உயிர்

 

ஜன்னல் வழியே வெளியே பார்த்துகொண்டிருந்தேன், கீழே மாமியாரும் மருமகளும் மரத்தடியில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவர்கள் அதிகமாக பேசிக்கொண்டிருக்கவில்லை.

ஆனால் நெருங்கி உட்கார்ந்துள்ளதை பார்ப்பதில் ஒரு அன்னியோன்யம் தெரிநதது. பொதுவாக மகிழ்ச்சியான சூழ்நிலை அங்கில்லை என புரிந்தது, பெருமூச்சு வநதது எனக்கு, என்ன செய்வது இன்றோடு பதினைந்து நாள் தன் மகன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த பதினைந்து நாட்களும் மருமகளும் மாமியாரும் என்ன் செய்வார்கள்? உனக்கு நான் எனக்கு நீ! என்ற நிலையில்தான் இருந்தார்கள்.

உயிருக்கு போராடுபவர்களுக்கோ வயது முப்பதுக்குள்தான் இருக்கும். நல்ல அடி தலையில் பட்டிருக்கிறது, டாக்டர்கள் கெடுவை மாற்றி உயிர் பிழைக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். நான் அங்கு பணிபுரிவதால் அவர்கள் என்னிடம் அதிகமாக எதிர்பார்த்தார்கள். நான் ஏதாவது செய்யமுடியுமா என்று! என்னால் முடிந்த அளவு உழைப்பை அவர்களுக்கு அளிக்க முடியும். பண உதவி செய்யக்கூடிய நிலையில் நான் இல்லை. அவர்களுக்கும் என் நிலை தெரியுமாதலால் அதனை எதிர்பார்க்கவில்லை. நான் தினமும் டாக்டரிடம் பேசி நோயாளியின் நிலையைப் பற்றி அவர்களிடம் விளக்குவேன். அதைக் கேட்டுக்கொண்டு அழுது கொண்டிருப்பார்கள்.

டாக்டர் நோயாளியைப்பற்றி ஓரளவுதான் உறுதி தந்திருந்தார்.அடி பட்டவுடன் நோயாளி ஓர் இரவு முழுவதும் சாலையில் கிடந்துள்ளார். மறு நாள் ஏதோ புண்ணியவான் அவரை இந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னரே செய்தி கேள்விப்பட்டு மனைவி, அம்மா குழந்தைகள் அலறி அடித்துக்கொண்டு இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார்கள்.

பின்னர் உறவினர் ஒருவரின் யோசனையின் பேரில் என்னை சந்தித்தனர். நானும் ஒரு வகையில் அவர்களுக்கு உறவினர் என்ற முறையில் அவர்களுக்கு உதவி புரிந்துகொண்டுள்ளேன். டாக்டரும் முடிந்தவரை முயற்சிசெய்வோம் என்று கூறினார்.

எனக்கும் அடிபட்டவரின் நிலைமை தெரியுமாதலால் அந்த தாயிடமும், அவர் மனைவியிடமும் தைரியமாக பேசமுடியவில்லை.
ஒரு முறை நோயாளியின் நிலைமை சிக்கலாகிவிட்டது, டாக்டரும் வெளியில் காத்திருக்கும் உறவினர்களுக்கு செய்தி சொல்லும்படி என்னிடம் சொல்லிவிட்டார். நான் வெளியே வந்து துக்கத்துடன் அவர்களை தேடினேன். அவர்கள் இருவரும் சிறிது தூரம் தள்ளி அமர்ந்து பிரார்த்தனை செயது கொண்டு இருந்தார்கள். நான் எப்படி அவர்களிடம் விசயத்தை சொல்வது என விழித்துக்கொண்டிருந்தேன்.

அரை மணி நேரம் கழித்து ஒரு நர்ஸ் என்னிடம் வந்து நோயாளி நிலைமை தற்போது திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார். நான் இந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்தேன். ஒருவேளை அவர்களின் பிரார்த்தனையின் பலனாக கூட
இருக்கலாம் எனவும் நினைத்தேன்.

இப்படியே இன்றுடன் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. அடிபட்டவரின் நிலைமை திருப்தியாக இருந்தாலும் உயிருக்கு உததரவாதமில்லாமல் இருந்தது. மாலை ஆறு மணி இருக்கும் இருவரும் என்னிடம் வந்து டாக்டர் கூப்பிடுவதாகவும் மிகுந்த பயத்துடன் கூறினர். நானும் பதட்டத்துடன் டாக்டரின் அறைக்கு ஓடினேன். டாக்டர் கவலை நிறைந்த முகத்துடன் இனி கஸ்டம்தான் எப்படியாவது சமாதானம் செய் என்றார்.

என்கால்கள் நடுங்க ஆரம்பித்தன.’மரணம்’ என்பது இயற்கை என எவ்வளவு தூரம் நினைத்தாலும் நம்பிக்கையோடு காத்திருக்கும் அவர்களுக்கு எவ்விதம் ஆறுதல் சொல்வது.?

வேகமாக வந்த இருவரும் என் பேயறைந்த முகத்தை பார்த்தவுடன் ஏதோ புரிந்து கொண்டதைப் போன்று கண்கலங்கி நின்றனர்.சிறிது நேரம் கழித்து அந்தப்பெண் என்னிடம் அவரோட உறுப்புகளாவது யாருக்கும் பயன்படும்னா எடுத்துக்கச்சொல்லுங்க
என்று சொல்லி மாமியாரின் கையைப்பிடித்துக்கொண்டால்.

நான் இந்த் சூழ்நிலையில் எதுவும் பேசாமல் கண்ணீர் வழிய நின்றேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
நள்ளிரவு தாண்டியிருக்கும், இரயில் வரும் பாதையில் ஒரு உருவம் கையில் பையுடன் சத்தமில்லாமல் குனிந்து தண்டவாளத்தை கூர்ந்து கவனித்து நடந்து கொண்டிருந்த்து. குறிப்பிட்ட இடத்தை பார்த்தவுடன் அந்த உருவம் நின்று சுற்று முற்றும் பார்த்துவிட்டு அந்த இடத்தில் குத்து காலிட்டு உட்கார்ந்து ...
மேலும் கதையை படிக்க...
இளவரசி அழைத்தார் என்று வெளியே காத்திருந்த அமைச்சர், சிறிது சலிப்புடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். இளவரசி வீட்டு வாயில்காப்போன் அமைச்சரின் சலிப்பான நடையை கண்டு ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டிருந்தான். இந்த நாட்டுக்காக என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டி உள்ளது, ...
மேலும் கதையை படிக்க...
சுற்றுலா செல்வது என்றாலே சிறுவர்களுக்கு மகிழ்ச்சிதான், நமக்கும் மகிழ்ச்சிதான், ஆனால் செலவுகளை நினைக்கும்போது அந்த மகிழ்ச்சிக்கு பின்னே ஒரு சோகம் வந்து உட்கார்ந்து கொள்ளும். இப்படிப்பட்ட காலகட்டத்தில் எங்கள் காலனியில் பத்திருபது குடும்பங்கள் ஊட்டியா? வால்பாறையா? என்று பேச்சு வார்த்தை நடத்தி அந்த ...
மேலும் கதையை படிக்க...
அன்று காலை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பின் வகுப்பாசிரியர் “அடுத்த மாதம் பத்தாம் தேதி நாம் எல்லோரும் சுற்றுலா போகப்போறோம்” என்று அறிவித்தார். உடனே மாணவ மாணவிகள் “ஹோய்” என்று கூச்சலிட்டனர். சார் எத்தனை நாள் சார்? ஒரு மாணவன் கேட்டான் சார் சார் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சிறு கம்பெனிக்கு முதலாளியான ராமசாமி தன் எதிரில் நின்று கொண்டிருக்கும் பாஸ்கா¢டம் "தம்பி" உனக்கு என் பொண்ணு கமலாவை கட்டிக்க விருப்பமா? நான் உன் விருப்பத்தை கேட்ட பின்னாடிதான் உங்க அப்பா அம்மாவை போய் கேக்கனும்னு நினைக்கிறேன்,என்றவரை சங்கடத்துடன் பார்த்தான் ...
மேலும் கதையை படிக்க...
அனுபவத்தின் பயன்
மந்திரியின் தந்திரம்
இலவசமாய் ஒரு சுற்றுலா
காட்டுக்குள் சுற்றுலா
உறவுகள் உருவாகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)