உறவுகள்- ஒரு பக்க கதை

 

செல்போனில், மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தாள் மணப்பெண் வர்ஷிணி, பேத்திக்கு அருகில் வந்தார் தாத்தா சதாசிவம்.

மண்டபத்துல உட்கார்ந்திருக்கிறவங்க எல்லாம் யாருன்னு தெரியுதா கண்ணு?

இது கூட தெரியாதா தாத்தா? சொந்தக்காரங்களும் தெரிஞ்சவங்களும்தான் என்றாள் சிரித்தபடி! அதோபார் நம் சொந்தக்காரங்க எல்லாம் தங்களோட வேலையை விட்டுட்டு
உன்னோட கல்யாண பந்தியில் ஆளுக்கொரு வேலையை செய்றாங்க! ஏன்னா, அது பதவி, பணம் தாண்டி உன் மேல அவங்க வைச்சருக்குற பாசம்.

நமக்குத் தெரிஞ்சவங்க எல்லாம், உன்னை நேரில் வந்து வாழ்த்துறாங்களே! அவங்களுக்கு என்ன அவசியம்! நம்ம குடும்பத்து மேல அவங்க வைச்சிருக்கிற அன்பும் மரியாதையும்தான்! அந்த அன்புதான் எல்லா உறவுகளுக்கும் ஆதாரமா இருக்கு. முதல்ல அவர்களுக்கு நன்றி சொல்லி, அவங்க கிட்ட நாலு வார்த்தை பேசி, ஆசி வாங்கிட்டு வா!

நேர்ல வராம செல்போன்ல வாழ்த்துறவங்கிட்ட அப்புறம் பேசலாம் என்றார்.

தாத்தாவின் வார்த்தையில் இருந்த உண்மையை புரிந்து கொண்டவளாக செல்போனை ஆஃப் செய்து, எழுந்து சென்றாள் நன்றி தெரிவிக்க!

– ப.உமாமகேஸ்வரி (டிசம்பர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
மாடியிலிருந்து லியோ அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலர் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள். தெரிந்த முகங்களிடையே புரிந்த அன்பின் அடையாளம் விரவியிருக்கும் என்று எண்ணிய லியோவுக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் ஏசிக்கொண்டும் அடித்துக் கொண்டும் இருந்தது வருத்தமாக இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
இனியும் தாமதிக்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக உணர்ந்தார். சென்ற சில மாதங்களாய், ஆண்டுகளாய் பல சந்தர்ப்பங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளில் உறைந்த சங்கதிதான். இருந்தும், தவிர்த்து தவிர்த்து, உள்ளத்தையும் ஐம்புலன்களையும் சிறுகச் சிறுக பக்குவப்படுத்திக் கொண்டிருந்ததெல்லாம் இனி முழு மூச்சாய் ...
மேலும் கதையை படிக்க...
சிகாகோ,மார்ச்,1997,அன்புள்ள அப்பாவுக்கு,வணக்கத்துடன் எழுதிக்கொள்வது. அப்பா! நான் சிகாகோவுக்கு வந்தது முதல், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது கடிதம் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் உங்களுக்கு வேதனையைத் தருவதில் விருப்பம் இல்லாததால் சில விஷயங்களை உங்களிடம் சொல்லவில்லை. எனக்கு உதவி செய்ய முடியாத ...
மேலும் கதையை படிக்க...
ஸ்ரீதரிடம் சம்பளம் வாங்கிட்டு தயக்கமாக நின்றார் ஆறுமுகம். "ம்ம்ம்... என்னங்கய்யா சொல்லுங்க" "ஐயா... நான் ஊருக்கே கிளம்பீர்லாம்னு இருக்கங்க" "ஏன் என்னாச்சு? திடீர்னு சொல்றீங்க" "அதுவந்துங்.. உடம்பு சரியில்லைங்க ராவெல்லாம் தூக்க முழிக்கறது நம்ம உடம்புக்கு ஒத்துக்கலைங்க" "அப்படியா... என்னாச்சு உடம்புக்கு" "காலை எந்திரிச்ச தலை சுத்துதுங்க மதியன வெய்யநேர ...
மேலும் கதையை படிக்க...
சிமெண்ட் தரையில் பெருக்குமாறால் பெருக்கும் சத்தம் வாசலைத் தாண்டி காதில் ஒலித்தது. அதைத் தொடர்ந்து சுபா வாசல் தெளிக்கும் சத்தமும் வந்தது. இன்னும் இரண்டு நிமிடங்களில் சரட் சரட்டென்று பேருக்கு கோலமென்று ஒன்றை இழுத்துவிட்டு, என்னை எழுப்ப வந்துவிடுவாள். பெரும்பாலும் நான்கு ...
மேலும் கதையை படிக்க...
மகிழ்ச்சி எந்திரம்
கூறாமல்
இரண்டு வார விடுமுறை
கனவு
விசுவாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)