ஏன்..? – ஒரு பக்க கதை

 

சிறிது நாட்களாகவே அமிஞ்சிக்கரை ஆறுமுகத்தின் பெயரை தின, வார, மாத பத்திரிகை, இதழ்களில் காணாதது கண்டு கணேசனுக்குள் ஏகப்பட்ட திகைப்பு, வியப்பு.

ஆறுமுகம் இவரின் சமகால எழுத்தாளன் மட்டுமல்ல. இருவரின் கதை, கட்டுரைகளில் குறை நிறைகள் இருந்தால் இருவரும் பேசி, கலப்பது வழக்கம்.

இப்போது பெயரே காணவில்லை என்பதால்…

‘ஏன்.., என்ன காரணம்..? உடல்நிலை சரி இல்லையா..? ஆளே இல்லை இறப்பா..? ‘ – கணேசனுக்குள் வண்டு குடைந்தது.

பொறுக்கமாட்டாமல் கைபேசி எடுத்தார்.

நண்பன் எண்களைத் தேடி எடுத்து அழுத்தினார்.

எதிர் முனை எடுக்கப்பட…

“நண்பா…?” அழைத்தார்.

“என்ன கணேசன்..?” ஆறுமுகத்தின் குரல்.

“நலமா..? ”

“நலம்..”

“என்ன சமாச்சாரம் பத்திரிக்கைகளில் உன் பெயரைக் காணோம்..? ”

“சொல்றேன். ரெண்டு மாதங்களுக்கு முன் என் மூத்த மகனுக்குத் திருமணம் முடிச்சேன். நான் வீட்டில் தனி அறையில் இருந்து எழுதினாலும் என் கண் விழிப்பு, அறை வெளிச்சம் என்பது புதுமணத்தம்பதிகளுக்கு சங்கடம், சங்கோஜம், தொந்தரவு. அதனால் என் எழுத்துப் பணியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறேன். விரைவில் அவர்கள் தனிக்குடித்தனம் சென்ற பிறகு என் பணி தொடரும். !”சொன்னார்.

