ஒரு பெரிய குடும்பத்திலே பெருஞ் செல்வனாக வாழ்ந்த தலைவன், நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையிலே கிடந்தான்.
அவனுக்குப் பல பிள்ளைகள், பேரன் பேத்திகள். எல்லோரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். “அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள்? அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள்? தாத்தா எனக்கு… …”
அவர் மனைவியும் அருகில் நின்று கதறி, “எனக்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று
பதைபதைக்கின்றாள். இனி பிழைக்கமாட்டான் என்று நிலைமை வந்ததும், ஒவ்வொருவராகச் சென்று “எனக்கு என்ன சொல்கிறீர்கள்?“ எனக் கேட்கின்றனர்.
நாள் முழுவதும் கண் மூடி, வாய் மூடிக் கிடந்த அவன் சற்று நினைவு வந்து, வாய் திறந்து, இவ்வளவு. நாளா சொன்னேன்! யார் கேட்டீர்கள்? இப்பொழுது மட்டும் கேட்க”…என்று சொல்லி நிறுத்திவிட்டான்.
இதிலிருந்து – தன் வாழ்நாள் எல்லாம் சொல்லுவதை சொல்லி வந்ததை எவரும் கேட்பதில்லை; கேட்காமல், சாகப்போகிற சமயத்தில் சொல்லுவதைத்தான் கேட்க விருப்பம் என்று தெரிகிறது – அது எந்த அளவுக்குப் பயன்படும் என்பதை -
எண்ணிப் பார்ப்பது நல்லது!
- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
தொடர்புடைய சிறுகதைகள்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களிடம் புலவர் பெருமக்கள் மேலும் கல்வி கற்க அடிக்கடி சென்றுவருவதுண்டு. பலரும் கவிபாடிப் பெருமையடைவதை அறிந்த பள்ளி மாணவன் ஒருவன் தானும் கவிபாட விரும்பினான். பிள்ளையவர்களை நெருங்கிக் கவிபாடச் சொல்லிக் கொடுக்கும்படி வேண்டிக் ...
மேலும் கதையை படிக்க...
பள்ளி வாசல் கட்டவேண்டுமென்று எண்ணிய மவுல்வி நபி நாயகமவர்களிடம் சென்று பொருள் வேண்டு மென்று கேட்டார். அவர் ஒரு செல்வனைக் குறிப்பிட்டு அவனிடம் கேட்டுப் பெறும்படி அனுப்பினார்.
அப்படியே மவுல்வியும் செல்வனைக் காணச் சென்ற போது, அங்கே —
“வேலைக்காரனைக் கையை மடக்கி மரத்தில் ...
மேலும் கதையை படிக்க...
தன் ஒரே மகன் திடீரென்று இறந்துவிடவே. துயரம் தாங்காமல் வருந்திய ஒரு தந்தை, புத்த பகவானை அணுகி, எப்படியாவது தன்னுடைய மகனை உயிரோடு எழுப்பிக் கொடுக்கும்படி வேண்டி அழுதான்.
புத்தர் என்ன செய்வார்? அவரால் எழுப்பிக் கொடுக்க முடியும். இருந்தாலும் பிணத்தைத் தூக்கிக் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு காட்டிலுள்ள ஆலமரத்தின்மேல் அமர்ந்திருந்த கிளியும், கீழே நின்றிருந்த ஒநாயும் இவ்வாறு பேசிக் கொண்டன :
கிளி : ஒநாய் அண்ணே! ஏன் விசனமா இருக்கீங்க?
ஒநாய் : உனக்குச் சங்கதி தெரியாதா கிளித்தங்கச்சி. நான் வேறே காட்டுக்கல்லவா போகப்போறேன்.
கிளி : ஏன் வேறு ...
மேலும் கதையை படிக்க...
மாலை வேளையில் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்த தாசியொருத்தி, கீழேயிருந்த தன் வேலைக்காரியை அழைத்து, “நம் வீதி வழியே ஒரு பெரியவரின் சடலம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நீ போய் அவரது ஆன்மா மோட்சத்துக்குப் போகிறதா - நரகத்துக்குப் போகிறதா என்று பார்த்து ...
மேலும் கதையை படிக்க...
அவள் கூறினாள். ஆம்! மயிலின் சாயலையுடைய அழகிய பெண்ணொருத்தி ஒரு ஆடவனுடன் செல்வதைக் கண்டேன்” என்று
என்ன பண்பு? ஆண், ஆணை மட்டுமே கண்டான். அருகில் சென்ற பெண்ணைக் காணவில்லை. பெண். பெண்ணை மட்டுமே கண்டாள். உடன் சென்ற ஆணைக் காணவில்லை.
அவர்களிடம் அத் ...
மேலும் கதையை படிக்க...
இருவரும் மாமன் மைத்துன உறவினர். கரூர்ப் புலவர், மாமன்; திருச்சிப் புலவர், மைத்துனர். கரூர்ப் புலவர் தன் மைத்துனரிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னார். திருச்சிப் புலவரோ பிடிவாதமாகச் செய்ய மறுத்துவிட்டார். அவருக்குக் கோபம்.
‘மைத்துனரே, எம் கால்வழியே வருகிற நீரைக் குடிக்கிற ...
மேலும் கதையை படிக்க...
மேலை நாட்டிலே எழுத்தாளன் ஒருவன்—அவன் நூல்கள் மிக வேகமாகப் பரவின. எல்லோரும் படிக்க விரும்பினர். அவனுக்குப் புகழ் மேலும் மேலும் ஓங்கியது.
இத்தனைக்கும் அவன் ஒரு படிப்பாளியும் அல்லன்: பட்டதாரியும் அல்லன்; எழுத்தாளனுமல்லன்; பேச்சாளலுமல்லன்; ஒரு குதிரை வண்டி ஒட்டுபவன்.
பத்திரிகை நிருபர்கள் அவனிடம் ...
மேலும் கதையை படிக்க...
சென்னை மாநகரில் மாளிகையிடத்தில் திரு. சச்சிதானந்தம் பிள்ளை, திரு.வி.க., மறைமலையடிகள் இவர்களுடன், விருந்துக்கு அமர்ந்து உண்டுகொண்டிருந்தார்.
அப்போது, சச்சிதானந்தம் பிள்ளை ரசத்தைப் பருகிக் கொண்டிருக்கும்போது சிறிது இருமினார். அருகில் இருந்த திரு.வி.க. கேட்டார் - 'அது என்ன? ரசம். அதிகாரமோ!” இருமும்போது - ...
மேலும் கதையை படிக்க...
தன் உடன் பிறந்தவனுக்கு மந்திரி பதவி கொடுக்கும் படி அரசனை வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. அரசனும், அரண்மனையில் இருந்தபடியே தன் மைத்துனரை வரச்சொல்லி உரையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது வீதியில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்கவே, அரசன் ஏதோ யோசனை செய்து, உடனே தன் ...
மேலும் கதையை படிக்க...
சங்ககால நூல்களில் ஒரு காட்சி
கரூர் திருச்சிப் புலவர்கள்
திரு.வி.க. – மறைமலையடிகள்