“இன்னைக்கு நாம குடும்பத்தோட வெளிய போறதா இருக்கோம். ராத்திரிதான் வருவோம். ஆனாலும், காலங்கார்த்தால எழுந்து நீ சமைக்க ஆரம்பிச்சுட்டே. வெளியே சாப்பிட்டுக்கலாமே, ஏம்மா கஷ்டப்படுறே?” – செல்ல மகள் சிணுங்கலோடு கேட்டாள்
வெளியேதான் சாப்பிடப் போறோம்!
அப்புறம் என்ன பண்றே|?
வேலை இருக்குடி…நீ கிளம்பு! – துரத்திவிட்டாள் அம்மா.
சுஜி, அன்று முழுக்க குழம்பியபடியே வந்தாள். வீடு திரும்பியவுடன் பார்த்தால், சமையல் மேடையில் சமைத்த பாத்திரங்கள் கழுவிக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன
என்னம்மா, சமையல் செய்திருக்கே…ஆனா, எடுத்துட்டு வரல! ஏன் இப்படி?” – கேலியாகக் கேட்ட மகளை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
”வேலைக்காரிக்காத்தான் சமைச்சேன். பாவம் ரெண்டு வீட்டு வேலையை முடிச்சுட்டு நம்ம வீட்டுக்கு எப்பவும் பசியோட வருவா. நாம ஒரு நாள் வெளியே போறதுக்காக அவளை பட்டினி போட வேண்டாம்னு தான் சமைச்சு வெச்சுட்டு, சாவியையும் பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு வந்தேன், பழகிட்டா….திருட்டு, புரட்டு கிடையது. சாப்பிட்டு வீட்டு வேலையும் முடுச்சுடுவா. நமக்காக உழைக்கிறவளுக்கு இது செய்யக் கூடாதா?…சொல்லு?
இப்போது அம்மாவைக் கட்டிக்கொள்ள தோன்றியது
- பத்மா சபேசன் (ஜூன் 2014)
தொடர்புடைய சிறுகதைகள்
"அம்மா, அம்மா இங்க ஓடியாயேன், இந்தக் குருவியோட கூட்டுல, இப்ப வேற ஒரு பெரிய குருவி வந்து உக்காந்துருக்கும்மா. சீக்கிரமா வந்து பாரேன்" என் மகள் காளீஸ்வரி என்னை அவசரமாக அழைத்தாள்.
"அதெப்படிடி தேன்சிட்டு கட்டுன கூட்டுல போயி இன்னொரு குருவி உக்காரும்? ...
மேலும் கதையை படிக்க...
பஸ்ஸின் வேகத்துக்கு ஏற்ப ஜன்னல் வழியாகக் காற்று வந்து மோதுகிறது. டிரைவர் ஸீட்டுக்குப் பின்னால், மூன்றாவது ஸீட்டில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இருக்கிற பரமுவின் முகத்தில் அறைகிற காற்று, காதோர முடிக் கற்றைகளை இழுத்து அலைக்கழிக்கிறது.
இடைவிடாத காற்றின் தாக்குதலால் முகமே காய்ந்து ...
மேலும் கதையை படிக்க...
மதியழகன்- மாலதி தம்பதிகளுக்கு திருமணம் நடந்து ஐந்துவருடங்களாகியும் பிள்ளைகள் கிடைக்கவில்லை. அவர்கள் பிடிக்காத விரதங்கள் இல்லை
போகாத கோயில்கள், சுற்றாத அரச மரங்கள் இல்லை. ஒரு குழந்தையைச் சுவீகாhரம் ஏடுத்து வளர்க்கக், கூட சிந்தித்தார்கள், ஆனால் அதை அவர்களின் பெற்றோர் விரும்பவில்லை. கடைசியாக ...
மேலும் கதையை படிக்க...
""அம்மா கதவை தாழ் போட்டுக்க. நான் வேலைக்கு கிளம்பறேன்.''
பரத் சொல்ல, கட்டு போட்ட காலை தாங்கியபடி நடந்து வந்தாள் அமிர்தம்.
அம்மாவை பார்த்த பரத்திற்கு மனம் வேதனைப்பட்டது. அப்பாவும், அம்மாவும் எந்த ஒரு ஆசையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதைக் கொண்டு வாழ்ந்துகொண்டு, பரத்தை ...
மேலும் கதையை படிக்க...
பிரகாரத்தை மூன்றாவது சுற்று சுற்றிக்கொண்டிருந்த அக்காவை இமைக்காமல் பார்த்தாள் ப்ரியா. அப்படியே இருக்கிாள். இந்த இரண்டு வருடங்களில் கொஞ்சமும் மாற்மில்லை. அமைதியான முகம், சின்னதாய் குங்குமப் பொட்டு, தலையில் கொஞ்சமே கொஞ்சம் மல்லிகை, கையில் பூஜைக்கூடை, அதில் கொஞ்சமும் வெளித்தெரியாது அழகாய் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கோயிலும் இரண்டு பெண்களும்