தம் உடம்ப்லே ஏறலே.அவங்க ரொம்ப மயக்காமா இருக்காங்க. அவங்க ‘ஹார்ட் பீட்டும்’ ரொம்ப மோசமா இருக்கு.அவங்க ‘ஹார்ட் பீட்’ நல்லா ‘இம்ப்ரூவ்’ ஆவணும். ’ஹார்ட்பீட்’ ‘இம்ப்ரூவ்’ ஆகி,நாங்க குடுக்கற ரத்தம் அவங்க உடம்ப்லே ஏறணும்.அப்போ தான் நாங்க அவங்க பிழைப்பாங்களா,இல்லையான்னு சொல்ல முடியும்” என்று சொன்னதும் சுரேஷூக்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.

உடனே அவன் அழுதுக் கொண்டே அப்பாவிடம் டாக்டர் சொன்னதை சொல்லி விட்டு அழு துக் கொண்டு இருந்தான்.

சுரேஷ் சொன்னததை கேட்ட வரதன் ஆடிப் போய் விட்டார்.

அவர் உடனே சுவாமி படத்துக்கு முன்னால் நின்றுக் கொண்டு “என் ராஜத்தை அழைச்சுண்டு டாதேப்பா முருகா.அவளை பிழைக்க வைப்பா” என்று கதறி வேண்டிக் கொண்டு இருந்தார்.

ஒரு அரை மணி நேரம் கழித்து அந்த டாக்டர் “வொ¢ சாரி சார்,அவங்க ‘ஹார் பீட்’ முழுக்க நின் னுப் போச்சு.ரததம் அவங்க உடம்ப்லே கொஞ்சம் கூட ஏறலே.அவங்க இறந்துட்டாங்க” என்று சொல் லி விட்டுப் போய் விட்டார்.

சுரேஷ் அழுதுக் கொண்டே “அப்பா,அம்மா ‘ஹார்ட் பீட்’ முழுக்க நின்னுப் போய்.டாக்டர் குடு த்த ரத்தம் அம்மா உடம்ப்லே ஏறலே.அம்மா இந்த உலகத்தே விட்டுப் போயிட்டா” என்று சொல்லி விட்டு அழுதுக் கொண்டு இருந்தான்.

வரதன் சுரேஷ் சொன்னதைக் கேட்டதும் ‘தொப்’பென்று தன் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்.

அவருக்கு உலகமே இருண்டு விட்டது.

சுரேஷ் ஆஸ்பத்திரிக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டி விட்டு அம்மாவைம் ‘பாடி’யை எடு த்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

ராஜம் தவறிப் போன செய்தியைக் கேட்டு,டெல்லியிலேயே வசித்து வந்த வரதனின் தம்பி சுந்த ரும்,அவன் மணைவி ரேகாவும்,சின்ன வயதிலே கணவனை இழந்து சுந்தரோடு இருந்து வந்த சுஜா தாவும் வரதன் வீட்டுக்கு வந்தார்கள்.

ராஜத்தின் தம்பியும் நளினியும் வரதன் வீட்டுக்கு வந்தார்கள்.

எல்லோரும் வரதனுக்கும் சுரேஷூக்கும் ஆறுதல் சொன்னார்கள்.

அடுத்த நாள் சுரேஷ் அம்மாவை எடுத்துக் கொண்டு போய் ‘தகனம்’ பண்ணி விட்டு வந்தான்.

ராமசாமியும் நளினியும் அத்திம்பேருடனும்,சுரேஷூடனும் சொல்லிக் கொண்டு அவர்கள் பங்க ளாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.

சுரேஷ் அம்மாவுக்கு பன்னண்டு நாள் ‘காரியங்களையும்’ பண்ணி முடித்தான்.

‘பன்னண்டு நாள்’ காரியங்கள் முடிந்ததும் வீட்டை ‘புண்யாவசனம்’ பண்ணினான் சுரேஷ்.

வரதனின் தம்பி சுந்தரும்,அவன் மணவி ரேகாவும்,சின்ன வயதிலே தன் கணவனை இழந்த சுஜாதாவும் ஒரு நாள் வரதன் வீட்டில் தங்கி இருந்தார்கள்.

வரதன் தன் தம்பி சுந்தரைப் பார்த்து “சுந்தர்,உனக்கு நன்னா தொ¢யும்.ராஜத்துக்கும் சுஜாதாவு க்கும் ரொம்ப ஒத்துப் போகலே.பாவம் அவளை நீயே இத்தனை வருஷமா வச்சுண்டு வந்து இருக்கே. சேகர் அகாலமா செத்துப் போனப்ப நானும் ராஜமும் சுஜாதா ஆத்துக்கு போய் துக்கம் கேட்டு விட்டு வந்தோம்.கொஞ்ச நேரம் தான் நாங்க சுஜாதா ஆத்லே இருதோம்.’போகணும்,‘போகணும்’ன்னு ராஜம் அவசரப் படுத்தவே நான் கிளம்பி வந்துட்டேன்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “அப்புறமா ரொம்ப நாள் நான் ஆத்துக்காரர் இல்லாம கஷ்டப்பட்டுக் கொண்டு வரும் சுஜாதாவை பாக்கணும்னு ரொம்ப ஆசைப் பட்டேன்.ஆனா ராஜம் என்னே ‘சுஜாதா ஆத்துக்கு நீங்கோ போகக் கூடாது.அவளும் உங்கே வரக் கூடாது’ன்னு பிடிவாதம் பிடிச்சுண்டு வந் தா.உனக்கு நன்னாத் தொ¢யும்.ராஜத்தே மீறிண்டு என்னாலே ஒன்னும் பண்ண முடியாதே” என்று சொல்லி தன் கண்களை மறுபடியும் துடைத்துக் கொண்டார்.

“பெரிய அண்ணாவான நான் உசிரோடு இருந்தும்,பாவம் சுஜாதா உன் கூடவே இத்தனை வரு ஷமா இருந்துண்டு வறா.இப்ப ராஜம் அவ காலம் முடுஞ்சி பகவான் கிட்டே போய் சேந்துட்டா.கொஞ் ச வருஷமாவது நான் சுஜாதாவை நான் இந்தாத்லே வச்சுண்டு வறேனே.எனக்கு சமைக்க வராதுன்னு உனக்கு நன்னா தொ¢யும் சுந்தர்.கிரணும் இன்னும் சின்ன பையன்.சுரேஷ் ‘ஆபீஸ்’க்குப் போய் வர ணும்” என்று கண்களில் கண்ணீர் மல்க சொன்னார்.

அடுத்த நிமிஷமே “அம்மா சுஜாதா,எனக்கு அவசியம் ஏற்படும் போது இந்த அண்ணன் உன் னே இங்கே இருக்கச் சொல்றேன்னு என்னே தப்பா எடுத்துக்காதே.என் நிலைமை அப்படி இருந்தது. இதே நினைச்சு நான் எத்தனையோ நாள் அழுது இருக்கேன்னு உனக்குத் தொ¢யாது.உன்னே நான் என்னோட வச்சுண்டு கொஞ்ச வருஷம் சாதம் போட்டேன்னா தான் எனக்கு கொஞ்சம் நிம்மதி கிடை க்கும்.நான் என் கண்ணே மூடறது முன்னாடி ஒரு தடவையாவது உன்னே பாப்பேனோ,பாக்க மாட் டேனோன்னு ஏங்கிண்டு இருந்தேன்.தயவு செஞ்சி என் கூட கொஞ்ச வருஷம் நீ இருந்துண்டு வரு வியாம்மா” என்று சுஜாதாவின் கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சினார் வரதன்.
அவர் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

உடனே சுஜாதா “பெரிய அண்ணா,’அவர்’ ‘அகாலமா’ தவறி போனப்ப எனக்கு வாழ்ந்து வரவே இஷ்டம் இல்லே.கொஞ்சம் விஷத்தே குடிச்சுட்டு என் உயிரே மாய்ச்சுக்கலாம்ன்னு தான் இருந்தேன். ஆனா நான் அந்த மன நிலைலே இருப்பதை பாத்த சின்ன மன்னி,தான் சின்ன அண்ணா கிட்டே சொல்லி,என்னை உடனே அவா ஆத்துக்கு அழைச்சுண்டு வந்து வச்சுண்டா.அப்பவும் எனக்கு இந்த உலகத்லே வாழ்ந்து வரணும்ன்னு ஆசை இல்லாம தான் இருந்தேன்.ஆனா சின்ன மன்னி பொண்ணு
சுமதி என் கிட்டே ரொம்ப ஆசையா இருந்துண்டு வந்தா”என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண் ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் “சுமதியே எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.’பகவான் எனக்கு போட்டு இருக்கிற காலத்தை நாம கழிச்சுட்டு போறது தான் நல்லது’ன்னு முடிவு பண்ணேன்.சின்ன மன்னிக் கு மட்டும் என் மன நிலை தொ¢யாம இருந்து,குழந்தே சுமதியின் ஆசையும் எனக்கு கிடைக்காம இரு ந்து இருந்தா,நான் இந்த லோகத்தே விட்டுப் பரலோகம் போய் ரொம்ப வருஷம் ஆயி இருக்கும்” என்று சொல்லி மறுபடியும் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் சுஜாதா.

உடனே வரதன் ”அப்படியா சுஜாதா.நாம எல்லோரும் ரேகாவுக்கும்,குழந்தே சுமதிக்கும் தான் ‘தாங்க்ஸ்’ சொல்லணும்”என்று சொன்னதும் சுந்தர் “ஆமாண்ணா.சுஜாதாவோட மன நிலையை ரேகா என் கிட்டே சொன்னவுடனே,நான் சுஜதாவை என் கிட்டேயே வச்சுண்டுட்டேன்.சுமதியும் ‘அத்தே’ ‘அத்தே’ன்னு சுஜாதா கிட்டே ரொம்ப பாசமா இருந்துண்டு இருந்தா ”என்று சொன்னான்.

தன் பெரிய அண்ணன இப்படி கெஞ்சு¢வதைப் பார்த்த சுஜாதாவின் மனம் இளகியது.

உடனே சுஜாதா “அண்ணா,உங்க நிலைமை எனக்கு நன்னாத் தொ¢யும்.என்னவோ எனக்கும் பெரிய மன்னிக்கும் ஒத்துப் போகலே.அவ என்னே ரொம்ப வெறுத்துண்டு வந்தா.நான் உங்க ஆத்துக் கு வறதே பெரிய மன்னி ஒரு‘அபசகுனம்’ன்னு நினைச்சுண்டு இருந்தா.நான் ஏழைன்னு பெரிய மன் னிக்கு எண்ணம்.பெரிய மன்னிக்கு பணக்காராத் தான் ரொம்ப பிடிக்கும்.பெரிய மன்னி அகாலமா இந்த லோகத்தே விட்டு போயிட்டா.நான் இப்போ பெரிய மன்னியே பத்தி ஒன்னும் சொல்லக் கூடா து.அவ இப்போ நம்மதியா பகவான் கிட்டே போய் சேந்துட்டா.நான் உன் கூட இருந்து உங்களுக்கும் சுரேஷூக்கும் கிரணுக்கும் சமைச்சுப் போடறேன்.நீங்கோ சந்தோஷமா இருந்து வந்தா போறும்”என்று சொன்னாள்.

