Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உத்தியோகஸ்தன் மனைவி

 

முன்னுரை

“அரச உத்தியோகம் புருஷ லட்சணம்” என்ற கலாச்சாரத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள். மகளுக்குத் தேடும் மாப்பிள்ளைளை அரசில்அதிகாரி , கிளார்க் அல்லது பியோனாக இருந்தாலும் சரி அந்த மாப்பிள்ளை கேட்கும் சீதனம் அதிகம். இந்த கதை அப்படி ஒரு அரச ஊழியரின் மனைவி பற்றிய கதை, உங்களைப் பல தசாப்தங்களுக்கு முன் அழைத்துச் செல்கிறது

***

“:அம்மா அக்காவுக்குக் கொழும்பு கச்செரியிலை வேலை செய்யும் ஒரு கிளாஸ் ரூ எழுத்தரைக் கலியாணம் பேசி வந்திருக்கிறது எண்டு அண்ணா சொன்னார் உண்மையா”?

“ ஓமடா ராசா . நல்ல இடதுச் சம்பந்தம். மாப்பிள்ளையின் தகப்பன் மீசாலையில் விதானையோர் . அவரும் அரசில் பல காலம் வேலை செய்தவர் . அவர்கள் கேட்கும் சீதனம் தான் கொஞ்சம் எங்களை இடிக்கிறது . மாப்பிள்ளையின் சகோதரிக்கு சீதனம் கொடுக்க தகப்பனுக்கு நன்கொடையாக ஐம்பதாயிரம் வேண்டுமாம். “

“ பிறகு என்ன கொடுக்க காசு இல்லாவிட்டால் வேறு பிஸ்னஸ்கார அல்லது விவசாயம் செய்யும் மாபிள்ளையைப் பார்க்க வேண்டியது தானே அம்மா “

“ தம்பி அரசில் வேலை செய்யும் ,மாப்பிள்ளைக்கு உத்தியோகம் உறுதியானது . கோழி மேய்தலும் கொர்நுமேந்தில் மெய்க வேண்டும் கண்டியோ நீயம் படித்து அரசில் டாக்டர், என்ஜினியர் . அக்கௌண்டன் அல்லது அதிகாரியாக வரவேண்டும். அதோடு அரசில் வேலை செய்தால் ஓய்வூதியம் வேறு கிடைக்கும் . ஒரு வருசத்தில் லீவு கிடைக்கும். அதுமட்டுமல்ல அரசால் ரயில் பயணத்துக்கு ஒரு வருசத்துக்கு குடும்பத்துக்கு இலவசமாக ரயிலில் பயணம் செய்ய மூன்ற வாரன்ட் கொடுப்பினம். ஓவர் டைம் வேலை செய்தால் அவைக்கு காசு வேறு . அங்க பார் உன் பெரியம்மாவின் புருசனை. அவர் செய்யும் உத்தியோக தொடர்புள்ள வேலைக்குப் போக டிரைவரோடு கார் கொடுத்திருக்கிறார்கள் . சில சமயம் யாரும் மந்திரி வந்தால் நீதிமன்றம். டை யோடு அவர் டிப் டொப்பாக அவர் வேலைக்குப் போகவேணுமாம் அவ அதைப் பற்றி பெருமையாக எல்லோரிடம் சொல்லித் திரிகிறா”

“அம்மா நான் தினமும் கடையப்பம் வாங்கும் தாயம்மாவின் கணவனும் அரசில் சுங்க இலாக்காவில் நல்ல உத்தியோகத்தில் இருந்தவராம். உண்மையே அம்மா “?

“ ஏன் தம்பி மற்றவர் கதை எங்களுக்கு ? அப்பா வேலைக்கு போகமுன் நீ அவிவிடம் தோசையும் இடிபப்பம் இருந்தால் வாங்கி வா. நேற்று நான் சரக்கு போட்டு வைத்த மீன் குழம்பு மிச்சம் இருக்கிறது. அதோடு கெதியிலே சாப்பிட்டு அவர் வேலைக்குப் போகட்டும். சம்பல் வாங்கி வர மறக்காதே. அவ செத்தல் மிளகாய் பொரித்து. தேங்காய் பூ போட்டு உரலில் இடித்த சம்பல் தனி ருசி ”

”அம்மா காசைத் தாவன்” என்று தாயிடம் காசை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அருகில் இருந்த கந்தர்மடத்தடியில் ஒரு குடிசையில் பலகாரம் சுட்டு விற்கும் தாயம்மாவிடம் தோசை வாங்கி வர பதின் இரண்டு வயதுள்ள சின்ன ராசா நடந்து போனான் .

தாயம்மாவின் மதிப்புக்குரிய வாடிகையாளன் சின்னராசா. தாயம்மா ஒரு காலத்தில் கல் வீட்டில் இருந்தவள். அவள் புருஷன் செல்லையா ஒரு காலத்தில் சுங்க இலாக்காவில் அதிகாரியாக வேலை . தாயம்மா சீட்டு பிடித்தல், . வட்டிக்குக் காசு கொடுத்தால் போன்ற பிற வேலைகளும் செய்து வந்தாள் . உயர்ந்த ரக சேலை உடுத்தாள். அவளின் உடலில் தங்க நகைகளுக்கு குறைவில்லை அவளுக்கு இருந்த ஒரே மகன் ரத்தினம் ஆறு வயதில் ஜன்னி கண்டு ஒரு நாள் இறந்து போனான் . அவன் இருந்திருந்தால் அவனுக்கு சின்னராசாவின் வயது இருக்கும். மகன் நினைவாக தாயம்மாவுக்கு சின்னராசுவின் மேல் ஒரு பாசம். அடிக்கடி சின்னராசுவுக்கு பழம் சோறும், பச்சடியும் மரவளிக்கிழங்குகறியும், மீன் குழம்பும் பிசைந்து குழைத்து . கடிக்க ஒரு பச்சைமிளகாயும் ஊறுகாயும் சேர்த்து ஒரு திரணை சோறோடு கொடுப்பாள. அவளின் சமையலை ரசித்து உண்பவன் சின்னராசு. அந்த ஒரு திரணை சோற்றுக்கு உபகாரமா தாயம்மாவின் சமையலுக்கு தேவவையான மளிகை சாமான்களை அவள் காசு கொடுக்க, கடையில் வாங்கிக் கொண்டு வந்த கொடுப்பான்.

சின்னராசாவைக் கண்டவுடன் தாயம்மா “வாடா ராசா எண்டை சின்னராசா . கொப்பர் கொழும்புக் கச்சேரியில் இருந்து இங்கை மாறி வந்திட்டார் எண்டு கேள்விப் பட்டனான், உண்மையே “.

“ஓம் ஆச்சி அவர் இங்கை மாறி வந்து ஒருமாதமாயிற்று”

“ஏதும் புரோமொசன் கிடைச்சே வந்தவர்: ?

“ஓம். அவர் இப்ப கச்சேரியில் ஹெட் கிளார்க் ஆச்சி”

“அப்ப நல்லா சம்பளம் கிம்பளம் கிடைக்குமே “

“ அது என்ன கிம்பளம் ஆச்சி “

“அது அரசின் ரூல்சுக்கு எதிராக எதாவது வேலை செய்து கொடுத்தால் உதவி பெற்றவர் மேசைக்குக் கீழ் கொடுக்கும் பணம்”.

”அது பற்றி எனக்குத் தெரியாது ஆச்சி . என் அப்பா கண்டிப்பானவர். அப்படி கிம்பளம் வாங்க மாட்டார் ”

“நானும் கேள்விப் பட்டனான் ராசா . அது தான் அவருக்கு புரோமோஷன் கிடைச்சிருக்கு” தாயம்மா சொன்னாள்.

“ஆச்சி முந்தி நீ கை நிறையத் தங்க வளையல் ., கழுத்தில் சங்கிலி, காதில் வைரத் தோடு எல்லாம் போட்டிருந்தியே உன் கல் வீட்டுக்கும் அவைக்கும் என்ன நடந்தது “?

“அந்த சோக கதையை உனக்குச் சொல்லாமல் வேறு யாருக்குச் சொல்வது ராசா ”?

“ சுருக்கமாக சொல்வேன் ஆச்சி நான் கேட்கிறன்”

“அது ஒரு காலம். இண்டை அவர். என்னிலை உயிர் இண்டால் உயிர் . மாதத்துக்கு ஒரு தடவை விலை உயர்ந்த பரிசுகளுடன் கொழும்பில் இருந்து வீட்டுக்கு வருவார் .கொழும்பில் சுங்க இலாக்காவில் அவர் பெரிய வேலை. சில சமயம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் பல கள்ளக் கடத்தல்களைக் கண்டு பிடித்து வெகுமதிகள் பெற்றவர். அந்த பணத்தில் அந்த காலத்தில் ஒரு கல் வீடும் எனக்கு வேண்டிய நகையும் வாங்கினான் . அது சரி என் கதையை தொடரமுன் உன்னிடம் சில கேள்விகள் நான் கேட்க வேண்டும்”.

“ஆச்சி கெதியிலை கேள், எனக்கு தெரிந்தால் சொல்லுறன்” தாயம்மா கொடுத்த கை முறுக்கைச் சுவைத்த படி சின்னராகச் சொன்னான்.

“கொம்மா இப்பவும் தமிழ் வாத்தியோ? அண்ணார் இப்பவும் அக்கண்டன் தானோ? அக்காவுக்கு இப்பவும் சயன்ஸ் ஆசிரியை வேலையோ? சித்தப்பா சிறப்பர் உத்தியோகமோ? . எல்லோரையும் நான் கேட்டதாய் மறந்திடாமல் சொல்லி”

“சொல்லுறன் சொல்லுறன், எல்லாருக்கும் சொல்லுறன் உத்தியோ காரன் மனுசி விசாரித்ததாய் சொல்லுறன். சொல்லுறன் நீ இடியப்பத்தையும் தோசையையும் சயன்ஸ் தரப் போறாய்?

“போறுடா தம்பி இடியப்பம் அவியட்டும் என்ன அவசரம் அப்படி உனக்கு ? என் மனப்பாலும் கொஞ்சம் குறைய என்றை என் முழுக் கதையைக் கேளன்டா ராசா .

“ கெதியிலை சொல்லு ஆச்சி”

“முந்தி கொழும்பில் வேலை செய்த என்டை அவருக்கு மாதம் மாதம் கைநிறையக் காசு அவருக்கு

வரும் . எனக்கு வேண்டிய மட்டும் மணியோடரில் அனுப்புவார், வந்த காசிலை என் கைகளில் ஆறு சோடி வளையல்கள், என்டை பத்து பவுன் சங்கிலி பதக்கத்தோடு. காதுகள் இரண்டிலும் பவழத் தோடுகள். மூக்கில் ஜொலிக்கும் வைர மூக்குத்தி. வந்த பணத்தில் நான் பெரிய பணக்காரி செருக்கும் எனக்கு அத்தோடை வந்தது”.

“பிறகு, பிறகு என்ன ஆச்சி நடந்தது? ஏன் இப்ப உனக்கு இந்த நிலை ”?

“ஒருநாள் அவர் ஒரு இரத்தின வியாரியை இரத்தினக் கற்கள் கடத்தல் செய்ய அனுமதித்து பெரிய தொகை கும்பளம் வாங்கி பிடிபட்டுப் போனார். அவர் மேல் வழக்கு நடந்தது . வழக்கு முடியும் மட்டும் சம்பளம் இல்லாமல் அவர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டார் என் வீடு நகைகள் எல்லா விற்று வழக்குக்குச் செலவு செய்தேன் அதே நேரம் என் கஷ்ட காலம் என் மகன் ரத்தினமும் ஜன்னி கண்டு இறந்து போனான் . என் புருஷன் வழக்கின் முடிவு தெரிய முன் அவமானம் தாங்காமல் ரயில் முன்னே குதித்து தற்கொலை செய்து கொண்டார். மானம் போன பின் வாழ்வா எண்டு

அவர் உயிரும் பேச்சு அதன் பின் என் உயிர் தனிச்சுப் பேச்சு. இடியப்பம் தோசை செய்து விற்று வாழ்வது என் தொழிலுமாயிற்று. அது தான் இப்ப அரசு உத்தியோகக் காரரைச் செய்கிற தொழிலில் ஊழல் வேண்டமென என்னிடம் வருவோiருக்கு சொல்லுவன் போவோருக்கு சொல்லுவன் என்றை அவர் விட்ட பிழையை நீங்களும் விடாதையள் எண்டு எச்சரிக்கை செய்வதில் ஏதும் பிழையோ தம்பி ராசா ? கண்களில் கண்ணீர் மல்கத் தாயமா கேட்டாள் .

“நிச்சயம் இல்லை ஆச்சி. நீ சுட்ட தோசையும் அவித் இடியப்பத்தையும் இப்ப தா. நான் வீட்டுக்குப் போக வேண்டும் என்னை அம்மா தேடுவா” என்றான் சின்னராக.

(யாவும் புனைவு) 

தொடர்புடைய சிறுகதைகள்
நானும் என் மனைவி ஜானகியும் யாழ்ப்பாணக் குடாநாட்டை பிறப்பிடமாக கொண்ட அறிவியல் பட்டதாரி அசிரியர்கள் இருவரும் புத்தளத்தில் சஹிரா க்ல்லூரியிலும் பாத்திமா மகளிர் கல்லூரியிலும் படிப்பித்தவர்கள் . புத்தளம் ம் கொழும்பில் மேற்க்கு கரையோரமாகா A3 பெரும்பாதில்யில் வடக்கே 82 மைல் ...
மேலும் கதையை படிக்க...
என் மகன் மிருகசீரீட நட்சத்திரத்தில் பிறந்தபடியால் அவனுக்கு வே, வோ, கா, கீ என்ற முதல் எழுத்தில் ஆரம்பிக்கும்பெயர் வைக்கும்படி குடும்ப சாத்திரியார் சொன்ன படியால் யோசித்து; என்ன பெயர் வைப்பது என்று யோசித்துமூளையை உடைத்துக் கொண்டேன். நான் காஞ்சியில் பிறந்த ...
மேலும் கதையை படிக்க...
லஷ்மி அமெரிக்காவில் கலிபோனியாவில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றின் பௌதிக வியல் துறையின் விண்வெளி ஆராய்ச்சிப் பகுதியில், கணனித்துறையில் , கொம்பியூட்டர் புரொகிராமராக வேலை செய்து கொண்டிருந்தாள். லஷ்மியின் பெற்றோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழமையில் ஊறிய ஐயர் சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ...
மேலும் கதையை படிக்க...
அன்று “புதினம்” என்ற வாரப் பத்திரிகைக்கு ஒரு முக்கிய கட்டுரை ஒன்றை, கோப்பியை சுவைத்தபடி எழுதிக்கொண்டிருந்தேன். புதினப் பக்திரிகைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததுக்கு காரணம் பல தர மக்களின் வாழ்வில் நடக்கும் அன்றாட பிரச்சனைகளைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளும் செய்திகளும் அதில் ...
மேலும் கதையை படிக்க...
முன்னுரை : காதல் இளம் வயதினருக்கு மட்டுமல்ல வயது வந்த முதியோருக்கும் வரலாம்.. இளம் வயதில் எதை இழந்தார்களோ அதை மரணத்துக்கு முன் எதிர்பார்ப்பதில் என்ன தவறு ? இந்த கதை சற்று வித்தியாசமான பார்வையில் எழுதப்பட்டது சோமர் என்ற சோமசுந்தரம் கொழும்பில் போலீஸ் ...
மேலும் கதையை படிக்க...
காதரின் கசாப்புக் கடை
அறிவின் கண்டுபிடிப்பு
விநோதன்
அங்கொட மனநல மருத்துவமனை
ஒரு முதியவரின் காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)