Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உயிர்துளி

 

ஏம்மா, மணி 9 ஆகப்போகுதே இன்னும் அப்பா வரலையா??.

முதல் ரேங்க் வாங்கி இருந்த அருண் அப்பாவிடம் தனது ரேங்க்கார்டை காண்பித்து அவரிடமிருந்து எப்போதும் போலப் பரிசுத் தொகை பெற வேண்டும் என்று காத்திருந்தான். அருணுக்கு 9 வயது படிப்பில் சுட்டி. இதுவரை பல பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறான். இன்று அரையாண்டு பரிட்சை முடிந்து ரேங் கார்டு கொடுத்து இருந்தார்கள்.

அருண் அப்பாவின் வருகைக்காக வாசலை நோக்க எழுந்து நிற்க முயன்று சுருண்டு விழுந்தான். பதறிப்போன அருணின் அம்மா கீதா, அவனைத்தூக்கிப்பார்த்த போது மூர்ச்சையாகி இருந்தான், உடனடியாக டாக்டருக்கு போன் செய்து கிளினிக்கில் இருப்பதைக் கன்பார்ம் செய்துவிட்டு, டேக்சி பிடித்து டாக்டரின் கிளினிக் போகலானாள்.

8 வருடங்களுக்கு முன்பு அருண் ஒரு வருடக் குழந்தையாக இருந்த சமயத்தில் பால் குடித்துக்கொண்டிருக்கும் போதே மூர்ச்சையாகிப் போகக் குழந்தை தூங்கிவிட்டதாக எண்ணி அவனை அருகில் கிடத்தியவளின் கை நடுங்கியது. அத்தனை சில்லிட்டு இருந்தது அந்தப் பச்சிளம் குழந்தையின் கை. தலை துவண்ட மேனிக்கு இருக்க வாயிலிருந்து பால் மெல்லிய கோடாக முகவாயில் விழுந்திருந்தது. பதறிய தாயுள்ளம் அருகே இருந்த ரகுவை எழுப்ப அவனும் கீதாவும் உடனடியாகப் பேமிலி டாக்டரிடம் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு ரகுவையும், கீதாவையும் அழைத்த டாக்டர்…

ஐ குடிண்ட் சே திஸ்.. அருண் ஹேஸ் எச் சிவியர் பிளட் செல் டேமேஜ், ப்ராபளி இட் குட் பி எக் கேஷஸ் ஆப் கேன்சர் வில் சீ இட் த பைனல் டெஸ்ட் ரிசல்ட்ஸ் அண்டில் தட் ஹீ ஷுட் பீ இன் ஹெவி கேர் லேப். என்று அவர் சொல்ல ரகுவும் கீதாவும் திகைத்தார்கள். கீதாவின் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர். ரகு அவளைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுப்போனவனாய் அவளை அனைத்துத் தலையை வருடினான். இரண்டு நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் ரிசல்ட் வரவும் அதில் கேன்சருக்கான ரிசல்ட் அனைத்தும் நில் என்றிருந்ததும் தான் வணங்கும் கடவுளை மனதால் தொழுதாள் கீதா.

டேக்சி வேகமாகச் சென்று கொண்டிருக்க, கீதா ரகுவினை மொபைலில் பிடித்து விஷயத்தைக் கூற வேண்டும் என்று அவனுக்குப் போன் செய்யலானாள். நாண்கைந்து பீப் சவுண்டிற்குப் பிறகு சாவகாசமாய் ரெகர்டட் வாய்ஸ் நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் என ஆரம்பிக்கக் கடுப்பாகி கட் செய்து விட்டு வாட்சப்பில், அருண் மயக்கமாகவிட்டான் நான் அவனைக் கிளினிக் கூட்டிட்டு போயிட்டு இருக்கிறேன் உடனே வாங்க என்று ரெகார்ட் செய்து அனுப்பி விட்டுப் பார்த்தாள். ஒரு கீரே கலர் டிக் மட்டுமே காடியது அந்த ரெகார்டட் மெசேஜ் அருகில்.

டாக்டர் மேலும் தொடர்ந்தார். இந்த ரிசல்ட் கேன்சர் இல்லாமல் போனது மிக மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் அருணை மிகக் கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். அவன் இரத்த செற்கள் முழுதும் அழியும் போது அவன் மூர்ச்சையாகி விடுவான். அவனுக்குச் சில உணவு கட்டுப்பாடுகள் விதிக்கிறேன் அவனை மிகக் கவனமுடன் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறை கூறி அனுப்பினார். அவன் மொத்த பிளட் செல்லும் டேமேஜ் அடையும் பட்சத்தில் அவனுக்குப் புது இரத்தம் தான் செலுத்த வேண்டி இருக்கும். அதனால் மிகக் கவனமுடன் பார்த்துக்கொள்ளவும்.

இரண்டு மூன்று நான்கு ஐந்து என்று வருடங்கள் கடக்க ஒன்பதாவது வருடத்தில் மீண்டும் அருண மயங்கி இருந்தான்.

கீதா தன் மொபைலில் வாட்சப் ஓப்பன் பண்ணி பார்த்தாள். இரண்டு கிரே கலர் டிக் இருந்தது.

உடனடியாக ரகுவிற்குப் போன் செய்தாள். இரண்டு ரிங்கிற்க்கு பிறகு ரகு போனை எடுத்து சாரிம்மா ஆடிட்டிங் இப்போதுதான் முடிந்தது கிளம்பிட்டேன் என்று சொல்ல.. என்னங்க அருண் மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டான். பயமாயிருக்கு உடனே நீங்க டாக்டரோட கிளினிக் வாங்க என்று கூறவும் ரகு பதறியடித்துக் காரை திருப்பினான். போனைக் கட் செய்த கீதா சில்லென்று இருந்த அருணின் கைகளைச் சூடாக்க முற்பட்டுக் கொண்டிருந்தாள்.

