என்னாலேயே முடியலையே..அவனால் எப்படி..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 5,873 
 

பாகம்-1

லதாவும் ரவியும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்து காதலித்து வந்தார்கள்.ஒருவரை மற்றொ ருவர் நன்றாகப் புரிந்துக் கொண்டு தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேன்டும் என்று நினைத்து இரண்டு வருஷம் காதலித்த பின்பு தான் கல்யாணம் ஒரு நாள் பண்ணிக் கொண்டார்கள்.அடுத்த ரெண்டு வருஷத்தில் அவரவர் விருப்பு,வெறுப்பு, பிடித்தது,பிடிக்காதது, எல்லாம் அணு அணுவாக அலசி ஒருவர் மனதை நன்றாக புரிந்துக் கொண்டதால் சந்தோஷமா வாழ்ந்து வந்தார்கள்.அவர்கள் விரும்பியபடி மூன்று வருஷம் கழித்து ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டார்கள்.லதா வேலைக்கு எல்லாம் போகாமல் வீட்டையே கவனித்து வந்தாள்.

ரவிக்கு படிப்படியாக வேலை உயர்வு கிடைத்து சீனியர் மானேஜர் ஆகி விட்டான்.பதவி உயர்வு வந்ததும் அவன் சோம்பேறியாக மாறி வந்தான்.

இருவரும் அன்று ஒரு ஆங்கில சினிமாவுக்குப் போ னார்கள்.படம் மிக மிக நன்றாக இருந்தது. இருவரும் மிகவும் ரசித்தார்கள்.அந்த படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த ரவி அன்றிலிருந்து சினி மாவில் வந்த ஹீரோவைப் போல் தானும் தாடி,மீசை வளர்க்க ஆரம்பித்தான்.

நடு இரவு வரை பல ‘சானல்களில்’ வரும் ஆங்கில படங்களை எல்லாம் பார்த்து விட்டு லேட் டாக தூங்க போனன் ரவி.காலையில் லேட்டாக எழுந்து தன் வேலைகளை ‘கிடு’ ‘கிடு’ என்று செய்து வந்தான்.மூஞ்சியே ‘வறுக்’ ‘வறுக்’ ன்னு ஒரு அரை மணி நேரம் ‘ஷேவிங்க்’ பண்ணி கிட்டு,டயம் ‘வேஸ்ட்’ பண்ணுவதை மிச்ச படுத்தி சந்தோஷப்பட்டான்.
லதாவுக்கு ரவியின் போக்கே பிடிக்கலே.ஒரு நாள் லதா ரவியிடம் கொஞ்சம் ”இதோ பார் ரவி, உன் மூஞ்சிக்கு தாடி மீசை நல்லாவே இல்லே.ஒரு பிச்சைக்காரன் போல இருக்கு.’ஷேவிங்க்’ பண்ணி கிட்டா,நீ இன்னும் கம்பீரமாகவும்,அழகாகவும் இருப்பே.அதானலே நீ தினமும்’ஷேவிங்க்’ பண்ணி கிட்டு ஆபீஸ்க்குப் போ”என்று கண்டிப்பாக சொ¡ன்னாள்.”இல்லே லதா, என் மூஞ்சுக்கு தாடி மீசை ரொம்ப நல்லாவே இருக்கு” என்று கிண்டலாக பதில் சொல்லி விட்டான் ரவி.

ரவி சொன்னதைக் கேட்டு லதா கோவம் வந்து படுக்கை அறையில் அவனை ‘பட்டினி’ போட் டாள்.அவன் கவலைப் படவில்லை.

ஒரு மாதம் ஓடி விட்டது.ரவி வெறுமனே சலூன் போய் ‘ட்ரிம்’ பண்ணிக் கொண்டானே ஒழிய தாடி மீசையை அப்படியே வைத்துக் கொண்டு தான் ஆபீஸ் போய்க் கொண்டு இருந்தான்.லதா மிகவும் வெறுப்படைந்து தன்னிடம் இருந்த கடைசி ஆயுதத்தை போட்டாள்.

”ரவி,நீ என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கறே.நான் குழந்தையை அழைச்சுக் கிட்டு என் அம்மா வீட்டுக்குப் போயிடப் போறேன்” என்றாள் கோவமாக முகத்தை வைத்துக் கொண்டு.அவன் அதற்கு நிதானமாக ”சரி நீ ஜாக்கிறதையா போய் வா.நான் ஆ·பீஸ் ‘காண்டினில்’ சாப்பிட்டுக்கறேன்” என்று ஒரு எதிர் ஆயுதததைப் போட்டான்.

லதா இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை.‘லதா நீ உன் அம்மா வீட்டுக்கு எல்லாம் போக வேணாம். உன் இஷடப்படியே நான் என் தாடி மீசையே ‘ஷேவிங்க்’ பண்ணிக்கிறேன்’ன்னு கெஞ்சுவான் என்று எதிர் பார்த்தாள் லதா. ரவி ஆபீஸ்க்கு கிளம்பிப் போய் விட்டான். நாள் பூராவும் யோஜனைப் பண்ணினாள் லதா.

கடைசியாக ஒரு முடிவுக்கு வந்த லதா ரவிக்கு போன் பண்ணி சொல்லி விட்டு குழந்தையை அழைத்து கொண்டு அம்மா வீட்டுக்கு கிளம்பி வந்து விட்டாள்.

ஒரு வாரம் ஆகி விட்டது.

அன்று ரவியிடமிருந்து போன் வந்தது.லதா அம்மா தான் போனை எடுத்து பேசினாள்.“ரவி தான் லதா போன்லே, உன்னை கூப்பிடறார்” என்று சொல்லி ·போனை லதா கையிலே கொடுத்தாள் லதாவின் அம்மா.

லதா கர்வப் பட்டாள்.‘எனக்கு தெரியும்மா.நான் இல்லாம அவராலே ரொம்ப நாள் தனியா இருக்க முடியாது.பாத்தயா போன் பண்றார்’ என்று மெல்ல சொல்லிக் கொண்டே போனை வாங்கிக் கொண்டாள் லதா.

”லதா நேத்து விமலாவின் ஸ்கூல்லே இருந்து போன் வந்திச்சு.‘விமலா ஏன் ஸ்கூலுக்கு வரலே லீவ் லெட்டரும் நீங்க தரலையே.இந்த மாதிரி ‘லாங்க் லீவ்’ எல்லாம் எடுக்க கூடாது.இன்னும் ‘டூ டேஸிலே’ விமலா ஸ்கூலுக்கு வராட்டா நாங்க அவளை ‘டெர்மினேட்’ பண்ணிடுவோம்’ன்னு சொன்னாங்க.நாம இந்த ஸ்கூல்லே பத்தாயிரம் ரூபாய் ‘டொனேஷன்’ குடுத்து ‘அட்மிஷன்’ வாங்கி இருக்கோம்.ஸ்கூல் நம்ம வீட்டுக்கு கிட்டே இருக்கு.இந்த ஸ்கூல்லே இருந்து விமலாவை ‘டெர்மினேட்’ பண்ணிட்டா,நாம மறுபடியும் ‘டொனேஷன்’ குடுத்து நம்ம வீட்டுக்கு தூர இருக்கும் ஒரு ஸ்கூல்லே அவளே சேர்க்க வேண்டி இருக்கும்.என்ன பண்ணலாம் சொல்லு“ என்றான்.விமலாவை வேறே தூர இருக்கும் ஸ்கூல்லே சேர்க்க இஷ்டம் இல்லை லதாவுக்கு. யோஜனைப் பண்ணீனாள்.

பிறகு ஒரு முடிவுக்கு வந்தவாளாய் வெறுப்புடன் “சரி,நான் இன்னைக்கே கிளம்பி வறேன்” என்று சொல்லி விட்டு ‘படக்’ கென்று போனை வைத்து விட்டாள்.

லதா வீட்டுக்கு வந்தவுடன்,குழந்தை விமலாவை அழைத்து கொண்டு போய் பிரின்ஸிபாலிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, விமலாவை மறுபடியும் அந்த ஸ்கூல்லே சேர்த்தார்கள் லதாவும் ரவியும்.

ரவி முன் மாதிரியே தாடி மீசையுடன் தான் ஆபீஸ் போய் வந்துக் கொண்டு இருந்தான்.

அதே ஊரில் வசிக்கும் லதாவின் தம்பி கிருஷ்ணன் லதாவைப் பார்க்க ஒரு நாள் வந்தான் அவன் ஒரு கட்டைபிரம்மாச்சாரி.அவளுக்கு அவனை கொஞ்சமும் பிடிக்காது.அவனும் லதாவை அடிக்கடி பார்க்க வரமாட்டான். எப்பவோ ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை அவன் வந்து போவான்.கிருஷ்ணனைக் கண்டாலே ரவிக்கு பிடிக்காது.ரவி கிருஷ்ணனோடு பேசவே மாட்டான்.

லதாவுடன் சிரிச்சு பேசிக் கிட்டு இருந்த கிருஷ்ணன்,அக்கா முகத்திலே வழக்கமாக இருக்கும் சிரிப்பும் சந்தோஷமும் இல்லாமல் இருப்பதை கவனித்தான்.

“என்ன லதா என்னவோ மாதிரி இருக்கே.உனக்கு உடம்பு சரியில்லையா.இல்லை.மச்சானுக்கு எதாவது பிரச்சினையா.இல்லே குழந்தைக்கு ஏதாச்சும் உடம்பா” என்று கேள்விகளை அடுக்கி கிட்டே போனான்.”அதெல்லாம் ஒன்னும் இல்லைடா.எனக்கு தான் ஒரு பெரிய ‘ப்ராப்லெம்’. அது இருக்கட்டு ம்.நீ எப்படி இருக்கே சொல்லு.நீ இப்படி கல்யாணம் பண்ணிக் கொள்ளாம இன்னும் எத்தனை வருஷ ம்டா பிரம்மசாரியா இருக்கப் போறே” என்று அக்கா என்ற உரிமையில் அவனை அதட்டினாள்.

”அதே விடுக்கா.உன் ‘ப்ராப்லெம்’ என்ன.அதை முதல்லே சொல்லு.நான் ‘சால்வ்’ பண்றேன்” என்று கேட்டான் கிருஷ்ணன்.

விடாமல் கிருஷ்னன் கேக்கவே வேறு வழி இல்லாம லதா “எனக்கு பிடிக்கலேன்னு நான் பல தடவை சொல்லியும்,ரவி மசியலேடா. தினமும் தாடி மீசையோடத் தான் ஆபீஸ் போய்க் கிட்டு வரார். நான் எவ்வளவு முயற்சி பண்ணியும்,என்னால் அவரை அந்த தாடி மீசையை எடுக்க வக்க முடியலே டா” என்று அழாக் குறையாய் சொன்னாள்.

உடனே “அஹஹ்ஹஹா” என்று ஒரு வில்லனை போல சிரிச்சுட்டு,“இவ்வளவு தானா.இதுக்கா இப்படி கவலைப் படறே.நீ கவலையை விடு.இன்னும் மூனு நாளுக்குள் நான் மச்சானை தாடி மீசை யை எடுத்துட்டு,பழைய படி ‘க்ளீன்’ ஷேவிங்க் பண்ணிக் கிட்டு ஆபீஸ் போவ வக்கிறேன் பார்” என்று சவால் விட்டான் கிருஷ்னன்.

”இது உன்னால் முடியாதுடா..உன்னை விட அவர் வயசிலே பொ¢யவரு.அவரோ உன் கூட பேசறது கூடஇல்லே.உன்னாலே அவரை மாத்தவே முடியாது.வீண் ஜம்பம் அடிக்காதே”என்று மிரட்டி னாள் லதா.

“இது நான் விடும் சவால்கா.இன்னும் மூனு நாளைக்குள்ளாற மச்சான் தாடியை மீசையை எடுக்கலேன்னா நான் உனக்கு ‘ட்வென்ட்டி தௌசன்ட் ருபீஸ்” தரேன்.என் சவால்லே நான் ஜெயிச் சே ன்னா,நீ எனக்கு ஒரு ‘டென் தௌசன்ட்’ ருபீஸ்,அதாவது பாதி பணம் கொடுத்தா போதும்.என்ன ‘டீலா’,‘நோ டீலா’” என்று எதிர் சவால் விட்டான் கிருஷ்ணன்.

அசந்துப் போய் விட்டாள் லதா.

“டீல் டா.நான் ரெடி.நீ பின் வாங்க மாட்டியே” என்று எதிர் சவால் விட்டாள் லதா.”நான் பின் வாங்க மாட்டேங்கா.நீ அத்தானை பாத்துகிட்டே இரு.எதுக்கும் ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு செக் கை ரெடி பண்ணி வை.நான் போய் வறேன்” என்று சொல்லி விட்டுப் சிரித்துக் கொண்டே போய் விட்டான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் சொல்லி விட்டுப் போய் நாலு நாள் ஆயிற்று.

வழக்கம் போல் லதா அதி காலையிலேயே எழுந்து தன் வேலைகளை கவனித்து கொண்டு இருந்தாள்.ஏழு மணிக்கு பெட் ரூமை விட்டு வெளியே எழுந்த ரவி.நேரே ‘பாத் ரூமு’க்கு போனான். .ஒரு அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த ரவியைப் பார்த்த லதாவுக்கு அச்சரியம் தாங்க வில்லை.நல்ல ‘க்ளீன் ஷேவிங்க்’ பண்ணிக் கொண்டு இருந்தான் ரவி.அவ கண்களை அவளாலே நம்ப முடியலே.ஓடி போய் கணவனைக் கட்டிக் கொண்டாள்.நன்றாக ‘ட்ரஸ்’ பண்ணிக் கொண்டு ஆபீஸ் கிளம்பினான் ரவி.அவனை வழி அனுப்பி விட்டு சோபாவில் ‘பொத்’ தென்று விழுந்தாள் லதா.என்ன யோஜனை பண்ணியும் அவளுக்கு காரணம் புரியலே.

ரவியிடம் கேகக லதாவுக்கு வெக்கம்.

’என்னாலே முடியலே,அவனால் எப்படி முடிஞ்சது’ என்று எண்ணி தன் தலையை பிச்சிக் கொண்டாள்.அவளுக்கு பயித்தியமே பிடிக்கும் போல் இருந்தது.

உங்கள் யாருக்காவது என்ன காரணம்ன்னு தெரிதா???

அடுத்த பாகத்தை படியுங்க. உங்களுக்கு காரணம் புரியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *