இரண்டு வளையல்கள்

 

ஒவ்வொரு முறை அதைக் கழட்டி வாங்கும்போதும் அவனுக்குத் துக்கமாகவே இருந்தது. பெரும்பாலும் அவன் கேட்பது கூட இவ்லை. அவளே வளையல்களைக் கழட்டிக் கொடுத்து விடுவாள். முன்பாவது சமையல் அறையில் போய் கழட்டி எடுத்து வருவாள். இப்போது அதுவுமில்லை. முகத்துக்கு எதிராகவே கைகளை நீட்டியபடி கழற்றிக் கொடுத்து விடுகிறாள்.

மெலிந்து நீண்டு போயிருந்த அந்தக் கை வளையல்களைக் கழட்டியதும் பார்க்க இயலாததாக உள்ளது. ரத்தம் வெளிறியபடி இருக்கும் அந்த விரல்கள் பாம்பைப் போல நீண்டு சுருண்டது போல இருந்தன.

பல இடங்களில் அந்த வளையல்கள் அடமானம் போயிருக் கின்றன. அந்த வளையல்கள் ராசியோ என்னவோ. உண்மையில் அது அம்மாவிடமிருந்தது. அம்மாவிடம் அதைப் போன்று நான்கு வளையல்கள் இருந்ததாகச் சொல்லுவாள். பட்டையான வளையல்.

அவன் கல்யாணம் செய்து கொண்ட பின்பு அம்மா அந்த இரண்டு வளையல்களையும் மருமகளுக்குக் கொடுத்தாள். திருநீறு போட்டுத் தேய்த்து அதைப் பளபளவெனக் கைக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். அவன் வளையல்களை வாங்கிக்கொண்டு நேரத்துக்கு தகுந்தாற்போல யாரிடமாவது அடமானம் வைப்பான். இரண்டு தடவைக்கு முன்பு கூட கணேசனின் சித்தியிடம் வைத்தாள். கணேசனும் கூட வந்தான். சித்தி பெரும் உயரத்தில் இருந்தாள். பெரும் உடம்பு, கைகளில் நிறைய வளையல் போட்டிருந்தாள். கணேசன் விஷயத்தைச் சொன்னதும் கேட்டாள். “எடுங்க பார்ப்போம்…” சட்டைப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தாள். வாங்கிக் கையில் பார்த்தாள். பின்பு கேட்டாள்.

“எவ்வளவு வேணும்”

“ஆயிரம் ரூபா…”

“பழைய வளையல் போல இருக்கு. எங்க வாங்கினது”

“அம்மாவுடையது, செஞ்சது”

அவள் அந்த வளையல்கனைக் கைக்குள் போட்டுப் பார்த்தாள். போகவில்லை மணிக்கட்டு பெரிதாக இருந்தது. உள்ளே திணித்தாள். உள்ளே எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.

“அமுதா… சோப் டப்பா கொண்டா ” உள்ளிருந்து சின்னப் பெண் சோப் டப்பா கொண்டு வந்தாள். கையில் சோப்பைத் தடவியபடியே போட முயற்சித்தாள், உள்ளே போக மறுத்தது. அவனே சொன்னான். ” சின்ன சைஸ், போகாதுங்க.”

“வளையல் அப்படித்தானுங்க இருக்கும், போடலாம் ” அவன் சோப்பை வெறித்தபடியே இருந்தான். ஒரு கையில் போட்டு விட்டாள். மறு கையில் போட கணேசனைக் கூப்பிட்டாள், இழுத்து வளையலைப் போட்டுவிட்டான். கையை இறுக்கியது போலத் தெரிந்தது. சிரித்தபடியே உள்ளே போய் பணம் கொண்டு வந்தாள். அன்றைக்கெல்லாம் அவனுக்கு அதே ஓடிக்கொண்டி ருந்தது. நாய்களுக்குக் கழுத்தை இறுக்கிப் பட்டை போட்டது போல இருந்ததாகத் தோணியது. சாப்பிட இரவில் வரும்போது அவனிடம் சொன்னான். அவள் பதில் பேசாமலிருந்தாள்.

அதை மீட்பதற்கு ஆறு மாதத்துக்கு மேலாக ஆனது. மீட்கப் போகும்போது அவள் போகவில்லை. அடுத்த வாரமே இரும்பவும் வளையல்களை வாங்கிப் போனான். அப்போது அம்மா வந்திருந்தாள். அவனிடமே கேட்டாள்.

“எள்னடா வெறுங்கையாக இருக்கா.”

“வேலை நடக்கலை, அதான் வளையலை அடமானம் வைச்சுட்டேன்.”

“கவரிங் வேறு வாங்கித் தரலாம்ல”

“வாங்கிட்டு வரேன்.”

இரண்டு நாள்களுக்கு முன்பு தெப்பம் பக்கம் போனபோது ஞாபகம் வந்தது. நிறைய வளையல்கள் குமித்துப் போட்டி ருந்தார்கள். கண்ணாடி வளையல்கள், சிவப்பு, வெள்ளை, நீலம் என. பட்டி, பட்டியான கண்ணாடி வளையல்கள் இருந்தது. அவனுக்கு சைஸ் தெரியவில்லை. வெள்ளையும் நீலமும் வாங்கிக்கொண்டு போனான். அவள் போட்டுக்கொண்டபோது பெரிதாக இருந்தது. இரவில் படுக்கும்போது அவள் தலையணையை ஒட்டி எல்லாவற்றையும் கழட்டி வைத்தாள். அவன் பார்த்தபடியே இருந்தான். “ஏன் கழட்டிட்டே ” “லூசா இருக்கு, தூங்கும் போது உடைஞ்சிடும்.” “சும்மா போட்டுக்கோ. உடைஞ்சா என்ன.” போட்டுக்கொண்டாள். கண்ணாடி வளையல்கள் மோதும் சப்தம் அபூர்வமாக இருந்தது. அவள் உறங்கிய பின்பு கூட அவன் விழித்துக்கொண்டிருந்தான். பின் இரவில் அவள் புரண்டு படுத்த போது கை அவள் மாரில் விழுத்தது. கையை எடுத்து வைத்துக்கொண்டு வளையல்களைப் பிரித்து விட்டான். பின்பு விரல்களைச் சொடுக்கினான், வளையல்களைச் சப்தமிடச் செய்தான். அவளுக்கு விழிப்பு வந்தது. படுத்தபடியே கேட்டாள்,

“என்னங்க”

“ஒண்ணுமில்லை. தூங்கு” அவள் கைகளைச் சேர்த்தவாறே உறங்கினான். விடியும் போது படுக்கையில் வளையல் உடைந்து கிடந்தது. குளிக்கும் இடத்தில் மாடத்தில், அலமாரியின் டப்பாக்களின் ஊடே கழற்றி வைக்கப்பட்ட வளையல்கள் இருந்தன. ஒரு வாரத்துக்குப் பின்பு வெறுங்கையோடு திரிந்தாள்,

ஒரு நாள் இரவில் அம்மாவே அவளுடைய இரண்டு வனையல்கள் பற்றிச் சொன்னாள்.

அப்போது பார்க் பக்கம் கூட்டம் நடந்ததாம். காந்திதான் கூட்டத்தில் பேசுவதற்கு வந்தாராம். கூட்டம் கணக்கிலடங் காமல் இருந்ததாம். கலவரத்தில் உயிர் நீத்த குடும்பத்துக்கு நிதி திரட்ட பெண்கள் நகையைத் தர வேண்டும் என்று காத்தி பேசிவிட்டு நகைக்காக பெண்கள் பகுதிக்குத் துண்டை ஏந்திக் கொண்டு வந்தாராம். வளையல்கள், கம்மல்கள், காகமானலகன், வடசெயின்கள் என விழுந்தபடியே இருந்ததாம். அம்மா யோசிக்காமல் போட்டிருந்த இரண்டு வளையல்களைக் கழட்டிப் போட்டுவிட்டுப் பார்த்தாள்.

காந்தியின் சிரிப்பு அப்படியே மனசை அமுக்கியதாம். வீடு திரும்பும் வரைக்கும் அவளுக்கும் எதுவும் தோணவில்லையாம். இரவில் அப்பாவோடு பெரும் சண்டை. அழுதபடியே சொன்னாளாம்.

“எப்படி இ ரெண்டேகூட அடமானத்தில் இருந்து முழுகிப் போயிடும். அதுக்கு இப்படிப் போறது பரவாயில்லை .” உண்மையில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவள் ஸ்கூல் போய்க்கொண்டிருந்தான். நகரமே வெறிச்சோடியது அன்று. நிசப்தம் பரவிய தெருக்கள். சில பறவைகள் தெருவில் நிதானம் தெரியாது அலைத்தன. அம்மா அன்று சமையல் செய்யவில்லை அழுதாள். குடும்பத்து நபர் இறந்தது போல இருந்தது, அவள் கூட காரணம் தெரியாமல் அழுதாள். எங்கோ பஜனை நடப்பது போவக் கூடக் கேட்டது.

அம்மா மீதமிருந்த இரண்டு வளையல்களைத்தான் மரு மகளுக்குக் கொடுத்தாள்.

இந்த முறை வளையல்களைக் கழட்டி வாங்கும் போது அவளே சொன்னாள்,

“பேசாம வித்திட்டீங்கன்னா, எல்லாக் கடனையும் அடைச்சிட லாம்ல.”

“எதுக்கு, வேணா”

“எதுக்கு இருந்து, வித்து ரலாம். வேற வேணும்னா பின்னாடி வாங்கிறலாம்.”

“அப்ப சாயங்காலம் வர்றயா கடைக்கு.” அவன் மறுக்க வில்லை. மாலை தெருவெங்கும் விழித்திருந்தது. அவள் ஒர்க்ஷாப்புக்கு வந்தபோது வேலை பார்த்துக்கொண்டிருந்தான். மரத்தடியில் நின்றுகொண்டிருந்தாள். சேர்த்து போனார்கள்.

அந்த வரிசையெங்கும் நகைக் கடைகளாக இருந்தன. முன்பு எப்போதோ குழந்தைக்கு செயின் வாங்க வந்த கடையின் ஞாபகமிருந்தது. அந்த செயின் எப்போதோ இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

சின்னக் கண்ணாடி அறைகளில் நகைகள், எத்தனை விதம் எனத் தெரியாது. உள்ளே உட்கார திண்டு போட்டிருந்தார்கள். அவன் நகையை எடுத்துக் கொடுத்தான். வாங்கி உரசிப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

“வேற நகை வாங்கிறீங்களா, பணமா.”"

“பணம் வேணும்.”

“சின்னதா ஏதாவது வாங்கலாம்ல.”

பேசாமலிருந்தான். கடைக்காரர் சின்னப் பெட்டியை எடுத்து அவள் முன்பு வைத்துச் சொன்னார். ‘மோதிரம் பாருங்க, புது டிசைன் நிறைய இருக்கு.”

அவள் எதிர்ச் சுவரில் இருந்த நகைகளைப் பார்த்தபடியே இருந்தாள். அவனே வேண்டாமென்று தலையாட்டினான். எடை போட்டு சின்ன சிலேட்டில் கணக்கு போட்டுக் காட்டினார். அவனுக்கு எதுவும் புரியவில்லை , தலையாட்டினான். உள்ளிருந்து பணத்தை எண்ணிக் கொடுத்தார். வாங்கி எண்ணும் போது அவளே கேட்டாள்.

“கொலுசு இருக்கா.”

“இருக்குமா, எப்படி வேணும்,” உள்ளிருந்து நிறைய மாடல்களை எடுத்துப் போட்டார். அவள் மாங்காய், மாங்காயாக இருந்த கொலுசை எடுத்துக்கொண்டாள். வரும்போது தெப்பம் பக்கம் வந்து சில வளையல்கள் கூட வாங்கிக்கொண்டாள். கொலுசை அடர்நீலமான காகிதத்தில் கட்டிக்கொடுத்தார்கள்.

இரவில் அவள் அணிந்து கொண்டாள். அவள் நடந்து வரும் போது இந்தச் சப்தம் கேட்டபடியே இருந்தது. அப்போதுதான் அவனுக்குப் பட்டது. அவள் வளையலை விற்றதற்கு நினைவு படுத்தத்தான் இந்தக் கொலுசை வாங்கினாளோ. அதன் சப்தத்தில் இந்த ஞாபகம் மோதி சிதறுதே எனப் பட்டது. இருந்தும் அவனுக்கு ஆறுதலாக இருந்தது. கொலுசைக் கண்டிப்பாகக் கழட்டி அடமானம் வைக்க முடியாது என்பது. இரண்டு நாள்களுக்குப் பின் குழந்தை அந்தக் கொலுசைப் போட்டுக்கொண்டு வந்தது. அவள் எப்போதும் போல் வெறு மனாக வந்தாள். பெரிய கொலுக சின்னக் காலில் இருந்தது.

அவளிடம் கேட்டான்.

“என் கழட்டிட்டே .”

“கடிக்குது. கொஞ்ச நாள் போனால் சரியாயிடும்.” அவன் எதுவும் பேசவில்லை. குழந்தை கையில் கொலுசை எடுத்துச் சுற்றிக் கொண்டு வந்து கேட்டது.

“புது வளையல்பா. நல்லாருக்கா.” தலையாட்டினாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் கெந்தியம்மாள் கத்திக் கொண்டிருந்தாள். வாசலில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்றிரண்டு அவள் கால்களை சுற்றியலைந்து கொண்டிருந்தன. “ஆரு சொல்றதையும் கேட்காம நடந்தா எப்படி.. அதான் காது எழவு கேட்கமாட்டேங்குது. கண்ணு வேற அவிஞ்சி போச்சி. வீட்ல கிடக்க வேண்டியது தானே. ...
மேலும் கதையை படிக்க...
விரும்பிக் கேட்டவள்
"அப்பா உன் பாட்டு டி.வி-யில போடுறான், அம்மா உன்னைக் கூப்பிடுறா..." என்று நித்யா வந்து கூப்பிட்டாள். அவள் சொல்வதற்கு முன்பாகவே அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கியிருந்தேன். 'மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும், நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச ...
மேலும் கதையை படிக்க...
நடுவில் உள்ளவள்
வெயில் ஏறிக்கொண்டு இருந்தது. இறந்து போன அம்மாவின் உடலை மயானத்துக்குக் கொண்டுபோவதற்காகக் காலையில் இருந்தே காத்துக்கொண்டு இருந்தோம். இன்னும் சியாமளா வந்து சேரவில்லை. அவள் சூரத்தில் இருந்து கிளம்பிவிட்டாள் என்று தகவல் வந்திருந்தது. விமானத்தில் வந்து மதுரையில் இறங்கி, கார் பிடித்திருந்தால்கூட ...
மேலும் கதையை படிக்க...
கிழக்கே இருந்த தோட்டத்துக்குள் கிளைபிரிந்து ஓடும் நான்கு ஆறுகளுக்கும் பெயரிட வேண்டிய யோசனையில் இருந்தான் ஆதாம். தினசரி தான் காணும் பொருள்கள் ஒவ்வொன்றுக்குமாகப் பெயர் வைப்பது மட்டுமே அவனது அன்றாட வேலையாக இருந்தது. அவன் இருந்த அதே தோட்டத்தில் ஒரு ஸ்திரி ...
மேலும் கதையை படிக்க...
மின்சார ரயில் வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது. ஜெயந்தி வெங்காயம் வாங்கிய பிளாஸ்டிக் பையுடன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று இருந்தாள். சனிக் கிழமை மாலை என்பதால், அளவுக்கு அதிகமான கூட்டம். காதல் ஜோடிகள் சுற்றுப்புறம் மறந்து விரல்கள் பிடித்து கொஞ்சிக்கொண்டு இருந்தார்கள். ஜெயந்திக்கு ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப மறுத்துவிடாதீர்கள், சில சமயம் கற்பனையை விட உண்மை விசித்திரமாகவே இருக்கும், அவர்கள் சீட்டுவிளையாடிக் கொண்டிருந்த அறை கடற்கரையோர வீடு ஒன்றில் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து இப்படி நடந்து கொள்கிறாள் எனவும் சொன்னார்கள். அந்த மதிய பொழுதில் என்ன நடந்தது என்பதை பற்றி யாரும் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன். இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன என்பதை, கடந்த மூன்றாண்டுகளாகவே நான் அறியத் துவங்கியிருக்கிறேன். முன்பு கடற்கரையைக் கடந்து செல்கையில் எப்போதாவது பறவைகள் கடந்து போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் மீதான என் கவனம் கூடியதில்லை. ஆனால் இந்த ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது, அந்தச் செய்தி வெளியான நாள் செப்டம்பர் 20  ஞாயிற்றுகிழமை, 1998, அப்போது அவளுக்கு வயது இருபத்திமூன்று, கோகிலவாணியை இப்போது யாருக்கும் நினைவிருக்காது, ...
மேலும் கதையை படிக்க...
அவர்கள் பழனிக்கு வந்து சேர்ந்த போது மணி மூன்றரையாகியிருந்தது, வரும் வழியில் சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்ட போது அங்கேயே மதியசாப்பாட்டினை சாப்பிட்டு விடலாம் என்று அம்மா சொன்னாள் ஆனால் அப்பா பழனிக்கு போனதும் சாப்பிடுவோம் என்று மறுத்துவிட்டார், ரமா மட்டும் எனக்கு பசிக்கு, ...
மேலும் கதையை படிக்க...
எரிந்த கூந்தல்
விரும்பிக் கேட்டவள்
நடுவில் உள்ளவள்
ஆதாமின் பாஷை
ஜெயந்திக்கு ஞாயிற்றுக் கிழமை பிடிப்பது
சீட்டாட்டம்
விசித்ரி
இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன
கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது
வெறும் பிரார்த்தனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)