இந்த உடம்பு அந்த சாமிக்கு சொந்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 5,549 
 

ஊருக்கு கிழெக்கே இருக்கும் சக்தி வினாயகர் கோவில் குருக்களாய் பணி ஆற்றி வந்தார் பரமசிவம் குருக்கள்.காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கோவிலை திறந்து வேலை பண்ண ஆரம்பித்தார் என்றால் பன்னிரண்டு மணி வரை ஓயாமல் கோவில் எல்லா வேலைகளை பண்ணிக் கொண்டு இருப்பார். இதற்கிடையில் கோவிலுக்குப் பக்கத்திலேயே இருக்கும் தன் சின்ன வீட்டுக்குப் போய் சுவாமி நைவேத்யம் வேறு பண்ணிக் கொண்டு வருவார்.

பரமசிவத்தின் மணைவி இறந்துப் போன பிறகு அவருக்கு விரக்தி அதிகம் ஆகி, அவர் தன் முழு நேரத்தையும் கோவிலில் கழிக்க முடிவு பண்ணி வந்தார். தினமும் சுவாமிக்கு அபிஷேகம் பண்ணி,அலங்காரம் பண்ணி,அர்ச்சனை பண்ணி விட்டு கோவிலுக்க்கு வருவோருக்கும் எல்லாம் எல்லா மந்திரங்களையும் முழுக்க சொல்லி நன்றாய் அர்ச்சனை செய்து ப்ரசாதமும் தவறாமல் கொடுப்பார்.கோவிலை ஒட்டியே அவா¢ன் வீடு இருந்தது. இவரோடு காலையிலேயே கோவிலுக்கு வந்து வெளிப் பிரகாரம் முழுவதும் பெருக்கி கோவில் பூராவும் தண்ணி தெளிச்சி,வாசலில் பொ¢ய கோலம் போட்டு, குருக்களுக்கு கூட மாட வேண்டிய உதவிகளை செய்து வந்தாள் வேலைக்கார அம்மா பார்வதி.

குருக்களுக்கு ஒரு பையன் கணபதி.அவன பத்தாம் ‘க்ளாசில்’ ஊர் பள்ளிக்கூடததில் படித்து வந்தான்.பள்ளிக்கூட நேரங்கள் போக மீதி நேரங்களிலும் பள்ளிக்கூட லீவு நாட்களிலும் அப்பாவுக்கு கோவிலில் உதவி பண்ணி வந்தான் கணபதி. பார்வதிக்கு ஒரே ஒரு ஆசை தான்.’தன் பெண் ஒரே தேவியை எட்டாம் ‘க்ளாஸ்’ முடித்தவுடன் ஒரு நல்ல பையனா பார்த்து அவள் மூச்சு நிற்பதற்கு முன் ஒரு கல்யாணத்தை பண்ணி முடித்து பார்க்க வேண்டும்’ என்பது தான் அது.அதற்கு தன்னால் முடிந்த வரை பணமும் சேர்த்து வைத்து இருந்தாள். பொண்ணு வயதுக்கு வந்து விடவே மும்முராய் ஒரு பையனைத் தேடினாள் பார்வதி.

அவள் தூரத்து உறவு பையன் ராஜா ஒரு கம்பெனியில் பியூனாக வேலை பண்ணி வந்தான்.ராஜா பார்க்கவும் ரொம்ப நன்றாய் இருப்பான். பார்வதிக்கு ராஜாவை ரொம்ப பிடித்து இருந்தது.ஒரு நாள் பார்வதி தேவியை தன்னிடம் அழைத்து “ தேவி,எனக்கு வயசு ஆகி கிட்டுப் போவுது.என் கை கால் திடமா இருக்கும் போதே உனக்கு ஒரு கல்லாணம் பண்ணி வச்சிடலாம்ன்னு நான் நினைக்கிறேன்.நீ என்ன சொல்றே” என்று கேட்டாள்.

சற்று நேரம் யோஜனைப் பண்ணின தேவி ”சரிம்மா.நீ எனக்கு ஒரு நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணி வைம்மா.நான் கல்யாணம் பண்ணிக்கிறேம்மா” என்று வெக்கப் பட்டுக் கொண்டே சொன்னாள் தேவி. உடனே பார்வதி தேவியைக் கட்டிக் கொண்டு “ரொம்ப சந்தோஷம் தேவி. நான் உனக்கு ஒரு நல்ல பையனாப் பாத்து கல்லாணம் பண்ணி வக்கிறேன்” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேர போனதும் தேவியைப் பார்த்து “தேவி,என் தூரத்து உறவுக்கார பையன் ராஜா ரொம்ப நல்லவன். பாக்க ரொம்ப அழகாகவும் இருப்பான்.அவனை உனக்கு கல்யாணம் பண்ணி வக்கட்டுமாம்மா” என்று கேட்டாள்

உடனே தேவி ”ராஜா நல்லவன்ன்னு உனக்கு தெரிஞ்சா எனக்கு அவனை எனக்குக் கல்யாணம் பண்ணி வைம்மா” என்று சொல்லி விட்டு ஏதோ ஒரு புஸ்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள். பார்வதிக்கு ரொம்ப சந்தோஷம். பார்வதி அவள் தூரத்து ஊறவு பையன் ராஜா அப்பா அம்மா கிட்டே பேசி அவர்கள் சம்மதம் சொன்னவுடன்,அவர்களை ராஜாவுடன் தன் வீட்டுக்கு வரச் சொல்லி தேவியை வந்து பெண் பார்க்க சொன்னாள். ராஜா அப்பா அம்மாவுக்கும்,ராஜாவுக்கும் தேவியை ரொம்ப பிடித்து இருந்தது.

அவர்கள் கிளம்பிப் போனதும் பார்வதி தேவியைக் கூப்பிட்டு “அம்மா தேவி, கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போறவ நீ.என் உறவுக்கார பையன் ராஜா என்கிறதுக்காக நீ சம்மதம் சொல்ல வேணாம்.உனக்கு ராஜவை பிடிச்சு இருக்கா” என்று கேட்டாள் தேவி வெக்கப் பட்டுக் கொண்டே “உனக்குப் பிடிச்சு இருந்தா, எனக்கும் பிடிச்ச மாதிரி தான்” என்று தன் கைகளை முகத்தில் மூடிக் கொண்டு சொன்னாள். பார்வதிக்கு ரொம்ப சந்தோஷம்.உடனே பார்வதி குருக்களைக் கேட்டு தேவி ராஜா கல்யாணத்திற்கு ஒரு நல்ல நாள் குறித்தாள்.‘பொண்ணு தேவிக்குக் நல்ல படியா ஒரு கல்லாணம் பண்ணி முடிச்சு விட்டா,,நாம பாட்டுக்கு நிம்மதியாய் நம்ம காலத்தை கோவில் வேலைகளை பண்ணிக் கிட்டு, நம்ம காலம் முடியும் போது நிம்மதியா நம் கண்ணை மூடி விடலாம்’ என்று எண்ணி சந்தோஷப் பட்டாள் பார்வதி.

ஆனால் விதி அவள் வாழ்க்கையில் விளையடியது. ஒரு நாள் காலையில் ராஜா மோட்டர் பைபக்கில் டவுனுக்கு ஏதோ சமாமான் வாங்கப் போய் கொண்டு இருந்தான். ஒரு திருப்பத்தில் அவன் போய்க் கொண்டு இருக்கும் போது, எதிரே வந்துக் கொண்டு இருந்த ஒரு தண்ணீ லாரி ராஜா மேலே லாரி மோதி அவன் ‘ஸ்பாட்டிலேயே’ பா¢தாபமாக இறந்து விட்டான்.ராஜா இறந்துப் போன விஷயம் கேட்டு இடிந்துப் போனாள் பார்வதி.‘நம் பொண்ணுக்கு இந்த உறவுக்காரப் பையன் ராஜாவை நாம் கல்லாணம் பண்ணி விட்டு நிம்மதியாக நம் கண்ணை மூடி விடலாம் என்று நினைச்சோமே. ஆனா அந்தப் பையன் இப்படி அகால மரணம் அடைஞ்சுட்டானே.இனிமே நாம தேவிக்கு வேறே ஒரு நல்ல பையனைப் பார்த்துக் கல்லாணம் பண்ண வேணுமே.நமக்கு வேறே நல்ல பையனா கிடைக்க வேணுமே’என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டாள் பார்வதி.ராஜா இப்படி அநியாயமாக இறந்துப் போன துக்கம் பார்வதியை ரொம்பவே வாட்டி வந்தது.

பார்வதி குருக்கள் பரமசிவத்திடம் சொல்லி அழுதாள்.பரமசிவ குருக்கள் பார்வதிக்கு ஆறுதல் சொல்லி அவளைக் கவலைப் படாமல் இருந்து வரும்படி சொல்லி வந்தார்.

ஆனால் பார்வதிக்கு மட்டும் வேறே நல்ல பையன் நம்ம தேவிக்கு கிடைக்க வேண்டுமே என்கிற கவலை அதிகமா இருந்து வந்தது.’வேறே நல்ல பையன் நமக்கு தொ¢யாதே.தேவிக்கு பாக்கற பையன் நல்ல பையனா இருக்கணுமே.அவன் குடிப் பழக்கம் இல்லாம இருக்கணுமே.தேவியை கண் கலங்காம வச்சுக்கறதுக்கு ஒரு நிரந்ததர வருமானம் அவனுக்கு இருக்கணுமே’ என்று எல்லாம் கவலைப் பட்டு யோஜனைப் பண்ணிக்கொண்டு இருந்தாள் பார்வதி.அடிக்கடி தேவி இடமும்,பரமசிவ குருக்களிடமும் தன் கவலையை சொல்லி அழுது வந்தாள் பார்வதி. பரமசிவ குருக்கள் பார்வதியிடம்” பார்வதி,நீ கவலைப் படாம இருந்து வா.தேவிக்கு ரொம்ப நல்ல பையன் கிடைப்பான்” என்று ¨தா¢யம் சொல்லி வந்தார். தேவியும் அவள் அம்மாவிடன் ”அம்மா, ராஜா இல்லாவிட்டா என்னம்மா.நீ எனக்கு வேறே ஒரு நல்ல பையனாப் பாரும்மா.நான் அவனைக் கல்யாணம் பண்ணிக் கிட்டு சந்தோஷமா இருந்து வரேன்.நீ வீணாக் கவலைப் பட்டு உன் உடம்பைக் கெடுத்துக்காதேம்மா.நீ ஒருத்தி தன் எனக்கு இருக்கேம்மா.நீயும் என்னை விட்டுப் போயிட்டா நான் என்னப் பண்ணுவேம்மா. கவலைப் படாம இருந்து வாம்மா” என்று அம்மாவுக்கு ஆறுதல் சொன்னாள்.இதே கவலையில் பார்வதி ஜுரம் வந்துப் படுத்தாள்.மருந்து மாத்திரைகள் சாப்பிடு வந்தாலும்,அவள் மனக் கவலை அதிகமாக இருந்ததால் அவளுக்கு ஜுரம் குறையவே இல்லை.அந்த ஜுரமே கொஞ்ச நாள் போனதும் விஷ ஜுரமாய் மாறி படுக்கையாய் படுத்த பார்வதி எழுந்தா¢க்கவே இல்லை.ஜுரம் வந்த எட்டாவது நாள் பார்வதி தன் கண்ணை மூடி விட்டாள். தன் அம்மா உடம்பின் மேல் விழுந்து கதறி கதறி அழுதாள் தேவி.

“அம்மா இப்படி என்னை தனியா தவிக்க விட்டு விட்டு, நீ நிம்மதியா கண்ணை மூடி விட்டயேம்மா.நான் இப்போ எப்படிம்மா இந்த பாழாப் போன உலகத்திலே தனியா வாழ்ந்து வரப் போறேம்மா.எனக்கு துணை யாரும் இல்லையேம்மா” என்று சொல்லி தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் தேவி.தேவி கதறி கதறி அழ்வதைப் பார்த்த பரமசிவ குருக்கள் அவள் கீட்டே போய் “அழாதே தேவி.உன் அம்மா ஆயுசு முடிஞ்சுப் போச்சு.அவ போய் விட்டா.நான் இருகேன் உனக்கு. நீ அழுகையை நிறுத்தி விட்டு உன் அம்மா ‘காரியத்தை’, உன் ஒன்னு விட்ட சித்தப்பாவை வச்சுண்டு பண்ணி முடி.கொஞ்ச நாள் ஆனதும்,உன் மனசு சரியான பிறகு நீ இந்த கோவிலிலேயே உன் அம்மா பண்ணி வந்தா மாதிரி வேலை களை எல்லாம் பண்ணீ வா.கொஞ்ச நாள் ஆனதும் நான் உனக்கு நல்ல உங்க ஜாதிப் பையன் ஒருத்தனைப் பாத்து உனக்குப் அவனைப் பிடிச்சி இருந்தா,அவனை என் செலவிலே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.இப்போ அழுகையை நிறுத்தி விட்டு மேலே ஆக வேண்டியதைக் கவனிம்மா.எழுந்துகோ” என்று ஆறுதல் சொல்லி தேவியை எழுப்பினார்.கொஞ்ச நேரம் கழித்து தேவி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். ஊர் கோடியில் தனியாய் வசித்து வந்த தன் சித்தப்பாவுக்கு தகவல் சொல்லி அனுப்பி , அவர் வந்ததும் தேவி தன் ‘அம்மா காரியங்களை’ எல்லாம் செய்து முடித்தாள்.

ஐந்து வருடங்கள் ஓடி விட்டது. ஒரு நாள் திடீரென்று ‘ஹார்ட் அட்டாக்’ வந்து பரமசிவம் குருக்கள் காலமாகி விட்டார்.கோவிலை கவனிக்க வேறு சரியான குருக்கள் கிடைக்கவில்லை.அப்போது தான் கல்லூரி படிப்பு படித்து முடித்திருந்த கணபதியையே கோவில் குருக்கள் பொறுப்பை ஏற்கும் படி ஊர் மக்களும், கோவில் கமிட்டியும், வற்புறுத்தி னார்கள்.ஆனால் கணபதிக்கு ‘நாம் படிப்பு முடிச்சு விட்டோம். இனி வேலைக்குப் போய் நாம் சம்பாத்திச்சு வரலாமே’ என்று ஆசைப் பட்டான் ஆனால் ஊர் மக்களும், கோவில் கமிட்டியும்,விடாமல் கணபதியை அப்பா செய்து வந்த கோவில் வேலைகளை பண்ணி வரச் சொல்லி வற்புருத்தி வந்தார்கள்.நீண்ட நேரம் யோஜனைப் பண்ணீன கணபதி ,தன் அப்பா செய்து வந்த கோவில் வேலையை ஒரு புண்ணீய வேலையாகக் கருதி,சம்மதம் தொ¢வித்து, குருக்கள் வேலை பொறுப்பை ஏற்று செய்து செய்து வந்தான். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப் பட்டாலும்,நாளடைவில் கணபதி ஊர் மக்களின் மதிப்பையும், கோவில் கமிட்டியின் பாராட்டையும் பெற்று கோவில் வேலைகளை நன்றாய் செய்து வந்தான்.அவன் மனம் இப்போ நிம்மதியாய் இருந்தது.அவன் கோவிலுக்கு வரும் போது தேவியும் அதே நேரத்தில் கோவிலுக்கு வந்து கோவிலை பெருக்கி தண்ணித் தெளித்து,கோலம் போட ஆரம்பிப்பாள்.அவள் குனிந்து வேலை பண்ணும் போது, அவள் உடல் அழகு பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும்.தேவி அத்தனை அழகு.இளம் பருவத்தின் எழிலில் பூத்து குலுங்கினாள் அவள்.நல்ல நிறமும்,வாளிப்பும் ஒன்றாய் சேர்ந்து இருந்ததால் அவள் தங்க சிலை போல் ஜொலித்து வந்தாள்.கணபதி பூஜை வேலை செய்து வந்துக் கொண்டு இருக்கும் போது அடிக்கடி அவள் அழகை மனம் குளிர கண்டு ரசித்து வந்தான்.

இளம் பெண்கள் மேல் ஏற்படும் கவர்ச்சி,அவனுக்கு தேவியை பார்க்கும் போதெல்லாம் ஏற்பட்டு வந்தது. இருப்பினும் அவன் மெல்ல தன் ஆசையை அடக்கி கொண்டு கோவில் வேலைகளைக் கவனித்துக் கொண்டு வந்தான்.கணபதிக்கு தேவி மேல் கொள்ளை ஆசை இருந்தது.ஆனால் தேவிக்கு ‘தன் மேல் ஆசை இருக்கா இல்லையா’ என்று கணபதியால் கண்டுப் பிடிக்க முடியவில்லை.தேவி தன்னை விரும்பினா ‘நாம் இருவரும் வேறு எந்த ஊருக்காவதுஓடிப் போய் கல்யாணம் பண்ணிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வரலாம்’ என்று நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டு வந்தான் கணபதி.அவ காதலை தான் தொ¢ஞ்சுக்க முடியலையே, அவளை கிட்டத்தில், அவ அழகை ரசிக்கலாமே,,அவ குரலைப் தான் கேக்கலாமே என்று நினைத்து கணபதி அடிக்கடி தேவியை கூப்பிட்டு “தேவி இதை எடுத்து வா,அதை எடுத்து வா” என்று சொல்லும் போதெல்லாம் தேவி உடனே தான் செய்து வரும் வேலையை அப்படியேபோட்டு விட்டு “இதோ வறேன் சாம” என்று சொல்லி விட்டு கணபதி சொன்ன வேலையை உடனே பணி வந்தாள்.கானபதிக்கு தேவியின் குரல் தேனாய் இனித்தது. மனதுக்குள் மிகவும் சந்தோஷப் பட்டான் கணபதி.

ஒரு நாள் காலை மணி பதினொன்று இருக்கும்.கீழண்டை பிரகார மூலையில் ரவுடி ரங்கமணியும் அவன் சகாக்கள் இரண்டு பேரும் தேவியை மடக்கி கொண்டு எதோ மிரட்டிக்கொண்டு இருந்தார்கள். ரங்கமணி மீசையை முறுக்கிகொண்டு நின்றுக் கொண்டிருந்தான்.“இதோ பார் தேவி,அண்ணனை பேசாம கல்லாணம் பண்ணிக்க. உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவார்.நீ வீணாப் பிடிவாதம் பிடிக்காதே.அண்ணன் சொல்றதெ கேளு” என்று ஒரு ரங்கமணீயின் சகா அதிகாரம் பண்ணினான்.சிறிது நேரம் ஆனதும் ரங்கமணி தேவியின் கையை பிடிக்க அவன் கையை நீட்டினான்.பாம்பை தீண்டியவள் போல் தன் கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டாள் தேவி.“என்னைத் தொடாதே.இந்த உடம்பு ‘அந்த சாமிக்கு சொந்தம்’ “ என்று சொல்லி விட்டு விருட்டென்று அந்த ரவுடி கும்பலை விட்டு வெளியே வர முயற்சித்தாள் தேவி.

எதேச்சையையாய் அந்த பக்கம் எதோ வேலையாய் போன கணபதியின் காதுகளில் தேவி சொன்னது விழுந்தது.கணேசன் காதுகளை அவனால் நம்ப முடியவில்லை.தேவி தன்னை ‘சாமி’ ‘சாமி’ ன்னு தானே எப்பவும் கூப்பிடுறது வழக்கம்.’இந்த உடம்பு அந்த சாமிக்கு சொந்தம்’ ன்னா என்ன அர்த்தம்.அவ உடம்பு ‘அவ ‘சாமி’ ன்னு சொல்ற எனக்குத் தானே சொந்தம்’ என்று அர்த்தம் என்று எண்ணியது.சந்தோஷத்தால் கிளுகிளுப்பு அடைந்தான் கணபதி.அவன் உடம்பு பூராவும் ‘ஷாக்’ அடித்தது போல் இருந்தது அவனுக்கு.

அவன் யோஜனை பண்ணினான்.ஏன் இருக்கக்க்கூடது.‘அவளும் ஒரு இள வயசு பொண்ணு தானே.நானும் இள வயசு ஆண் தானே.ஏன் ஒருத்தரை ஒருத்தர் நாம ஆசைப் படக் கூடாது’ என்று எண்ணி தனக்குள் மகிழ்ந்து போனான்.அவன் மனது எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி இன்ப கோட்டையில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தது.

அடுத்த நாள் வினாயக சதுர்த்தி.ராத்திரி கோவில் மூடும் நேரம் வந்தது.கணபதி தேவியை அழைத்து “தேவி, நீ காலையில் என் வீ£ட்டுக்கு சீக்கிரமா வா. நாளைக்கு வினாயக சதுர்த்தி.நிறைய அபிஷேக சாமான்க,அர்ச்சனை சாமான்க, நெய் வேத்ய சாமான்க எல்லாம் ஆத்தில் இருந்து கோவிலுக்கு கொண்டு வந்து வைக்கணும். நீ அவைகளை கோவிலில் கொண்டு வந்து வக்க,காலையிலேயே என் வீட்டுக்கு வா.எனக்கு ரொம்ப சௌªகா¢யமா இருக்கும்.என்ன நிச்சியமா வரயா” என்று கேட்டு விட்டு அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.அவள் முகத்தில் ஒரு சலனமும் இல்லை.”சரிங்க, நான் வரேனுங்க” என்று சொல்லிவிட்டு அவள் போய் விட்டாள் தேவி.

இரவு முழுவதும் கணபதி தூங்கவில்லை.அவன் மனம் சந்தோஷத்தில் திளைத்தது.‘எப்படி நாம் தேவியிடம் நம் ஆசையை தொ¢விக்கப் போறோம்.அதுக்கு அவ என்ன பதில் சொல்லுவா. நம்ம காதலை அவ ஏத்துக் கொள்வாளா.அப்படி அவ நம்ம காதலை ஏத்துண்டா, நாம் எப்படி கல்யாணம் பண்ணிக் கொள்றது’ எனறு எல்லாம் பலவிதமாக எண்ணமிட்டவாரே புரண்டு புரண்டு படுத்தான்.தூக்கம் வரவில்ல அவனுக்கு.

காலை மணி ஆறு இருக்கும்.சொன்னது போல் தேவி வந்து கணபதி வீட்டு வாசலில் நின்றுக் கொண்டு ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினாள். கணபதி தன் வீட்டு கதவைத் திறந்து அவளை பார்த்தவுடன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான்.”வா தேவி உள்ளே வா” என்று கூப்பிட்டான் கணபதி.தேவியும் மெல்ல வீட்டுக்குள் வந்தாள்.

எல்லா பூஜை சாமான்களை எடுத்து அவள் முன் வைத்துவிட்டு “தேவி,நீ நேத்து அந்த ரவுடி கும்பலில் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன்.நீ அந்த ரவுடித் தலைவன் கிட்டே ‘உன் உடம்பு அந்த சாமிக்கு சொந்தம்ன்னு’ சொன்னது என் காதில் விழுந்தது.எனக்கும் உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு தேவி.உனக்கு சம்மதம்ன்னா சொல்லு.நாம் இருவரும் வேறு ஊருக்குப் போய் கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா வாழ்ந்து வரலாம்,என்ன சொல்றே”என்று கேட்டு விட்டு நிறுத்தினான் கணபதி.அவன் மனம் சந்தோஷத்தால் துடித்துக் கொண்டிருந்த்தது.

ஒரு அடி பின்னுக்கு நகர்ந்தாள் தேவி.”சாமி, நான் கல்யாணம் பண்ணீக் கொள்ள இருந்த ராஜா செத்து போனதும் என் பாதி உயிர் போயிடிச்சி.அப்புறமா என் அம்மா செத்து போனதும் என் உடம்பிலே இருந்த மீதி உயிரும் என்னை விட்டு போயிடிச்சி.ஆனா உங்க அப்பா எனக்கு ஒரு நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வக்கிறேன் என்று சொன்ன போது என் மனசிலே லேசாக ஒரு ஆசை பொறந்தது சாமி.என் அம்மா செத்து போன பிறவு,நான் ஒரு நடைப் பிணம் ஆயிட்டேன் சாமி.எனக்கு துணையா என் வயதான சித்தப்பா ஒருவர் தான் என் கூட இருக்கார்..அவர் சின்ன வயசிலேயே கிருஸ்தவ மதத்தில் சேர்ந்து விட்டார் சாமி.அவருக்கு கண் பார்வை கொஞ்சம் மோசம்.இரண்டு நாள் முன்னால் அந்த ரவுடி கும்பல் எங்க வூட்டுக்கு வந்து அந்த ரங்கமணியைக் கல்யாணம் பண்ணிக் கொ¡ள்ளச் சொல்லி என்னையும் என் சித்தப்பாவையும் மிரட்டினாங்க சாமி” என்று சொல்லும் போது அவள் கண்களில் நீர் துளித்தது. கொஞ்ச நேரம் ஆனதும் தேவி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “உடனே என் சித்தப்பா என்னை அழைச்சு ‘அம்மா, தேவி இனிமே உன்னை என்னால் பாத்துக் கொள்றது ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்கு.இந்த ரவுடிக் குமபல் உன்னை என்ன வேணுமானாலும் செஞ்சி விடுவாங்க.சுத்த அயே ¡க்கியப் பயலுங்க அவங்க.எனக்கோ என் ரெண்டு கண் பார்வையும் சரி இல்லே. தேவி.நீ என் கூடவா” என்று சொல்லி என்னை அனைக்கு சாயங்கலமே ஊருக்கு வெளியே இருக்கும் மாதா கோவிலுக்கு இட்டு கிட்டு போய், சி¢ஸ்டர் அல்போன்ஸா கிட்ட என் கஷ்டத்தை சொல்லி அழுதார்.உடனே சிஸ்டர் அல்போன்ஸா என்னை அழைச்சு “கவலைப் படாதே,தேவி நான் உன்னை என் சர்ச்சில் ‘கன்னி ஸ்த்¡£யாக’ சேர்த்துக் கொள்றேன்.இன மே உன் உடம்பு அந்த இயேசு நாதர் ‘சாமிக்குத்’ தான் சொந்தம்.இனிமே நீ இந்த கோவிலில் இயேசு சுவாமிக்கு பணிவிடைப் பண்ணீ வா” என்று சொல்லி இந்த சிலுவை செயினை என் கழுத்தில் மாட்டி விட்டாங்க” என்று சொல்லி, தன் தாவணிக்கு உள்ளே தொங்கிக் கொண்டு இருந்த சிலுவையை எடுத்துக் காட்டினாள் தேவி.ஜன்னல் வழியே வந்த காலை சூரிய ஒளி யின் கிரணங்கள் அந்த வெள்ளி சிலுவை மேல் விழுந்து, பளிச்சென்று மின்னி ,கணபதியின் கண்களை கூச வைத்தது.கணபதிக்கு என்ன பண்ணுவது என்றே தொ¢யவில்லை.அவன் வாயடைத்துப் போய் நின்றுக் கொண்டு இருந்தான்.

கொஞ்ச நேரம் ஆனதும் “நானே உங்க கிட்டே இந்த விஷயத்தே சொல்லிட்டு போவணும்ன்னுத் தான் இன்னிக்கு உங்களை பார்க்கலாம்னு இருந்தேன் சாமி..அதுக்கு உள்ளாற,நீங்களே என்னை வர சொன்னது எனக்கு ரொம்ப சௌகா¢யமாய் போயிடுச்சி நான் வரேன் சாமி.என்னை மன்னிச்சிடுங்க சாமி” என்று சொல்லி விட்டு அந்த சிலுவை செயினை தன் தாவணிக்குள் போடுக் கொண்டு, திரும்பிப் பார்ககாமல் ‘விடு’ ‘விடு’ என்று படிக்கட்டில் இருந்து கீழே இறங்கி,தேவி தன் வீட்டுக்கு போக ஆரம்பித்தாள்.

மரமாய் நின்றான் கணபதி.அவனுக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை.யோஜனை பண்ணி ஒரு முடிவுக்கு வந்தான்.தன் தவறை உனர்ந்தான்.‘தன்னை அவ காதலிக்கிறாளா,தன்னை விரும்பு றாளான்னு எல்லாம் தொ¢ஞ்சுக் கொள்ளாம தன் மனதை ஒரு இளம் பெண்ணிடம் பறி கொடுத்தது எவ்வளவு பொ¢ய தப்பு’ என்பதை புரிந்துக் கொண்டான் கணபதி.மனதை கல்லாக்கிக் கொண்டான்.‘இன்று வினாயகர் பூஜை தினம்.இனி நாம் நம்ப மனசை, இந்த காதல், கல்யாணம்ன்னு உலக விஷயங்களில் ஈடு படுத்திக் கொள்ளாம தெய்வ எண்ணங் களில்,தெய்வ காரியங்களில் ஈடு படுத்திக் கொண்டு வாழ்ந்து வர வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தான்.

‘தான் செஞ்சு வருவது எவ்வளவு புனிதமான தொழில்.எவ்வளவு இளம் பெண்கள் கோவிலுக்கு அர்ச்சனை பண்ண வறா.அவாளை எல்லாம் நாம தப்பான கண்ணோ ட்டத்தில் பாக்கலாமா. அவாளை எல்லாம் நம்ம சகோதா¢கள் போலத் தான் இனி நினைச்சு வர வேணும்.இனி நம் வாழ்வில் வினாயகர் சேவை ஒன்னு தான் நாம் செய்ய வேணும்’ என்று மனதில் தீர்மானம் பண்ணிக் கொண்டான் கணபதி.‘தன் பேரை தன் அப்பா ஒரு ‘முருகன்’ என்றோ ‘ராமன்’ என்றோ ‘கிருஷ்ணன்’ வைக்காம ‘கணபதி’ என்று வச்சதற்கு காரணம் அவனுக்கு இப்போ புரிந்து விட்டது.இனிமே தானும் அந்த வினாயகர் போல் பிரம்மச்சரியாக இருந்துக் கொண்டு வினாயகருக்கு சேவை பண்ணுவதற்காகத் தான் இருக்குமோ.அவனுக்கு சந்தேகமே இல்லை.‘இளம் வயது தேவி ஒரு ‘கன்னி ஸ்த்ரி’ ஆகி காலம் பூராவும் கல்யாணம் பண்ணிக் கொள்ளாம இருக்க முடிவு எடுக்கும் போது நானும் ஏன் கல்யாணமே பண்ணிக் கொள்ளாம ஒரு பிரம்மசாரியாக இருக்கக் கூடாது’.கணபதி யோஜனைப் பண்ணினான்.

‘தேவி,நீ ஒரு ‘கன்னியாய்’ இருந்து அந்த தேவாலயத்தில் ஏசு கிருஸ்துவுக்கு சேவை புரிஞ்சு வா.நான் இங்கு வினாயகர் கோவிலில் ஒரு ‘பிரம்மச்சாரியாய்’ இருந்துண்டு இந்த விநாயகர் கோவிலில் சேவை பண்ணி வறேன்.நம் ரெண்டு பேருக்கும் அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தா,நாம் இருவரும் மறுபடியும் பிறந்து, நீ இப்போ வேண்டி வரும் ‘இயேசு கர்த்தர்’ அருளாலும், நான் இப்போ வேண்டி வரும் ‘விநாயகர் அருளாலும்’ ஒன்னா இணைஞ்சு கணவன் மணைவி ஆவது நிச்சியம்’ என்று மனதில் சொல்லிக் கொண்டான் கணபதி.

அவன் மனம் சந்தோஷப் பட்டது.கணபதி கோவில் வேலைகளை பக்தியுடன் கவனிக்க ஆரம்பித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *