உஷ்ணம்

 

பெங்களூரில் ஒரு இன்டர்வியூவிற்காக மறுநாள் காலை மும்பையிலிருந்து வருவதாகவும். ஏர்போர்ட் வரும்படியும் திவ்யா போனில் சொன்னதும், திவாகருக்கு அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை.

திவாகரின் மனைவி ராதிகாவும் ஊரில் இல்லாததால் அவனுக்கு திவ்யாவின் வரவு படபடப்பான சந்தோஷத்தை அளித்தது.

திவ்யா… வயது இருபத்தியெட்டு. ராதிகாவின் அத்தை மகள். மும்பையில் ஒரு பெரிய மல்டி நேஷனல் ஐ.டி. கம்பெனியில் ப்ராஜெக்ட் மானேஜர். அடிக்கடி அமெரிக்கா பறப்பவள்.

போன வருடம் ஒரு உறவினரின் திருமணத்திற்காக திவ்யா கடைசியாக பெங்களூர் வந்திருந்தபோது திவாகர் வீட்டில்தான் தங்கினாள்.

பாப் கட்டிங் செய்த தலையும், வாளிப்பான உடம்பும், கோதுமை நிறமும், சிந்திப் பசு மாதிரி குறு குறு கண்களும், தோளை குலுக்கிக்கொண்டு அலட்சியமாக நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் அழகும்… திவாகரை ஏகத்துக்கும் திணறடித்தன.

அவள் பேச்சிலிருந்து திவாகர் கிரகித்துக் கொண்டது: சிகரெட் பிடிப்பாள், பீர் குடிப்பாள், செக்ஸ் என்பது இயல்பான ஒரு சின்ன விஷயம், மனசுக்கு பிடிச்சிருந்தா எதுவுமே தப்பு கிடையாது என்கிற அவளின் சித்தாந்தம்.

ராதிகா அருகே இல்லாத சமயங்களில் சற்றுத் தைரியமாக திவ்யாவைத் தொட்டுப் பேசினான், அவ்வப்போது உரசினான். அவள் எதிர்ப்பேதும் தெரிவிக்காததில் சொக்கிப் போனான்.

அந்த திவ்யாதான் இப்போது பெங்களூர் வருகிறாள், அதுவும் ராதிகா இல்லாத போது. நல்ல சந்தர்ப்பம். எப்படியாவது திவ்யாவின் புரிதலுடன் அவளுடன் தேக செளகர்யம் ஏற்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்தான்.

அதன் முதல் கட்டமாக, நண்பனிடம் கேட்டு நான்கு பலான வீடியோ ஸி.டி.க்களை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான்.

மறுநாள் காலை மும்பையிலிருந்து வந்த விமானம் சரியான நேரத்திற்கு தரையிறங்கியது.

அரைவல் லவுஞ்சில் இவனைப் பார்த்ததும், “ஹாய் திவா எப்படியிருக்க?” என்று கை குலுக்கினாள். “ராதிகா எப்படியிருக்கா? நீ ரெண்டு வருஷமா என்னத்த பண்ற… ஏதாவது விசேஷம் உண்டா?” என்று கிண்டலாக சிரித்தாள்.

“ராதிகா அம்மா அப்பாவோட இருந்துட்டு வரேன்னு ஒரு வாரத்துக்கு சென்னை போயிருக்கா. விசேஷத்துக்கு இப்ப என்ன அவசரம் திவ்யா…அனுபவிக்க வேண்டாமா” கண்ணடித்தான் திவாகர்.

வீட்டிற்கு வந்தார்கள்.

“திவ்யா, இன்னிக்கு என்ன ப்ரோக்ராம் உனக்கு?”

“இப்ப மணி ஒன்பது. பத்தரைக்கு எனக்கு இண்டர்வியூ.. இந்த ப்ளூசிப் கம்பெனியில் வேலை கிடைச்சுதுன்னா அமெரிக்காவில் நான் செட்டில் ஆகிடுவேன் திவா. காலைலயே நான் குளிச்சாச்சு, ப்ளேன்லயே பிரேக்பாஸ்ட் சாப்பிட்டாச்சு, டிரஸ்ஸ மட்டும் மாத்திண்டு கிளம்ப வேண்டியதுதான்.”

“அப்புறம்?”

“மத்தியானம் வெளிலயே லஞ்ச் முடிச்சுட்டு இங்க வந்து ஒரு குட்டித் தூக்கம் போடணும்.. ராத்திரி மெயிலில் சென்னை போய், நாளைக்கு ஈவ்னிங் ப்ளைட்டில் நேர மும்பை.”

“எனக்கு பத்து மணிக்கு ஆபீஸ், உன்னை என் கார்ல ட்ராப் பண்ணிட்டு போறேன், சாயங்காலம் சீக்கிரமா வந்துடறேன். உனக்கு ராத்திரி பத்து மணிக்குதான ட்ரெயின், மத்தியானம் போரடிச்சா இந்த ஸி.டி.ல்லாம் பாரு…வெரி ஹாட்.”

“ச்சீ, அப்புறம் இன்னிக்கு சாயங்காலம் உன் கற்புக்கு நான் உத்தரவாதம் தர முடியாது” பொய்யான கோபத்துடன் திவாகரின் மார்பில் ஆள் காட்டி விரலினால் செல்லமாக குத்தினாள்.

திவ்யாவை எம்.ஜி ரோடில் ட்ராப் செய்துவிட்டு, அவசரமான அலுவலக வேலைகளை சபித்துககொண்டே சென்றான் திவாகர்.

மாலை நான்கு மணிக்கே வீட்டிற்கு வந்து, காலிங் பெல்லை அமுக்கினான்.

நல்ல தூக்கத்திலிருந்து எழுந்து வந்து மாக்ஸியில் கதவைத் திறந்த திவ்யாவின் தலையை செல்லமாகக் கலைத்தான்.

“இன்டர்வியூ என்னாச்சு?”

“நோ ப்ராப்ளம், இன்னும் மூன்று மாதங்களில் அமெரிக்காவில் செட்டில் ஆயிடுவேன். பன்னிரண்டு மணிக்கே எல்லாம் ஓவர். சாப்பிட்டுவிட்டு ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்தாச்சு.”

டவல், சோப் எடுத்துக்கொண்டு குளிப்பதற்காக பாத்ரூம் சென்றாள்.

மூன்று ஸி.டி.க்கள் வெளியிலும் ஒன்று டெக்கில் இருப்பதையும் பார்த்த திவாகர், திவ்யா நீலப் படம் பார்த்திருப்பதைப் புரிந்து கண்டான். ஒரு இரண்டு நிமிடங்கள் ஸி.டி.யை ஓடவிட்டுப் பார்த்து தன்னை சூடேற்றிக் கொண்டான். .

குளித்துவிட்டு பாத்ரூமிலிருந்து திவ்யா வெளியே வந்தாள்.

குளித்ததினால் அதிகரித்த புத்தம் புது மலர் போன்ற அவளின் அழகும், சோப்பின் சுகந்தமும், அவளின் அருகாமையும், சுதந்திரமான தனிமையும் அவனைக் கிறங்கடிக்க, “திவ்யா, ஐ லவ் யூ, ஐ நீட் யூ நெள” என்று முனகியபடி அவளைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

“திவா, என்னாச்சு உனக்கு… என்னால இப்ப இதெல்லாம் தாங்கமுடியாதுடா, ஐம் டையர்ட்… ப்ளீஸ்” அலட்டிக் கொள்ளாமல் மிக இயல்பாக அவனது கைகளை விடுவித்தாள்.

அவள் தன்னை திருப்பியணைப்பாள் என்று எதிர்பார்த்த திவாகர், அவளது இந்த அலட்சிய நடவடிக்கையினால் பொசுங்கிப் போனான்.

குற்ற உணர்வு அதிகரித்த நிலையில் இயல்பாக இருக்க முடிந்து தோற்று,

அவளைத் தவிர்க்கும் எண்ணத்துடன் குளிப்பதற்காக பாத்ரூம் சென்று கதவை தாழிட்டுக் கொண்டான்.

‘இம் மாதிரி வெளிப்படையாக பேசும் பெண்களை நம்பவே கூடாது, ‘காரியம்’ என்று வரும்போது கழண்டு விடுவார்கள்’ என்று தன் நண்பன் ஒரு முறை சொன்னது உண்மைதான் என்று நினைத்துக் கொண்டான்.

திவ்யா எதுவுமே நடக்காதது மாதிரி ஸ்டேட்ஸ் பற்றியும், ஒபாமாவின் சமீபத்திய அயல் நாட்டுக் கொள்கை பற்றியும் விலாவாரியாக சொல்லிக் கொண்டிருந்தாள். இவன் காதில் எதுவுமே ஏறவில்லை.

அவள் தன் அத்துமீறலை அனுமதிக்காத போதிலும், தன்னுடைய நடவடிக்கையினால் அவள் மனதளவில் பாதிக்கப் படவில்லை என்பதை நினைத்தபோது சற்று நிம்மதியாக இருந்தாலும், சென்னை போன பிறகு, பேச்சோடு பேச்சாக ராதிகாவிடம் எதாவது உளறிவிடுவாளோ என்கிற புதிய பயம் திவாகரை தொற்றிக் கொண்டது.

இரவு ஸ்டேஷனுக்கு அவளை வழியனுப்ப வந்தவன், “திவ்யா, ப்ளீஸ் ராதிகாகிட்ட நான் உன்னிடம் நடந்துகிட்டதப் பத்தி ஏதாவது சொல்லிடாத” என்றான் மன்னிப்புக் கேட்கும் குரலில்.

“திவா, டோன்ட் பி ஸில்லி”

‘முட்டாள், அவ்வளவு ஆசை இருக்கறவன் ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு என்னுடன் ஜாலியாக இருந்திருக்கலாமே… குறுகிய இடைவெளில அடுத்தடுத்து ரெண்டு ஆம்பளைங்கள நான் எப்படி தாங்கிக்கிறது’ என்று தனக்குள் அலுத்துக் கொண்டாள்.

வீட்டில் அன்று பகலில் திவ்யா அந்த பலான ஸி.டி.யைப் பார்த்து உஷ்ணமானபோது, வாட்ட சாட்டமாக மின்சார ரீடிங் எடுக்க வந்த ஒரு அழகான வாலிபன், கதவைத் திறந்த திவ்யாவின் மன நிலையைப் புரிந்துகொண்டு பெட்ரூமில் ஒரு மணி நேரம் அவளையே நன்றாக ‘ரீடிங்’ எடுத்துவிட்டுப் போனதும் – தொடர்ந்து அவள் அடித்துப் போட்டாற்போல் தூங்கியதும் – குறைந்த பட்ச இடைவெளியில் இரண்டு ஆண்களை எதிர் கொள்ளும் உடல் நிலையிலோ, மன நிலையிலோ இல்லை என்பதுதான் அவள் திவாகரை தற்காலிகமாக நிராகரிக்கக் காரணம் என்பதும் – பாவம், திவாகருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்… 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘விரட்டும் இளைஞர்கள்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது) மரகதத்துடன் இதே குற்றாலத்திற்கு எத்தனையோ தடவைகள் சபரிநாதன் வந்திருக்கிறார். ஆனால் ஒருத்தன்கூட அவளை உற்றுப் பார்த்ததில்லை. பத்து நாட்கள் குற்றாலத்தில் இருக்கலாம் என்று சொல்லி ராஜலக்ஷ்மியை அழைத்து வந்தவர், நான்காம் ...
மேலும் கதையை படிக்க...
பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே கதிரேசனுடன் வகுப்பில் படித்த பல பையன்கள் அவரவர்களுடைய அப்பாக்களைப் பற்றி எதையாவது சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வார்கள். அதயெல்லாம் கேட்கும்போது கதிரேசனுக்கு மனதில் சோகமும் ஒருவித இழப்பு உணர்வும் வந்து கவிந்துகொள்ளும். அவனுடைய அப்பா மச்சக்காளை ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘பயம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதன் பயத்தில் உழன்று கொண்டிருந்தார். ஆனால் சுப்பையாவோ பக்கத்து வீட்டில் ராஜலக்ஷ்மி பற்றிய சில யோசனைகளோடு உலவிக் கொண்டிருந்தான். போனில் பேசியபோது, இண்டர்வியூ வந்தபோது அவன் உணர்ந்த ராஜலக்ஷ்மிக்கும் இன்று அவன் ...
மேலும் கதையை படிக்க...
வீடு ஒரே களேபரமாக இருந்தது. அதனை முறையாக ஒழுங்கு படுத்த நினைத்தபோது சரஸ்வதிக்கு மலைப்பாகவும். ஆயாசமாகவும் இருந்தது. கிரகப்பிரவேசம் முடிந்து புதிய வீட்டிற்கு குடியேறி இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் எல்லாமே போட்டது போட்டபடி கிடக்கிறது. பெங்களூரின் ஒதுக்குப் புறத்தில் புதிதாக முளைத்திருந்த ...
மேலும் கதையை படிக்க...
ஜெயராமனுக்கு வயது இருபத்தி ஐந்து. பி.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸில் டிஸ்டிங்ஷனில் மார்க்குகள் வாங்கியவன். ஊர் குற்றாலத்திற்கு அருகிலுள்ள இலஞ்சி. அவன் வேலை நிமித்தம் சென்னை வந்ததும், அவன் நண்பன் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மார்க்கபந்து மேன்ஷனிலேயே ஒரு தனி அறை எடுத்துத் தங்கினான். தனி அறை ...
மேலும் கதையை படிக்க...
இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சில கணினி விற்பன்னர்களில் டாக்டர் ஹர்ஷவர்த்தனும் ஒருவர். அவரைப் பற்றித் தெரியாதவர்கள் கணினி உலகில் இருக்க முடியாது. உலகின் மற்ற பிரபல கணினி நிறுவனங்கள் அவரை தன் பால் இழுக்க முயன்றாலும், டாக்டர் ஹர்ஷவர்த்தன் மிகப் ...
மேலும் கதையை படிக்க...
கமலம் மாமி ரொம்ப கெட்டிக்காரி. படு சாமர்த்தியம். கட்டும் செட்டுமா அவ குடித்தனம் நடத்துகிற அழகே தனி. மாமிக்கு ஐம்பத்தியெட்டு வயதானாலும் பார்ப்பதற்கு நாற்பத்தியைந்துக்கு மேல் மதிப்பிட முடியாது. எப்பவும் தேனீயைப் போல சுறுசுறுப்புடன் வளைய வருவாள். நங்கநல்லூரில் வாசம். வீட்டை சுத்தமாக ...
மேலும் கதையை படிக்க...
‘தஸ்புஸ்தான்’ நாட்டு அதிபர் ‘மஜீல்’ ஆளுயரக் கண்ணாடி முன் நின்றுகொண்டு தன்னுடைய புஷ்டியான மீசையை வாஞ்சையுடன் நீவி விட்டுக்கொண்டார். முகத்துக்கு மெலிதாக பவுடர் அடித்துக் கொண்டார். அவர் இன்று காலை பத்து மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு ‘கொரோனா’ பற்றிய விழுப்புணர்வை ...
மேலும் கதையை படிக்க...
என் நண்பன் அருணாச்சலம் மகளுக்கு 2019 பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாலக்காட்டில் திருமணம். அதற்காக நானும் என் மனைவி சரஸ்வதியும் பெங்களூரில் இருந்து கிளம்பி ஒன்பதாம் தேதி பகல் ஒரு மணிக்கு பாலக்காட் சென்றடைந்தோம். இந்திர பிரஸ்தா ஹோட்டலில் அருணாச்சலம் ...
மேலும் கதையை படிக்க...
அன்புள்ள அம்மாவுக்கு, தாங்களின் வளர்ப்பு மகள் லாவண்யா எழுதும் கடிதம். எனக்கு எக்ஸாம் எல்லாம் முடிந்து விட்டது. எனது படிப்பிற்காக தொடர்ந்து அடுத்த வருடமும் தாங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். செய்வீர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும், உங்கள் வளர்ப்பு மகள் லாவண்யா. ஒரு ...
மேலும் கதையை படிக்க...
ஆரம்ப விரிசல்கள்
கடைக் கதைகள்
ஜன்னல்கள்
யூகம்
ஆரம்பக் காதல்
மேகக் கணிமை
மாமியாரின் மாமியார்
கொரோனா விதிகள்
தீட்டு
தத்து

உஷ்ணம் மீது ஒரு கருத்து

  1. Safraz Mohamed says:

    கதையைப் படிக்கும்போதே என் உடம்பெல்லாம் உஷ்ணம் ஏறியது. விறுவிறுப்பான கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)