Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

எதிர்வினை!

 

திருமணம் முடிந்து நான்கைந்து மாதங்களில் கடந்த ஒரு மாத காலமாக மனைவி நடப்பில் மாற்றம்! – கவனித்த சுரேசுக்குச் சின்னதாய் ஒரு நெருடல்.

திருமணமான புதிதில் அழகு மனைவியோடு உல்லாசமாக ஊர் சுற்ற வேண்டும் என்கிற நினைப்பில் அலுவலகம் விட்டு வந்த கையோடு…. கடற்கரை, பூங்கா, சினிமா, உணவு விடுதி என்றெல்லாம் அழைப்பான். லேசில் சம்மதிக்க மாட்டாள். அப்படியே வற்புறுத்தி அழைத்துச் சென்றாலும் தலைவலி, கால்வலி, குளிர் என்று ஏதாவது ஒரு சாக்கு சொல்லி அரை மணி நேரத்திற்குள்ளாக உடன் வைத்து வீட்டில் அடைவது அவள் வழக்கம்.

கடந்த ஒரு மாத காலத்தில் அப்படியே தலைகீழ் மாற்றம்.

அவளாகவே முன் வந்து…

“வீட்டில் அடைஞ்சு கிடக்கிறது போர்ங்க..”சொல்லி…

வெள்ளி, செவ்வாய்.. கோயில் ! திங்கள் கடற்கரை. புதன் பூங்கா. வியாழன் சினிமா. சனி ஓட்டல். அப்புறம் மளிகை, மார்க்கெட், காய்கறி கடைக்குக் கிளம்பினாலும் ” நானும் வர்றேங்க..!” உடன் கிளம்பி விடுகிறாள்.

எங்கு சென்றாலும்… வெகுநேரத்திற்குப் பின்தான் ” கிளம்பலாம்ங்க..”என்ற வீட்டு நினைப்பு.

அதற்கு முன் இவன் கிளம்பினாலும்” இருங்க போகலாம். !” என்கிற தாமதப்படுத்தல்.

ஏன் இப்படி….? எதற்காக இப்படி..?

வீட்டிலுள்ள மாமியாருடன் மனக்கசப்பு. அப்பா மீது வருத்தமா..?

மகள் இல்லாத குறை. அம்மா இவள் மீது அன்பு, பாசம் கொட்டி சரியாகத்தான் நடத்துகிறாள்.

அப்பா மீதும் தவறில்லை.

வயல் வெளி சென்று வீடு திரும்பினால் ” மருமகளே..!” என்கிற குரலில் மாற்றமில்லை.

பின் எதற்காக இந்த மாற்றம்..?

வெகுநேரமாக கடற்கரையில் அவளோடு அமர்ந்திருந்த சுரேசுக்கு இப்போதும் அதே சிந்தனை.

“அமுதா… !” இருட்டில் அலை அடித்து சிலுசிலுவென்று காற்று வீசும் கடலை நோக்கி அமர்ந்திருந்தவளை அழைத்தான்.

மின்னொளியில் அவள் கேசம் காற்றிக்கேற்ப ஆடியது அழகாக இருந்தது.

“சொல்லுங்க..?” தலையைத் திருப்பாமல் குரல் மட்டும் கொடுத்தாள்.

“மணி எட்டு. வீட்டுக்குப் போகலாமா..? நாம வந்து ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆச்சு.”

“கூட்டம் குறையாட்டும். இன்னும் அரை மணி நேரம் கழிச்சுப் போகலாம்.”

“அமுதா..? ”

“என்ன..? ”

“சின்ன சந்தேகம் ”

“சொல்லுங்க..? ”

“இப்போ நீ வெளியே வந்தால் வீடு திரும்பவே மனசில்லே சரியா..? ”

“ஆமாம் !”

“ஏன்…?”

“நான் சொல்றதைக் கவனமாக் கேளுங்க..”

“சரி”

“நம்ம திருமணத்துக்குப் பிறகு நான் வீட்டு மருமகளாய் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது உங்க அம்மா அப்பா அன்னியோன்யத்துக்குப் பெரிய இடைஞ்சலா இருக்கு..”

“அப்படியா..? எப்படி..?”

“ஒரு மாசத்துக்கு முன் உங்க அப்பா அறைக்கு எதுக்கோ போனேன். கதவு சாத்தி இருக்க..உங்க அம்மாகிட்ட அவர் வம்பு.

“ச்ச்சூ!..! சும்மா இருங்க. கையை விடுங்க..மருமகள் வீட்டிலிருக்கும்போது” ன்னு உங்க அம்மா கெஞ்சல் !!

அப்பதான் நாம ராவும், பகலும் இவங்களுக்கு இடைஞ்சலாய் இருக்கோம், வயசானாலும் அவுங்களும் கணவன் மனைவிதானே ! என்கிற விசயம் எனக்குப் புரிஞ்சுது. என் புத்தியில் உறைச்சுது.

அதன் விளைவுதான் நாம இப்படி வெளியேற்றம்.! இந்த இடைவெளியில் அவுங்க சந்தோசமா இருப்பாங்க..” சொன்னாள்.

கேட்ட அடுத்த வினாடி…

“அடிப்பாவி ! காரியத்தைக் கெடுத்தே..!” சுரேஷ் பதறி எழுந்தான்.

“என்ன..?” இவளும் எழுந்து அவனைக் கலவரமாகப் பார்த்தாள்

“அம்பது வயசானாலும் என் அப்பாவுக்கு கிராமத்துல ரெண்டு மூணு தொடுப்பு. அதையும் மீறி அம்மாகிட்ட தினம் வம்பு. இதுக்கு ஒரு முடிவு கட்டத்தான் அம்மா காலாகாலத்துல எனக்குக் கலியாணம் முடிச்சு வீட்டு மருமகளாய்த் தேடி உன்னை முடிச்சாங்க. இப்போ அவுங்க பாவம்ன்னு நினைச்சி அதுக்கும் வைச்சே ஆப்பு. கிளம்பு சீக்கிரம்!” ஆளை இழுத்துக் கொண்டு பறந்தான்.

அமலாவிற்கு வாய் பேச முடியாத அதிர்ச்சி! 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்தமான் எக்ஸ்பிரஸ் ஜம்மு காஷ்மீர் கட்ராவை நோக்கி சென்னையிலிருந்து மூன்று நாள் பயணத்தில் ஒரு நாள் பயண தூரமான மூன்றில் ஒரு பங்கைக் கடந்து கொண்டிருந்தது. எஸ். 7 ல் பயணம் செய்யும் நான், பூவரசன், அழகேசன், குசேலனைத் தவிரஅமர்நாத்திற்குப் பயணம் செய்யும் ...
மேலும் கதையை படிக்க...
"வடிவேலு ! உனக்குப் பொம்பளைப் புள்ள பொறந்திருக்காம்...! சேதி வந்திருக்கு..."தாய் வள்ளிக்கண்ணு கைபேசியை அணைத்து விட்டு வந்து மகிழ்ச்சியாய்ச் சொல்ல... மூன்று சக்கர வண்டியில் அமர்ந்து ராட்டை உருட்டிக்கொண்டிருந்த அவனுக்குத் திக்கென்றது. "இரு. நான் போய் பார்த்துட்டு வர்றேன் ! "அவள் இவன் ...
மேலும் கதையை படிக்க...
'இன்று துபாயிலிருந்து கஸ்தூரி நேராக தங்கள் வீட்டிற்கு வருகிறாள் !'- என்று செந்தில் சேதி சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சேதி சொல்லி வைத்த அடுத்த விநாடியிலிருந்து கண்ணணைவிட சுமதிக்குத்தான் வயிற்றில் கலக்கம். வீட்டில் வேலை ஓடவில்லை. இதே நிலைதான் மூன்று வருடங்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
அமெரிக்காவில் வேலை செய்யும் நண்பன் நாகராசன் இந்தியா வந்தால் என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டான். உடனே அழைப்பான். விமானத்தை விட்டு இறங்கி வீடு திரும்பியதும் இன்றும் அப்படிதான் அழைத்தான். நான் எனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றேன். '' வா. .. பரசு. .! ...
மேலும் கதையை படிக்க...
கோவிந்தனுக்குக் குமாரலிங்கத்தை நினைக்கக் கோபம் கோபமாக வந்தது. தான் அரசு அலுவலகம் ஒன்றில் தினக்கூலி என்றாலும் அதிகாரியிலிருந்து அத்தனை ஊழியர்களும்..... 'இவன் அமைச்சருக்கு நெருங்கிய உறவு, சொந்தக்காரன். அவர் சிபாரிசில் வேலையில் சேர்ந்தவன். ஆளைத் தொட்டால் ஆபத்து !' - என்று பயந்து விலகிப் ...
மேலும் கதையை படிக்க...
"அப்புறம் முடிவா என்ன சொல்றே செங்கமலம்..?" பஞ்சாயத்து தனசேகரன் அவளை பார்த்துக் கேட்டார். ஊர் கூடி இருந்தது. பஞ்சாயத்து மேடைக்கு அருகில்... வலப்புறம் அவள் கணவன் முருகையனும், இடது புறம் செங்கமலமும் எதிர் எதிரே நின்றார்கள். "ஐயா ! நான் படுற கஷ்டம் இந்த ஊருக்கேத் ...
மேலும் கதையை படிக்க...
நான் வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்குப் பிறகு இரவு ஏழு மணி சுமாருக்கு... சொல்லவா கூடாதா என்கிற நீண்ட போராட்டத் தயக்கத்தில் ‘‘ என்னங்க...! ‘‘ மெல்ல அழைத்தாள் என் மனைவி இந்திரா. ‘‘ என்ன...?‘‘ பக்கத்தில் வந்தவளைத் திரும்பி பார்த்தேன். ...
மேலும் கதையை படிக்க...
'' எந்த சிறுக்கிடி எம் புள்ளைய நாக்குல நரம்பில்லாம பேசினது...? தைரியமிருந்தா..என் முன்னால வந்து பேசுங்கடி...'' அந்த மத்தியான வெய்யிலில் போவோர் வருவோரைப் பற்றிக் கவலைப் படாமல் பத்ரகாளி போல ஏழரைக் கட்டைச் சுருதியில் கத்தி கூப்பாடு போட்டாள் ராக்கம்மா. அந்தத் தெருவில் ...
மேலும் கதையை படிக்க...
மலர்ந்தும் மலராத காலைப் பொழுது 5.15 மணி அளவில் தன்னந்தனியே ஒரு ஆள் ஆஆஆஆ......வென்று ஒரு நாள் இரண்டு நாளில்லை. ஒருவார காலமாய்....ஓலம் விட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். நீங்கள் என்ன நினைப்பீர்களோ.... அதேதான் எனக்கும். எனக்கு வயது 63. மூன்றாண்டுகளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
'விசயம் அங்கே போய் மோதாவிட்டால் முடிவிற்கு வந்து முடியாது!' என்பது தெளிவாகத் தெரிந்தது ஞானாம்பாளுக்கு. ஊரில் பெரும் புள்ளி, முக்கிய மனிதர், பஞ்சாயத்து, எந்த கொம்னாலும் அசைக்க முடியாத ஆள் தலையிட்டால் யார்தான் மிரளாமல் இருப்பார்கள்.! கட்டுப்படாமல் போவார்கள் ?! எல்லாம்....இவர்களுக்குப் பின்னால் சரியான ...
மேலும் கதையை படிக்க...
துறவு…!
பயம்
சோரமாகுமோ சொந்தம்……..!
வேண்டாம்..!
மந்திரி மச்சான்..!
தாலி ஒரு சுமை..!
அவர்கள் அடிமைகள் அல்ல….
பொய் முகம்..!
ஆஆஆஆஆ…!
இன்னா செய்தாரை……..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)