“சரி” கணேசன் மனம் நிறைவாய் தன் கைபேசியை அணைத்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
என் மனைவி சோறு போட... அடுப்பங்கரையில் என் தம்பி சேகர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதுதான். .. வாசலில் நின்ற அம்மாவைப் பார்த்து..... '' எங்கேடி அந்த தண்டச்சோறு. ..? '' என்று கோபாவேசமாகக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் அப்பா. '' ஏன். ..? என்ன. ...
மேலும் கதையை படிக்க...
பாமினிக்குத் தன் கணவனை நினைக்க... பொச பொசவென்று எரிச்சல், கோபம். பின்னே! தன் தம்பி. தங்கக் கம்பியைப் பற்றி முகம் தெரியாத நபரிடம் இல்லாததும் பொல்லாததுமாய்ச் சொன்னால் யாருக்குத்தான் கடுப்பு, வெறுப்பு வராது. சேதி கேட்ட அந்த அம்மாள் ஓ.... அந்தப் பெண்ணின் ...
மேலும் கதையை படிக்க...
நாங்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. எதிர்பாராதது நிகழ்ந்து விட்டது. ஊரில் சாவு விழ வேண்டுமென்று எதிர்பார்த்தோம். ! அது அவர்கள் வீட்டிலேயே நிகழுமென்று எதிர்பார்க்கவில்லை. !! ஏன் எதிர்பார்த்தோம்..? ?.... அது பெரிய கதை. ஊரே சம்பந்தப்பட்டது. ஆனால் இருவர் ஈடுபட்டது. அப்போது... வளைத்த இடமெல்லாம் என் இடமென்று ...
மேலும் கதையை படிக்க...
'எப்படி... எப்படி தன் கணவனை மாற்றுவது..? தன் வலி , வருத்தத்தை அவருக்குப் எப்படி புரிய வைப்பது..? எவ்வாறு உணரவைப்பது..? '- தினம் மனமெங்கும் இதே கேள்வியாக வளைய வந்த மாலினி... கணவன் சிவா கிளம்பி அலுவலகம் சென்ற பின்பு கதவைச் சாத்திக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
ரங்கநாதன் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தான். விடுதலை. மனைவி, மக்கள்..... அவன் மனக்கண்ணில் மானசீகமாகத் தெரிந்தார்கள். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அவனுக்கு மனைவி, மக்கள் தெரிகிறார்கள்.!! முத்தம்மாளோடு இவன் சேர்ந்த பிறகு அவர்களை மறந்தே போனான். ரங்கநாதனுக்குத் திருட்டு, ஜேப்படி, வழிப்பறி... இது மாதிரி ...
மேலும் கதையை படிக்க...
''என்னங்க! சாப்பிட வாங்க.'' அழைத்தாள் மனைவி மரகதம். ''அம்மாவுக்கும் போடு.'' என்றேன். அம்மா காலையில்தான் கிராமத்திலிருக்கும் தம்பி வீட்டிலிருந்து வந்தாள். வந்து இரண்டு நாட்கள் தங்குவாள். நல்லது கெட்டது சாப்பிட்டுவிட்டு கிளம்புவாள். அம்மாவிற்கு இங்கு கக்கூஸ் போகக் கஷ்டம். கிராமத்தில் காற்றாடச் சென்றவள். அடுத்து அவளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
பேருந்து நிலைய கூட்டத்தினிடையே தனித்து நின்ற ஆளை அடையாளம் கண்டுகொண்டதும் தினாவிற்குள் மகிழ்ச்சி. மெல்ல சென்று நெருங்கி அவன் தோளைத் தொட்டான். அவன் திடுக்கிட்டுத் திரும்பினான். தொட்டவனை மிரட்சியுடன் பார்த்தான். "கவின் ! என்னைத் தெரியலே..?" அவனுக்குக் குரலைக் கேட்டதும்தான் இவனை அடையாளம் தெரிந்ததது. "ஹே..! தினா...!" சட்டென்று ...
மேலும் கதையை படிக்க...
"இங்க பார்டா அநியாயத்தை...." வியப்பில் முணுமுணுத்து தான் விரித்திருந்த தினசரியைத் தூக்கிக் கொண்டு தலைமை இயக்குனர் அறைக்கு ஓடினார் ஏகாம்பரம். வயது ஐம்பது. இவரும் அவரும் நிர்மல் - விமல் ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியின் முதலாளிகள். ஆத்மார்த்த நண்பர்கள். ஒரே வயது. "இந்த விளம்பரம் ...
மேலும் கதையை படிக்க...
இன்றைக்கு வேலைக்கு சேர்ந்து முதன் முதலாக புதுக் கம்பெனி முதலாளியை வைத்து இனோவா காரை ஓட்டிக்கொண்டிருந்த கணேசனுக்கு ஹாரனில் கை வைக்கவே நடுக்கமாய் இருந்தது. அதிலும்.... 'கம்பெனி அருகில் செல்லும்போது கண்டிப்பாய் ஹாரன் அடிக்கும் சந்தர்ப்பம் வரவேக் கூடாது !' என்று வேண்டிக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
வாசலில் வாழை மரங்கள். மாலையும் கழுத்துமாக கூப்பிய கரங்களுடன் மணமக்கள் சிரித்தப்படி ஜோடியாக பெரிய டிஜிட்டல் பேனரில் வருகிறவர்களை வரவேற்பதுபோல் நின்றார்கள். முகப்பில்...சந்தனம், ரோஜாப்பூ, கற்கண்டு தட்டுகளுடன் அழகு வரவேற்பு மங்கைகள் என்று அந்த திருமண மண்டபம் வழக்கமான களைகட்டுதல்களுடன் இயங்கிக் கொண்டிருந்தது. முகூர்த்த ...
மேலும் கதையை படிக்க...
சக்கரம்..!
பாவம்…!
அம்பு..!
வலி…!
தவறுகள் தண்டிக்கும்…!
தாய்
குண்டு வெடிப்பு…!
வேலை…!
முதலாளிகள்..!!
புதுப் பாதை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)