உறவுகள் இப்படித் தானா? – ஒரு பக்க கதை

 

அமெரிக்காவிலிருந்து வந்ததிலிருந்து கோபால் பேசவில்லை என்பதில் அம்மா ரெஜிக்கு ரொம்ப வருத்தம்.

அப்பா அவனிடம் திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்த்தார். “கோபால் என்னாச்சு. ஏன் திரும்பத் திரும்ப கேட்டாலும் பேசாமலிருக்கே?” என்றார்.

“என்ன சொல்றது, அதுதான் எல்லாத்தையும் காலி பண்ணிட்டியள.” எரிந்து விழுந்தான் கோபால்.

உள்ளே இருந்து வந்த அம்மா “எதை காலி பண்ணிட்டோம். நம்ம இந்தக் கிராமத்திலே பொறந்து இந்த மண்ணில் மானத்தோட வாழ்ந்தவங்க. ஏதோ க்ரீன் கார்டு வாங்கிட்டேங்கிறதுக்காக…. எங்கள அங்க வந்து அமெரிக்காவிலே தங்கச் சொல்றியா” கத்தினாள் அம்மா ரெஜி.

“அம்மா யோசித்துப் பேசுங்க. ஒரு ஏக்கர் தோப்பையும் வயலையும் வச்சிக்கிட்டு…அதுக்கு இன்னும் செலவழிக்கிறதுக்கு நான் அங்கிருந்து டாலர் அனுப்பணும், சும்மா இன்னும் பழைய காலத்திலேயே உட்கார்ந்திருக்காதீங்க.” வீம்புக்கு கத்தினான் கோபால்.

“ஆமாண்டா, உன்னப் பெத்து ஸ்கூலுக்கும் காலேஜிக்கும் படிக்கவச்சது இந்த தோப்பும் இந்த வயலுந்தான்… இந்த வயலும் தோப்பும் சோறு என்ன போட்டுச்சி. மழை பொய்ச்சிப்போச்சு. விவசாயத்துல செலவு அதிகமாயிருச்சி…” அழஆரம்பித்தாள்.

“அப்பா அம்மாவை அழாண்டாண்ணு சொல்லுங்க. ஒண்ணே ஒண்ணு சொல்லுகிறேன். அப்பா காலத்துலே இப்படி அமெரிக்கா வய்ப்பு வந்து அங்கே தனி கம்பெனி ஆரம்பிச்சு பெரிய வருமானம் வந்திருந்தா உங்களை இங்கே விட்டுட்டா போயிருப்பாங்க?

“அம்மா காலம் மாறிப் போச்சு. யாராவது ஒரு வயதானவர் முதியோர் இல்லத்திலேயா உங்கள நான் இருக்கச் சொல்றேன்.”

“எனக்கு வருமானம் பெருசா வருது. எங்கூடத்தானே தங்கச் சொல்றேன். எம் பொண்டாட்டி கீதா எப்போ மாமா மாமியைக் கூட்டுண்டு வரப் போறீங்கண்ணு அங்கே இருந்து கத்துறா…”

“அம்மா நான் உங்கள தனியா விட்டுட்டு… நீங்களும் அப்பாவும் இங்க தனியா.. இது தேவையா…. “ என்று அம்மாவின் இடுப்பைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

மறுநாள் தோப்பும் வயலும் ஒருவரிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டைப் பூட்டிவிட்டு எல்லோரும் விமானநிலையத்திற்கு கிளம்ப அம்மா ரெஜி திரும்பத்திரும்ப தன் ஊரையே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தான். 'சத்தம் போட்டுக்கூப்பிடலாமா?’ என்று நினைத்தேன். அநாகரீகமாக இருக்கும் என்று உணர்ந்து கொண்டு பின்னால் நின்றவரிடம் “ஒரு ...
மேலும் கதையை படிக்க...
இந்துவை கொலை செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.என்னைப் பலர் முன்னால் மூக்கை உடைத்தவளுக்கு சரியான பாடம் கற்பிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் அமைவது கூட கஷ்டம். என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட ...
மேலும் கதையை படிக்க...
என்ன செய்வதென்றே தெரியவில்லை ரேவதிக்கு. வாசித்த கடிதத்தை கைப்பையினுள் வைத்து விட்டு, தன் கையிலே மருதாணி போட்டு விட்டு கைகழுவச் சென்ற தோழிகள் வரக் காத்திருந்தாள். விடிந்தால் அமெரிக்க மாப்பிள்ளை ஆனந்திற்கும் அவளுக்கும் நிச்சயதார்த்தம்…. இந்த நேரத்தில் ஆறு மாதமாக காணாமற்போன விஜய் ...
மேலும் கதையை படிக்க...
சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தான். 'சத்தம் போட்டுக்கூப்பிடலாமா?’ என்று நினைத்தேன். அநாகரீகமாக இருக்கும் என்று உணர்ந்து கொண்டு பின்னால் நின்றவரிடம் “ஒரு ...
மேலும் கதையை படிக்க...
டாக்டர் அருணா நாற்காலியில் அமர்ந்து மேஜையில் சாய்ந்து படுத்திருந்தாள். அவள் கண்களில் வழிந்தோடிக் கொண்டிருக்க, துடைக்கக் கூட விருப்பம் இல்லாமல் விம்மிக்கொண்டுந்தாள். அந்த அறைக்குள் வந்த கம்பவுண்டர் ஜேம்ஸ் “டாக்டர் அருணா உங்களை பெரிய டாக்டர் கூப்பிடுகிறார்” என்று சொல்லி விட்டுப் போனான். உடனடியாக ...
மேலும் கதையை படிக்க...
பொன் அந்தி மாலையும் தென்றல் காற்றை மெதுவாக பூமிக்கு அனுப்பி வெப்பம் குறைந்துள்ளதா என வேவுபார்த்து வர அனுப்பியது. ஆதவன் தன் வேலை நேரம் முடிந்து விட்டதென ‘டாட்டா’ காட்டி விட்டு பூமிக்குள் ஓடி ஒளிய முயற்சி செய்து கொண்டிருந்தது. தன்னருகே கதிரவன் ...
மேலும் கதையை படிக்க...
வேதக்கார ஆண்டாள்
ஊருக்குள் காரில் வந்து இறங்கிய போது விஜய்க்கு கொஞ்சம் ஆச்சரியங்கள் அதிகமாகவே இருந்தது. பதவி உயர்வு, பணி, அரசியல் எடுபிடி என்று இந்தியாவின் பல இடங்களுக்கு மாற்றலாகி, குடும்பத்தோடு ஊரில் வந்து தங்கி விடலாமென்று நினைத்த போது மூத்தமகன் விமலன், டெல்லியிலேயே ...
மேலும் கதையை படிக்க...
“அய்யய்யோ எவ்வளவு இரத்தம்? இது வேணும்னு நான் செய்ததில்லை. அய்யோ, இப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?” என்று கத்தினான் விஜய். கீதாவின் தலையிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அவள் கையை வைத்து இரத்தத்தைத் தடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். விஜய் எறிந்த கண்னாடி ...
மேலும் கதையை படிக்க...
”விடிந்தால் வயல் அறுவடைக்கு மெசினை இழுத்துக்கொண்டு செல்ல வேண்டும்” என்று தன் முன்னால் அடிபட்டு படுக்கையில் கிடந்த எழுத்தாளர் ’வசந்த நிலா’வின் ”எங்கே என் சுவாசங்கள்?” நாவலை தொடக்கத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் போது அவன் வலியின் முனகலில்,திரும்ப்பார்த்து புத்தகதை வைத்து விட்டு ...
மேலும் கதையை படிக்க...
எல்லோரும் அவசரமாக தங்கள் பணிக்காக ஓடுக்கொண்டிருந்த காலை நேரம். மும்பை தாராவி நேரு நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த ரவியிடம் அம்மா ‘’மீனா உன் காதலி வீட்டிலிருந்து யாரும் எதுவும் கேட்க வரல். ஊரிலிருந்த நான் வந்து ஒரு மாசமாச்சு. இன்றைக்கு ...
மேலும் கதையை படிக்க...
நம்பிக்கை ஒளி…
அந்த அரபிக் கடலோரம்…
மனதின் மடல்
காற்று வெளியிடை…
நதி!
வசந்தங்கள் வரும் நேரம்
வேதக்கார ஆண்டாள்
மது மாது எது…?
தேவதைகள் தூங்குவதில்லை….
மங்களம் உண்டாகட்டும் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)