மெயின்ரோட்டில் இருந்து சிறிய சந்தில் கட் செய்த டேக்சி அங்கே சிவப்பு நிற + எல் யீடி சைன் கீழே நீல நிறத்தில் MKS கிளினிக் என்று மின்னிய கட்டிடத்தின் கீழ் டாக்சி நின்றது.

காத்திருந்த வார்டு பாய் உடனடியாக ஸ்ட்ரெச்சரை தள்ளிக்கொண்டு அருணை அதில் தூக்கி கிடத்தித் தள்ளிக்கொண்டு போனான். பின்னாலேயே ஓடிய கீதா ஐசியூ உள்ளே அருணை கொண்டு போகவும் கதவு அடைக்கப்படப் பட்டையாகக் கீழே ஒளிப்பார்வை அமைக்கப்பட்ட் கண்ணாடியின் வழியாகப் பார்த்தாள்.

உள்ளே டாக்டர் சதாசிவம் அருணுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார்.

போர்டிகோ அருகில் சரியாகக் காரைக்கூடப் பார்க் செய்யாமல் அவசர அவசரமாகப் படியேறி வந்த ரகுவை பார்த்த மாத்திரத்தில் போய் அனைத்துக்கொண்டு அருணுக்கு எனத் தேம்பினாள்.

நிலைமையின் தீவிரத்தை புரிந்துகொண்ட ரகு டாக்டரின் வருகைக்காகக் காத்திருந்தான்.

கால் மணி நேரத்திற்குப் பிறகு மறைந்த இயக்குனர் பாலச்சந்தரின் சாயலை ஒத்த டாக்டர் சதாசிவம், ரகுவையும் கீதாவையும் அழைத்துக்கொண்டு அவர் அறைக்குச் சென்றார்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இது நிகழ்ந்திருக்கிறது. உடனடியாக இரத்த மாற்று வேண்டும். என்று சொல்ல ரகு பேச முயன்றான். டோண்ட் ஒரி மிஸ்டர் ரகு. அருணை காப்பற்ற வேண்டியது எனது பொறுப்பு.

ஆமாம் நீங்கள் செய்த நல்ல காரியம் தான் இப்போது உங்கள் மகனுக்கு ஆபத்பாந்தவனாக அமைந்திருக்கிறது.

எட்டு வருடங்களுக்கு முன்..

டாக்டர் பேசி முடிக்கவும் கீதா அருணைப்பார்க்க செல்ல ஒன் மினிட் மிஸ்டர் ரகு. நீங்க பிளட் டொனேட் பண்ணி இருக்கீங்களா மிஸ்டர் ரகு என்று வினவ இல்லை டாக்டர் என்று பதிலுரைத்தான் ரகு. இரத்ததானத்தின் மகிமையையும் அதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார் டாக்டர் சதாசிவம். அதுவும் இல்லாமல் உங்கள் இரத்த வகை மிகவும் அரிதானது மிஸ்டர் ரகு. அவசரக்காலத்தில் இந்த இரத்த வகைக் கிடைக்காமல் பலரை எங்களால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இரத்த தானம் செய்யுங்கள். இதனால் உங்கள் உடலுக்கு ஒன்றும் நடக்காது. இது பிற்காலத்தில் உங்களுக்கே கூட உதவலாம் என்று சொல்லவும்.

ஸ்யூர் டாக்டர் என்று அன்றிலிருந்து நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தம் கொடுத்து வந்திருந்தான்.

நீங்க கடைசியாகக் கொடுத்த இரண்டு யூனிட் இரத்தம் எங்களிடம் ப்ரீசரில் இருந்தது மிஸ்டர் ரகு. அது தான் இன்று உங்கள் மகன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது.

ஆல்ரெடி நான் பிளட் சர்குலேட் பன்ன ஆரம்பிச்சிட்டேன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் அருண நாளைக்குக் காலையில் நீங்கள் அவனைப்பார்க்கலாம்.

ரகு டாக்டரை நன்றியுடன் பார்த்தான். டாக்டர் சதாசிவம் அவனைப் பெருமிதமாகப் பார்த்தார்.

இரத்த தானத்தின் அவசியத்தை உணர்த்தியதற்காகவும் உணர்ந்ததற்காகவும்.

கீதா கணவனை அன்போடு பார்க்க அவளை அணைத்துக்கொண்டான் ரகு.

டாக்டர் ம்ம்க்கும் எனச் செரும டக்கென்று விலகி புன்முறுவலித்தனர் இருவரும். இனி அருணுக்கு ஒன்றும் பயமில்லை.. அவனுக்குத் துனைக்குத் தம்பியோ தங்கையோ இருந்தால் அவன் இன்னும் ஹேப்பியாக இருப்பான் எனவும் கீதா நானத்தில் முகம் சிவக்க, ரகு கண்களாலேயே சிரித்தான். டாக்டரின் பின்னால் இருந்த கண்ணடியின் வழியாக அங்கே அருணுக்கு ரகு இரண்டு வாரங்களுக்கு முன் தானம் செய்த இரத்தம் துளி துளியாக இறங்கிக்கொண்டிருந்தது.

- இரத்ததானம் செய்வோம் முடிந்தவரை சில உயிர்களைக்காப்போம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)