உயிரெழுத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 5,645 
 

குடிசை வீட்டு பெண் ஆனாலும் ராணியாக தன்னை பாவித்துக் கொண்டாள், வினோதினி…

அப்பா ரத்தினம் குப்பை அள்ளும் தொழிலாளி அம்மா மெஸ்திரி வேலைக்கு செல்வாள்… செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உண்மையாகவே இருவர்கள் தங்களது வேலையில் நேர்மையாக இருந்தார்கள்.

இவர்களுக்கு வினோதினி என்ற மகள் எதிலும் விசித்திராமாகவே செய்வாள்.

அப்பாவின் சொல் பேச்சை கேக்கும், செல்லக் குட்டி அடம் பிடிக்கும் குணத்தில் அம்மா செல்லம் என்று ஆசையோடு மகிழ்ச்சியோடும் குடும்ப வாழ்க்கையை நகர்த்தினார்கள்.

வினோதினிக்கு ஐந்து வயதானதும் அரசு பள்ளியில் ஒன்றாம் வகும்பில் சேர்த்துவிடுகிறார் ரத்தினம்.

வினோதினிக்கு படிப்பு என்றால் ரொம்ப பிடித்த விசயம். அவளிடம் விளையாட்டு பொருட்களாக சிலேட் ஷாக்பிஸ் மொம்மைகளுடன் இருக்கும் புத்தகமே அதிகமாக இருந்தது.

வினோதினியின் அம்மா ரத்தினத்திற்கு தனது மகளை அதிகம் படிக்க வைக்க வேண்டும் ஒரு அரசு பதவியில் அமர வேண்டும் என்பதே ஆசை.

ரத்தினம் தினமும் காலையில் வீதிகளில் இருக்கும் குப்பைகளை அள்ளும் போது கிடைக்கும் பொருட்கள், நோட்டு புத்தகம் ரத்தினத்தின் குடிசையின் அலமாரியை அலங்கரித்தது.

மனைவி மஞ்சுலா மெஸ்திரி வேலைக்கு போய் களைப்பாக வருவாள், அவளுக்கு சாப்பாடு தயார் செய்து விடுவான் ரத்தினம்.

தினமும் குப்பை அள்ளும் போது ரத்தினத்திற்கு உயிர் போகிற மன வலி இருக்கும். குப்பைகளில் வெறும் பேப்பர் மட்டும் இருந்தால் பரவாயில்லை, அதனுடன் அழுகி கிடக்கும் பழங்களின் நாற்றம், அதனினும் ஒரு படி மேலே மனிதர்களின் மலம், பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் என்று எல்லாமே சேர்த்து ரோட்டில் கைகளால் அள்ளுவது என்பது எவ்வளவு பெரிய கொடுமை…இப்படிப்பட்ட குப்பைகளை அள்ளிவிட்டு, வீட்டிற்கு சென்று சாப்பிடவும் தோன்றாது. அதனால் குவாட்டர் வாங்கி குடித்தபின் சாப்பாட்டை உண்பான்..

மஞ்சுலாவும் காலை வேலைக்கு சென்றால், செங்கல் சீமெண்டு கலவையை எடுத்துக் கொடுத்து, மாலையில் தான் அவளின் வேலையும் முடியும்.

இருவரின் மன கஷ்டத்துக்கும் மருந்து வினோதினியின் சிரிப்பும், அம்மா அப்பா என்று கூப்பிடும் வார்த்தைகளுக்கு அவர்களின் உடல் வலியெல்லாமே பறந்து போகும்.

வினோதினி நன்றாகவே படித்தாள். அம்மா அம்மாவின் கஷ்டங்களை புரிந்துக் கொண்டு எதன் மீதும் ஆசை வைக்காமல் குப்பையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே அவளது விளையாட்டு பருவத்தையும் முடித்து பள்ளி பருத்தையே தாண்டும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துவிட்டாள்.

பள்ளி படிப்புகளும் கல்லூரி படிப்புகளிலும் தேர்ச்சி பெற்று ரத்தினத்தை மெய் சிலிர்க்க வைத்தாள் வினோதினி..

பின் அரசு தேர்வுகளை எழுதினாள், அதிலும் வெற்றி பெற்றாள். ஆனால் பதவி கிடைக்கின்ற நேரத்தில் வினோதினி தற்கொலை செய்துக் கொள்கிறாள்.

ரத்தினத்திற்கும் மஞ்சுலாவிற்கும் வினோதினி ஏன் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு என்ன பிரச்சினை என்ன காரணம் என்று தெரியாமல் புலம்பினார்கள்.

