உயிரிலும் உயர்வாகும் உறவுகள்

9
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 19,715 
 

சிக்னல் அருகே கார்கள் சிகப்பு விளக்குக்காக நின்றன.ஊர்திகளும் பயிக்குகளும் ஓடி நின்ற வேகம் எழுந்த புழுதி
லேசாகப் பறந்து மற்ற வண்டிகளில் படிந்தது .

அந்த முதியவர் முடியாத நிலையில் இருந்தால் கூட உயிர் வாழும் அந்த ஒரு வேளை உணவிற்காக
கால் கடுக்க நின்றார்.

எத்தனையோ பேர்கள் பார்த்திருப்பார்கள்.அவர்களுக்குள்ளே எத்தனையோ நினைவுகளுக்கு இடையே இவருக்காகப்
பரிதவிப்போர் வெகு சிலராகத்தான் இருப்பார்கள்.

அந்த நல்ல உள்ளங்கள் கூட சூழ்நிலையிலும் ,தொடர்ந்து வேறு எண்ணங்களிலும் பணிகளிலும் இவரைப் பற்றிய
நினைப்பும் பரிதவிப்பும் பச்சை சிக்னல் காட்டும் ஒளியில் மறந்து விடுவார்கள்.

என்ன செய்வது!அவர்களது ஊர்திகளுக்கும் அந்தப் பெரியவருக்கும் இடையே உள்ள இடை வெளி போல!
சாலையில் எத்தனையோ பேர்கள் உணவிற்காக கையேந்தி நிற்கிறார்கள். பலரை நாம் நினைவில் வைப்பதில்லை!
சிலர் மட்டும் நம் மனதைத் தொடுவார்கள்.! நெருடுவார்கள்!

அந்தச் சிலரில் ஒருவர் தான் இவர்!

இன்னொரு நாள்!

காலை மணி பதினொன்றுக்கு மேல் இருக்கும் .

ஒரு கார் நின்றது!

வளையல் அணியா விட்டாலும் கடிகாரமும் அந்தக் கையும் கரங்களும் அவள் வனப்புமிக்க வசதியுள்ள
ஒரு மங்கை என்று சொல்லாமல் தெரிவிக்கிறது!

அந்தக் கையில் ‘பேக்’ செய்யப்பட்ட ஒரு உயர்ந்த உணவகத்தின் உணவுப் பொட்டலமும் ஒரு மினரல் வாட்டர்
பாட்டிலும் இருந்தது!

அங்கிள்! இதை வாங்கிக்குங்க !

பெரியவருக்குத் தயக்கம் ! இது வரை பணம் பொருள் கொடுத்தவர்கள் கையில் கொடுக்கும் போது
இந்தப் பரிவு காட்டியதில்லை!

சிலர் கீழே கூடப் போட்டுவிட்டுப் போவார்கள் !

அது நல்ல உணவு மட்டும் அல்ல ! மிக நயந்த பரிவுடன் அந்த ‘அங்கிள்’ என்ற வார்தைகளுடன் வந்ததுதான்!
சட்டென்று இரு கை களால் பெற்றுக் கொண்டார்!

தாடி பரந்த சுருங்கிய அந்த முகத்தில் நன்றிக்கு நடுவே கண்ணீர் நின்றது!

நன்றி தெரிவிப்பதற்குள் கார் நகர்ந்து விட்டது.

எப்பொழுதுமே அங்குள்ளவர்கள் கூட அவரிடம் மிக்க அன்பும் பரிவும் காட்டுவார்கள்!

அய்யா !பார்த்து சிக்னல் வந்ததும் போங்கள்! என்று

ஒரு நாள் ! மாலை நேரம்!

கடற்கரை பீச் அருகில் அவர் உட்கார்ந்திருந்த போது நடை பயிற்சி பயிலும் அந்தப் பெண் பார்வதி மெதுவாக
இவர் அருகில் வந்து நின்றாள்.

அங்கிள்! இங்கேயா உட்கார்ந்து இருக்கிறீர்கள்?

வாங்க! சாப்பிட ஏதாகிலும் வாங்கித் தருகிறேன் !

முதன் முறையாகப் பெரியவர் வாய் திறந்தார் .

அம்மா! அன்றே உனக்கு நன்றி சொல்லணும்னு நினைச்சேன் ! அதற்குள் நீ போய் விட்டாய்!
இன்று என்னிடம் இரவு சாப்பிட காசு இருக்கிறது! வேண்டாம் அம்மா!

இல்லை அங்கிள்!அதை நாளைக்கு வச்சுக்குங்க !

இருவரும் நடந்தார்கள் .

பார்வதி வழக்கமாக நடை பயிற்சி செய்யும் இடம் அது! அவளை தினம் பார்த்து பழக்கப் பட்டவர்கள்
இன்று சற்று ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

அவர்களின் கவுரவம் நாகரீகம் அது மாதிரி! பணம், படாடோபம் பார்க்கும் மேல் நோக்கு பண்பாடு உள்ளவர்கள் !
சராசரி மனிதனின் பார்வை!

அவை மனித நேயம்களை உணரும் நிலையில் இருப்பதில்லை!

பார்வதியின் இந்தச் செய்கை ,ஒரு வேளை உணவிற்காகக் கையேந்தி,பழைய துணியுடன் தாடி மீசையுடன் கூடிய
பெரியவரின் கூடப் பேசி நடப்பது அவர்கள் விரும்பும்,நம்பும் நாகரீகத்திற்கு ஏற்றதாக இல்லை!

எப்பொழுது பார்த்துச் சிரிப்பவர்கள் கூட எங்கோ பார்த்து நடந்தார்கள்.!

மனித நாகரீகத்தில் இம்மாதிரி பண்பாட்டு வரையறைகள் நிறைய உண்டு!

அம்மா!என் மேல் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறாய்? உனக்கு ஏன் இவ்வளவு சிரமம்?

அதற்குள் பார்வதியின் கார் அருகில் வந்து விட்டார்கள்.

அங்கிள்!அந்த சிக்னல் அருகே நிறைய நாட்கள் உங்களைப் பார்த்திருக்கிறேன்.போன வாரம்தான் உங்களுக்கு
உணவு கொடுத்தேன்.ஏதோ உங்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உறுதியாகத் தோன்றியது!
இதில் என்னுடைய சொந்தக் கதையும் உண்டு!

அங்கிள்! நான் உங்களை ஒன்று கேட்டால் மறுக்காமல் செய்வீர்களா!

சொல்லு அம்மா!நடுத் தெருவில் சாப்பாட்டுக்கு அலைந்து ,அருவருப்பா இப்படி தாடி மீசையுடன் திரியும் எனக்கு
இப்படிப்பட்ட பாசமும் பரிவும் கிடைக்காத ஒன்று!
அவை இல்லாமல் போனதால்தான் நான் இந்த நிலைக்கு வந்தேன்!
சொல்லு அம்மா தயங்காமல்!

அங்கிள்!தயவு செய்து என் வீடு வரை வருவீர்கள!

பௌர்ணமி நெருங்கும் நிலா ஒளியிலும் அங்குள்ள விளக்கு ஒளியிலும் கூட அவள் கேட்ட அந்தக் கேள்விக்கு முன்
அவளின் கண்ணீர்தான் முதலில் விழுந்தது!

பெரிய வருக்குப் போக விருப்பமில்லை! ஆனாலும் அவளின் அன்பான கண்ணீர் அவர் மனதைத் தொட்டிருக்க வேண்டும்!
மௌனமாக நின்றார்!

அம்மா! அழுக்கும் அருவருப்பும் ஆன என்னை இந்த வண்டியில் வரச் சொல்லுகிறாயே!

ஏன் இப்படிச் செய்கிறாய்!

அங்கிள்! இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் என்னால் கார் ஓட்ட முடியாது!
தயவு செய்து வாருங்கள் !

பீரிட்டு வந்த துக்கத்தையும் அழுகையையும் அடக்கி அவளால் அதற்க்கு மேல் பேச முடிய வில்லை!

பெரியவர் கேட்டார்!

அம்மா!இந்த நேரத்தில் உன் வீட்டுக்கு வரச் சொல்லுகிறாய் !உன் கணவர்,மற்றவர்கள் என்ன சொல்லு வார்கள்?

அங்கிள்! எவ்வளவோ மன உளைச்சல்களிலும் ,மிகத் துயரமான நேரங்களிலும் எனக்கு உரு துணையாக
நல்ல வாழ்வு அமையக் காரணமானவரே என் அருமை கணவர்தான் !

கடவுள் காட்டிய மிகப் பெரிய கருணை அவரை எனக்குத் தந்தது!

என் கணவர் எப்பொழுதும் எனக்குத் துணையாக இருப்பார்.

அங்கிள்! வருவீர்களா!

அவள் வார்த்தைகளில் எதிர் பார்ப்பும் ஏக்கமும் அவளை மீறி தொனித்தது!
இவளுக்கு இருக்கும் மனப் போராட்டங்கள் அவர் உணராதவர் இல்லை!
அவரிடம் அதற்க்கு மேல் தாங்கொணா துயரம் சூழ்ந்த நிலைமை!

சரி!வருகிறேன்!

அங்கிள்! முன் சீட்டிலேயே உட்கார்ந்து வாருங்கள் !

கார் போய்க் கொண்டிருந்தது.

வெயிலும் காற்றினிலும் வாடி நின்ற அந்த மனிதருக்கு இதமான ஏசி காற்று சுகமளித்ததா தெரியாது!
ஆனால் அந்தப் பெண் பார்வதியின் தணியாத அன்பு இதம் அளித்து இருக்க வேண்டும்!
பார்வதி அவரிடம் பேச வில்லை.

மாறாகக் கணவனிடம் ‘ கோபி!நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரப் போகிறேன்!நிச்சயம் என்னைப் பாராட்டுவாய்!
ஓகே !பாரி!உன் பேச்சில் என்றும் இல்லாத உற்சாகம் தெரிகிறது இன்று!உன்னைப் பார்க்க மிக ஆவலாய் உள்ளேன்`

பெரியவரின் மனதிலோ அதற்க்கு மேல் போராட்டம்!

வாழ்க்கையில் இவை எல்லாம் பார்த்து அனுபவித்து ஏமாந்து கஷ்ட்டங்களின் கடைசிப் படியாக
தெரு முனைக்கு வந்தது!

வேலை செய்து நாட்கள் நகர்த்தும் நிலையில் அவர் இல்லை!

மேலான சுகங்களையும் தணியாத கஷ்டங்களையும் தாண்டி ,அவர் மனதில் ஒரு சிறிய எதிர்பார்ப்பு! ஆவல்!
இந்தப் பெண்ணின் மன நிலை என்ன?

போர்டிகோவில் கார் நின்றது.

அதற்குள் அவள் கணவர் கோபி வெளியில் வந்தார் .

நல்ல அமைதியான பண்பு நிறைந்த கணவர்தான் பார்வதிக்கு என்று பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும்
தோற்றத்தில் இருந்தார்.

வாங்க ஐயா! உள்ளே வாங்க!

பெரியவர் காரை விட்டு இறங்கியதும் வாசற்ப் படியில் கால் வைத்து வராண்டாவின் அருகில் வந்ததும்
அம்மா பார்வதி!நீ வரச் சொல்லி விட்டாய் !வந்து விட்டேன்! இதற்க்கு மேல நான் உள்ளே வர மாட்டேன்.!
என்னைத் தொந்தரவு பண்ணாதே!

என்ன அங்கிள்! என்று இருவரும் ஒரே நேரத்தில் ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்தார்கள்.
பார்வதி!கோபி தம்பி! உங்களின் நிறைந்த அன்பிற்க்குக் கட்டுப் பட்டு நான் இங்கே வந்திருக்கிறேன் .
நீங்கள் சொல்லும் எந்த கட்டளைக்கும் உங்கள் அன்பினால் கட்டுப் பட்டவன் நான்.

நான் கடமைப் பட்டவன் .ஆனால் இந்த இடத்திற்கு மேல் நான் உள்ளே வர முடியாது .
வர மாட்டேன்!

இந்த மாதிரி சூழ்நிலையை விட்டுத்தான் நான் வெளியில் வந்தவன் .

மனச் சாக்ஷி இல்லாத மனிதர்கள் இருந்தார்கள்.உறவு என்ற போர்வையில் சுய நலமும் பேராசையும்
அகங்காரமும் இருந்தது. நான் பெற்றவைகளே பேராசைக்காக என்னையும் என் மனைவியையும்
பந்தாடினார்கள்!

இம்சை,அவமானம் ,இடிபாடு தாங்க முடியாமல் நானும் என் மனைவியும் எங்கோ ஒரு நண்பர் வீட்டில்
இருந்தோம்.மன வேதனையினால் என் மனைவி இறந்து போனாள்.

நானும் நண்பருக்குப் பாரமாக இருக்காமல் வெளி ஏறி இந்தப் பரந்த உலகத்தில் கை ஏந்த ஆரம்பித்தேன் .
என் மக்களுக்கும் என்னைத் தேடும் நேரமில்லை!

யாரிடமும் இல்லாத அன்பும் அரவணைப்பும் உங்களிடம் இருக்கிறது! இடி பாடான என் வாழ்க்கையில்
ஒரு சிறிய நிம்மதியான நேரம்!

ஆனால் வீடு,மனை,அந்தஸ்து,சுகம் அவளோடு போய் விட்டது!

மறு படியும் அதில் காலெடுத்து வைக்க நான் விரும்ப வில்லை!

எனக்கு உணவு அளிக்க விரும்பினால் இங்கேயே தாருங்கள்!அன்பான அந்த உணவை திருப்தியாக
சாப்பிடுவேன்.பிறகு என் இடத்திற்கே போய் விடுவேன்.

இதைக் கேட்டு பார்வதியும் கோபியும் மலைத்து நிற்க வில்லை!

பார்வதியின் குடும்பத்திலும் அவள் உடன் பிறந்தவர்களாலும் உறவினர்களாலும் அவள் பெற்றோருக்கு
இதுதான் நடந்திருக்கிறது.

வேதனை கலந்த அந்த சோதனையான நேரங்களில் அவள் கல்லூரி நண்பனான கோபி அவளுக்கு முழு ஆதரவாக
இருந்து தேற்றி இருக்கிறார்.அப்போது அவள் கல்லூரி மாணவி.

நட்பு,நலமான உணர்வுகளோடு காதலாக மாறி அவர்கள் இல்லறத்தில் இணைந்து வாழ்க்கை பயணம்
தொடங்கு முன் ,பார்வதியின் குடும்ப சூழ்நிலை ,சொத்து பற்றிய அண்ணன்கள் ,உறவினர்கள் சண்டை மோதல்களால்
அவள் தாய் தந்தையரும் சொந்த வீட்டிலிருந்து வெளி ஏறி மனக் கசப்பினால் நொந்து போய் உடல் நலன் குன்றி
இன்னலுற்று இவ்வுலகை விட்டே விடை பெற்றனர்.

கோபியின் தணியாத அன்பும் அரவணைப்பும் பார்வதிக்கு நல்ல வளமான வாழ்க்கை அமைந்தால் கூட
அவள் பெற்றோர் நினைவு அவள் மனதில் மிக ஆழமாக உறைந்து விட்டது.

கஷ்டப் படும் வயதான பெரியவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவள் தன்னை மறந்து தன தாய் தந்தையர்
நினைவில் போய் விடுவாள் .

பார்வதி வசதியாக செயல் படும்போது அவர்கள் இல்லை.அண்ணன்மார்களிடம் அவள் சொத்து பங்கு கூடக்
கேட்க வில்லை.கொடுத்தால் கூட கோபி மறுத்திருப்பார்.

அப்படி ஒரு நல்ல இதயத்தின் அருமை மனிதராக அவர் பார்வதிக்குக் கிடைத்தவர்.

பெரியவரின் விருப்பத்திற்கு இணங்க அங்கேயே நல்ல உணவு கொடுத்தார்கள்.

பிறகு வந்த இடத்திற்கே பார்வதியும் கோபியும் கொண்டு விட்டார்கள்.

போகும் போது ‘ஐயா ! உங்களுக்கு விருப்பமானால் உங்களை நல்ல முதியோர் இல்லத்தில் நாங்கள் சேர்க்கலாமா ?
எங்களால் உங்களை அடிக்கடி சந்திக்க முடியும்.என்று கோபி சொன்னார்.

பெரியவர் பேசவில்லை.

மறுபடியும் கோபி கேட்ட போது ‘ எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் .சொல்லுகிறேன்.’ என்றார்.

பெரியவரை விட்டு வீடு திரும்பிய பார்வதி அன்று இரவு முழுதும் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்.
அமைதியான கோபி கூட பித்துப் பிடித்தவர் போல கலங்கி நின்றார்.

பெற்றவரும் உற்றவரும் அந்தப் பெரியவரைத் தேடக் கூட இல்லை .ஆனால் பேதமையான பெண் பார்வதி
அவருக்காக மனம் உருகி அழுகிறாள்.

இயற்கையான அன்பு எங்கே இருக்கிறது என்று இறைவனைக் கேட்டால் ,,நீங்களே உணர்ந்தால் அது உங்களுக்குள்ளேயே நிறைந்து செயல் படுகிறது இறைவன் சொல்லாமலே உணர்த்தும் செயல்கள் தாம் இவை

பார்வதியின் நிறைவான அன்பும் பாசப் பிணைப்பும் எங்கோ ஒருவரிடத்தில் இறைவன்
நமக்குக் காட்டும் இயல்பான செயல் முறைகள்!

அவள் யாருக்காகவோ அழவில்லை அந்த அன்பான நெஞ்சத்திற்கும் உள்ளத்திற்கும்
இத்துணை உயர்வு உண்டு என்ற இயல்பான தன்மைக்கு தன மனமே ஒரு சான்று என்ற
இயற்கைத் தத்துவத்திற்கு தன்னை இணைத்துக் கொண்டதன் விளைவாக அழுதாள் .

அடுத்த வாரம் .

அவர்களுக்கு சற்று பிசியான நாட்கள் .

அவர்களின் ஒரே மகள் சுவர்ணா வெளி ஊரில் படித்துக் கொண்டிருந்தவள் விடு முறைக்காக
தோழிகளுடன் வந்தாள்

வீடு சற்று களை கட்டியது.

அந்த வாரம் யாவரும் கோபி பார்வதி உட்பட திருவண்ணாமலை போய் மதுரை போனார்கள்.
மதிய உணவிற்குப் பின் கோபியின் மானேஜர் ராஜு போன் பண்ணினார்.

என்ன ராஜு சொல்லுங்க என்ன ஏதாகிலும் அர்ஜண்டா !

சார்! ஒரு நிமிஷம் !உங்களை பார்க்க ஹெல்த் ஆர்கனைசேஷன் செக்ரட்டரி மிஸ்டர் கோவிந்த்
வந்திருக்கிறார்.பேசுங்க !

ஹலோ!வணக்கம் சார்!நான் கோவிந்த் பேசறேன். இங்கே பீச் பக்கத்திலே ஒரு பெரியவர்
மயக்கம் போட்டு விழுந்திட்டார் .முதல் உதவி பண்ணும் போது அவர் பைக்குள்ளே
ஒரு குறிப்பு இருந்தது .’எனக்கு ஏதாகிலும் விபத்தோ ,உடல் கேடோ ஏற்பட்டால் கீழ் முகவரிக்கு தகவல் கொடுங்கள் என்று எழுதி உங்கள் பேரும் மேடம் பேரும் எழுதி உள்ளார்.

அதனால்தான் உங்க வீட்டுக்கு வந்தேன் .நல்ல வேளை.உங்க மானேஜரைப் பார்த்தேன்.

ஒ மை காட் !சார் பெரியவர் எப்படி இருக்கார்?ஆபத்து ஒண்ணுமில்லையே!

மயக்கம் தான் சார் !ஆனா ரொம்ப வீக்கா இருக்கார்.

மிஸ்டர் கோவிந்த் !உங்களுக்கு நேர்லே வந்து நிறைய நன்றி நாங்க சொல்லுவோம்.
உடனே நான் சொல்ற பிரைவேட் ஆஸ்பத்திரியில் சேருங்க ! ராஜு ஏற்பாடு பண்ணுவார்.
போனை அவரிடம் கொடுங்க.

ராஜு! நாங்க உடனே வரோம். நீங்க கிளினிக் லே சேர்த்துடுங்க.

எல்லோரும் உடனே கிளம்பி எட்டுமணிக்குள் சென்னை வந்து சேர்ந்தார்கள்.

அவசர சிகிச்சைக்குப் பிறகு பெரியவர் மெதுவாகக் கண் திறந்தார்.

கலங்கி நின்ற பார்வதியையும் கோபியையும் பார்த்து

உங்களுக்கு மிக்க சிரமம் கொடுத்திட்டேன்.இந்த பேப்பர் துண்டு உங்கள் முக வரி
ரெண்டு நாள் முன்னால்தான் எழுதி வைத்துக் கொண்டேன் உங்களைப் பார்த்து
கொஞ்ச நாள் ஆயிற்று .எதோ என் மனசிலே ஒரு சின்ன ஆசை .பார்வதியையும் உங்களையும்
பார்க்கணும் என்று!

இப்போ பார்த்திட்டேன் .மெதுவாகச் சிரித்தார்.

பின்னால் பெரிய அழு குரல்.!பார்வதி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்
இனிமே உங்களை எங்கேயும் போக விட மாட்டேன் சிகிட்சை முடிந்ததும் எங்களுடன் இருக்கலாம் நீங்க என்னோட அப்பா ! உங்களை எங்கேயும் விட மாட்டேன் என்று பார்வதி
மீண்டும் விசித்து விசித்து அழுதாள்.

.அந்தப் பாசப் பிணைப்பு பெரியவரைக் கட்டிப் போட்டது .

அம்மா பார்வதி! உங்கள் விருப்பப் படி அந்த முதியோர் இல்லத்திற்கே போகிறேன் .
பிறகு உங்கள் இஷ்டப்படி வருவேன் .எனக்கு சற்று அவ காசம் கொடுங்கள் .
சுவர்ணா வெகு நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் .

அம்மா இவர் என்று திரும்பினாள்.

சுவர்ணா !இவர் உன்னோட தாத்தா என்று கோபியும் பார்வதியும் ஒரே குரலில் சொன்னார்கள்.

நீங்க என் கிராண்ட் பாதரா !என் தாத்தாவா ! இவ்வளவு நாள் எங்கே இருந்தீங்க தாத்தா!
அவர் கையைப் பிடித்துக்கொண்டாள் .

உயர்ந்த பாசத்திற்கும் மனித நேயத்திற்கும் விலைகள் இல்லை !
கிளைகளும் இல்லை!

Print Friendly, PDF & Email

9 thoughts on “உயிரிலும் உயர்வாகும் உறவுகள்

  1. அன்புடையீர்,
    வணக்கம். மனித நேயத்தை வலியுறுத்தும் அருமையான சிறுகதை. கதாசிரியருக்கு பாராட்டுக்கள். சிறுகதைகள் இணையத்தளம் ஆசிரியருக்கு நன்றி

    பூ. சுப்ரமணியன், ;பள்ளிக்கரணை, சென்னை

    1. அன்புடைய திரு.பூ .சுப்ரமணியன் அவர்களுக்கு,
      மிகவும் நெகிழ்ச்சியும் மன நிறைவும் ,தங்கள் மேலான பாராட்டுதல்கள்
      மூலம் கிடைக்கப் பெற்றேன்.
      என்னை மேன்மேலும் இது போன்று ஊக்கப் படுத்திக் கொண்டிருக்கும்
      சிறுகதை இணைய தளம் ஆசிரியர் குழுமத்திற்கு மிக்க நன்றி.
      பி.சங்கரன்

  2. அன்புள்ள திரு.ஈரா.ஷடகோபன் அவர்களுக்கு ,
    தங்கள் அன்பான விமர்சனமும் அதன் எழுத்துக்களும்
    என்னை மிகவும் நெகிழ வைக்கிறது.நானும் கலங்கினேன் .
    மிக்க நன்றி
    பி.சங்கரன்

  3. அன்புள்ள கிருஷ்ணன் & சுபாமணியன் அவர்களுக்கு,
    தங்கள் அன்பும் மிகுந்த பாராட்டும் மேலும் என்னை எழுதத் தூண்டுகிறது . மிக்க நன்றி .

  4. மனத்தை தொட்ட அருமையாந சிறு kathai. நன்கு rasiththen. vazhththukkal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *