“இப்ப பொண்ணு பார்த்துட்டுப் போன மாப்பிள்ளைக்கு என்னம்மா குறை? நல்ல வேலை, கை நிறைய சம்பளம்?’ ஆதங்கமாய் கேட்ட சரவணனிடம்…
“அப்பா, என் ஃபிரெண்ட் சவிதா இதே கம்பெனியிலதான் வேலை பார்க்கிறா. அவ சொன்ன விவரத்திற்கும், இப்ப மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொல்லறத்துக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு! ஏதோ பொய் சொல்றாங்கப்பா…!’
ஸ்வேதா சொல்லி முடிக்கவும், விட்டுச்சென்ற செல்போனை எடுக்க வந்த மாப்பிள்ளை முரளி…
“சார், எங்க அப்பா, அம்மா சொன்ன மாதிரி அஸிஸ்டண்ட் மேனேஜரா நான் வேலை பார்க்கலை. சம்பளமும் அவங்க சொன்னதை விடக் குறைவுதான். ஏதோ பையனுக்குக் கல்யாணம் ஆகணும்கிற எண்ணத்துல அவங்க அப்படிச் சொல்லிட்டாங்க! அவங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!’ என கூறிவிட்டு செல்போனை எடுத்துச் சென்றான்.
“ஓ… மை காட்! நீ சொன்னது சரிதான் ஸ்வேதா! நல்லவேளை தப்பிச்சோம், இந்தக் கல்யாணத்தை நிறுத்திட வேண்டியதுதான்…!’
“இல்லப்பா, எனக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு!’
- நா.கி.பிரசாத் (மார்ச் 2012)
தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘ஞானோதயம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)
தன்னுடைய வாழ்க்கையில் ஏதோவொரு பெரிய சதித்திட்டம் போட்டு நடப்பது போல இருந்தது சபரிநாதனுக்கு.
அப்படி இல்லாமலா இந்த நேரம் பார்த்து மச்சக்காளை மண்டையைப் போட்டு வைப்பான்? ஒரு விதத்தில் பார்த்தால் சாவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
“நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்துட்டு நிக்கறே? ஏண்டி? உனக்கென்ன பைத்தியமா? இல்ல, கேக்கறேன். ஒங்கம்மாவை அடைச்சு வெச்சிருக்கிற இடத்துக்கே நீயும் போயிடணுமா?”
கண்களில் பெருகிய நீரை அடக்கப் பாடுபட்டாள் சாந்தி. கண்ணீரைப் பார்த்தால், `இப்போ என்ன சொல்லிட்டேன், இப்படி மாய்மாலம் ...
மேலும் கதையை படிக்க...
“அம்மா, ரொம்ப வெயிலா இருக்கு. இந்தப் பதை பதைக்கிற வெயில்ல உன்னால இப்ப பாங்க் வர முடியுமாம்மா?” எழுபது வயது அம்மாவை அக்கறையோடு கேட்டார் பரந்தாமன்.
“பரவாயில்லைடா... நான் வரேன். சீக்கிரமா பாங்க் வேலையை முடிச்சுட்டு ஆத்துக்கு திரும்பி வந்துடலாம்...”
“மறக்காம லாக்கர் கீயை ...
மேலும் கதையை படிக்க...
அன்றைக்கெல்லாம் அவனுக்கு மனமே சரியில்லை. அதற்குக் காரணம் லண்டன் வெயில் மட்டுமல்ல, வெப்பம் தொண்ணுறு டிகிரிக்கு மேற்போய் உடலிலுள்ள நீரெல்லாம் வியர்வையாகக் கசிகிறது.
அவன் மனம் ஏதோ நிம்மதியில்லாமலிருந்தது. உடம்பு துடித்தது. உள்ளத்தில் ஏதோ பாறாங்கல்லைத் தூக்கிவைத்த பாரம். அழவேண்டும் போல் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
ஜெர்மானிய அகராதியை வைத்துக்கொண்டு உம்லாவ்ட் இருக்கிற எழுத்துக்களை சொல்லிப்பழகிக் கொண்டிருந்த போதுதான் மனைவி, "உடைச்சிண்டு வாங்க. அரைச்சு விட்ட சாம்பார் பண்ணணும்" என்று கையில் தேங்காயோடு வந்து நின்றாள். நான் சலிப்புடனும் கவலையோடும் அவளைப் பார்த்தேன். உடை உடுத்துக்கொள்ள வேண்டுமென்பதால் சலிப்பு. ...
மேலும் கதையை படிக்க...