வினோதினியின் தற்கொலை பற்றி காவல் நிலைத்தில் தகவல் அறிந்து, தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தார்கள்.

அந்த காரணங்கள், முதலில் வினோதினிக்கு காதல் தோல்வி என்றும் அதன்பின் அம்மா அப்பா ஆசைப்பட்ட அரசு வேலை எங்கே நமக்கு கிடைக்காமல் போகுமோ என்ற பயத்திலேயே வினோதினி தற்கொலை செய்துக் கொண்டாள் என்று விசாரணையை முடித்து வைத்தது காவல் துறை.

நீதி மன்றத்தில் வேறும் வாய்வழி வார்த்தைகளை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து காவல் துறை சொல்லிய வார்த்தைகள் தீர்பாக நீதிபதி வாசித்துவிட்டார்.

வினோதினியின் அப்பா ரத்தினம் அம்மா மஞ்சுலா மன முடைந்துப் போனார்கள் .

வினோதினியின் இறப்பு சக தோழி அனிதாவை வாட்டியாது. ஒரு நாள் அனித்தா வினோதினியின் வீட்டிற்கு சென்று ரத்தினத்தையும் மஞ்சுலாவையும் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் சொன்னாள்.

அப்போது மஞ்சுலா அழுத்துக் கொண்டே, ‘வினோதினியை நாங்களே சாகடிச்சிட்டோம்மா’ என்று கதறி அழுதாள். இவர்கள் சொல்லி அழுவதில் அனிதாவிற்கு சரியாக புரியவில்லை..

சரி அமைதியா இருங்க அம்மா. இனி நான் உங்களை பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாள். அதற்கு மஞ்சுலா, ‘இல்லை வேண்டாம், நாங்கள் உன்னையும் சாகடிச்சுடுவோம் நீ இங்கே வராதே’ என்றாள்.

அனிதாவிற்கு எதுவும் புரியாமல் திகைத்துப் போய் நின்றாள். ரத்தினம் சொன்னார், ‘நேர்மை செத்துப் போச்சிம்மா’, வினோதினி எழுதிய கடிதம் ஒன்றை எடுத்தார்கள். அதில் என் மகள் என்ன எழுதியுள்ளாள் என்று கூட தெரியவில்லையம்மா…

அந்த கடிதத்தை நீதிமன்றத்திலும் தரவில்லை. எங்களையும் இதைப் பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள். அதன்பின் எங்கள் இருவரிடமும் வெத்துப் பேப்பரில் கைநாட்டு வைக்க சொல்லி எடுத்துட்டு போய்ட்டாங்க.

எங்களுக்கு என்ன நடக்குதுனே தெரில. வினோதினி செத்து இன்னிக்கோட இரண்டு வருடம் நான்கு மாதங்கள் ஓடிப்போய் விட்டது.

என் மகள் ஏன் இறந்தாள் என்பது மட்டும் மர்மமாகவே உள்ளது என்று சொல்லி அழுதார் ரத்தினம்.

அனிதா இதையெல்லாம் கேட்டுக் கொண்டு மீண்டும் காவல் நிலையத்தை அனுகினாள். ஆனால் அங்கே சரியான பதில் கிடைக்கவில்லை.

அனிதா மீண்டும் சென்று வினோதினியின் வீட்டிற்குல் போனாள். மஞ்சுலா வினோதினியின் புகைப்படத்திற்கு மலை போட்டுக் கொண்டுயிருந்தாள். அனிதா மஞ்சுலாவிடம், ‘வினோதினி எழுதிய கடிதத்தை யார் எடுத்தது’ என்று அதற்கு மஞ்சுலா நான் தான்மா அந்த கடிதத்தை எடுத்துக் கொடுத்தேன் என்றாள்.

அதற்கு அனிதா, ‘அந்த கடிதம் எங்கே இருந்து எடுதிங்கமா’ என்று கேட்டாள். மஞ்சுலா சற்று யோசித்துவிட்டு ஒரு நோட்டை கொண்டு வந்துக் கொடுத்து இதன் மேல் தான் எழுதி வைத்திருந்தாள் மா.

அனிதா அந்த நோட்டை வாங்கி தனது கையில் வைத்துக் கொண்டாள். அந்த நோட்டை திறந்து கொஞ்ச பக்கங்களை புரட்டி பார்த்தால் எதுவுமில்லை. என்று நோட்டை மடக்கில் அப்போது நோட்டில் ஒர் கார்பன் பேப்பர் இருந்ததை பார்த்தாள் அனிதா.

என்னது கார்பன் பேப்பர் என்று அந்த பக்கத்தை எடுத்துப் பார்தாள்.

வினோதினி எழுதிய வார்த்தைகள் அந்த கார்பன் நகலெடுத்து வைத்துள்ளது.

அந்த நோட்டில் வினோதினி அவசரமாக எடுத்து எழுதும் போது அதில் இருந்த கார்பன் பேப்பரை கவனிக்கவில்லை. அவள் அப்போது கவனிக்காமல் எழுதியது இன்று தக்க சான்றாக அனிதாவிற்கு கிடைத்துவிட்டது.

கார்பன் நகல் எடுத்த வார்த்தைகளை அனிதா படித்தாள்.

அப்பா அம்மாவிற்கு நன்றி. நான் அரசு பதவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட என் கல்லூரி சான்றிதழ்களில் ஒன்று போலியாக உள்ளது. நான் அந்த சான்றிதழ்களை காண்பிக்க சொல்லிக் கேட்டதற்கு, உன் மீது ஒழுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டும் இல்லாமல் இனி நான் எந்த அரசு தேர்வுகளும் எழுத முடியாது என்றார்கள். அத்துடன் இல்லாமல் எனக்கு அந்த பதவி கிடைக்க வேண்டுமென்றால் பணத்தை கட்ட சொன்னார்கள்.

என்னால் பணம் கட்டமுடியாது, என் சான்றிதழ் கள் எல்லாமே நிஜமானது என்று சொன்னேன் அப்போது அங்கிருந்த அதிகாரி சொன்னார்.

உன் வேலை இவர்களுக்கு விட்டுக்கொடு உனக்கு தனியார் கம்பெனியில் வேலை வாங்கி தந்துவிடுவார். உன் திருமணத்திற்கான எல்லா செலவுகளையும் இவரே பார்த்துக் கொள்வார் என்று ஒரு பணக்காரனை காண்பித்தார்கள் அதற்கு பிறகுதான் எனக்கு உண்மை தெரிந்தது, எல்லாமே பணத்திற்காக என் எதிர்காலத்தையே அழித்துவிட்டார்கள் அம்மா.

உங்களின் ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையில் நான் இருக்கிறேன். இதன் வலிகளை என்னால் தாங்க முடியவில்லை என்னை மன்னித்துவிடுங்கள் என்று எழுதியிருந்தது.

இதை படித்த கைகளோடு வக்கீலை பார்த்து இந்த தகவல்களை சொன்னாள் அனிதா. ஆனால் வக்கீல், வினோதினியின் தீர்ப்பே வந்து விட்டது, இனி எதுவும் செய்ய முடியாது. அதுமட்டும் இல்லாமல் வினோதினியின் பெற்றோர்களும் மீண்டும் நாங்கள் கேஸ் தரமாட்டோம்னு எழுதிய கொடுத்துட்டாங்க. வினோதினி யின் கேஸ் அவ்வளவுதான் என்றார்.

இந்த கேஸ்க்கு எப்படி உயிர் கொடுப்பது என்று யோசிக்கும் போதுதான் அனிதாவிற்கு ஒரு யோசனை வந்தது.

வினோதினியின் தற்கொலையை பற்றி சிறுகதையாக எழுதி அதை எல்லோரிடமும் படிக்க செய்தாள். ஆனால் எந்த பயனும் இல்லை.

அந்த சிறுகதை எழுதி சரியாக இரண்டு ஆண்டுகள் சென்ற பின் ஒர் பொதுநலன் வழக்கு போடுகிறார் ஒரு வக்கீல், அவர் தான் வினோதினி இறப்பின் போது சட்டம் படித்துக் கொண்டுயிருந்தவர். அவனது நான்கு ஆண்டுகள் சட்டப் படிப்பை முடித்தை கையோடு வினோதியின் தற்கொலை கேஸை தனது கையால் எடுத்தான்.

அனித்தாவின் சிறுகதை ஒரு பெரும் சான்றாகவே மாறியதை உணர்ந்தாள் அனிதா.

அன்று ரத்தினம் மஞ்சுல தனது மகளின் இறப்புக்கான காரணத்தை, வாய் வழியாக சொல்லிய வார்த்தைகள் எல்லாவற்றிக்கும் உயிர்கொடுத்தாள் உயிர்த்தோழி.

நமது வாய்வழி சொற்களுக்கு எப்போதும் உயிர் இல்லை. ஆனால் நமது தமிழ் மொழியின் உயிரெழுத்துகளுக்கு உயிர் உண்டு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *