எப்படி ஒட்டகங்களை பிரிச்சுக்கறது…

 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2

ரணதீர் ராணா இருந்த கிராமதிற்கு ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தான் ரண தீர் ராணாவின் தம்பி பலராம் ராணா.

ஒரு வழிப் போக்கன் மூலமாக தன்னுடைய அண்ணா ரணதீர் ராணா இறந்துப் போன சமா ச்சாரம் கேட்டான்.

உடனே தன் ஒட்டகத்தில் ஏறி தன் அண்ணா கிராமத்துக்கு வந்தான்.

ஒரு ஆல மரத்தின் கீழே தலை மேலே கையை வைத்துக் கொண்டு,கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்த தன் அண்னாவின் மூன்று பிள்ளைகளையும் பார்த்தான் பலராம் ராணா.

’சா¢,அண்னாவோட மூனு பிள்ளைங்களும் இங்கேயே குந்திக் கிட்டு இருக்காங்களே,இங்கே யே நாம அவங்களேப் பாத்து துக்கம் விசாரிச்சுடலாமே’ என்று நினைத்து பலராம் ராணா தன் ஒட்ட கத்தை விட்டு கீழே இறங்கிக் கொண்டார்.

அவர் வந்த ஒட்டகம் ஒட்டகக் கூட்டத்தோடு போய் உட்கார்ந்துக் கொண்டு விட்டது.

தங்கள் சித்தப்பா வந்ததைக் கவனிக்கவே இல்லை மூன்று பிள்ளைகளும்.

”தம்பிங்களா,உங்க அப்பா இப்படி திடீர்ன்னு இறந்துப் போனதே எனக்குக் கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.எனக்கு நேத்திக்குத் தான் ஒரு வழிப் போக்கன் சொன்னான்.உங்களேப் பாத்து துக்கம் விசாரிச்சுட்டுப் போவலாம்ன்னு நினைச்சி நான் என் கிராமத்தை விட்டு இன்னிக்கு காலையிலே தான் கிளம்பி வந்தேன்” என்று சொல்லி வருத்தப்பட்டான் பலராம் ராணா.

உடனே மூன்று பிள்ளைகளும் தங்கள் சித்தப்பாவுக்கு தங்கள் நன்றியைச் சொன்னார்கள்

சொன்ன பிறகும் மூன்று பிள்ளைகளும் மிகவும் வருத்தமாக இருந்ததைப் பார்த்த பலராம் “நீங்க மூனு பெரும் கொஞ்ச கொஞ்சமா உங்க மனசே தேத்திக் கொண்டு வாழ்ந்து வர பழகணும்” என்று புத்திமதி சொன்னார் பலராம் ராணா.

உடனே பொ¢ய பையன் “நாங்க எங்களே தேத்திக் கிட்டு வாழ்ந்துக் கிட்டு வரோம் சித்தப்பா ஆனா அப்பா இறந்துப்போறதுக்கு முன்னாடி இந்த உயிலை எழுதி வச்சுட்டு இறந்துப் போனாரு. அப்பா உயில்லே எழுதி இருக்கா மாதிரி,ஆறு ஏக்கர் புஞ்சை நிலத்தை ஆளுக்கு ரெண்டு ஏக்கரா புஞ்சை நிலத்தை எடுத்துக்கறோம்.ஆனா அவர் எழுதி இருந்தபடி ஒட்டகங்களைத் தான் பிரிச்சி எடுத்துக்க முடியாம தவிக்கறோம்” என்று தன் கண்களில் கண்ணீர் மல்கச் சொன்னார்.

பலராம் ராணா அவர் அண்ணா எழுதி வைத்தி இருந்த உயிலை மறுபடியும்,மறு படியும் படித்தார்.

அவர் கொஞ்சம் யூகம் நிறைந்தவர்.அவர் யோஜனைப் பண்ணீனார்.

கொஞ்ச நேரம் ஆனதும் மூனு பேரைப் பார்த்து “நான்,உங்க அப்பா எழுதி வச்சு இருக்கிற படி உங்க ஒட்டகங்களேப் பிரிச்சுத் தறேன்.நான் பிரிச்சுக் குடுத்தவுடன்,நீங்க மூனு பேரும் ஒன்னும் சொல்லாம,ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டைப் போடாம,நான் பிரிச்சுக் குடுத்த படி ஒட்டகங்களே எடுத்துக்கணும். எனக்கு சத்தியம் பண்ணிக் குடுங்க” என்று சொன்னதும் மூன்று பிள்ளைகளும் சித்தப்பாவைப் பார்த்து “சித்தப்பா,நீங்க மட்டும் அப்பா உயிலிலே எழுதி இருகிற படி ஒட்டகங்களே எங்க மூனு பேருக்கும் பிரிச்சிக் குடுத்தா,நாங்க சண்டே போடவே மாட்டோம்.சந்தோஷமா எடுத்துக் கிடுவோம்.இது சத்தியம் சித்தப்பா” என்று சத்தியம் பண்ணிக் கொடுத்தார்கள்.

பலராம் ராணா மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ஒட்டகங்கள் இருந்த இடத்து க்குப் போனான்.

மஹா வீரைக் கூப்பிட்டு “மஹாவீர்,மொத்தம் எத்தனை ஒட்டகங்கள் இருக்குன்னு எண்ணு” என்று சொன்னதும் மஹாவீர் ஒட்டகங்களை எண்ணீனான்.மொத்தம் இருபத்தி ஏழு இருந்தது.

உடனே அவன் “இருபத்தி ஏழு இருக்கு சித்தப்பா” என்று சொன்னான்.

உடனே பலராம் “மாஹா வீர் இருபத்தி ஏழீல் ஒன்னில் மூனு பாகம் ஒன்பது.நீ ஒன்பது ஒட்டகங்களே எடுத்துக்க” என்று சொன்னதும் மாஹா வீர் ஒன்பது ஒட்டகங்களை எடுத்துக் கொண்டு போனான்.

அடுத்து பீம வீரைக் கூப்பிட்டு “பீம வீர்,நீ இப்போ மீதி எத்தனை ஒட்டகங்கள் இருக்குது எண்ணு” என்று சொன்னவுடன் பீம வீர் எண்ண ஆரம்பித்தான்.
“பதினெட்டு ஒட்டகங்க இருக்கு சித்தப்பா” என்று சொன்னான்.

உடனே பலராம் “பீம வீர் பதினெட்டில் பாதி ஒனபது,நீ ஒன்பது ஒட்டகங்களே எடுத்துக் கிட்டுப் போ” என்று சொன்னதும் பீம வீர் ஒன்பது ஒட்டகங்களை எடுத்துக் கொண்டு போனான்.

பலராம் தான் வந்த ஒட்டகத்தின் மேல் ஏறி உட்கார்ந்துக் கொண்டு சூர் வீர் ராணாவைப் பார்த்து “நீ மீதி இருகிற ஒட்டகங்களே எடுத்துக் கிட்டுப் போ” என்று சொன்னதும் சூர் வீர் மீதி இருந்த ஒட்டகங்களை எடுத்துக் கொண்டான்.

சூர் வீர் மீதி இருந்த ஒட்டகங்களே எடுத்துக் கொண்டான்.

மூன்று பிள்ளைகளும் சித்தப்பாவைப் பார்த்து “சித்தப்பா, உங்களுக்கு எப்படி நாங்க எங்க நன்றியை சொல்றதுன்னு தொ¢யாம தவிக்கறோம்.அப்பா உயிலிலே சொன்னபடியே நீங்க ஒட்டகங்க ளை எங்களுக்குப் பிரிச்சி குடுத்து இருக்கீங்க” என்று சொல்லி விட்டு ‘கோரஸாக’ச் சொன்னார்கள்.

பலராம் ராணா “இப்போ நீங்க மூனு பேரும் சந்தோஷம் தானே” என்று சிரித்துக் கொண்டெ கேட்டார்.

உடனே மூன்று பேரும் “ரொம்ப சந்தோஷம் சித்தப்பா” என்று சொன்னார்கள்.

பலராம் ராணா அவன் வந்த ஒட்டகத்தில் கிளம்பும் போது “நான் போய் வறேன்.நீங்க முனு பேரும் சந்தோஷமா இருந்து வாங்க”என்று சொல்லி விட்டு தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டு இருந்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 உடனே செந்தாமரை உடனே ”சுமதி.நான் உனக்கு தினமும் கணக்கு சொல்லி தறேன். நீ பத்தாவதிலே நிச்சியமா கணக்கிலே ரொம்ப நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணுவே சுமதி” என்று சொன்னதும் சுமதி செந்தாமரையை ஆச்சரியமாகப் பார்த்துக் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 ‘சிஸ்டர்’ அல்ப்ப்ன்சா ‘சிஸ்டர் நிர்மலாவைப் பார்த்து நான் ஏற்பாடு பண்ணீ இருக்கும் விஷயத்தை சொன்னாள்.’சிஸ்டர் நிர்மலா சந்தோஷப் பட்டுக் கொண்டே”ரொம்ப ‘தாங்க்ஸ்’ ‘சிஸ்டர் அல்போன்சா” என்று சொன்னாள். செந்தாமரை தான் எடுத்த இந்த முடிவைப் பற்றி யோஜனைப் பண்ணிக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 மெல்ல கமலாவின்அம்மா கமலாவைப் பாத்து “ கமலா, உனக்கும், மாப்பிள்ளைக்கும் வயசாகி கிட்டு போவுது,சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெத்துக் கோங்க” என்று சாடை மாடையாகச் சொல்லி வந்தாள்.கமலா சிரிச்சக் கிட்டு “அதுக்கு இப்ப என்னம்மா அவசரம்.இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
மும்பையில் ஓடும் ‘எலெக்டிரிக்’ வண்டியில் ‘பிக் பாக்கெட்’ அடித்து பிழைத்து வந்தான் ராஹூல்.அதில் வரும் பணத்தில் ‘ரோந்து’ வரும் போலீஸ்காரர்களுக்கு ‘மாமூல்’ கொடுத்து விட்டு வாழக்கை நடத்தி வந்தான்.இரவு நேரங்களில் எந்த ஸ்டேஷனில் தன் ‘தொழிலை’ முடிக்கிறானோ,அந்த ஸ்டேஷனிலேயே சாப்பிட என்ன ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 “ஏங்க,என்னங்க சொல்றீங்க நீங்க.வேறே மாசா மாசம் நிரந்திர வருமானம் பர பையனா நாம பாத்தா அவங்க அம்மா,அப்பா நம்மை பார்த்து, உங்க பொண்ணுக்கு இன்னும் ‘இதைப் போடுங்க’, ‘அதைப் போடுங்க’,’எங்கப் பையனுக்கு இதை வாங்கிக் குடுங்க’,’அதை ...
மேலும் கதையை படிக்க...
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
குழந்தை
‘தொழிலைக்’ கத்துக்கிட்டா…
சேற்றில் மலர்ந்த செந்தாமரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)