என் அம்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 12, 2021
பார்வையிட்டோர்: 2,432 
 

அம்மா. அப்பா, அக்கா,.அண்ணா, மாமா .அம்மம்மா . உள்ள எங்கள் வீட்டில் முத்து ஆகிய குடும்பத்தில் நான் .கடை குட்டி பயல் ஒன்பதாம் வகுப்பில் படித்த காலம் அது . ஐம்பதில் சிவாஜி கணேசன் முதலில் நடித்த பராசக்தி படம் வந்திருந்த காலம் அந்த படத்தை என் இரு நண்பர்கள் பார்த்து விட்டு அதில் வந்த வசனங்களை திருப்பி திருப்பி எனக்கு சொல்லியது பாரசக்தி படம் பார்க்க தூண்டிற்று அப்போது இருந்த யாழ்ப்பாணம் வெலிங்டன் தகர சுவர்கள் உள்ள சினிமா தியேட்டரில் வாங்கில் இருந்து பார்க்க 1950 இல் கலரி 55 சதம் அது பெரிய காசு .

***

“அப்பா எனக்கு இரண்டு ரூபாய் தரமுடியுமா?. பராசக்தி படம் பார்க்க இரண்டம் கிளாஸ் செலவோடு கடலை ஆரஞ்சு பார்லி செலவையும் சேர்த்து கேட்டேன் ”

“அக்காவை போய் காசு கேள். அவ வைச்கிருப்பா” அப்பாவின் பதில் வந்தது

டீச்சராக வேலை செய்யும் என் அக்காவிடம் போய் கெஞ்சிக் இரண்டு ரூபாய் கேட்டேன்.

“முத்து எனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை என்னிடம் காசு இல்லை நீ போய் அண்ணாவைக் கேள் அவன் தருவான் ” . அக்கா பதில் சொன்னாள்

வங்கியில் வேலை செய்யும் என் அண்ணாவிடம் போய் இரண்டு ரூபாய் காசு கேட்டேன்.

”எனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை. என் சைக்கில் ரிப்பேர் செலவு வேறு இருக்குஅம்மம்மாவை போய் கேள்.” அண்ணாபதில் சொல்லிவிட்டு நிற்காமல் போய் விட்டான்.

என் அம்மம்மா . படு சிக்கனக்காரி அவளுக்கு கிடைப்பதோ என் தாத்தாஇறந்த பின் கிடைக்கிற சிறு தொகை பென்சன் அவர் இறந்து ஆறு வருஷம்.. கிடைக்கிற பென்சன் அவளின் மருந்து, டாக்டர் செலவுக்கு சரி. அதிலை கோவிலுக்கும். சுருட்டுக்கும் வெற்றிலை பாக்குக்கும் காசு தேவை. எதுக்கும் அவளை கேட்டுப் பாப்போம் என்று அவளிடம் போய் இரண்டு ரூபாய் கேட்டேன்

“ஐயோ ராசா எனக்கு பென்சன் இன்னும் வரவில்லை சுருட்டு வாங்க மட்டும் காசு வைச்சிருக்கிறன் என்னிடம் இரண்டு ரூயா இல்லை:’மமாமாவிடம் பொய் கேள் அவர் தருவார் ”:அம்மம்மா பதில் சொன்னாள்

அம்மாவிடம் போய் இரண்டு ரூபாய் கேட்டேன்

நான் பில்கள் கட்டவேண்டும். பால்காரன் பேப்பர் காரன், கக்கூஸ் கரனுக்கு காசு கொடுக்க வேண்டும் எலெக்ட்ரிக் பில் . வீட்டு வாடகை கட்ட வேண்டும் . என்று அம்மாவிடம் இருந்து பதில் வரலாம் என்று எதிர்பார்த்தேன்

“அதுசரி உனக்கு இப்ப ப எதுக்கு இரண்டு ரூபாய் “?அவள் கேட்டால் நான் ககரணம் சொன்னேன்

நான் அங்கும் இங்கும் இரண்டு ரூபாய் கேட்டு அலைவதைப் பார்த்துக்கு கொண்டு இருந்த என் அம்மாவுக்கு என் மேல் அனுதாபம் வந்தது

ஐம்பது வருடங்களுக்கு முன் என் பாட்டா அவளுக்கு வாங்கி கொடுத்த தகர டிரங்குப் பெட்டியை, தன் மடியில் இருந்த சாவியை எடுத்து அவள் திறந்தாள். டிரங்குப் பெட்டிக்குள் சாவி போட்ட ஒரு பெட்டி.. அதை வேறு சாவி போட்டு திறந்தாள். அதுக்குள் சிறு கொட்டைப்பெட்டி . அதுக்குள் அவள் மடித்து வைத்திருந்தகாசில் எனிடம் ஒரு புது இரண்டு ரூபாய் நோட்டு ஒன்றை எனக்கு தந்தாள். .என்னால் நம்ப முடியவில்லை. அவளைக் கட்டிப்பிடித்து ஓரு முத்தம் கொடுத்தேன்.

அம்மாவின் முகம் மலர்ந்தது . அது தான் தாய் பாசம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *