எங்கே தவறு?

 

என் மகளுக்குக் கதை சொல்லிக் கொண்டே சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அவளும், பாட்டியிடம் காகம் வடையைத் திருடியதையும், அதை நரி ஏமாற்றிப் பறித்ததையும் கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள். எனக்கு அவள் முழுதும் சாப்பிட்ட திருப்தி.

மறுநாள்.

எனக்குத் தெரியாமல் ஃப்ரிட்ஜைத் திறந்து சாக்லேட் எடுத்துச் சாப்பிட்டதை அவள் கைகளும் வாயும் சொன்னாலும் தலை மட்டும் இல்லை என்றே சொன்னது. எங்கே தவறு?

அன்றும் அதே காகம் நரி கதை சொல்லித்தான் சாதம் ஊட்டினேன். ஆனால் அன்று காகம் பாட்டியிடம், “பசிக்குது… ப்ளீஸ் ஒரு வடை தா” என்றது. பாட்டி தந்தாள், மரத்தின் மேல் அமர்ந்து சாப்பிட்டது. அப்போது நரியும் பசி என்றது. உடனே காகம் பாதி வடையை நரிக்குத் தந்து மீதியை தான் உண்டது.

மறுநாள்…

“அம்மா… ப்ளீஸ் ஒரு சாக்லேட் தா” என்று மழலையில் கேட்டு வாங்கிய என் மகள் பக்கத்தில் தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த நிக்கிக்கும் பாதி தந்தாள்.

- ஜூலை 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
ரயில் புறப்படத் தயாராக இருந்தது. ''என்ன கலா! புரியாமப் பேசற, எனக்கு முக்கியமான ஆடிட்டிங் இருக்கு'' என்றான் வாசு. ''பாஷை தெரியாத ஊர், அவ்வளவு தூரம், இவன வேற வச்சுகிட்டு'' இரண்டு வயது மகனைக் காட்டிய கலாவுக்குச் சற்றுக் கலக்கமாய் இருந்தது. ''கண்ணனுக்குப் போன் ...
மேலும் கதையை படிக்க...
ராசாத்திக்கு மயக்கம் தெளிந்தபோது அருகில் யாரும் இல்லை. பிரசவம் பார்த்த மருத்துவச்சி ''ஐயே! பொட்டப்புள்ளடா மருது'' சொல்லிவிட்டு சென்றது தெரியும். சிவத்தாயி குடிசை மூலையில் அமர்ந்தபடி கத்திக் கொண்டிருந்தாள். ''அதெல்லாம் பாவம்டா, அவ இவ பேச்செல்லாம் கேட்டுட்டு அந்தச் சிசுவக் கொன்னுடாதடா ...
மேலும் கதையை படிக்க...
''பரிமளம்! கொஞ்சம் காபி தா'' கொல்லைப்புறம் கை, கால், முகம் கழுவச் சென்றார் கேசவன். ''காபி டேபிள்-ல வச்சிருக்கேன்'' சொல்லிவிட்டு அடுக்களைக்குள் புகுந்தாள் பரிமளம். திரும்பி வந்தவர் கடுப்பாகிக் கத்த ஆரம்பித்தார். ''ஏய் பரிமளம், இங்க வந்து பார்! இந்தப் பூனையை'' காபியைக் கீழே கொட்டி முழுசாய் ...
மேலும் கதையை படிக்க...
யாரோ யார் அவன்?
ஐயே! பொட்டப்புள்ள!
ஆசானுக்குப் பாடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)