”அம்மா சுஜாதா,நீ இவ்வளவு சீக்கிரமா ஒத்துண்டு என் கூட இருக்கப் பிரியப் படுவேன்னு நான் நினைக்கவே இல்லே.உனக்கு ரொம்ப ‘தாங்ஸ்ம்மா’.கிரண் கூட உன் மேலே ரொம்ப பாசமா இரு ந்துண்டு வருவான்னு நான் நினைகிறேன்” என்று தங்கையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழு தார் வரதன்.

சுஜாதா தன் அண்ணன வீட்டில் இருந்து வறேன்னு சொன்னத்தை கேட்டு மிகவும் சந்தோஷப் பட்டான் சுந்தரும் ரேகாவும்.

அண்ணாவைப் பார்த்து “அண்ணா,நானும் ரேகாவும் ராஜம் மன்னி அகாலமா தவறிப் போன ப்பநீங்களும்,சுரேஷூம்,குழந்தை கிரணுக்கும் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுண்டு வருவீங்களே ன்ன்னு நினைச்சுண்டு இருதோம்.ஆனா,நல்ல வேளையா சுஜாதா உங்க ஆத்துக்கு வந்து சமைச்சுப் போட சம்மதிச்சு இருக்கா.எங்க ரெண்டு பேருக்கும் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொ ன்னான் சுந்தர்.

கொஞ்ச நேரம் இருந்து விட்டு சுந்தரும்,ரேகாவும்,வரதனிடமும்,சுஜாதாவிடமும்,சுரேஷிடமும் சொல்லிக் கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போனார்கள்.

அவர்கள் கிளம்பிப் போனப் பிறகு சுரேஷ் தன் அத்தையைப் பார்த்து ”உங்களுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’ அத்தே.நீங்க மட்டும் இங்கே இருக்கமாட்டேன்னு சொல்லி இருந்தா நானும்,அப்பாவும் கிர ணும் ரொம்ப கஷ்டடப் பட்டுக் கொண்டு வந்துண்டு இருப்போம்”என்று சொன்னான்.பிறகு சுரேஷ் கிரணப் பார்த்து “கிரண்,இந்த அம்மா வேறே யாரும் இல்லே.நம்ம அப்பா கூட பொறந்த சொந்தத தங்கை.அத்தே இத்தனை வருஷமா சித்தப்பா ஆத்லே இருந்துண்டு வந்தா.பாட்டி இறந்துப் போன தாலே,நமக்கு சமைச்சுப் போட இங்கே வந்து இருக்கா.நீ அத்தே பாட்டிக்கு ஒரு தொந்தரவும் தராம, துஷ்டத்தனம் பண்ணாம,அத்தே பாட்டி மேலே ரொம்ப பாசமா இருந்துண்டு வரணும்.தொ¢யறதா” என்று சொன்னான்.

உடனே கிரண் “சரிப்பா,நான் துஷ்டத்தனம் பண்ணாம,தொந்தரவும் குடுக்காம.அத்தே பாட்டி மேலே ஆசையா இருந்துண்டு வறேன்” என்று சொன்னதும் சுஜாதா,கிரணைத் துக்கிக் கொண்டு “கிரண்,நீ பேசறதே கேக்க இந்த அதே பாட்டிக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.இந்த அத்தே ப் பாட்டியே உனக்கு பிடிச்சு இருக்கா”என்று கேட்டாள்.”ரொம்ப பிடிச்சு இருக்கு அத்தேப் பாட்டி” என்று சொன்னான்.

அன்றில் இருந்து சுஜாதா வரதன் வீட்டில் சமைத்துப் போட்டுக் கொண்டு வந்தாள்.

அடுத்த நாள் மத்தியான வேலையிலே சாப்பிட்டு முடிஞ்சதும் சுஜாதா தன் பெரிய அண்ண னிடம் மனம் விட்டுப் பேச ஆரம்பித்தாள்.

அப்படி பேசிக் கொண்டு இருந்த போது “அண்ணா,எனக்கு கல்யாணம் ஆனவுடனே நான் அவரோடு சந்தோஷமா வாழ்ந்துண்டு வறணும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டேன்.ஆனா விதி என் வாழ் க்கையிலே விளயாடி ‘அவரை’ என் கிட்டே இருந்து பிரிச்சுடுத்து.நான் சின்ன வயசிலே என் ஆசையே எல்லாம் பொசுக்கிண்டு வாழ்ந்துண்டு வறேன்” என்று சொல்லி கண்களில் கண்ணீர் விட்டாள்.

தங்கை சொன்னதைக் கேட்டு வரதம் மிகவும் வருத்தப் பட்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் சுஜாதா வரதனைப் பார்த்து “ஏண்ணா,சுரேஷ் இப்படி தனியா இருந்து ண்டு வறான்.அவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் ஏதாவது ‘சர்ச்சை’ வந்து, அவ சுரேஷை விட்டு அவ ஆத்துக்குப் போயிட்டாளா.இல்லே அந்தப் பொண்ணு சுரேஷை விவாக ரத்துப் பண்ணிட்டுப் போய்ட்டாளா”என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
உடனே வரதன் “இல்லே சுஜாதா,ரமா சுரேஷைக் கல்யாணம் பண்ணீண்டு இங்கே வந்தா நாள் ளே இருந்து அவளுக்கு ‘சிவில் சர்விஸஸ்’ பா¢¨க்ஷ எழுதி ஒரு கலெக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசை. அவ படிக்கறேன்னு சொன்னதும் ராஜம் அவளே பாத்து ‘ரமா ஒரு வேலேக்குப் போய் வரணும்’ ன்னு சொல்லி பிடிவாதம் பிடிச்சுண்டு வந்தா.இதுக்கு நடுவிலே ரமாவுக்கு கரண் பொறந்துட்டான். ரமா கிரணுக்கு ஒரு வருஷம் மூனு மாசம் ஆனதும் மறுபடியும் சிவில் சர்விஸஸ்’ பா¢¨க்ஷ எழுதி ஒரு கலெக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசைன்னு சொல்லி படிக்கிறேன்னு சொன்னா.இப்பவும் ராஜம் அவளே ’நீ ஒரு வேலேக்குதான் போய் வரணும்.இந்த படிப்பு எல்லாம் நீ கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணீ இருக்க ணும் சொல்லி வற்புறுத்தி வந்தா” என்று சொல்லி,கொஞ்சம் இருமி விட்டு மறுபடியும் தொடர்ந்தார்.

“ஒரு நாள் ரமா ‘எனக்கு மேலே படிக்கணும்னு ஆசையா இருக்கு.நான் இந்த ஆத்தே விட்டுப் போறேன்.என்னே யாரும் தேட வேணாம்ன்னு’ ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு. இந்த ஆத்தே விட்டுப் போயிட்டா.ராஜம் சுரேஷைப் பாத்து “சுரேஷ்,நீ சென்னைக்கு ‘போன்’ பண்ணி, ரமா அங்கே வந்து இருந்தா உடனே டெல்லிக்கு அனுப்புங்கோன்னு சொல்லு”என்று ‘கம்பெல்’ பண்ணி வந்தாள்.உடனே சுரேஷ் “நான் ‘சென்னைக்கு எல்லாம் ‘போன்’ பண்ணி ஒன்னும் கேக்க மாட்டேன்.ஓடிப் போன ரமா மறுபடியும் அவளா இந்த ஆத்துக்கு வந்தா வரட்டும்.நான் தனியா கிரணை வளத்து வறேன்னு சொல் லிட்டான்.சுரேஷ் சொன்ன பிற்பாடு நானும் ராஜமும் சும்மா இருந்துட்டோம்” என்று வருத்தப் பட்டுக்
கொண்டே என்று சொன்னார்.
சுஜாதா வரதனைப் பார்த்து “அப்படி ஆயிடுத்தா.கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. கல்யா ணம் ஆயி,ஒரு குழந்தைப் பொறந்தும்,அந்தப் பொண்னுக்கு அப்படி என்ன மேலே படிக்க ஆசையோ. பாவம் சுரேஷ் இந்த சின்ன வயசிலே,சின்னக் குழந்தையான கிரணை வச்சுண்டு தனியா வாழ்ந்து ண்டு வரணுமேன்னு நினைச்சா வருத்தமா இருக்கு” என்று சொன்னாள்.

அன்று காலையிலே எழுந்த வரதன் தனக்கு ரொம்ப நெஞ்சே வலிக்கடது என்று சொன்னவுட ன் சுரேஷ் மிகவும் கவலைப் பட்டான்.அவன் உடனே “அப்பா, நீங்க ராத்த்ரி உங்க BPமாத்திரை போட்டுண்டு படுத்துண்டேளா” என்று கவலையுடன் கேட்டான்.

உடனே வரதன் சுரேஷைப் பார்த்து” சுரேஷ் எனக்கு இப்போ எல்லாம் ரொம்ப ஞாபக மறதி ஜாஸ்தியா இருக்கு.நான் BPமாத்திரை போட்டுண்டேனா,இல்லையான்னு நேக்கு சரியா ஞாபகம் இல்லை.நான் மறந்துட்டு கூட இருக்கலாம்” என்று சொல்லி விட்டு தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு “சுரேஷ் எனக்கு ஞெஞ்சே ரொம்ப வலிக்கறது”என்று சொன்னதும் வரதன் மிகவும் கவலைப் பட்டு, தன் ‘ஆபீஸ்’ நண்பன் ஒருவருக்கு ‘போன்’ பண்ணீனான்.

தன் நண்பன் ‘போனில்’ வந்ததும் “ஜார்ஜ்,என் அப்பாவுக்கு காத்தாலே எழுந்ததில் இருந்து தன் நெஞ்சை ரொம வலிக்கறதுன்னு சொல்லிண்டு இருக்கார்.நான் அவரை ‘ஹாஸ்பிடலு’க்கு அழை ச்சுண்டு போறேன்.அதனால் நம்ம ‘பாஸ்’ கிட்டே ஒரு நாள் லீவு எடுத்தறேன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று கேட்டதும் அவன் உடனே “சுரேஷ்,நீ உன் அப்பாவை உடனே ‘ஹாஸ்பிடலு’க்கு அழைச்சு கிட்டுப் போய் காட்டு.நான் நம்ம ‘பாஸ்’ கிட்டே,நீ இன்னைக்கு ஆபீஸ் வர மாட்டேன்னு சொல்லிலிடறேன்” என்று சொன்னதும்,சுரேஷ் ஜார்ஜ்க்கு நன்றி சொல்லி விட்டு ‘போனை’க் ‘கட்’ பண்ணீனான்.

சுரேஷ் ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு தன் அப்பாவை அதிலே ஏற்றிக் கொண்டு, பக்கத்திலே இருந்த ‘ஹாஸ்பிடலு’க்கு ஓடினான்.

ஆட்டோவில் இருந்து மெல்ல தன் அப்பாவை இறக்கி அவரை கைக் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு போய் ‘எமர்ஜென்ஸியில்’ இருந்த டாகடர் கிட்டே காட்டினான்.அந்த டாக்டர் வரதனை நன்றாக ‘செக் அப்’ பண்ணி விட்டு “சார்,இவர் ‘ஹார்ட் பீட்’ ரொம்ப ‘எராடிக்கா’ இருக்கு.இவருக்கு உடனே ‘ஆஞ்சியோ’ எடுத்துப் பாக்கணும்.அப்போ தான் இவர் ‘ஹார்ட்லே ப்லாக்’ இருக்கான்னு தொ¢ யும்”என்று சொல்லி விட்டு சுரேஷை அவன் அப்பாவுக்கு ‘ஆஞ்சியோ டெஸ்ட்’ எடுத்துக் கொண்டு வர சொன்னார்.
உடனே சுரேஷ் அப்பா ‘ஆஞ்சியோவு’க்கு எவ்வளவு பணம் ஆகும் என்று கேட்டு அந்த பணத் தை கட்டி விட்டு, அவரை ‘ஆஞ்ச்யோ செக்ஷனுக்கு’ அழைத்துக் கொண்டு போனான்.
ஏற்கெனவே மூனு பேருக்கு ஆஞ்சியோ எடுக்க வேண்டு இருந்ததால் சுரேஷ் தன் அப்பாவை, அந்த ‘ஹாஸ்பிடல்’ காண்டீனுக்கு அழைத்துக் கொண்டு போய் ‘காபி’ ‘டிபன்’ வாங்கிக் கொடுத்து அவனும் ‘காபி’ ‘டிபனை’ சாப்பிட்டான்.
பிறகு காண்டீனில் இருந்து வந்து ஆஞ்சியோ எடுக்கும் இடைத்திலெ போட்டு இருந்த சேரில் தன் அப்பாவை மெல்ல உட்கார வைத்து விட்டு,அவனும் கூட உட்கார்ந்துக் கொண்டு இருந்தான். ஆஞ்சியோ டாக்டர் கூப்பிட்டதும் சுரேஷ் அதன் அப்பாவை அழைத்துக் கொண்டு அந்த ‘ரூமி’ல் விட்டு விட்டு வெளியே வந்து உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.

ஒரு மணி நேரம் கழித்து அந்த ஆஞ்சியோ டாக்டர் வரதனை ‘வீல் சேரில்’ அழைத்து வந்து சுரேஷிடம் விட்டு விட்டு “சார்,இவர் ‘ஹார்ட் கண்டிஷன்’ அத்தனை நல்லாவே இல்லே.இவருக்கு மூனு இடத்திலே ‘ப்லாக்’ இருக்கு.நான் இவருக்கு ‘பை பாஸ் சர்ஜா¢’ பண்ண வேண்டியது அவசியம் ன்னு ‘பீல்’ பண்றேன்.நீங்கஇன்னைக்கே அவரை இங்கே ‘அட்மிட்’ பண்ணீ விடுங்க.நாங்க அவரு க்கு பண்ண வேண்டிய ‘டெஸ்டுகளை’ எல்லாம் பண்ணி விட்டு,நாளைக்கு காத்தாலே ஐஞ்சு மணிக் கு நான் இவருக்கு ‘பை பாஸ் சர்ஜா¢’ பண்ணீ விடறேன்” என்று சொன்னார்.

டாக்டர் சொன்னதைக் கேட்டு சுரேஷ் பயந்துப் போனான்.

பிறகு தன்னை சமாளித்துக் கொண் டு “டாக்டர்,நீங்க சொல்ற ‘பை பாஸ்’ சர்ஜா¢க்கு எவ்வளவு பணம் நான் கட்ட வேண்டி இருக்கும்” என்று கேட்டவுடன் அந்த டாக்டர் ‘பை பாஸ் சர்ஜா¢க்கு’ ஒன் னரை லக்ஷ ரூபாய் ஆகும்.அப்புறம் அவரை ரெண்டு நாள் ‘அப்சர்வ்’ பண்ணி விட்டுத் தான் வீட்டு க்கு அனுப்புவோம்.அந்த ரெண்டு நாள் ‘பெட்சார்ஜ்,மருந்துகள் எல்லாம் மொத்தம் சேர்ந்து தோராயமா ரெண்டு லக்ஷம் ரூபாய் ஆகும்” என்று சொன்னவுடன் சுரேஷ் “சார்,என் கிட்டே இப்போ அவ்வளவு பணம் இல்லே.நான் வீட்டுக்கு போய் பணத்தை ரெடி பண்ணிண்டு வந்து,என் அப்பாவை ‘பை பாஸ் சர்ஜா¢க்கு அட்மிட்’ பண்றேன் ”என்று சொன்னான்.

உடனே அந்த டாக்டர் “சார்,நீங்க ரொம்ப நாள் ‘டிலே’ பண்ணாதீங்க.அவருக்கு மூனு ‘ப்லாக்’ இருக்கு.அதனாலே அவர் ‘ஹார்ட் பீட் இர்ரெகுலரா’ இருக்கு.நீங்க சீக்கிரமா அவருக்கு ‘பை பாஸ் சர்ஜா¢’ ரொம்ப பண்ணா நல்லது.அப்புறமா அவருக்கு ஏதாச்சும் ‘சீரியஸ்ஸா’ ஆனா என்னே ‘ப்லேம்’ பண்ணாதீங்க” என்று எச்சரித்தார்.சுரேஷ் “நான் எவ்வளவு சீக்கீரமா பணத்தை ‘அரேன்ஜ்’ பண்ண முடியுமோ அத்தனை சீக்கிரமா பண்ணி விட்டு அவரை இங்கே கொண்டு வந்து ‘பை பாஸ் சர்ஜா¢க்கு’ ‘அட்மிட்’ பண்றேன்” என்று சொல்லி விட்டு அப்பாவை மெல்ல எழுப்பி, ஒரு ஆட்டோவை வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

வீட்டுக்கு வந்து எல்லா விஷயங்களையும் விவரமாக சுஜாதா அத்தைக்கு கிட்டே சொன்னான். ‘தன்னுடைய அண்ணாவின் உடம்பு இவ்வளவு மோசமா இருக்கே’ என்று மிகவும் கவலைப் பட்டாள்.

சுரேஷ் தன்னுடைய ‘ஆபீஸில்’ தன்னுடைய அப்பாவின் ‘ஹார்ட் கண்டிஷனை’ ஒரு ‘அப்லி கேஷனில்’ தனக்கு உடனே ரெண்டு லக்ஷ ரூபாய்க்கு ஒரு ‘லோன்’ வேண்டும் என்று எழுதி அவன் ‘பாஸ்’ கிட்டே கொடுத்தான்.ஏற்கெனவே நிறைய ‘அப்லிகேஷன்கள்’ தேங்கி இருந்ததால் சுரேஷூக்கு அவன் ‘அப்ளை’ பண்ணின ‘லோன்’ பணம் வர ஒரு மாசம் ஆகி விட்டது.

‘லோன்’ பணம் கிடைத்ததும் சுரேஷ் மூனு நாள் லீவு போட்டு விட்டு,சுவாமியை நன்றாக வே ண்டிக் கொண்டு,அப்பாவை ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு அழைத்துக் கொண்டு போய் ஹாஸ்பி டலில் ‘அட்மிட்’ பண்ணினான்.டாக்டர் வரதனுக்கு அவருக்கு எல்லா ‘டெஸ்டுகளும்’ பண்ணினார்.

பிறகு டாக்டர் வரதனை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துப் போனார்.சுரேஷ் ஆபரேஷன் தியேட்டர் வாசலில் இருந்த ஒரு ‘சேரில்’ சுவாமியை வேண்டிக் கொண்டு, உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.சுரேஷ் தன் அத்தைக்கு ‘போன்’ பண்ணி விஷயத்தை சொன்னான்.சுஜாதா வீட்டிலே சுவாமியை வேண்டிக் கொண்டு இருந்தாள்.

மூனு மணி ‘ஆபரேஷன்’ பண்ண பிறகு, டாக்டர் வரதனை ‘வார்டில்’ ஒரு ‘பெட்டில்’ விட்டார். அவர் சுரேஷைப் பார்த்து “நான் இங்க அப்பாவுக்கு ‘பை பாஸ் சர்ஜா¢’ பண்ணிட்டு அவரை ‘வார்ட்டில்’ கொண்டு வந்து விட்டு இருக்கேன். நீங்க போய் அவரை பாக்கலாம்” என்று சொன்னார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *