ஏழு அண்ணன்களும் ஒரு தங்கையும்!

 

ஓர் ஊரில் ஏழு அண்ணன்மார்களும் ஒரு தங்கையும் சந்தோசமாக வாழ்ந்த வந்தார்கள். அண்ணன்கள் ஏழு பேரும் காட்டிற்கு வேலைக்குப் போவார்கள். அவர்களுக்கு தங்கைதான் சாப்பாடு கொண்டு செல்வாள். மூத்த ஆறு அண்ணன்களும் சட்டியில் இருக்கும் சாப்பாட்டை வழித்து வழித்து உண்பார்கள்.

ஏழாவது அண்ணன் மட்டும், ஐயோ… தங்கைக்கு சாப்பாடு இல்லையே என்று தனக்கு போடப்பட்ட சாப்பாட்டில் பாதியைத் தனக்கு வேண்டாம் என்று வேண்டுமென்றே வைத்து விடுவான். தங்கையும் அண்ணன் வைத்திருந்த அந்தச் சாப்பாட்டை உண்பாள்.

ஆறு அண்ணன்களை விடவும் ஏழாவது அண்ணன் மீதுதான் அதிகம் பாசம் கொண்டிருந்தாள். அவனும் தங்கச்சியின் மேல் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தான். ஆறு அண்ணன்மார்களுக்கும் திருமணமும் நடைபெற்றது. ஏழாவது அண்ணனுக்கு திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்கள். ஆனால் அவன், தங்கைக்கு திருமணம் செய்து செய்து வைத்த பிறகே தான் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினான்.

ஒருநாள் எப்போதும் போலவே தங்கைக்காரி அனைத்து அண்ணன்களுக்கும் உணவு சமைக்கிறாள். அன்று காலை அவள் வீட்டு புழக்கடியில் பாம்பு ஒன்று வந்தது. அந்தப் பாம்பை அடித்து நன்றாகக் கழுவி தலை வேறாகவும் உடம்பு வேறாகவும் வெட்டுகிறாள். வெட்டிய பாம்பு கறித்துண்டுகளை அழுதபடியே அடுப்பில் வைத்து சமைக்கிறாள்.

ஆறு அண்ணன்களுக்கும் நல்ல உணவையும் ஏழாவது அண்ணனுக்கு மட்டும் பாம்பு கறி உணவையும் புட்டியில் எடுத்து வைக்கிறாள். காட்டுக்குச் சென்றவுடன் சாப்பிடுவதற்கு ஆறு அண்ணன்களை மட்டும் அழைக்கின்றாள். ஏழாவது அண்ணன் மட்டும் இன்னும் நெல்லு வயலுக்குத் தண்ணீர் கட்டிக்கொண்டிருந்தான்.

ஆறு அண்ணன்களும் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டு வேலைப்பார்க்க வயலுக்குச் செல்கின்றனர். அதன்பிறகே கடைசி அண்ணனைக் கூப்பிடுகிறாள். தட்டு நிறைய வெள்ளையான சாப்பாட்டைப் போட்டு பாம்பு கறியை ஊற்றுகிறாள். சாப்பிட்ட அண்ணன்காரனுக்கு கசப்பு தோன்றவே, மனதில் பாசக்கார தங்கச்சி விஷத்தையா வைக்கப்போகிறாள். அப்படியே வச்சாலும் ஆசையுடனே செத்தும் போகலாம் என்று உணவை அள்ளி அள்ளி சாப்பிட்டான்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வாயில் நுரை தள்ளி மல்லாந்து செத்துப்போகிறான் கடைசி அண்ணன்.

சில மாதங்களுக்குப் பிறகு தங்கச்சிக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. ஆறு அண்ணன்களும் ஆறு அண்ணிமார்களும் திருமணத்தை தடபுடலாக நடத்துகின்றனர். சாப்பாடு வரவேற்பு என அசத்துகின்றனர்.

விடிந்தால் கல்யாணம். மணமகள் ஜோடனைக்கு மல்லிகைப் பூ மட்டும் எங்கேயும் கிடைக்க வில்லை. ஊர் முழுவதும் கேட்டாச்சு… பாத்தாச்சு…. பொண்ணு பூ இல்லாம வெறும் தலையா நின்னா…

அப்போ! யாரோ ஒருத்தர், “அம்மாடி உங்க அண்ணன புதைச்ச இடத்துல மல்லி பூவா பூத்துருக்கு. வேணுமின்னா போயி பறிச்சுக்க புள்ள” என்றார்கள்.

அண்ணன் செத்த சமாதிக்குத் தங்கச்சிக்காரி ஓடுகிறாள். அண்ணன் கால்மேட்டுல விழுந்து அழுகிறாள்.

புதைச்ச மண்ணுல மல்லிகைப் பூவா பூத்துருக்கு. ஒன்னொன்னா பறிச்சா.. ஊசியால கோத்தா… மல்லிகைப் பூ மாலையைக் கழுத்துல போட்டா… கழுத்துல போட்டவுடனே மல்லிகைப்பூ பாம்பா மாறிப்போச்சு. கழுத்துல இருந்து வெளியே எடுத்துப் பார்த்தா மல்லிகைப்பூவா இருக்கு. மீண்டும் கழுத்துல போட்டா பாம்பா மாறுது.

அழுது ஒப்பாரி வைக்குறா….

அதுக்கு மண்ணுக்குள்ள இருக்குற அவுங்க அண்ணன் பாடுகிறான்,

“வாழ அண்ண! அடிச்சிருக்கு

வடநாடு போயிருக்கும்

ரெட்டி இரு கொண்டைக்கு

நிலைக்குமா என் பூ !

பலிக்குமா என் பூ! – என்கிறான். தங்கச்சிக்காரியும்,

“சிரிக்கி அண்ணிமாருங்க பண்ண வேல இது. சொத்துக்கு ஆசப்பட்டு பண்ணிய காரியம் இது. நான் இந்த ஊருல ஒருத்தன காதலிச்சேன். அத அண்ணிமாருங்க ஆறு பேரும் பாத்துட்டாங்க. எனக்கு அந்த பையன கட்டி வைக்கனுமுன்னா உன்னை கொல்லச் சொன்னாங்க…” மூக்கைச் சிந்தி அழுதாள்.

நீ கொல்லவில்லை ஆனாலும் நாங்க அவன (உன்னை) கொல்லத்தான் போறோம்ன்னு சொன்னாங்க..

“அவுங்க கையில நீ சாவுறதவிட நானே உன்னை கொன்னுடலாமுன்னு நினைச்சேன். அண்ணே”

“உன் பசிய எனக்கு கொடுத்தியே அண்ணே… எனக்கு கல்யாணம் ஆகப்போகுதுண்ணே… உன்னோட மாலை என் கழுத்துல ஏறனும் அண்ணே… அதுதான் எனக்கு நீ கொடுக்கிற பரிசு அண்ணே.. ” என்று நீண்ட ஒப்பாரியை வைத்து விட்டு மல்லிகைப் பூ மாலையை கழுத்தில் சூடினாள். இப்போது மாலையாய் தொங்கிக் கொண்டிருந்தது அவளுடைய கழுத்தில்.

அவளுக்கு அண்ணனின் வாழ்த்தில் கல்யாணம் நடந்தேறியது.

ஆசிரியர் குறிப்பு:
கொரோனா வைரஸ் காரணமாகக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு வந்துள்ளேன். பல மாதங்களுக்குப் பிறகு அம்மா அப்பாவுடன் நீண்டதொரு உறவு. அப்போதுதான் அம்மாவிடம் கதை கேட்க ஆரமித்தேன். சின்ன வயசில் நிறைய கதைகள் சொல்லுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதையென கடந்த பத்து நாட்களிலும் பத்துக் கதைகள் கேட்டேன். இந்தக் கதைகள் யாவும் என்னுடைய கற்பனையில் உருவானவை அல்ல என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இக்கதைகள் முழுவதும் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சொல்லக்கூடிய கிராமத்துக் கதைகளே ஆகும். கதைகள் பெரும்பாலும் சின்னச்சின்ன கதைகளைக் கொண்டே அமைந்துள்ளன. 

தொடர்புடைய சிறுகதைகள்
இரவு 7 மணி. வானம் சிறு தூறலால் நிலத்தை நனைத்துக்கொண்டிருந்தது. மின்சாரம் வேறு நிறுத்தப்பட்டிருந்தது. கதவு சாத்தப்பட்டு நான் அப்பாவோடு பழையதும் புதியதும் பற்றி கதைத்துக்கொண்டிருந்தேன். பெரியவனா ஆனப்பிறகு அப்பாவுக்கு நேரம் ஒதுக்கி பேசுவதே தனி மகிழ்ச்சிதான். எங்கள் முன்னோர்களின் வாழ்க்கையைப் ...
மேலும் கதையை படிக்க...
மத்தியான நேரம். சித்திரகுப்தன் எருமை மாட்டின் கொம்பின் நுனியைக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார். நன்றாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவினார். இருந்தும் அந்த எருமை மாடு கருகருன்னு இருட்டுப் போல கருப்பா இருந்தது. சிவந்த கண்களும் முறுக்கிய கொம்பும் யாருக்கும் பயத்தை வரவழைக்கும். பளிங்கு ...
மேலும் கதையை படிக்க...
அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள் வரையும் சில வெளிநாட்டு நாய்களும் வௌவ் வௌவ் என்று குலைத்துக் கொண்டும் வாலை ஆட்டிக்கொண்டும் இங்கிட்டும் அங்கிட்டும் நடப்பதுமாய் போவதுமாய் இருந்தன. ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கிராமத்தில் எள்ளை ஆட்டி எண்ணெய் எடுக்கும் செக்கானும் அவனுடைய மனைவியும் மகளும் குடிசையில் வாழ்ந்து வந்தனர். தினமும் செக்கான் ஆட்டிய எண்ணெய்யை கிராமத்து தெருக்களில் அம்மாவும் பொண்ணும் விற்று வருவார்கள். அப்படியொரு நாள் செக்கானின் மகள் எண்ணெய் விற்றுக்கொண்டே கையை ...
மேலும் கதையை படிக்க...
மத்தியான நேரம். உச்சி வெயில் மண்டையப் பிளந்தது. ரெங்கநாயகி கிழவி வேகவேகமாய் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தாள். மனதிலே இறுக்கம். தளர்ந்த நடை. தோலெல்லாம் சுருங்கிப்போய் கூன் விழுந்திருந்தது. மூக்கு நுனி கண்ணாடி கீழே விழாத படிக்கு ...
மேலும் கதையை படிக்க...
அந்தக் கிராமத்தில் மொத்தம் நூறு வீடுகள்தானிருக்கும். இரண்டு வீதி நாலு சந்து அவ்வளவே. ஊருக்கு நடுவே கோவில். கோவிலில் முன்வாசல் தவிர சுற்றுப்பகுதிகள் அனைத்தும் கருவேல முட்களால் சூழ்ந்துதான் இருந்தது. போனவாரம் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்ல சாமிக்கு பூஜை நடந்தது. அந்தப் ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு சிறிய வீடு. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டிய இடத்தில் கனகச்சிதமாகவே இருந்தன. வாழைப்பழமும் திராட்சையும் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைபட்டு கிடந்தன. அந்த வீட்டில் ஒற்றைக் கட்டில் மட்டும் போடப்பட்டிருந்தது. கட்டிலின் முன்னால் வெற்று ...
மேலும் கதையை படிக்க...
பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துக்கொண்டு போனது. கோவிந்தன் ரெண்டு கிளாஸ் பட்டைச் சாராயத்தை ஊத்திக்கொண்டு ஆடுபவரின் ஆட்டத்திற்கு தகுந்தார் போல் மேளத்தைத் தட்டிக் கொண்டிருந்தான். கையிலே பறை மேளத்தை வைத்துக்கொண்டு ஒரு பக்கமாய் தலைச்சாய்த்து கொட்டு அடிப்பதில் கோவிந்தனுக்கு அலாதி பிரியம்தான். ...
மேலும் கதையை படிக்க...
சிங்கப்பூரிலிருந்து விடியற்காலை 6:30 மணியளவில் ஆண்ட்ரூ லைன் இந்தியாவில் சென்னை நகரில் இருக்கும் நளபாகம் சுவை உணவகம் உரிமையாளர் பார்த்திபனுடன் ஸ்கைப் வழியாக உரையாடுகிறார். சிங்கப்பூர்க்கும் இந்தியாவிற்கும் நேர அளவு 2:30 மணித்துளிகள். இப்பொழுது சென்னையில் சரியான நேரம் விடியற்காலை 4:00 ...
மேலும் கதையை படிக்க...
“அம்மா பேஸ்ட் பிரஷ், சோப்பு ஷாம்பு துண்டெல்லாம் எடுத்து வச்சிட்டியா…” என்றான் கதிர். “எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஆமாம்! நீ ஏன் இப்படி குட்டிப் போட்ட பூனையாட்டம் குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருக்க. ஒரு இடத்துல போயி உட்காருடா” என்றாள் கதிரின் ...
மேலும் கதையை படிக்க...
பேய்க்கதை
தண்டனை
கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – ஒரு பக்க கதை
இடதாரம் செடி – ஒரு பக்க கதை
இதயம் பேசுகிறது!
குள்ளமணி ஒலிப்பெருக்கி நிலையம்
நாலணா சில்லரை
தோட்டியின் பிள்ளை
அர்த்தநாரி
கழிவறையின் கதவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)