எப்படி…? எப்படி?

 

“நம்ம சின்னான் மவன் சங்கரைக் கவனிச்சியா… நாலு வருஷத்துக்கு முன்னே ஒரு வேளை சோத்துக்கே சிங்கியடிச்சவன். இன்னிக்கு சொந்த வீடு, புது பைக்கு, அவன் சம்சாரத்து காதுலயும் கழுத்துலயும் தங்கமா மின்னுது… அடேங்கப்பா!”

“அட, ஒனக்கு விஷயம் தெரியாதா… எல்லாம் மாமனார் வூட்டுப் பணம்ப்பா!”

“ஒனக்கு அவ்ளதான் தெரியுமா? அவன் மச்சான் கடத்தல் பிஸினஸ் பண்றவன். எல்லாம் தப்பு வழியில வந்த பணம்.”

“சங்கரு மட்டும் யோக்கியம்னு நெனப்பா உனக்கு! அப்பப்போ பட்டணம் போய் வரானே, எதுக்கு? எல்லாம் டப்ளிங்! ஒண்ணுக்கு ரெண்டு. புரியலே? கள்ளநோட்டு கைமாத்துற பிஸினஸ்!”

“அடப்பாவி! அவன் பொண்டாட்டிக்குத் தெரியுமா இதெல்லாம்?”

“தெரியுமாவா? காதைக் கொண்டா! அவன் வூட்டுக்கு அப்பப்போ பெரிய மன்சங்க வந்து போறாங்களே, அவங்கல்லாம் யாருன்னு நெனைச்சே…”

“அவனோட கஸ்டமருங்களா?”

“ம்… அவன் பொண்டாட்டியோட கஸ்டமருங்க! மானங்கெட்ட மனுஷன்! இதெல்லாம் ஒரு பொழைப்பு!”

இங்கே குட்டிச் சுவரில் அமர்ந்து, வெட்டிக் கூட்டம் பிதற்றிக்கொண்டு இருக்க, அங்கே சங்கர் தன் வொர்க் ஷாப்பில் சுறுசுறுப்பாக உழைத்துக்கொண்டு இருந்தான்.

- 22nd ஆகஸ்ட் 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
பத்து நிமிட அடமானம்!
டிபன் சாப்பிட்டுக் கை கழுவி, காபி-யும் குடித்து முடித்து, சர்வர் பில் கொண்டுவரச் சென்றபோதுதான் தூக்கிவாரிப் போட்டது பாஸ்கருக்கு. பேன்ட் பாக்கெட்டில், சட்டைப் பையில் எங்கும் பர்ஸ் இல்லை. “வித்யா! பர்ஸ் கொண்டு வர மறந்துட்டேன். நீ உடனே ஒரு ஆட்டோ பிடிச்சுக்க. ...
மேலும் கதையை படிக்க...
அதுதான் பரிசு!
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி - 2015 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் சிறுகதை அந்தப் பெரிய தூங்குமூஞ்சி மரத்திற்குப் பின்னே மறைந்து நின்று பார்த்தாள் தமயந்தி. பிரசிடெண்ட் தமயந்தி. ஆம்; அவள்தான் அந்தக் கிராம ஊராட்சி மன்றத்தின் ...
மேலும் கதையை படிக்க...
"ஏலே ரெங்கசாமி, எந்திருச்சி வெளியவாடா!" அந்த ஐப்பசி மாத மழைநாளில், விடியற்காலை மூன்று மணிக்கு பண்ணை காரியஸ்தர் சின்னையா பிள்ளையின் குரல் இடிமுழக்கமாய் ஒலித்தது. ஊரே மழைச் சாரலுக்குப் பயந்து வீட்டினுள் கதகதப்பாய் உறங்கிக் கொண்டிருந்தது. "ஏ ரெங்கா, எந்திருச்சு வாடா?" மீண்டும் ...
மேலும் கதையை படிக்க...
பத்து நிமிட அடமானம்!
அதுதான் பரிசு!
துக்கஞ் சொல்லி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)