உண்மை – ஒரு பக்க கதை

 

நிர்மலா கேட்டாள்.

ஏய் வசுமதி! நேத்து உன்னை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டியாமே…’

பின்னே என்னடி… கல்யாணத்துக்கு முன்னாடியே முக்கா சொட்டை. என் அழகுக்கு திருஷ்டி பரிகாரமா?

பைத்தியக்காரி! ஆம்பளைக்கு அடையாளமே வழுக்கைதாண்டி. வழுக்கை விழுந்தவர்களுக்குத்தான் ஆண்மை அதிகம்னு என் புருஷன் அடிக்கடி சொல்லுவாரு.

போடி! என் இல்லற சாம்ராஜ்யத்தை ஆளப்போறவர் முடி துறக்காத மன்னனா இருக்கணும்.

முதலிரவு அறையில் தன் புது மனைவி வசுமதியைப் பார்த்து சொன்னான் பாலு.

வசுமதி எனக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடி டைபாய்டு வந்தப்போ தலையில உள்ள முடி எல்லாம் கொட்டிடுச்சு. ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்த பண்ணுவாங்க. ஆனா
நான் இந்த ஒரே ஒரு உண்மையைத்தான் உன்கிட்டேயிருந்து மறைச்சிட்டேன் என்ற பாலு, தலையிலிருந்த விக்கை கழற்றி கட்டிலின் மேல் வைத்தான்.

– மே 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
வாரமெல்லாம் ஆபிஸூக்கு அலைந்து மனசு வெறுத்துப் போச்சுடி. எங்காவது வெளியில் ஜாலியா போயிடு வரலாமா?’’ கேட்ட என் வாயை அவசரமாகப் பொத்தினாள் தோழி பிரதீஷா. ‘’ஏய்! சத்தம் போட்டுப் பேசாதே. வினோத்தோட காதில் விழுந்துச்சுன்னா அவ்வளவுதான். நம்மளோடு அவனும் வரேன்னு அடம் பிடிப்பான். கூட்டிப் போனால் ...
மேலும் கதையை படிக்க...
பாலுவும் வாசுவும் திருப்தியாக சாப்பிட்டு முடித்தார்கள். பில்கொண்டு வந்தார் சர்வர். பாலுவுக்கு “டிப்ஸ்’ கொடுப்பதென்றாலே பிடிக்காது. சரியான தொகையை பில் தட்டில் பாலு எடுத்து வைத்தான். வாசு ரகசியமாக பாக்கெட்டில் கை விட்டான். “என்னடா செய்யறே’ என்று பாலு கேட்டுக் கொண்டிருக்கும் போதே, சாப்பிட்ட இலையின் ...
மேலும் கதையை படிக்க...
பால்ய நண்பன் செல்வராஜைப் பார்த்து ஐந்து வருடமிருக்கும். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கல்லூரியில் எனக்கு ரொம்ப நெருக்கம்.எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவன் முகவரிச் சீட்டைக் காட்டி ஒருவரிடம் விசாரித்தேன். பக்கத்துச் சந்தைக் காட்டினார்.நல்ல வேளை செல்வராஜ் வீட்டில் இருந்தான். ஆர்வத்தோடு வந்து கைகளைப் பற்றிக் கொண்டான். ...
மேலும் கதையை படிக்க...
புதுச் செருப்பு
ஷோகேசில் இருந்த அந்த புத்தம் புதுச் செருப்பைப் பார்க்கும்போதே எனக்கு காலில் அரிப்பு எடுக்க ஆரம்பித்தது. நான் ஏன் ஷோரூமில் இருக்கும் செருப்பை விழிகள் விரிய வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? ஐ ஆம் ராஜசேகர்- மாஸ்டர்ஸ் டிகிரி. அண்ணாசாலையில் நாலு மாடிக் கட்டடத்தில் ...
மேலும் கதையை படிக்க...
மூன்றாவது அண்ணன்!
துளசி சித்ரா கைக்குழந்தையுடன் இறங்கும்போதே பஸ் நிலையத்தின் மூலையைத்தான் பார்த்தாள். அவன் அழுக்கு லுங்கியும், மாராப்புத் துணியுமாய் பெரிய இரும்புச் சட்டியில் மணலையும், கடலையையும் வறுக்கும் ஒலி, பஸ் அரு துளசி சித்ரா கைக்குழந்தையுடன் இறங்கும்போதே பஸ் நிலையத்தின் மூலையைத்தான் பார்த்தாள். அவன் ...
மேலும் கதையை படிக்க...
இந்தக் காலத்துக் குழந்தை – ஒரு பக்க கதை
சாப்பாட்டு இலை! – ஒரு பக்க கதை
புருஷ லட்சணம் – ஒரு பக்க கதை
புதுச் செருப்பு
மூன்றாவது அண்ணன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)