உபதேசம்! – ஒரு பக்க கதை

 

மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். ரம்யா காபி டம்ளர் தட்டுடன் மாப்பிள்ளை மோகன் பக்கம் சென்றாள். மோகனிடம் தட்டை
நீட்டினாள். அதில் பிளாஸ்டிக் டம்ளர் ஒன்றில் காபியும், கண்ணாடி டம்ளர் ஒன்றில் காபியும் இருந்தது.

மோகன் காபி தட்டை கவனித்தான் சில வினாடிகள் யோசித்தவன், கண்ணாடி டம்பளரில் இருந்த காபியை எடுத்து குடித்தான்.
ரம்யாவின் முகத்தில் சந்தோஷ ரேகை படர்ந்தது. தன் அப்பா சந்தானத்தின் பின்னால் போய் நின்றாள்.

மாப்பிள்ளை வீட்டார் போனதும் சந்தானம் தன் மகளிடம் கேட்டார்…. “ரம்யா! மாப்பிள்ளைக்கு நீ கொடுத்த காபித் தட்டில் பிளாஸ்டிக் டம்ளரும், கண்ணாடி டம்பளரும் வெச்சிருந்தியே ஏன்?’ என்று கேட்டார்.

“அப்பா! மாப்பிள்ளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆபீசிலே வேலை செய்றவர்னு சொன்னீங்க! சுற்றுச்சூழல் பற்றி அவர் ஊருக்கு
மட்டும் உபதேசம் பண்ணுறவரான்னு சோதிக்கத்தான் பிளாஸ்டிக் டம்ளரும், கண்ணாடி டம்ளரும் அவர் முன் காட்டினேன். ஆனால் அவர் சூழல் பாதுகாப்பு உணர்வுடன் பிளாஸ்டிக் தவிர்த்து கண்ணாடி டம்ளரை எடுத்தார். உடனே என் சம்மதம் சொன்னேன்!’ என்றாள் ரம்யா.

- கு.அருணாசலம் (மார்ச் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒப்பாரியும் ஓலமும் இன்னும் ஓய்ந்‌த பாடில்லை. அம்மாவும் அக்காவும் துக்கம் விசாரிக்க வரும் நெருங்கிய உறவினர்களைக் கண்டவுன் ‘ஓ’ வெனக் கதறுகிறார்கள். என்னை விடவும் அவர்கள் அப்பாவிடம் அதிகப் பற்று கொண்டிருந்‌தார்கள். சொல்லபோனால் என்னைவிடவும் அவர்கள் அப்பாவுடன் அதிக நேரம் செவழித்துள்ளார்கள். ...
மேலும் கதையை படிக்க...
காலை மணி 5:40 . ட்ரெயினிலிருந்து வரும் சத்தத்தில் தாம்பரம் இரயில்வே ஸ்டேஷனே அலறியது . வழக்கமாக ஒரு மணி நேரமோ , ஒன்றரை மணி நேரமோ தாமதமாக வரும் ' தஞ்சாவூர் பாசஞ்சர் ' , இன்று வழக்கத்திற்கு மாறாக ...
மேலும் கதையை படிக்க...
சடையன்குழி சகாயமாதா கோவில் திருப்பலி முடிந்து கூட்டத்தோடு கலந்து வெளியேறிய ஆக்னஸ் மேரியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் சகாயம். அவனது பார்வை தன்னை ஊடுருவதை உணர்ந்து ஆக்னெஸ் தலை தாழ்த்தி சாலையின் ஓரம் தனது அக்கா மகளோடு நடக்க ஆரம்பித்தாள். சூரியன் ...
மேலும் கதையை படிக்க...
இந்த பத்தாவது நேர்முகத்தேர்வு கலாட்டாதான். கேட்கிற கேள்விக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டி பதில்தான். உறவு, சிபாரிசு, பெரிய இடம்ன்னு ஆட்களைப் பொறுக்கி வைச்சுக்கிட்டு தேர்வை அரசாங்கத்தை ஏமாத்தற கண்துடைப்பு நாடகமாய் நடத்துறதுக்கு எதுக்குச் சரியான பதில்,பொறுப்பான பேச்சு ?! இப்போ கல்லூரி வளாகத் தேர்வும் ...
மேலும் கதையை படிக்க...
கறுப்பு ஆடு
முதல் இரவில் கோவிந்தன் தன் மனைவியிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான். ""ஏன் ஒனக்கு தாமரைன்னு பேரு வைச்சாங்க?'' இதைக் கேட்ட தாமரைக்கு அச்சம் வந்தது. தயக்கத்துடன் ""ஏங்க மாமா கேக்கறீங்க?'' என்று கேட்டாள். ""ஒண்ணும் பயப்படாத; சும்மாதான் கேட்டேன்'' என்றான் கோவிந்தன். ""எங்க ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவின் வீடு
நிம்மதியைத்தேடி
காத்திருந்து காத்திருந்து
வேலை..! – ஒரு பக்க கதை
கறுப்பு ஆடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)