‘’ஜானகி….சங்கர்கிட்டே இருந்து போன் வந்துச்சா?’’ வீட்டிற்குள் நுழையும் போதே குரல் கொடுத்தார் இராமலிங்கம். ‘’காலையில் ஆறரை மணிக்கே போய்ச் சேர்ந்துட்டானாம்….பத்து மணிக்கெல்லாம் ஆபிஸ் போயிடுவேன்னு சொன்னாங்க?’’
அதென்னவோ ஜானகி…நம்ம பையனுக்கு ஒங்கிட்ட மட்டும்தான் அட்டாச்மெண்ட ஜாஸ்தி…எங்கிட்ட நிமிர்ந்து கூட பேச மாட்டேங்கறான். இத்தனைக்கும் நான் ஃப்ரெண்ட்லியாதான் பழகிட்டு இருக்கேன்…’’
‘’அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க…’’ அதில்லை ஜானகி….போனவாரம் கால் வலிக்காக டாக்டர்கிட்டே போயிட்டு வந்தேன்…டெய்லி செர்ரி பழம் சாப்பிடச் சொன்னார்னு சொன்னதும் எல்லோரும் சிரிச்சீங்களே…அப்பகூட இவன் பக்கத்திலேதான் இருந்தான்.
‘ஏம்பா கால் என்னாச்சுன்னு ஒரு வார்த்தை கூட கேட்கலியே. அதான் வருத்தமாயிடுச்சு ஜானகி’’
இரண்டு நாட்களுக்குப் பிறகு..,
‘’சார் கூரியர்…’’
கூரியரில் வந்த பார்சலை ஆச்சரியதுதடன் பிரித்தார் இராமலிங்கம்.
‘’நம்ம ஊர்ல செர்ரி பழத்திற்காக அலைஞ்சு பார்த்தேன், கெடக்கலை. அதான் இப்ப வாங்கி அனுப்பி இருக்கேன். உடம்பை கவனமா பார்த்துக்குங்க அப்பா’’
மகனின் கடிதத்தைப் படித்து இராமலிங்கத்தால் கண்ணீரை அடக்க முடியவில்லை.
- கொ.வை.அரங்கநாதன் (26-11-2008)
தொடர்புடைய சிறுகதைகள்
அம்மியில் தேங்காய், மிளகாய், திட்டமாக புளி வைத்து, கஞ்சிக்கு தொட்டுக் கொள்ள துவையல் அரைத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலை. கண்களில் கண்ணீர், அவளை அறியாமல் வழிந்தபடி இருந்தது. இரவு, சொக்கன் சொன்னது மனதில் வந்து போனது..."அஞ்சலை... நாலையும் யோசித்துத் தான், நான் இந்த ...
மேலும் கதையை படிக்க...
புடவைத் தலைப்பை எடுத்து இடுப்பில் சொருகிவிட்டாள் தங்கப்பாப்பா.
அதன் அர்த்தம் உடனே புரிந்துவிட்டது முருகராசுக்கு. அது புரிவதற்கு அவன் எந்தப் பிரயத்தனமும் செய்யத் தேவையில்லை. அதற்கு அவசியமும் அவனுக்கு இல்லை. அவள் பொறுமைக்கோட்டைத் தாண்டிவிட்டதற்கு அடையாளம் அது.
அடுத்து அவள் என்ன செய்வாள் என்று ...
மேலும் கதையை படிக்க...
1
செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்.
நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த ...
மேலும் கதையை படிக்க...
அந்த செருப்புக்கடை கண்ணாடி சட்டங்கள் எல்லாம் போட்டு பளபளவென்று இருந்தது. செருப்புக்கடையில் குமாரின் அப்பா தான் இருந்தார். சுப்பிரமணியின் அப்பாவையும், சுப்பிரமணியையும் பார்த்தவர், வாங்க, வாங்க! என்றார். குமாரின் அப்பா டிரைவர் வேலை தானே பார்த்தார். செருப்புக்கடையும் வச்சிருக்காரே என்று தோன்றியது ...
மேலும் கதையை படிக்க...
""டேய் நம்ம ஜெயிச்சிட்டோம்டா... மினிஸ்டர் பொண்ணு கல்யாணத்துக்கு பூ அலங்காரம் முழுசும் நமக்குதான். மூணு லட்ச ரூபாய் கான்ட்ராக்ட்... கல்யாணத் தேதிய இப்பத்தான் சொன்னாங்க...''
""கையக் கொடுரா... இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா,'' எட்வர்டின் கைகளைப் பற்றி முரட்டுத்தனமாக குலுக்கினான் ஜான்.
""கல்யாணம் என்னிக்கு?''
""பிப்ரவரி 15.''
""பிப்ரவரி ...
மேலும் கதையை படிக்க...