இவள் ஒரு காதம்பரி

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 14,809 
 

கடற்கரையில் காற்று வாங்கி ,மனது குளிர்ந்து செயல்படும் அருமையான மாலை நேரம்.

இந்த சென்னை பீச்சில் எவ்வளவு பேர் இருந்தாலும் ,அவரவர்களுக்கு உலவுவதற்கும் ஓடுவதற்கும் ,உட்கார்ந்து ரசிப்பதற்கும் தனிமை உண்டு.மாலையின் குளிர்ந்த அந்தப் பொழுதில் சாலை விளக்கொளிகள் சூரியன் மறைவதைப் பொறுத்து மிளிர ஆரம்பித்தன

சாலை ஓரப்படியில் அமர்ந்த நானும் நண்பர் சேகரும் “சரி போகலாமா” என்று

அப்படியே இரவு உணவு சாப்பிட நல்ல அல்லது வழக்கமான விடுதிக்குக் கிளம்பினோம்.

பொதுவாக சேகர்தான் கார் ஓட்டுவார் .நான் பெரும்பாலும் அதுவும் இரவு நேரங்களில் கார் ஓட்டுவது இல்லை.

எக்ஸ்கியுஸ் மீ !என்று ஒரு பெண் குரல் கேட்டுத் திரும்பினோம்.நல்ல நாகரீக உடையுடன் கைப் பையுடன் அவள் நின்று கொண்டிருந்தாள்.எங்களுக்குள் சற்று திகைப்பு! மற்றும் இனம் புரியாத ஒரு சலனம்!

எஸ்! பிளீஸ்!வாட் கென் ஐ டு பார் யு ! என்றேன்.

நீங்க ஜெமினி வழியாப் போனால் என்னை அந்த சிக்னலில் டிராப் பண்ண முடியுமா! என்றாள்.

இருபத்து ஐந்து வயதுப் பெண்ணை, அதுவும் ஒரு நாகரீக பெருந்தன்மையான அழகோடு இருப்பவளை மேடம்! என்று அழைக்கவும் முடியாது! அம்மணி! என்று மரியாதையாக தமிழிலும் பேச முடியாது! சற்று தயங்கினேன்!

அவளே ஆரம்பித்தாள்.!உங்க சந்தேகம் எனக்குப் புரிகிறது! மாலை நேரத்தில் அதுவும் கடற்கரை பீச்சில் தனியாக ஒரு பெண் லிப்ட் கேட்டால் யாருமே தயங்குவார்.

அப்படிதான் நீங்களும்! தவிர இவ்வளவு கார்கள் இருக்கும்போது, அழைத்தால் டாக்சி உடன் வரும் இந்த ஊரில், ஏன் நமக்கு வம்பு என்று நினைப்பார்கள்.

உடனே நான் மேடம்! கொஞ்சம் நிறுத்துங்க! அழகா ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசறீங்க!அதிலேயே உங்க தன்னடக்கம் தெரிகிறது! ஆனால் பின்னாலேயே ஒருத்தன் வந்து என்ன! உங்களுக்கு வேற வேலையே இல்லையா! லிப்ட் கேட்டா உடனே கொடுத்திடுவீங்களா! என்று வேண்டாத வம்பு விலைக்கு வாங்க நாங்க தயாராக இல்லை.

சார்!நீங்க சந்தேகப் படும்படியாகவோ அல்லது அப்படிப் பட்ட பெண் நான் இல்லை!.

ஏன் அப்பா அம்மா உடனே வரச் சொன்னார்கள். டாக்சி கூப்பிட்டாலும் நேரம் ஆகும். ஆட்டோவில் போனால் டஸ்ட் அலர்ஜி! என்னால் இந்த டிராபிக்கில் போக முடியாது! சந்தேகம் இருந்தால் ஏன் பேரன்ட்ஸ் கூப்பிடறேன் .கேளுங்க! இல்லைன்னா ஏன் வீட்டிலேயே என்னை டிராப் பண்ணுங்க. நான் சொல்லுவதை நம்பலாம் என்றாள்.

நான் பதில் பேசுவதற்குள் நண்பர் சேகர் “மேடம்! வாங்க கொண்டு விடறோம் ” என்றார். எனக்கு விருப்பமில்லை .ஆனாலும் சரி! பார்க்கலாம் என்று சம்மதித்தேன்.

அவள் பின் கதவைத் திறந்து உட்கார்ந்தாள்.அதற்குள் சேகர் என்னிடம்

சார்!நீங்களும் பின்னாலே உட்கார்ந்து பேசிண்டு வாங்க! என்றார்.

ஒரு முறைக்கு அவருக்கு பின் சீட்டில் தனியாக ஒரு பெண் உட்கார்ந்து வருவது சரிப் படவில்லை.நானும் உட்கார்ந்து பேச ஆரம்பித்தேன்.

எங்களால் ராதாக்ருஷ்ணன் சாலைக்குள்ளே கூடப் போக முடியவில்லை!

டிராபிக் ஜாம்! ஏகப்பட்ட கார்கள்! ஊர்திகள்!

என்ன பண்ணறீங்க! என்றேன்

நான் ஒரு லீடிங் கம்பனியிலே எச்.ஆர் ஆக இருக்கேன்.மும்பையிலிருந்து சென்னை வந்திருக்கேன். என் பெயர் காதம்பரி, என்றாள்

நீங்க! என்றாள்.

என் பெயர் சீனிவாஸ்! ஓய்வு பெற்ற அரசு அதிகாரி! இவர் பெயர் சேகர். பிசினஸ்மான்! என்றேன்.

கார் உட்லண்ட்ஸ் மேம்பாலம் தாண்டிக் கொண்டிருந்தது.அதற்குள் அவளுக்கு போன்!

எங்கே இருக்கே! சீக்கிரம் வா! என்று கேட்டது.

அம்மா!கார்லே இருக்கேன்.!வந்துடறேன்! என்றாள். பிறகு என்னிடம் சார்! என்னெ வீட்டிலே டிராப் பண்ண முடியுமா! நுங்கம்பாக்கம்தான்! உங்களுக்கு சிரமம் கொடுப்பதற்கு மன்னிச்க்குங்க! என்றாள்.

பரவா இல்லை அம்மா! அறிமுகம் ஆவதற்கு முன்னால்தான் குழப்பம் எல்லாம். இப்போ நாங்க தெளிவா இருக்கோம்.கொண்டு விடுகிறோம் கவலைப்படாதே! என்றேன்.

அவள் பிளாட் நல்ல அழகான பெரிய இடத்தில இருந்தது. இறங்கினாள்.

சார்! எனக்காக தயவு செய்து என் பெற்றோர்களைப் பார்த்து விட்டுப் போவீர்களா! எனக்கு சந்தோஷமா இருக்கும் !என்று தயங்கினாள்.

எனக்கு முன் நண்பர் சேகர ,வாங்க சார்! போய்ப் பார்த்துட்டு வரலாம்! என்றார்.

காரை விசிட்டிங் பார்க்கில் போட்டு விட்டு போனோம்.

அவள் அழகுக்கு ஏற்ற அம்மாவும் அப்பாவும்.! நன்றாகவே இருந்தனர்.

பரி! என்னால் இனிமே ஹோல்ட் பண்ண முடியாது! நீயே அவனிடம் பேசு! என்றாள் அவள் அம்மா படபடப்புடன் !

சரி அம்மா! என்று போனைக் கையில் எடுத்துக் கொண்டு ,அம்மா அப்பாவிடம் சைகையால் எங்களை அறிமுகம் செய்துவிட்டு ,என்னிடம் போனைக் காட்டி பர்மிசன் வாங்கிக் கொண்டு வேறு அறைக்குப் போய்விட்டாள்

அவள் அம்மாவும் வணக்கம் சொல்லிவிட்டு ப்ரிட்ஜைத் திறந்து எலுமிச்சம்பழ ஜூஸ் இரண்டு கிளாசில் விட்டுக் கொண்டு வந்தாள

உட்காருங்கள் ! இது வீட்டில் செய்தது !என்று எங்களிடம் கொடுத்துவிட்டு ,நீங்க காதம்பரி ஆபீச்காரர்களா ! என்றாள் .

இல்லை .தெரிஞ்சவர்கள் என்றேன்.

அவள் அப்பா கொஞ்சம் சோகமாகப் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அம்மா முகத்திலும் தெம்பில்லை! எங்களுக்கே பாவமாக இருந்தது

அதற்குள் காதம்பரி வந்து விட்டாள்..

சாரி சார்! உங்களை அறிமுகம் கூட செய்து வைக்காமல் போய்விட்டேன் .அவசரம் .தயவு செய்து மன்னிச்க்குங்க !என்றாள் .

பாவம்!அவள் முகத்திலும் சோகம் இருந்தது. நாங்கள் கிளம்பினோம். காதம்பரி எங்களை வழி அனுப்ப வந்தாள்.

காதம்பரி! நீ தப்பா நினைக்கலேன்னா எனக்குத் தோன்றியதை சொல்லுகிறேன்.நம்முடைய இந்த சந்திப்பு இன்னும் தொடரும் என்று நினைக்கிறேன்.உங்கள் மூவர் முகத்திலும் எதோ ஒரு கவலை படர்ந்த சோகம் உள்ளது.சும்மா ஒரு மணி நேரம் பழகின எங்களுக்குத் தெரியணும் என்பது அவசியம் இல்லை ! ஆனாலும் என் வயதான மனசு உங்களுக்கு உதவி தேவையானால் செய்யத் தூண்டுகிறது! உரிமை எடுத்துக் கொள்வதற்கு மன்னிச்க்கோ! நாங்க வறோம்!.இந்தா எங்க கார்டு! உனக்குத் தேவையானால் ,விரும்பினால் கூப்பிடு ! என்றேன்.

கார் கதவைச் சாத்துமுன் அங்கிள்! கடவுள் செயல் என்பது இதுதான்!

அவசியம் உங்கள் உதவி தேவைப் படும் .மறுபடியும் நிச்சயம் உங்களைக் கூப்பிடுவேன் .இப்போ அவசரமா எனக்கு வேலை இருக்கு!.சேகர் சார்! தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப் அண்ட் டேக்கிங் கேர் ஆப் மீ ! மீண்டும் சந்திப்போம்! என்று சேகரிடம் சொல்லிக் கொண்டாள்.

நாங்கள் அங்கேயிருந்து பக்கத்தில் உள்ள பெரிய ஹோட்டலுக்குப் போனோம்.

சீனிவாஸ் சார்! இந்தப் பொண்ணு நிச்சயம் நம்மளை சீக்கிரம் கூப்பிடுவா !முக்கியமா உங்க உதவி நிச்சயம் தேவையா இருக்கும்.பாவம் ! நல்ல பொண்ணு ! என்று சேகர் வருத்தப் பட்டுக் கொண்டார்.

வீட்டுக்குப் போனோம்.

எங்களுக்கே ஆச்சர்யம்! எதோ காற்று வாங்கப் போனோம் . இப்படி ஒரு கதையே ஆரம்பிச்சிருக்கு என்று!

அன்று இரவு நான் தூங்கவே இல்லை! பத்து மணி இருக்கும்.சேகர் என்னைக் கூப்பிட்டு தூங்கிடீர்களா! எனக்கு தூக்கமே வரலே !என்றார்.

மறு நாள்.சண்டே !என் மனைவியும் வீட்டில் இருந்தாள்.லாயராக இருந்தால் கூட ஞாயிறு அன்று அந்தப் பக்கமே திரும்பாமல் ரெஸ்ட் எடுப்பவள்.

காலை சிற்றுண்டி இன்று சற்று தாமதமாகும் என்பதால் நண்பர்களுடன் அரட்டை அடிக்கப் போயிட்டேன்.ஒன்பது மணிக்கு உள்ளே வந்தேன். மனைவி காபி மட்டும் கொண்டு வந்து ,நேற்று எங்கே போய் இருந்தீங்க! என்றாள்.

அட!நீ எதோ கிளப் மீட்டிங் சொல்லிட்டு மத்தியானமே போயிட்டே! நானும் சேகரும் பீச்க்குப் போனோம் என்றேன்.

அப்படியா! அந்தப் பொண்ணு காதம்பரி கூப்பிட்டா! உங்க போன்லே கூப்பிட்டா!.

அரட்டைக் கச்சேரியிலே போய்ட்டா உங்களுக்கு உலகமே தெரியாது! நான் பேசினேன். நான் அவர் மனைவிதான்.என்றேன்.

இல்லை! அவர் கிட்டே பேசணுமே ! என்று படபடத்தாள்.

பரவாயில்லை!சொல்லு! எனி பிராப்ளம்! நான் ஒரு லாயர்தான்.என்கிட்டே சொல்ல விருப்பமானால் சொல்லு !என்றேன்.

மேடம்!ரொம்ப தேங்க்ஸ் ! உங்களுக்கு சௌகரியப்பட்டா நீங்களும் சாரும் எனக்குப் பேச அவகாசம் தருவீர்களா ! என் பிராப்ளம் நேர தான் சொல்லணும்.நான் பேசும்போது என் அப்பா அம்மாவும் கூட இருந்தா நல்லது.என்னால் உங்களுக்கு சிரமம்.மன நிம்மதியே இல்லை ! என்று சொன்னாள்.

அவள் பேசும் படபடப்பில் எனக்கு உடனே அவளுக்கு உதவி செய்யணும் தோன்றியது

நான்தான் உங்களோடு அவள் வீட்டுக்கு வரேன் என்று சொன்னேன்.

பிரேக்பாஸ்ட் ஸ்கிப் பண்ணுங்க!கொஞ்ச நேரத்தில் சாப்பாடு சாப்பிட்டுப் போலாம்.என்றாள் என் மனைவி பார்வதி.

டிரைவருக்குப் போன் பண்ணிட்டு ,சாப்பாடு முடிந்ததும் காதம்பரி வீட்டுக்குப் போனோம்.

காதம்பரி ,அப்பா அம்மாவுடன் அறிமுக வார்த்தைகள் பேசிவிட்டு ,என் மனைவி

மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

காதம்பரி! எதுக்காக எங்களை வரவழைச்சே ! உன்னுடைய ,இல்லை உங்களுடைய பிராப்ளம் உங்க குடும்பத்திலே தீர்க்க முடியாதா!

நேத்துதான் சாரைப் பார்திருக்கே!சட்டென்று இன்னைக்கி எங்களைக் கூப்பிட்டு

உன் பர்சனல் விஷயம் பற்றிப் பேசறே! தெரிஞ்சுக்கலாமா!

ஆன்டி! சாரி மேடம் என்று காதம்பரி ஆரம்பித்தாள்.

பரவாயில்லே! ஆன்டி என்றே கூப்பிடு! மேல சொல்லு என்றாள் என் மனைவி.

நேற்று பீச்சிலே இவர்கள் கார் அருகில் வரும்போதுதான் என் அம்மா போன் வந்தது.

திரும்பி பக்கத்தில் பார்க்கும் போது சாரும் ,சேகர் சாரும் இருந்தார்கள்.என் அப்பா போல வயசா இருந்ததினாலே உடனே உதவி கேட்கத் தோணிச்சு! கேட்டேன்! அது எனக்கு கடவுள் செயல்தான் என்று சொல்லணும்.என்றாள் காதம்பரி.

தென்க் யு காதம்பரி! உனக்கு எங்க மேல உள்ள நம்பிக்கைக்கு ! மேலே சொல்லு !என்றாள் பார்வதி.

ஆன்டி! நான் ஒரு பெரிய கார்பரேட் கம்பனியில் இரண்டரை வருஷமாக ஒர்க் பண்ணறேன்.டிரைனிங் பீரியட்லேயே எனக்கு நல்ல பெயர் வந்து பிரமோஷனும் வாங்கினேன்.அடிக்கடி கான்பிரன்ஸ் அட்டெண்ட் பண்ண உள்ளூர் வெளியூர் போக வேண்டி இருக்கும்.ஆபீஸ்லே எனக்கு சீனியரும் நண்பருமாய் சுந்தர் கூடத்தான் பிராஜெக்ட் ஒர்க் செய்ய வேண்டி இருக்கும் .சொல்லப் போனா என்னுடைய பிரமோஷன் வேலைத்திறமை முக்கிய காரணமே சுந்தர் தான்.

காதம்பரி! வேலை நேரம்போக உங்க ரெண்டு பேரும் திக் பிரண்ட்ஸ் ஆக இருக்க நிறைய சான்ஸ் இருந்தது.அப்புறம் என்ன! என்றாள் பார்வதி.

ஆன்டி! என் அப்பா அம்மா சென்னையில்தான் இருந்தாங்க !நான் மும்பையில் தனியாக இருந்தேன்.

ஒரு முறை கம்பனி எங்களை ஜெர்மனிக்கு அனுப்பியது.அங்கு ஒரு வாரத்துக்கு மேல் தங்கினோம்.நடுவில் எனக்கு உடல் நிலை சரி இல்லாமல் போச்சு.சுந்தர்தான் கூட இருந்து கவனித்து உதவிகள் செய்தான்.ஓரிரு நாட்கள் சுற்றி உள்ள ஊர்களுக்கு கம்பனி அரேஞ் பண்ணின டூரில் போய் வந்தோம்.

அன்றைய சூழ் நிலையில் ,சுந்தரின் சுபாவமும் பழகும் விதமும் எனக்கு சரியென்று பட்டது.

கிளம்பு முன் சுந்தர் என்னை ஏர்போர்டில் பிரபோஸ் செய்த போது நான் மறுக்கவில்லைமனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டேன்.

காதம்பரி என்று பார்வதி அவளை ஏறிட்டுப் பார்த்து கேள்வியை ஆரம்பிக்குமுன்

ஆன்டி! எல்லாருக்கும் வருகிற சந்தேகம் உங்களுக்கும் வரும்.அதற்க்கு பதில் சொல்லுகிறேன்.

சுந்தரிடம் நெருங்கிப் பழகினேனே தவிர ,எனக்குள் உள்ள கட்டுப்பாடு நான் எப்பொழுதும் மீறியதில்லை!

பார்வதி சொன்னாள்.’காதம்பரி!எனக்கு இந்த மாதிரி சந்தேகமெல்லாம் வராது.வரவும் கூடாது.நானே என் கிளையண்ட்ஸ் கிட்டே இது போல சந்தேகங்களை தீர்த்து வைத்திருக் கிறேன்.இப்படிப் பட்ட சந்தேகங்கள்,மிகவும் கீழ்த்தரமான எண்ணங்கள் யாருக்கும் வரக் கூடாது ! அப்படிப் பட்டவரிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

ரொம்ப தேங்க்ஸ் ஆன்டி!

அதற்கப்புறம் நான் சென்னைக்கு அப்பா அம்மாவைப் பார்க்க வந்தேன்.இந்த பிரபோசல் பற்றியும் பேசலாம் என்று வந்தேன்.ஆனால் இங்கே எனக்குஒருஷாகிங் நியுஸ் காத்துக் கொண்டிருந்தது.

அது என் அப்பவே சொல்லுவார்.

பெரியவர் சந்தான கிருஷ்ணன் முதன் முறையாகப் பேச ஆரம்பித்தார்

மேடம்! எனக்கு இவ ஒருத்திதான் பொண்ணு.!வேற குழந்தைகள் கிடையாது.எனக்கு ரெண்டு சிஸ்டேர்ஸ் .மூத்த சிஸ்டர் பையன் கணேஷுக்கு நிச்சயம் பண்ணலாம் என்று என் ரிலேஷன் எல்லாம் முடிவு பண்ணிட்டாங்க.நானும் காதம்பரி சென்னை வந்ததும் சொல்லலாம் என்று இருந்தேன்.

சார்!தப்பா நினைக் காதீங்க!இந்தக் காலத்துலே பெண் சம்மதம் என்பது ரொம்ப முக்கியம்.ரெண்டாவது பயலாஜிகலா பிளட் ரிலேஷன் நல்லதுஇல்லை!உங்களுக்கு தெரியும்.எப்படி முடிவு பண்ணினீங்க! என்றாள் பார்வதி

மேடம்!இவளுக்கு கணேஷ் ரொம்ப நாளாப் பிடிக்கும்.என் கிட்டேயேசொல்லிஇருக்கா!

இவளுக்கு மும்பையிலே இப்படி ஒரு லவ் சமாசாரம் இருக்கு என்பது எங்களுக்குத் தெரியாது.என்றார் பெரியவர்.

என்ன காதம்பரி!அப்பா சொல்வது கரெக்டா!

அது சரி!இது உங்க பாமிலி மேட்டர் !நாங்க என்ன செய்யணும் இதிலே! என்றாள் பார்வதி.

ஆன்டி!உங்க உதவி இனிமேல்தான் இருக்கு! நான் எங்க அப்பா அம்மா ,அத்தையிடம் கொஞ்சம் டயம் கேட்டு மும்பை பொய் விட்டேன்.

ஒரு வாரமா சுந்தரைப் பார்க்கவே இல்லை!ஏதோ ஆபீஸ் டூர் என்று பொய் விட்டான்.

வந்து பேசலாம் என்று இருந்தால் அப்பா அம்மாவிடம் இருந்து போன் வந்தது.

வரச்சொல்லி வந்ததால் சென்னை வந்தேன்.

வந்தா அவங்க வீட்டைக் காலி பண்ணி இந்த பிளாட்டுக்கு வந்து விட்டார்கள் .

என்ன அம்மா என்ன ஆச்சு! என்றேன்.

அதை ஏன் கேட்கறே!உன் அத்தை ரெண்டு பேரும் அந்த வீட்டில் பங்கு வேண்டுமாம். உங்க தாத்தா சொத்துக்களுக்கு ஈடாக உங்க அப்பா எவ்வளவோ செய்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் கேட்பதாக இல்லை!தவிர நீ கணேஷ் கல்யாண விஷயத்தில் பதில் சொல்லாதது ஒரு பெரிய விஷயமாகப் படுகிறது.என்றாள் அம்மா.

அப்பொழுதுதான் எனக்குப் புரிய ஆரம்பித்தது.கேவலம் பணத்திற்காகவும் சொந்த உறவு மீறி அப்பா அம்மாவுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.

கணேஷ் பேரில் உள்ள என்னுடைய அபிமானம் ,அன்பு எனக்குக் குறைத்து விட்டது.

ஒரு சாதாரண விருப்பு வெறுப்புள்ள சராசரி மனிதனாகத் தோன்றினான்.நாளை ஒருவேளை ஏன் மனதில் இவனுக்கு இடம் கொடுத்திருந்தால் கூட ,இது போல மனித உள்ளத்திடம் எப்படி ஒரு அன்பும் ஆதரவும் எதிர் பார்க்க முடியும்! என்றாள்.

அப்பா அம்மாவிடம் வீடு,சொத்து பற்றிக் கவலை வேண்டாம்.நான் மும்பை போய்.மறுபடியும் வரும்போது ஒரு தீர்மானத்துடன் வருவேன்.கவலைப் படாம இருங்க!

இல்லை!கொஞ்ச நாள் ஏன் கூட மும்பையில் இருக்கிறீர்களா ! என்று கேட்டேன்.

இல்லை அம்மா!நீ போய் விட்டு வா! முடிஞ்சா சீக்கிரம் வரப் பாரு! என்றார்கள்.

ஆனால் அங்கே போனால் விஷயம் வேற மாதிரி இருந்தது!

காதம்பரி அவளை அறியாமல் பழைய நினைவில் போனாள்.

ஊருக்குப் போனதும் சுந்தரிடம் முன்னிருந்த உற்சாகமும் ,கலகலப்பும் குறைந்திருந்தது.

ஒரு வாரம் கழித்து ,என்னை மதியம் லஞ்சுக்கு சுந்தர் வரச் சொன்னான்.

என்ன சுந்தர்!வந்து பத்து நாளா எதுவும் பேசலையே ! வாட் ஈஸ் யுவர் பிளான்.!என்றாள்

காதம்பரி!ஊருக்குப் போனாயே ! அங்கே ஏதாகிலும் பிராப்ளமா ! என்றான்.

ஆமாம் சுந்தர்! அதற்குப் பிறகு உன்னை நான் சந்திக்கவே இல்லையே! நீயும் ஆபீஸ் டூர் என்று போய்க் கொண்டிருந்ததால் இப்போதான் மீட் பண்றோம்.

ஆமாம்! உனக்கெப்படி விஷயம் தெரியும்! என்றாள்.

டெல்லியில் போன வாரம் உன் ரிலேடிவ் கணேஷ் என்னை ஹோட்டலில் சந்தித்தான்.

உனக்கு சின்ன வயசிலிருந்தே அவனிடம் ரொம்பப் பிரியமாமே!ரொம்ப நெருங்கிப் பழகுவோம் என்றும் சொன்னான்.

சுந்தர்!வாட் டு யு மீன்! உன் பேச்சிலே வேற மாதிரி தொனிக்கிதே!

சேச்சே காதம்பரி ! அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை! பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்!

நடந்துபோன விஷயமெல்லாம் ஆராயக் கூடாது! அது ஏன் ப்ரின்சிபில்! அவன் சொன்னதை உன்னிடம் சொன்னேன் என்றான்.

காதம்பரிக்குக் கோபமும் ஏமாற்றமும் முகத்தில் மாறி மாறிப் பொங்கின!

அவள் மிக நல்ல பண்புள்ள பெண் !தன்னைக் கண்ட்ரோல் செய்து கொண்டாள்.

சுந்தர்!உண்மையான வாழ்க்கைத் தத்துவங்கள் இப்போதான் எனக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது! ஐ ஆம் சாரி ! அய் ஹாவ் டு தின்க் அபவுட் எகைன்!

நம்ம மேரேஜ் பற்றி மேற்க் கொண்டு என்னால் நினைக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை! என்னை மன்னிச்சுடு !

என்ன காதம்பரி ! நான் தப்பா ஒண்ணும் சொல்லலியே!அவன் சொன்னதை நான் சொன்னேன் என்றான்.

மிஸ்டர் சுந்தர்! கணேஷ் என் அத்தை பையன்தான்! அவன் சொன்னதை நீங்க சொன்னதில் தப்பில்லை!

ஆனால் முன்னாலே நடந்து போன விஷயம் மறந்திடணும் என்று சொன்னீர்களே !அது என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது! அப்போ ஒரு ஆவரேஜ் நினைப்போடு நீங்க வாழ்க்கையும் வரும் மனைவியையும் பற்றி நினைக்கிறீர்கள். எடை போடுகிறீர்கள் .என்னிடம் ஒரு வீக்னெஸ் இருந்தால் நீங்கள் பேசுவதற்கு தயங்கி இருப்பேன்.

நான் அப்படிப் பட்ட பெண் அல்ல!

அவன் சொன்னாலும் அதை மறுக்கும் யோசனையே உங்களுக்கு வரவே இல்லை!

அந்த எண்ணமே வரவில்லை! சாதரணமாக என்னிடம் பதில் எதிர் பார்க்கிறீர்கள்!

அய் ஆம் சாரி! இதற்க்கு மேல் இந்தப் பேச்சைத் தொடர விரும்பவில்லை!

சுந்தருக்கு இவள் இப்படிப் பேசுவாள் என்று எதிர் பார்க்கத் தோன்ற வில்லை!

பண்புள்ள ஒரு பெண் உள்ளத்தை அறியும் திறன் அவனிடம் இல்லை.பதில் சொல்லத் தடுமாறினான்.

காதம்பரி ! என்னை மன்னிச்சுடு !அடுத்து என்னதான் சொல்ல வரே!

மிஸ்டர் சுந்தர் !என்னுடைய நல்ல நேரம்! உங்க உள் மனது எனக்கு முன்னாலேயே தெரிந்தது!இதுவே கல்யாணத்திற்கு அப்புறம் தெரிந்திருந்தால் நான் வாழ்க்கை முழுவதும் கஷ்டப் படவேண்டி இருக்கும்.

என் போன்றவருக்கு உள் மனது என்ற ஒன்று நல்ல பண்போடு நன்றாக செயல் படுகிறது. அதற்க்கு விருப்பு,வெறுப்பு ,தன்னடக்கம் எல்லாம் உண்டு.அதை யாரும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை !என்று மிகவும் நிதானமாகப் பேசினாள்.

சாரி காதம்பரி ! இம்மாதிரி தவறுகள் இனிமேல் நடக்காது !பிளீஸ் .தின்க் எகைன் !என்றான் சுந்தர் .

சுந்தர்! என்னை மன்னிச்சிடுங்க !நான் உங்களோட குட் பிரண்ட்! நீங்க எனக்கு நிறைய நல்லது பண்ணி இருக்கீங்க !ஆனால் வாழ்நாள் முழுவதும் உங்களோடு தொடர விருப்பமில்லை.தயவு செய்து மன்னிச்சிடுங்க ! நாளை ஆபிசில் பார்க்கலாம் .என்று சொல்லிவிட்டு சட்டென்று ஹோட்டலை விட்டு வெளியே வந்து வீட்டுக்குப் போய் விட்டாள்.

என்ன காதம்பரி!திடீரென மௌனமாயிட்டே! நடந்ததை நினைச்சுப் பாத்தியா! என்றாள் பார்வதி.

மன்னிச்சுங்க ஆன்டி! கொஞ்சம் நடந்ததை நினைச்சுப் பார்த்தேன்.

இந்த கணேஷ் ,சுந்தரிடம் போய் எதோ தப்பாப் பேசி இருக்கான்.என்னைப் பற்றி !

சுந்தரும் அதை ஆராயாம ,ஒரு அவரேஜ் மனுஷனா என்னிடம் சந்தேகக் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.

அத்துடன் என்திருமணப் பேச்சை ஒரு நம்பிக்கை இல்லாத மனிதரிடம் தொடர விரும்பவில்லை . ஆபீசிலும் அவனுடன் தொடர்ந்து வேலை பார்ப்பது கஷ்டமாய் விட்டது.சென்னையில் வேலை காலி ஆனதும் அப்பா அம்மா காரணம் சொல்லி டிரான்ஸ்வர் வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

இங்கு வந்தாலும் இந்த சுந்தரும் கணேஷும் மெண்டல் டார்ச்சர் கொடுக்கிறார்கள் .

அம்மாவுக்கு அத்தைகளிடம் பேச முடியவில்லை.

ஆன்டி !நீங்களும் அங்கிளும் இதற்க்கு ஒரு நல்ல முடிவு சொல்லணும்.எங்க சொந்தக்காரங்க எல்லாரும் இந்த கணேஷ் விவகாரத்தால் ஒதுங்கி விடுகிறார்கள்.

என் அதிர்ஷ்டம் ! கடவுள் செயல் !நேற்று அங்கிளைப் பார்த்தது.அதைவிட அதிர்ஷ்டம் ஆன்டி நீங்க வந்தது!அதுவும் ஒரு பெரிய வக்கீலாக !

பார்வதி பேசினாள். காதம்பரி! நான் மேல் கொண்டு தொடரு முன் கடைசியாக ஒரு கேள்வி ! இந்த கணேஷ் அல்லது சுந்தர் பற்றி மறுபடியும் ஒரு முடிவுக்கு வருவாயா

அல்லது உன் கடைசி அபிபிராயம் என்ன !

ஆன்டி! ரெண்டு பேருமே மேலெழுந்த வாரியாக தங்கள் சுக நலன்களைப் பார்க்கும் நபர்கள்.ஒரு பெண்ணின் உள்மனது ,அவளுடைய பண்பு ,விருப்பம் பற்றி முக்கியத்வம் கொடுப்பவர்களாகத் தெரியவில்லை!எனைப் புரிந்து ஒரு நல்ல பண்போடு வரும் பையன்தான் எனக்குத் தேவை.அதற்க்கு எத்தனை நாளானாலும் பரவாஇல்லை .

காதம்பரி !நானும் உன்னைப் போல பெண்ணாக இருந்து,தனியே படித்து,வேலை பார்த்து ,சமுக நடப்புகளை எதிர் கொண்டு ,பின் குடும்பத் தலைவியாக செயல் பட்டு வருபவள்தான்.உன் போல எண்ணங்கள் எனக்கும் உண்டு.என்னுடைய அதிர்ஷ்டம் என் வாழ்க்கையில் புரிந்து கொள்ளும் நல்ல மனிதராக இவர் வந்தார்.என்று என்னைக் காண்பித்தாள் பார்வதி .

ஆன்டி! அங்கே பாருங்க அங்கிளை ! அய்யோ! எப்படி வெட்கப் படறார் பாருங்க!

என காதம்பரி என்னைக் காட்டி சொன்னதும் எல்லோரும் விழுந்து சிரித்தனர்.

சரி .காதம்பரி! உன் முடிவு எனக்குப் பிடிச்சு இருக்கு!

இந்த சொத்து ,வீடு விவகாரம் நான் ஒரு லாயராக இருந்து தீர்த்து வைக்கிறேன்.

உனக்கு உன் மனம் போல ஒரு பையன் சீக்கிரம் வருவான்.

சார்!சந்தான கிருஷ்ணன் !உங்க பிராபர்டி டீடைல்ஸ் பற்றி நாளையே பேசலாம்.நான் கண்டிப்பாக தீர்த்து வைக்கிறேன். என்றாள் பார்வதி.

ஆன்டி! இன்னொரு விஷயம்!என்னால் இதே ஆபீசில் தொடர விருப்பமில்லை.

அடிக்கடி சுந்தர் ஆபீஸ் வேலையாப் பேசினாலும் கடைசியில் பர்சனலில் வந்து

தொந்தரவு பண்ணறான் .என் முடிவு மாறாது.என்றாள் காதம்பரி.

கவலை படாதே காதம்பரி !உன்னுடைய வருங்காலத்துக்கு எங்களோட ஹெல்ப்

நிச்சயம் உண்டு.நீ வேலை மாறுவது நல்லதுதான்.என்னோட பையனும் பெண்ணும் வெளி நாட்டிலே இருக்காங்க !இப்போதைக்கு நீதான் எங்க பெண் ! போதுமா! என்றாள் பார்வதி.

அய்யோ !ஆன்டி! என்று ஓடி வந்து அப்படியே பார்வதியை இருக்கக் கட்டிக் கொண்டு கண்ணீர் பெருக்கினாள் காதம்பரி .நீங்க தான் என் உண்மையான ஆன்டி! என்று இன்னும் இறுக்கிக் கொண்டாள்.

எதற்கும் கலங்காத பார்வதியும் கண் கலங்கினாள் பார்வதி ,அந்த பரிவான உறவினால் .

காதம்பரி! என் பொண்ணு பத்மா என்னைக் கட்டிக் கொண்டு கொஞ்சி அழும் சுகம் இப்போது எனக்கு இங்கே கிடைச்சிருக்கு.என்று மாறி மாறி கதம்பரியை ஒரு தாயின் அன்பான பாசத்தோடு முத்தமிட்டுக் கொண்டிருந்தாள் பார்வதி.

நாங்கள் அனைவருமே பாசப் பிணைப்பில் கலங்கினோம்.

சிறிது நாட்கள் சென்றன .

பார்வதி மேடம் சட்டப்படி செய்ய வேண்டிய சொத்துக்களின் முறைப்படி செய்து வந்தார்கள்.காதம்பரியின் அத்தைக்கு ,அவள் பையனுக்கு மணமானால்,சொத்துரிமை இன்னும் அதிகமாகும் என இருந்ததே தவிர ,காதம்பரியின் நலன்களில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.

பார்வதி மேடமும் அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை.

நடுவில் சேகர் சாருடைய மகள் கல்பனா திருமணம் வந்தது. காதம்பரி குடும்பத்தினருக்குசேகர் மனைவியுடன் சென்று அவர்களை அழைத்து விட்டு வந்தார்.

திருமணம் நடந்து கொண்டிருந்தது.நானும் பார்வதியும் ,காதம்பரி அப்பா அம்மா வோடு வருவதைப் பார்த்தோம்.அவளே எங்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டாள் .

ஆன்டி!அங்கிள்! எப்படி இருக்கீங்க !

காதம்பரி!உன் அப்பா அம்மாவைதான் மீட் பண்றோம்.உன்னைப் பார்கறதே இல்லை!

ஆன்டி! நான்தான் போன்லே அடிக்கடி பேசறேனே உங்ககிட்டே !என்று சொல்லிக்

கொண்டு இருக்கும்போதே ஷிவா! எப்படி இருக்கே ! என்று மிடுக்கான ஒரு

இளைங்கனைப் பார்த்து கை அசைத்தாள்.

ஷிவ் நாராயண் ஆச்சர்யத்துடன் அட! நம்ப காதம்பரி! நீ எங்கே எங்க வீட்டுக்

கல்யாணத்திலே காதம்பரி! என்றான்.

பிறகு என்னைப் பார்த்து அங்கிள் !ஆன்டி ! சௌக்கியமா ! முன்னாலே வந்து

உட்காருங்க ! ஆமாம் .இந்த வாலுப் பொண்ணு உங்க சொந்தமா ! என்று கதம்பரியைக் காண்பித்துக் கேட்டான்.

ஷிவா! காதம்பரி என்னோடதான் வந்திருக்கா! அவ என்னோட நீஸ் தான்! என்றாள் பார்வதி .இதுதான் அவ அப்பா அம்மா என்றாள்.

காதம்பரி !ஷிவா ,சேகர் சாரோட பையன்.அவன் தங்கைக்குதான் கல்யாணம்.

அப்படியா ஆன்டி! இன்விடேஷன்லே ஷிவ் நாராயண் .யுஎஸ்ஏ என்று பேர்

பார்த்த போதே சந்தேகப் பட்டேன்.

ஆனா இப்போ பார்த்தப்போ ஷாக் ஆகிட்டேன் .இவன் காலேஜிலே ரெண்டு வருஷம் சீனியர்!எனக்கு நல்ல பிரண்டு! என்றாள் காதம்பரி.

எங்களுக்கு ஒரே ஆச்சர்யம்!

உலகம் எவ்வளவு சின்னது பார்தீங்களா! என்றாள் பார்வதி.

திரும்பி ஷிவா வந்தான் , ஆன்டி ,அங்கிள் நீங்க எல்லோரும் முன்னாலே போய் உட்காருங்க ஏ! வாலு! வா என்னோட ! நம்ம பசங்க எல்லாரும் வந்திக்காங்க !பழைய கதை பேசணும் .என்று காதம்பரியை கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போய் விட்டான்.

நாங்கள் நால்வரும் ஆச்சர்யம் தாங்காமல் முன் வரிசைக்குப் போனோம்.அதற்குள் சேகரும் மனைவியோடு வந்து விட்டார்.

ஸ்ரீநிவாஸ் ! காதம்பரி எங்கே! உங்களோடு இருந்தாளே! என்றார்.

சேகர்! அங்க பாருங்க! என்று அவள் ஷிவா மற்றும் நண்பர்களோடு உரக்க சிரிச்சுப் பேசிக் கொண்டிருப்பதை காண்பித்தேன்.

அவ நம்ப ஷிவா வோட காலேஜ் மேட்! என்றேன்.

சேகருக்கு நம்ப முடியவில்லை! சார் வேர்ல்ட் ஈஸ் ஸ்மால் ! என்று சிரித்தார்.

அதற்குள் காதம்பரியின் அப்பா அம்மா வுடன் கொஞ்சம் சீரியஸ் ஆகப் பேசிக்

கொண்டிருந்தாள் பார்வதி.

கல்யாணம் முடிந்து மதிய விருந்துக்கு எல்லோரும் தயார் ஆனார்கள்.காதம்பரியைக் காணவே இல்லை!

விடை பெரும் நேரமும் வந்தது.சேகர் சாரும் லக்ஷ்மி மேடமும் இவர்களிடம் வந்தார்கள்.

உடனே பார்வதி அவர்கள் பக்கம் திரும்பி , மிஸ்டர் அண்டு மிசஸ் சேகர் ,உங்களோட இன்னொரு கல்யாணம் பற்றிப் பேசலாமா !என்றாள்.

நீங்க சொல்ல வேண்டாம் பார்வதி மேடம்.! நாங்களே அந்த ஜோடியைப் பார்த்து

ரசித்துக் கொண்டிருந்தோம் என்றார்கள் சேகரும் அவர் மனைவி லக்ஷ்மியும்.

அங்கே பாருங்க!அந்த ரெண்டு பேரும் வந்தவங்களை கவனித்து உபசாரம் பண்ணுவதை ! என்று ஷிவாவையும் காதம்பரியையும் காண்பித்தார்

நாங்க ரெடி ! காதம்பரியின் அப்பா அம்மா தான் சம்மதிக்கணும் .என்றார் சேகர்.சேகர் சார்! காதம்பரியின் இந்த அங்கிளும் ஆன்டியும் சம்மதிச்சாப் போரும்.காதம்பரிஅவங்க பொண்ணு.! இன்னைக்கு கவலை இல்லாமே அவ சிரிச்சுண்டு வரா என்றால்அந்தப் பெருமை அவங்களைத்தான் சேரும்.

தவிர சேகர் சார்! அன்னைக்கு கவலையோட அவள் தவிச்சு தனியா நின்னப்போ

உங்களோட அன்பும் ஆதரவும் நிறைய இருந்தது. அவளே உங்க மருமகளா வருவது ,எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு !

சந்தான கிருஷ்ணன் சார்! உங்களுக்கும் தங்கள் மனைவியாருக்கும் நாங்க ரொம்பக் கடமையுடன் , காதம்பரி என்ற ஒரு பெரும் பொக்கிஷத்தை எங்களுக்கு தந்ததற்கு நன்றி சொல்லறோம்.

சேகர் சார்! நம்ம இவ்வளவு சந்தோஷமா இருக்கோம் .பையன் ,பெண் சம்மதம்

கேட்கணுமே!என்றாள் பார்வதி.

லாயர் மேடம் !நாங்க சம்மதம் கேட்டு ஒரு மணிக்கு மேல ஆச்சு!எங்க அப்பா அம்மா,அங்கிள் ,ஆன்டி கிட்டே நீங்களே சொல்லுங்க என்று எங்க கிட்டே சொல்லிட்டா.என்றார் சேகர் சிரிப்புடன்.

அடிப் பாவிப் பொண்ணே! பாத்தீங்களா ! என்று பார்வதி என்னிடம் சொன்னபோது

எல்லாம் நீ கொடுக்கற செல்லமும் இடமும்தான் என்றேன்.

எல்லோரும் சிரித்தார்கள் பார்வதி உள்பட.

எங்கள் கார் நுங்கம்பாக்கம் போய்க் கொண்டிருந்தது.காதம்பரி உரிமையோடு என் மனைவி பார்வதி தோளில் சாய்ந்து அவளை இறுக்கிக் கொண்டிருந்தாள்.

காதம்பரி! சட்டென்று எப்படி ஒரு முடிவுக்கு வந்தே !என்றாள் பார்வதி அவள் தலையை வருடிக்கொண்டே !

ஆன்டி! எங்க காலேஜிலேயே மிக நேர்மையானவன் ஷிவா !நான் என்பதில்லை .எந்தப் பொண்ணுமே உடனே சரி என்று சொல்லி விடுவார்கள்.நான் ரொம்ப லக்கி.!

ஆன்டி! நாளைக்கே நான் ஆபீசுக்கு லெட்டர் கொடுக்கப் போறேன்.! அப்புறம்

ஒரு வாரம் உங்களோட ,அங்கிளோட தங்கலாமா! எனக்கு லைப் கொடுத்ததே

நீங்கதான்.கல்யாணம் ஆனா முடியாது.கதம்பரியின் கண்ணில் கண்ணீர் !

பார்வதிக்கும் சந்தோஷம் அழுகையா வந்தது.

காதம்பரி!நீ நாளைக்கே அப்பா அம்மாவோட வந்திடு.நாமெல்லோரும் சேர்ந்து

இருப்போம்.எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும் என்றாள்.

காதம்பரி!அப்புறம் ஒரு ரிக்வஸ்ட் ! இனிமே நீ பெரிய கம்பனி எம்டி ஆகப்போறே !

ஏதாகிலும் கம்பனி கேஸ் வந்தால் இந்த லாயரை மறக்காதே!

போங்க ஆன்டி! நான் எப்பவுமே உங்க காதம்பரிதான்1 எனக்கு அப்புறம்தான் பத்மா அக்கா உங்களுக்கு !என்று இன்னும் இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

ஒரு பெண் தனிமையாக இவ்வுலகில் போராடினாலும் ,காதம்பரி போல அன்பும் பாசமும் நிறைந்த வாழ்வு அமைந்தால் ,இறைவனுக்கு கண்ணீர் மல்க நன்றி சொல்ல வேண்டும்.

Print Friendly, PDF & Email

4 thoughts on “இவள் ஒரு காதம்பரி

  1. சங்கர் அண்ணா உங்கள் கதைகள் எல்லாமே மிகவும் அற்புதமாக இருக்கிறது ,,,

    மிகவும் தெளிவாக தெளிந்த நீரோடையாக அழகாக புரிய வைக்கிறீர்கள் அண்னா..

    இனி நான் உங்களது விசிறி …

    அழகான கதை …வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் தங்களது திறமை வளரட்டும் அண்ணா..

    1. அன்புள்ள நித்தியா வெங்கடேஷ் அவர்களுக்கு,
      மிக்க நன்றி.ஒவ்வொரு கதை எழுதும்போதும் நானே படித்து
      ரசித்து ,கலங்குவது உண்டு.
      அதுவே உங்கள் போன்று உன்னிப்பாக படித்து ,அதை
      அருமையாக சொல்லி என்னை ஊக்குவிக்கும் போது
      மிகவும் நெகிழ்ந்து விடுகிறேன்.
      தங்களுக்கு அன்புடன் நன்றி. வாழ்த்துக்கள் .
      பி.சங்கரன்

  2. தங்கள் அன்பான விமர்சனத்திற்கு மிக்க நன்றி .
    இது நான் விருப்பப் பட்டு எழுதிய கதை.
    பி.சங்கரன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *