Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஐஸ்க்குச்சி…

 

கருத்து நீண்டு கிடக்கிறது சாலை,எட்டிப்பிடிக்கநினைத்தயாரோ முடியாமல் போனதனால் அப்படியே விட்டுவிட்டதைப்போல/

கண்ணுக் கெட்டிய தூரம் வரையாய் நீண்டுவளைந்து நெளிந்திரு ந்த கறுப்பு பார்ப்பதற்குஅழகாகவே இருந்தது.ஒருமுனையை பிடித்துத்தூக்கினால் மறு முனை எழுந்து நிற்கும் போலானதொரு தோற்றம்.

எதுநன்றாக இருக்கிறதோ அது நன்றாகவே இருக்கட்டும்,எது நன்றாக இல்லையோ அது நன்றாகஇல்லாமல்போய் விடட்டும்.எ ன்னகெட்டுப்போனது இப்பொழுது?யாரோஒருவர் சொன்னஅசரீரி காற்றுவாக்கில் வந்து காதில் விழுந்ததாக/

ஏற்கனவே இருந்த கறுப்பு வர்ணத்தின் மேல் கொட்டப்பட்ட கறுப் புப்பெயிண்ட்காய்ந்துஅழகுகாட்டியதுபோலவும்நீண்டிருந்தகருங்கூந்த லாயும் சாலை/
சற்றைக்கு முன்தான் பெய்திருந்த மழை நின்றிருக்க வேண்டும் போல, ரோடு காய்ந்தும் காயாமலும் ஈரம் பூத்துப்போயுமாய்/

சாலையின் இருபக்கமுமாய் தன் வரைவு காட்டி அமர்ந்திருந்த ஓடையில்தண்ணீர்ஓடிக்கொண்டிருந்தது.மெலிதாகவும்வேகம்காட்டியுமாய் காடு கரை களில் இருந்து ஓடிவந்து கொண்டிருந்த தண்ணீர் தன்முகம் காட்டியும் இருப்பு காட்டியுமாய் மென்ஓவியமாய்ந கர்ந்துவந்துகொண்டிருந்தது.சாலையின்ஓரங்களில்உருண்டு காணப் பட்ட தார் ரோட்டின் ஓர முனை திரட்சி காட்டியும் தன்னில் புதைந்திருந்த சல்லிக் கற்களை வெளிநீட்டிக் காட்டியுமாய்/

இது போலான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நாட்களில் மழை பெய்தால்தான்உண்டுபோலும்/பரவாயில்லாமல் பெய்திருந்தது, மிகவும் மோசம் எனச் சொல்லி விடமுடியவில்லை.அருப்புக் கோட்டை செல்கிற வழியில் இருக்கிற கறுப்பாயூரணி பாதி நிறைந்து விட்டது.சூரங்குடி கண்மாய்க்கு தண் ணீர்வந்திருக்கிற தாய்ச்சொன்னார்கள்.இதுபோகஆங்காங்கேஇருக்கிறகுளம்,கண்மாய் களில் தண்ணீர் காணப்படுவதாய்வேனில்சென்று ஊராய் காய்கறி விற்கிற ராமசாமி சொன்னார்.

என்னதான்வளர்ந்துவிட்டவிஞ்ஞானம்வீட்டிற்குள்இருக்கிறதொலைக்காட்சிப் பெட்டியில்ஆயிரம்அதிசயம்அல்லதுஎவ்வளவுவியப்புக்காட்டியபோதும்கூட இப்படியாய் பெய்த மழை ஒன்று திரண்டு ஓடைகளிலும் ரோட்டு ஓரங்ளி லும் கண்மாய் காடுகளிலும் ஓடுகிறதை காணுகிற ஆவல் போகவில்லை. இன்னும்/அதிசயம் செதுக்கிய மனதின் அங்கங்கள் தன் ரசனையை மேம் படுத்திக் கொள்கிற ஒன்றாய் இது மாதிரியானவைகளில்தன்னைத் தானேசெதுக்கிக் கொள்வதா கவும் புதுப்பித்துக்கொள்வதாயும்/

சில்லிட்டகாற்றைஏறிட்டவனாய்நகர்ந்துகொண்டிருக்கும்போதுRSRஆங்கிலப் பள்ளியை சமீபத்துக் கொண்டிருக்கும் போதுதான் இவனை விலகியதாய் அல்லது இவன் கண் முன்னாலாய் ரோட்டின் வலது பக்கமாய் பிளாட்ப் போடப்பட்டிருந்த விளை நிலத்தின் மீது இருந்த மண் ரோட்டில் விரைந்து வந்த ஸ்கூல் பஸ் இவனை சமீபத்து சாலை ஏறியது வேகமாக/

அங்கெல்லாம் யார் இருக்கிறார்கள்.எங்கு போய் வருகிறது பஸ். இந்த அத்துவானவெளியில் ஊர் பெயர் தெரியாத ஆட்கள் நடமாட்டமற்ற வனாந்திரம்போலானவெளியில்? யாரை ஏற்றிக் கொண்டுஇவ்வளவு விரைவாகச் செல்கிறது?என்பதாயும்புரியாத து போலவும் பார்த்துக் கொண்டிருந்த இவன் கண்முன்னே சாலையேறிய பேருந்தின் டயர்த்தடங்கள் இது வரைகறுத்தமேனி காட்டிக்கொண்டிருந்தசாலையின்மீது தன்அழுத்தமான தடம் பதி த்து ச் சென்று கொண்டிருந்ததாய்/

இரண்டும்,இரண்டுமாய் நான்கு பின்புற சக்கரங்களையும்,ஒன்றும் ஒன்றும் இரண்டு முன்புறச்சக்கரங்களையும் காட்சிபடுத்திச்சென்று கொண்டிருந்த அது ஈரம் பூத்த புல்வெளி கடந்து மண்சாலையில் பயணித்து வந்த தடயத் தை தார்ச்சாலையில் விட்டுச்சென்ற வாறாய் போய்க்கொண்டிருந்தது.

பஸ்ஸின்பின்பக்கமாய்பள்ளியின்பெயர்எழுதியிருந்ததுபாலாவின் பையன்இந்தபள்ளியில்தான்படித்தான்.ஹாஸ்டல்,சாப்பாடு,பிறவசதிகள்சரியில்லை பள்ளியில்/ ,ஆகவே சீக்கிரமாய் பார்க்கவேணும் ஒரு வீடு என ஒரு இரவு வேளையின் பத்தரை மணிப்பொழுதுக்கு மேல் அவர் பேசிய போன் பேச்சு இன்னும் ஞாபகத்தில் நிற்பதாக/

பாலாவுக்காக அலைந்து திரிந்து இரண்டு நாட்களில் அவர் கேட்ட மாதிரி யேஅவர்கேட்டஏரியாவிலேயே வீடு கிடைத்தது.வீடெ ல்லாம் சென்று பார்த்தவர் அட்வான்ஸ் கேட்கும் போது சற்றே பின் வாங்கினார்,மனைவியிடம் கேட்டுச்சொல்கிறேன் என/

பத்தாம் வகுப்புபடிக்கிற தன் பிள்ளை தன்னைப்போலவே சுமார் தான் படிப்பிலும்இதரவைகளிலுமாய்என்றார். அப்படிச்சொல்லும் பாலாமதுரையில்இருக்கிறதனியார்நிறுவனத்தில்வேலைபார்க்கிறார். கை நிறைய என இல்லா விட்டாலும் கூட பத்தாக்குறை வரு மானம் கிடையாது.இல்லையென்றால் மதுரையிலிருந்து இங்கு வந்து படிக்கப்போட முடியுமா என்ன என்கிறார் நண்பர் ஒருவர். ஆமாம் முடியாதுதான் சார் என்பது அந்தப் பள்ளியின் பஸ்ஸை ஓட்டுகிற ஒரு ட்ரைவரின் வாக்குமூலமாய் இருக்கிறது இன்று வரை,விட்டால் சபை வரைக்கும் கூட போய் பிரச்சனையை சொல்லி விடுவார் போலும்.அவ்வளவு தூரம் நொந்து போயி ருந்தார்.

பெரும்பாலான பொழுதுகளில் இவனது இரு சக்கர வாகனத்தின் பின்னேதான்அவருக்குபிரயாணம்வாய்க்கப்பெற்றிருக்கிறது.அல்லதுசௌகரியப்பட்டி ருக்கிறது. இவன் பள்ளி இருக்கிற ஏரியா தாண்டி போகிற தின ங்களில்/

அவர் சொல்கிறார், எங்களுக்குன்னுஎந்தசலுகையும் கெடையாது சார்,முப்பது வருஷமா இந்த நிறுவனத்துல வேல பாக்குறேன். யாராவதுசொந்தக்காரங்கயாரையாவதுசேக்கவோ அல்லது தெரிஞ் சவுங்களுக்கு பீஸ்கொறச்சுக் கேக்கவோ முடியாது சார், வெளியா ளுங்களுக்கு என்னவோ அதேதான் எங்களுக்கும் என்பார்.

இப்படியாய்தினசரிஏதாவதுபேசிக்கொண்டேவருவார்.வானம்வெறித்துவெண் மைபாய்த்திருந்தது,எங்கோமேய்ந்து கொண்டிருந்தசெம்மறிஆடுகள் மொத்தமாய் ரோட்டைகடந்து சென்றது கூட்டமாக/ வானத்தில் பறவைகள்பறந்து சென்று கொண்டிருந்தன அலசலாக/

வெயில்வரவரகூடுதேதவிரகொறையிரவழியக்காணோமேண்ணே என டீக் கடைக்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்த நேரம்அவர் டீ போட ஆரம்பித் திருந்தார்.ஆற்ற ஆரம்பித்திருந்த டீ வரி போட்ட கண்ணாடிகிளாஸினுள் அடர் கலர் திரவமாய்இறங்கிக் கொண்டி ருந்த நேரம் தகர செட் போட்டிரு ந்தகடையினுள்ளாக நின்றிருந் த இவன் பார்வை சற்று விழி விரிந்து செல்வதாக/

விரிந்த விழிகளிகலிருந்து கழண்டு சென்றுசாலை,அதில்ஊர்ந்து கொண்டிருந்த மிதரககனரகவாகனங்கள், மனிதர்கள்பாதசாரிகள் இருசக்கரவாகனங்கள்,சைக்கிளில்செல்பவர்கள், வொர்க்ஷாப்.சீரணி க டை.ஹோட்டல்,காம்ளக்ஸிலிருந்தகடைகள்என எல்லாவற்றை யு மாய் படம் பிடித்துக் கொண்டு வந்ததாய்/ பிடித்துக் கொண்டு வந்தபடத்தில்ஒரு செட்பூரியும்இரண்டுஉளுந்த வடைகளுமாய் மணத்தது.

அன்றுகாலைடிபனை துறந்திருந்தான் வீட்டிலேயே/முடியவில்லை, எழுந்த வுடன்இரண்டு டீ சாப்பிட்டது,தவிர அலசர் வயிறு படுத்தும் பாட்டில் இது மாதிரியாய் வேளைக்கு சாப்பிட முடியா மல் போய்விடுதலும் ஆகிப் போகிறது.

மனைவிஇட்லிசுட்டிருந்தாள்வீட்டில்காரச்சட்னியும்,தேங்காய்ச்சட்னியுமாய்சேர்த்து/இவனால்தான்சாப்பிடமுடியவில்லை,மீறிச்சாப்பிட்டால்காற்றடித்த பலூனாய் ஊதிக்கொள்கிறதுவயிறு,ஊதிக்கொண்டவயிற்றைதூக்கிக் கொண்டு அலைவது பெரும்பாடாய்ப்போய் விடுகிறது. அதனாலே யேஎதற்கு வம்பு, இப்படி உடல் உபாதை தாங்கி அலைவதை விடுத்துபேசாமல் காலை யில்சாப்பாட்டை துறந்துவந்து விடுவது இவனில்சமீபத்தில்குடிகொண்டவழக்கமாய்இருக்கிறது.அப்படியானவழக்கம்மிகவும்நல்லதாயும் ஆகித் தோன்ற அதையேபின்பற்றுகிறவனாகிபோனான். அதனால் இப்பொழுது என்ன கெட்டு விட்டது பெரிதாய் எனத்தோணக்கூட இல்லை.

வட்டவடிவம்காட்டியிருந்த மொன்முறுவலான செந்ந்நிற பூரிகள் இரண்டுக்கும்நடுவாய்வைக்கப்பட்டிருந்தஉருளைக்கிழங்கு மசாலா வுடன்சேர்த்துவைக்கப்பட்டிருந்ததேங்காய்ச்சட்னிபார்க்கவும்சாப்பிடவுமாய்நன்றாகவேஇருக்கிறது.
இப்பொழுதெல்லாம்உருளைக்கிழங்கு மசாலாக்களில் உருளைக் கிழங்குதவிர்த்துமற்றதெல்லாம்பார்க்கமுடிகிறது,பெரிய வெங்காய த்தைநிறையஅறுத்துப்போட்டுகடலைமாவுசேர்த்துகொதிக்க விட்டுஅடுப்பிலிருந்துஇறக்கிவிடுகிறார்கள்,அதுவும்நன்றாகத்தான் இருக்கிறது. சாப்பிடுவதற்கு/

ஆனால் வழக்கமாய் அப்படிச்சாப்பிட்டால் உடல்போய்விடும் மாஸ்டர்எனபூரிசுட்டமாஸ்டரிடம் சொன்னபோது அவர் சிரித்தார். என்ன சார் இந்த வயசுலபோயி வயிறு கியிறுன்னு,என்பார்.என்ன செய்ய மாஸ்டர், இப்பிடித் தான் வயிறு நல்லா இருந்தப்ப அள்ளிச்சாப்புட சாப்பாடு இல்லை, இப்ப சாப்பாடு இருக்குறப்ப வயிறு நல்லா இல்ல.என்றான் இவன்.அது இவனுள் இந்த கணம் வரை ஒரு மென் சோகமாகவே/

நண்பர்களுடனோஅல்லதுதோழர்களுடனோஹோட்டலுக்குசாப்பிடச்செல்ல நேர்கிற தருணங்களில் மிகவுமே சங்கடப்பட்டிருக்கிறான்.காலை ,மாலை, இரவுடிபன்என்றால்சரி.இட்லியோதோசையோஅல்லதுபூரியோசாப்பிட்டுஎழுந்து விடுவான்.மதியநேரம்சாப்பாடுஎனபோய்விட்டால்அவர்கள் தருகிற அளவுச் சாப்பாட்டைக் கூட சாப்பிட முடியாமல் போய்விடும். ஏதோ சாப்பிட்டதாய் பேர் பண்ணி விட்டு இலையில் மிச்சம் வைத்துவிடுவான். அதுவும் அன் லிமிடெட்மீல்ஸ்போடுகிறகடை என்றால் இவனின் முகமும் மனமும் வெகுவாகவே மாறிப் போகும்.

கல்யாணவீட்டிலும் இதே கதைதான்.போன மாதம் தூரத்து ஊரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு அம்மாவுடன் சென்றி ருந்தான். எவ்வளவோ தவிர்க்க முயன்றும் கூட பந்தியில் அமர நேர்ந்து விடுகிறது.என்ன செய்ய, சாப்பிடுவதாய் பேர் பண்ணி எழுந்திருக்கலாம் என்றால் பரிமாறு கிறவர்களின் கைபிடித்தி ழுக்காத குறையாக அம்மா அவர்களைக் கூப்பிட்டுஇதை வை, அதைவைஎனமாறிமாறிசொல்லிக்கொண்டிருந்தார்கள்.விட்டால் பரிமாறுபவர்களின்கையிலிருந்தபிடுங்கிஊட்டி விட்டு விடுவார்கள் போலும்.என்னதான்வயசு51ஆனாலும்கூடதாய்க்குமகன்சிறுபிள்ளைதானே?

இதேஇது வீட்டில் மனைவி கையால் பரிமாறிச்சாப்புடுகிறபோது ஒன்றும் தோணவில்லையே அளவு மிகைஅளவெல்லாம்தாண்டி ஓடிக்கொண்டிருக் கிறதே,சாப்பாடு/

வட்டமாய் இருத்திவைக்கப்பட்டிருக்கிற சில்வர் தட்டில் கொஞ் சம், கொஞ்சமாய்போடப்படுகிற சாப்பாட்டில்,கொஞ்சம் கொஞ் சமாய் ஊற்றப் படுகிற குழம்பு,ரசம் ,மோர் என பிணைந்து சாப்பிடும் போது அவைகள் காட்டும் ரசவாத வித்தையும், மனைவியின் கை அன்பும் பரிமாறுகிற மென் மனசும் சாப்பா ட்டின்அளவைபார்க்கவிடாமலும்,தெரியத்தோணாமலும்செய்துவிடுகிறதுண்டுதான்.

மாஸ்டரின் மகள் மல்லிகா அக்காவுக்கு கோபாலைப் பிடிக்கும் என்றெல்லாம்சொல்லிவிடமுடியவில்லை,அதேசமயம்யாராவதுஇருவரையும்இணை த் துவைத்துப்பேசினால் அவள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவும் இல்லை.

மளிகைக்கடையில்வேலைசெய்கிறான்,கோபால்,மளிகை மட்டும் இல்லைகாய்கறியும்உண்டு,அவர்களதுக்கடையில்.கடைவேன்சுற்றுபட்டிஊர்பூராவும் அவர்களது கடை சரக்கை சுமந்து கொண்டு போய் வரும்,கூடவே இவனும் போய் வருவான்.தினசரி காய்கறி வியாபாரம் உண்டு .பலசரக்குமாதம்இருமுறைஅல்லதுஒருமுறைகொண்டு போவார் கள். ஊர்க்கார்களின்தேவையைப் பொறுத்து அது நடக்கும். அந்தப் பக்கம் ஊரிலுள்ள கடைக்காரர்களெல் லாம் சப்தம் போடுவார்கள் கோபாலிடம்/

கோபால்மல்லிகாக்காவிடம்பேசநேர்கிறசமயங்களில்இதைச்சொல்லிவருத்தப் படுவான்.சரிநீ என்ன செய்ய முடியும் அதுக்கு?நீயே வேலைக்கு இருக்குறஆளு,ஓங்வருத்தந்தானாபெரிசாஅவுங்களப்போயி பாதிக் கப் போகுது,நீ பாட் டுக்கு வேலையச் செய்யி, சம்பளத்த வாங்கு, செலவு போக கையில கெடைக்கிறத சேத்து வையி,நாளைக்கி நமக்கு கல்யாணம் ஆன பிற்பாடு கைக்கு ஆகுமில்ல.என் பவள் என்னமோமுன்னாடிமில்லுவேலஅதுஇதுன்னுநெலையில்லாம் அலைஞ்சதுக்குஇதுபரவாயில்லை.உக்காந்தயெடத்துலஇருந்தும்ன்னு ஆகிப்போச்சு,சொந்தஊருன்னும்ஆகிப்போச்சு,ஒருதொழில் தெரிஞ்சி க் கிட்ட பலன் கெடைக்குமில்ல என்பவள் கோபாலுடன் பேசும் போது அவள் உடுத்தியிருக்கிறபூப்போட்டசேலை நன்றாக இருக்கி றதா என கேட்க தவற மாட்டாள். தினம் ஒரு பூ சேலையில் பூக்கிற மாதிரி/

மல்லிகாக்காவுக்குசேலைக்காபஞ்சம்என்பார்கள்ஊர்க்கார்களும் அவளிடம்தவணைக்குசேலைதுணிஎடுக்கிறவர்களும்/கவரிங்அயிட் டம், சேலை, ஜாக்கெட் துணி எல்லாம்விற்பாள்,வீட்டில் தையல் மிசின் வைத்திருந்தாள்.

ஐஸ்க்காரர்வீட்டுக்குப்பக்கத்தில் குடியிருக்கிற அவள் அவரது வீட்டுப் பாட்டையும்அவ்வப்பொழுதுகவனித்துக்கொள்கிறவளாக/

ஐஸ்க்காரருக்குபிள்ளைகள்கிடையாது,அவர்அடிக்கடிசொல்வதுண்டுமல்லிகாக்காவின்அப்பாவிடம்.பேசாமஓங்புள்ளையஎனக்குதத்துக்குடுத்துருயா/என்பார்அவரும்சிரித்துக்கொண்டே சரியா இப்ப என்ன,,குடுத்துட்டாப் போச்சு ஆனா இதுக்கு எங்க சாதி சனம் ஒத்துக்கிறணுமில்லய்யா என்பார். இப்ப எனக்கு ஒரு மக இருந்தாலும் மல்லிகா வயசு இருக்கும்.என்கிறவர் பிராயத் தில் ஒங்க ஊருப்பக்கம் ஐஸ் விக்க வந்துருக்கேன் சார் என்பார்.

ஒங்கள,ஒங்கசித்தப்பாவ,ஒங்கஅப்பாவ,ஒங்க குடும்பத்து ஆளுகளப் பூராம் தெரியும் என்பார்.இவனைப்பார்க்கிற சமயங்களெல்லாம்/,

இப்பத்தான் ஆந்து போச்சி,வயசாகிருச்சி,என்கிற பாஸ்கர் டீக் கடைக்குப் பக்கத்திலாய்பெட்டிக்கடை வைத்திருந்தார். இவனுக்கு இன்னும் ஞாபகமிரு க்கிறதுபசுமையாக.அவரது கடை இளநீர் போல் இந்தப்பக்கமிருக்கிற எந்தக் கடையிலும் குடித்ததாய் ஞாபகம் இல்லை.ஒரு இளநீரை வெட்டினால் இரண்டு பேர் சாப்பிடலாம்.நான் இங்கயெல்லாம் யெளனிவாங்கமாட்டேன் சார் ,நமக்கு சோளவந்தான்ல இருந்து வந்துரும் நேரடியா விருதுந கருக்கு,அங்கபோயி எடுத்துக்குறுவேன்,முடியிற சமயத்துல நான் போவேன். போக. முடியாத சமயத்துல யாருக்காவாதுபத்தஞ்சி செல்லவுக்குக் குடுத்து எடுத்துட்டு வரச் சொல்வேன். அவ்வளவு தான் சார், வயசாகிப்போன காலத்துல அலைய முடிய நம்ம ளால, ஊர்க்காடெல்லாம் சைக்கிள்மிதிச்சிட்டு இப்ப பஸ்ஸுல ஏற்றதுன்னாக்கூடமனசு யோசிக்குது சார்,என்பார்.

அதுகெடக்குதுசார்,இப்ப ஒடம்பப்பத்தி பேச நம்ம கிட்ட ஆயிரம் இருக்கு சார்.ஒவ்வொருத்ததுக்கும்ஒருமாதிரி,இப்பஇந்த மல்லிகாப் புள்ளைய நெனை ச்சாத்தான் கொஞ்சம் பாவமா இருக்கு சார்.அவங்க அப்பா கோபால் பைய லுக்கு அவளக்கட்டிக்குடுக்க மாட்டேன்னு சொல்றானாம். நேத்து ஏங் கிட்டவந்து வருத்தப்ப ட்டா, என்னசெய்யம்மா நானுன்னு சொன்னதுக்கு எங்க அப்பா போல ஒங்களநெனைச்சிக்கிட்டிருக்கேன்.நீங்கதான்எப்படியாவது எங்களஒண்ணுசேத்துவைக்கணும்,இல்லைன்னாகொளுத்தீட்டுசெத்துப் போயிரு வேங்குறா என்ன செய்யிறன்னு ஒரே கொழப்பமா இருக்கு.அவுங்கப்பன் ஆசப்பட்டமாதிரியேகௌவர்மெண்ட் வேலை பாக்குற மாப்புளைய நிச்சயம் பண்ணப் அவுங்க போறாதா,இல்ல மல்லிகாப்பொண்ணு ஆசப்பட்ட மாதிரி கோபால் பையலையே அவளுக்கு கட்டி வச்சிற்றதா தெரியலயே என்பார்.

அவரின்அந்தப்பேச்சுடனும்நினைவுடனுமாய்டீக்கடைக்காரர்கொடுத்தடீயைக் குடித்துமுடித்தபோதுஅந்தபெரியம்மாள்வந்துநின்றாள்உதவிக்கு கையேந்தியவளாய்/. 

தொடர்புடைய சிறுகதைகள்
சாவி வாங்க வேண்டி வந்ததினால் அங்கு வந்தேன்.இல்லையெனில் வந்திருக்க மாட்டேன். ஒரு டீ நாவின் சுவையறும்புகள் மீது படர்ந்து தொண்டைக் குழி வழியாக இறங்கி சுவை கொடுக்கிறதாக அல்லது திருப்தியோ, மன நிம்மதியோ கொள்ளச் செய்வதாக காளியம்மா வீடு, பெருமாள் சாமி டீக்கடை,சிந்திக்கிடந்த ...
மேலும் கதையை படிக்க...
அந்த நேரத்தில் அவளை அங்கு வைத்துப பார்ப்போமென எதிர்பார்த்திருக்கவில்லைதான். மென் பனி பொழிந்த முன் மாலைப்பொழுது, இன்று பனியின் தாக்கம் சற்று கூடுதலாகவே தெரிந்தது, அழுத்திய உடல் சோர்வை விடவும் பசியும்,ஒண்ணுக்கும் நெருக்கிக்கொண்டு வந்தது, இதில்பசியைதாங்கிக்கொள்ளலாம்,முட்டிக்கொண்டுவருகிறஒண்ணுக்கை என்ன செய்து எங்கிட்டுக்கொண்டு போய் தள்ளுவது எனத்தெரியவில் லை, தள்ள ...
மேலும் கதையை படிக்க...
உடைத்தெறியபட்ட கற்கள் சதுரங்களாயும்,செவ்வகங்களாயும் முக்கோண வடிவிலும் அருங்கோணமாயுமாய் இன்னமும் இன்னமுமான வடிவம் காட்டியுமாய் காட்சி தருகிறது.கூடவேகொஞ்சம் சிமெண்ட் மற்றும் செங்கல் காரையும் தூசியுடனுமாய் ஏதாவதுஒரு வீட்டின் தரைத்தளம், மற்றும் அடுப்படி மேடை சிங்க தொட்டியை உடைத்தெடுத்திருக்கவேண்டும்.நல்லதல்லாததைஉடைத்துவிட்டு நல்லதை வைத்திருக்க நடந்த ...
மேலும் கதையை படிக்க...
கருப்பும்,வெளுப்பும்,சிவப்பும்,பிங்குமாய் கரைந்தோடுகிற சிந்தனையுடன் சாலை கடக்கிற இருசக்கர வாகனமும் அதன் மீது அமர்ந்து வருகிற இவனுமாய் எட்டித் தொட வேண்டிய இலக்காய் இருக்கிற தூரம் எவ்வளவாய் இருக்கும்? இருந்துவிட்டுதான்போகட்டுமே, தூரம் எவ்வளவாக வேண்டுமானாலும்? கடப்பதும் எட்டித்தொடுவதும் மட்டுமே உளகிடக்கையாய் இருக்கிற போது,,,,,,? பாலமேடு டூ ...
மேலும் கதையை படிக்க...
பார்க்கப் போன இடமும் பார்க்கச் சென்ற நபரும் முக்கியப்பட்டுப் போகிறார். அள்ளிச் சிதறிச் சிரித்த விண்மீன்களின் கைபிடித்தும்,அதனுடன் பேசியும் சிரித்தும், உறவாடியுமாய் போய்க் கொண்டிருந்தவன் அமர் ந்திருந்த இரு சக்கர வாகனம் காற்று செல்லும் திசையில் பறந்து கொண்டிருக்கிறது. பறக்கட்டும், பறக்கட்டும் அப்படியே கனம் ...
மேலும் கதையை படிக்க...
குழல் விளக்கு
சிலந்தி வலை தட்டான்கள்…
மாவுக்கல்லும் தூசியும்…
தந்திக்கம்பி…
பூப்பூத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)