ஊட்டவுட்டுத் தொரத்த ஆள் வந்தாச்சு!

 

மஞ்கள் கதிரவன் கண்ணைக் கரித்தது. மணி நாலிருக்கும் போலிருந்தது. அடுப்பு ஈரவெறகால் புகையைக் கிளப்பியது. கமலா கண்ணைக் கசக்கியபடி முள்ளுக்கட்டை ஒன்றை சொருகினாள்.

அடுத்த கணம், “மடோர்” என்று பானை உடைந்து மூணு படி, நெருச்சு போட்டு காய்ச்சிய சோளக்கஞசி அடுப்பைச்சுற்றி பரவலாய் ஓடியது.

இருபது வயதை கடந்த கமலாவின் நெஞ்சில் “திக்“ என்று பயம் பரவியது. கண்ணில் நீர் வெள்ளமாய் பெருகியது. என்ன பண்ணுவது என்று ஒன்றும் புரியவில்லை. பொழுது சாய்ந்து கொண்டிருந்தது.

தட்டு வணடிகள் வந்து சேர்ந்தன. கணுவாய் சோமையம்பாளையம் சோளக்காட்டுக்கு கதிரறுக்கப்போன தன் சின்னாத்தா வேறே வந்தால் தன்னைக் கொன்றே விடுவாள்.

தட்டுவண்டிகள்லே வர்றவங்களுக்கு சின்னாத்தா கஞ்சி காச்சச் சொல்லியிருந்தாள். மூணுமணிக்கே அடுப்பப்பத்தவச்சு, மூணு படி சோளத்தை ராயிக்கல்லுல போட்டு நெருச்சு, கஞ்சி காச்சத் துவங்கினாள் கமலா. பானைக்கடியில் எங்கேயோ லேசா விரிசல் விட்டிருக்கும் போலிருந்தது. கஞ்சி வெந்ததும் இறக்கி வைக்கலாம் என்றிருந்தாள்.

இப்படியாகும் என்று யார்கண்டா?

நல்லாம்பாளையம் கிராமத்தில் கமலாவின் அப்பா வீராசாமி பெருந்தனக்காரர்.அந்தஊரில் அவர்கள் வீடுதான் அரண்மனை மாதிரி.

பெரிய வீடு. பின்னால் மூன்றேக்கராவில் காய்கறி தோட்டம். தானி யங்கள் காயப்போட விஸ்தாரமான சிமெண்ட்தளங்கள் ஓரமாய் பெரிய கவலைகிணறு.எந்நேரமும் மோட்டர்தண்ணி வயலுக்கு பாய்ந்து கொண்டே இருக்கும்.

“அடிஏண்டி பனமரமாட்டம் நிக்கிறே? மலங்க மலங்க முழிக்கறே கண்ணுல வேறே தண்ணி. என்னத்தப் பண்ணினே. சொல்லித்தொலை.பொழுது சாஞ்சாச்சு. தட்டுவண்டிக வேறே வந்தாச்சு. கருதறுக்கப் போன உன்ற சின்னாத்தா வேறே வந்துருவாளே. சொல்லுடீ.” -என்று பக்கத்தூட்டு பங்கஜக்கா கேட்டதும் கமலத்திற்கு கொஞசம் துணிவு வந்தது.

அதுவரை சும்மா இருந்தவள் லேசான விசும்பலுடன்,“அது வந்துக்கா….வந்து……”

“சொல்றீ சிறிக்கி வயசுதா இருவதாகுது. ஒரு வேக்கியானத்தையும் காணம்.”

“தட்டுவண்டிலே வர்றவங்களுக்கு சின்னாத்தா கஞ்சி காச்சச் சொல்லியிருந்தா. நானும் மூணுமணிக்கே அடுப்ப பத்தவச்சு கஞ்சி காச்சுனே பானைக்கடியிலே எங்கியோ லேசா தூறுட்டிருக்கும் போலிருக்கு கஞ்சி வெந்து வர்ற சமயம் பளோர்னு சட்டி ஒடைஞ்சு முச்சூடும் கொட்டிப் போச்சுக்கா.”

“ஓகோ அவ்வளவு போதுமே. உங்க சின்னாத்தாளுக்கு இன்னிக்கி நீ அவ்வளவுதான். வெறகு கட்டை பொளக்கப் போகுது. எத்தன படி சோளம் போட்டே.”

“மூணுபடிக்கா.”

“மூணுபடியா உன்னய இன்னிக்கி ஊட்ட விட்டே தொரத்துனாலும் தொரத்திடுவா. பாரு. நானு மன்னாடும் சொல்லிட்டுதானே இருக்கேன். பாத்து பதவிசா நடந்துக்கண்ணு. நீ எங்கே உருப்படப்போறே. என்னக்கின்னாலும் ஒருநா உன்னை ஊட்டவுட்டு தொரத்ததான் போறா. அந்த கோவில் மேட்டு செல்லாயி சீரழிஞ்சா மாதிரி சீரழிஞ்சு ரோட்ரோடா அலையத்தான் போறே.” -என்று ஆத்திரத்தோடு சொல்லிவிட்டு,

“ பொறைக்கு கொஞ்சம் மோர் குட்றீ.”

கமலாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பத்துவயதில் தாயை இழந்த கமலாவுக்கு மறுவருடமே சின்னாத்தா வந்து சேர்ந்தாள்.

இதுவரை பட்ட துன்பம் இவ்வளவு என்று சொல்ல முடியாது. நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என்று அடியும் உதையும் வார்த்தைகளும் வசவுகளும் வாங்கி வாங்கி மறத்துப் போனது.

இப்போதைய புதிய கவலை. நொடிக்கு நூறுதரம்.

“உன்னை ஊட்டஉட்டு தாட்றன்னைக்குதான் எனக்கு விடிவுகாலம்” என்கிறாள். எதேச்சையாய் பக்கத்து வீட்டு பங்கஜத்திடம் இதுபற்றி விசாரிக்கப் போக, அவள் இதையே பெரிசு படுத்தி ஓடிப்போன செல்லாயிக்கு நேர்நத கதிகளை கதைகதையாய் மீண்டும் ஒருமுறை கூறி பயமுறுத்தத் துவங்கினாள்.

மாட்டு ஜலங்கைகள் ஒலிக்க நான்கைந்து வில்லுவண்டிகள் வரிசையாய் தோட்டத்தில் நுழைந்தன.

“ஏண்டி மச மசன்னு நிக்கறே .போ சீக்கிரமா மூஞ்சியக் கழுவீட்டு, தலையக்கட்டு. பொட்டீல உன்ற சீருக்கெடுத்த பட்டு சீலைய எடுத்து கட்டிக்க உன்னைய பொண்ணு பாக்க வந்திருக்காங்க.” என்று அவசரப்படுத்தினாள் சின்னாத்தா.

மறுபடியும் அசையாமல் நின்ற கமலத்தைப் பார்த்து, “என்னடி சொல்லிட்டேயிருக்கேன்.”

“சின்னாத்தா கஞ்சிப்பானை ஒடஞ்சுபோச்சு.”

“எனக்குத் தெரியுமடி காலையிலேயே சொல்லணும்னிருந்தேன். அது தூறுட்டுப் போச்சு. தட்டுவண்டகாரங்கள அய்யர் கடையிலே சாப்பிடச் சொல்லி பணங்கொடுத்துட்டேன். போனது போகட்டும் நீ நல்லவிதமா அவிங்க போற வரைக்கும் ஒழுங்கா நடந்துக்க.”

இப்படி பேசுவது சின்னாத்தா தானா இதுவரை இல்லாத புதிய பாசத்தோடு பேசுவது கமலாவுக்கு வியப்பாகவும் இதமாகவும் இருந்தது.

நிஜமாகவே நல்ல வாழ்வு வந்துவிட்டதா? என்று சந்தோசப்பட்டாள். கை கால்கழுவ கிணற்றடிக்கு ஒரு துள்ளலுடன் ஓடிய கமலாவைக் கண்ட பங்கஜம் “என்னடீ ஒரே துள்ளல்”

கமலாவுக்கு சிரிப்பு வந்தது கூடவே, “அக்கா நீ சொன்ன மாதிரியே என்னை ஊட்டவிட்டு தொரத்த ஆளுக வந்துட்டாங்கக்கா”.

“அடிக்கள்ளி அடிச்சனா பாரு அப்பவும் திமிரடங்கலே பாரு.” 

தொடர்புடைய சிறுகதைகள்
“உள்ள ராசப்பனிருக்கானுங்களா?” -வெளியே நூலகரிடம் யாரோ ஒரு பெண்குரல் கேட்பது தெளி வாய் கேட்டது. வெளியே ராசப்பன் வந்தான். வெய்யில் கண்ணைக் கரித்தது. பக்கத்து வீட்டு அங்காத்தாள். “சாமி ராசப்பா உன்ன எங்கெல்லாம் தொளாவறது போ. ஒரு மணி நேரமா சுத்துசுத்துன்னு சுத்தீட்டு வந்திருக்கம்போ.” “அது ...
மேலும் கதையை படிக்க...
“திங்கட்கிழமை பாக்கலாம். சீயூ.” பஸ்ஸை விட்டு இறங்கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய் விட்டது. பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி மட்டுமே நின்றிருந்தார் சட்டென்று, “என்ன தாரணி மேடம்.” “அட அதெப்படி நாந்தான்னு கரெக்டா கண்டுபிடிச்சீங்க?” “:மேடம் எனக்கு கண்ணு மட்டும்தான் பார்க்க முடியாதே தவிர ...
மேலும் கதையை படிக்க...
குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்கு நடுவே ஒரு இதய நோயாளியான தந்தையுமென திறக்கிறது இக்கதைக்கான கதவுகள். “ஐயோ... தாத்தா!” ''அம்மா தாத்தா குளிக்கிற அறை கதாவான்டையே விழுந்துட்டாரு" "என்னடி ...
மேலும் கதையை படிக்க...
“மத்தியானம் அலுவலகம் மும்முர வேலையில் இருந்தது. கம்பெனி ஜிஎம்மின் பிஏ பாலு அவசரமாய் ஏதோ ஸ்டேட்மென்ட் தயாரிப்பதில் இருந்தான். “ சார்! உங்களைப் பாக்க ஒரு பெரியவர் வந்திருக்கிறார்.” ஆபிஸ் ஊழியர் சொல்லி விட்டுப் போனார். வேலை நேரத்தில் தொந்தரவு கொடுப்பதை விரும்பாத பாலு ...
மேலும் கதையை படிக்க...
அபாண்டமாய் சுரேஷ் மேல் அந்த பழி வந்த போது என்னால் நம்பவே முடியவில்லை. இந்தக் கழுதையா அப்படிச் செய்தது. முணுக்முணுக்கென்றிருந்து விட்டு இந்த வேலை செய்திருக்கிறானே? ஸ்கூல் விட்டு வீட்டுக்குப் போனதும் படுவாவை உண்டு இல்லை என்று பண்ணிவிட வேண்டியதுதான். ஒழுங்கான படிப்பு ...
மேலும் கதையை படிக்க...
மாலை வெய்யில் சுத்தமாய் மறைந்தது. தெரு விளக்குகள் எரியத் துவங்கின் ஆற்றின் நீரோட்டம் கூட அமைதியாகவே இருந்தது. தூரத்தில் படித்துறை அருகே ஒன்றிரண்டு பேர்கள் துவைத்துக் கொண்டிருந்தனர். மஞ்சு, சுந்தரபாபுவின் மடியில் எழ மனமில்லாமல் படுத்திருந்தாள். “என்ன மஞ்சு. இருட்டாயிடுச்சே தனியா பயமில்லாம வீட்டுக்குப் ...
மேலும் கதையை படிக்க...
மாலைநேரம். ஆரஞ்சு வண்ணச் சூரியன் மேறகுமலைச் சாரலில் ஒளியத் துவங்கினான்.மாரியம்மன் கோவில் கலகலத்தது. கலர் பார்க்கும் விடலையர்களைத் தவிர்த்து சீனு தனியாக நின்று அம்மனைக் கும்பிட்டான் கூடவே ரகுவையும் நினைத்துக் கொண்டான். இம்மாதிரி வேலைகளுக்கு ரகுதான் லாயக்கு. அவனை எங்கே பார்ப்பது நாளொரு திருட்டும் ...
மேலும் கதையை படிக்க...
நான்கு நாட்களாய் விடாது பெய்த மழையில் ஊரே தண்ணிரில் மிதந்தது. சாய்ங்காலம் லேசாய் ஒரு வெட்டாப்பு விட்டபோதுதான் அநத சேதி கிடைத்தது. “என்ன செல்லா எண்ணையூத்தரானாக்கும்?” என்று யாரோ கூவியது யார் என்றுகூடநிமிர்ந்து பார்க்காத செல்லாவும் அவள் மகள் சின்னியும் ஆளுக்கு இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கீதா ஸ்கூட்டியின் வேகத்தைக் கூடடினாள். தவசி நகர் திருப்பத்தில் வேகமாக திருப்பவும் சிறு கல் முன் சக்கரத்தை பதம் பார்த்தது. தடா லென்று கீழே வண்டியோடு சாய்நதாள். எதிர்வீட்டிலிருந்த கமலாம்பாள் ஓடிவந்து அவளைத் தூக்க முயன்றாள். வயது ...
மேலும் கதையை படிக்க...
திங்கட்கிழமை காலைச் சூரியன் கிளம்பி உஷ்ணத்தைக் கூட்டியது. துடியலூர் சந்தை நாள். ஆடு, மாடு வியாபாரம் செமத்தியாய் நடக்கிற நாள். இன்று பஸ்ஸில் பிரயாணம் செய்வது நரக வேதனை. சீதா தன் வயிற்றுப் பிழைப்புக்காக தினசரி பெரியநாய்க்கன் பாளையம் வரை சென்று பேக்டரி ஒன்றில் ...
மேலும் கதையை படிக்க...
பாட்டி கொடுமை?
கண் தெரியாத காதல்?
மணியின் மேல் காதல்?
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?
காகிதக் கால்கள்
மாமாவின் பாசம்!
பணப்பெட்டியுடன் ஓட்டம்!
சாப்பாட்டுக்கு சேதமில்ல…?
எங்கே நடந்த தவறு?
திடீர் மருமகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)