இனிப்பு – ஒரு பக்க கதை

 

சுந்தர் தனது நண்பன் சரவணனின் திருமணத்திற்கு வந்திருந்தான். அங்கு சுந்தரின் அப்பாவும் வந்திருந்தார்.

சுந்தர் காதலித்து கல்பு மணம் புரிந்து தனிக்குடித்தனம் சென்றதால் சுந்தருக்கும் அவன் அப்பாவுக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.

சுந்தர் மதிய உணவு பரிமாறிக்கொண்டிருந்தான். அங்கு வந்த சரவணன் உனக்கும் உன் அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கலாம். அதுக்காக இப்படியா நடந்துக்குறது? என்று கேட்டான்.

என்னடா சொல்றே? சுந்தர் புரியாமல் கேட்டான்.

எல்லா இலைக்கும் ஒழுங்கா உணவு பரிமாறின நீ. உன் அப்பா இலையில மட்டும் ஜாங்கிரி, ஐஸ்கிரீம், பழம் வைக்கலையே? என்று கேட்டான் சரவணன்.

என் அப்பா சுகர் பேஷண்ட். அதனால இனிப்பு ஐட்டங்களை தவிர்த்தேன். என் அப்பா நல்லா இருந்தால் தானே நாங்க சந்தோஷமா இருக்க முடியும். அதான் வைக்கல என்றான்.

சுந்தரின் பேச்சை கேட்ட அப்பா நெகிழ்ந்து போனார்.

- எஸ்.முகம்மது யூசுப் (ஜூலை 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
"என்னங்க மத்தியானத்திலேர்ந்து இதுவரை ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு மேல பிடிச்சிருப்பீங்க...இப்படியே போனா உடம்பு என்னத்துக்கு ஆகும்?" பாஸ்கரின் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை பிடுங்கி ஜன்னலுக்கு வெளியே எறிந்தாள் மாலதி. ஏதோவொரு புத்தகத்தில் லயித்திருந்த பாஸ்கருக்கு, மாலதியின் இந்தச் செய்கையினால் முனுக்கென்று ...
மேலும் கதையை படிக்க...
'இந்த வீட்டில் இன்டர்நெட்லிருந்து அனைத்து வசதிகளும் இருக்கு. ஆனா தொலைபேசி மட்டும் கூப்பிடுவறங்க எண் தெரியற வசதி இல்லாத சாதாரணம். ஏன் இப்படி ?'' வீட்டிற்குள் உட்கார்ந்து நண்பனோடு பேசிக் கொண்டிருந்த ரமேசுக்குள் திடீர் கேள்வி. 'நண்பன் பொம்பளை விசயத்துல அப்படி இப்படி. ...
மேலும் கதையை படிக்க...
நரசிம்மன் சொன்ன அந்த தகவல் திவாகரனை லேசாக அதிரச் செய்தாலும், அதை வெளிக் காட்டி கொள்ளாமல் வெகு இயல்பாக பேசி விட்டுக் கிளம்பினான். பஸ்சில் வரும் போது கூட நரசிம்மன் பேசிய வார்த்தைகளே திரும்ப திரும்ப ஞாபகத்தில் வந்து போயின. “ஹல்லோ மிஸ்டர் ...
மேலும் கதையை படிக்க...
“வீரம்மா, ஆத்தா சொன்னதுக்காக நி சம்மதிக்கனும்னு அவசியமில்ú. உன் நிஜமான அபிப்ராயத்தை சொல்லலாம். நான் அதற்காக வருத்தப்படுவன் அல்ல, அதை நீ புரிஞ்சுக்கணும்...” வாய்க்காலில் முகம், கை கால்களை கழுவிக்கொண்டு தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்தபடியே சொன்னான் மருது. சாப்பாட்டுத் துôக்கை ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘வாரிசு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) நாலே எட்டில் இசக்கி கடைக்கு வந்து சேர்ந்துவிட்டார். மனசுக்குள் ஒரு பக்கம் சிரிப்பாகவும், இன்னொரு பக்கம் பயமாகவும் இருந்தது. எப்படியோ ஒரு குருட்டுத் தைரியத்தில் கிணற்றைத் தோண்டி விட்டார்! அதுக்காக ...
மேலும் கதையை படிக்க...
சிகரெட்
தொ(ல்)லைபேசி? – ஒரு பக்க கதை
அவசரப் புத்தி
முறைமாமன்
மச்சான்களின் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)