ஆனாலும்…

 

ஆனாலும் நன்றாகவே இருக்கிறது.நண்பர்களும், தோழர்களுமாய் செல்போனில் அழைத்துப்பேசாத பேச்சற்ற பொழுதுகளிலும் நண்பர் முருக கணேசன் வால் போஸ்டர் காட்டி சிரித்த வேளை தோணிய சொல்லை கவிதையாக்கி தந்த போது அவர் அடைந்த எல்லையில்லா மகிழ்ச்சியின் நினைவுடனும் இப்படி நின்று கொண்டிருப்பது நன்றாகவே இருக்கிறது.

இவனும் தோழருமாய் சந்தித்துக் கொண்டிருந்த வேலை மின்சாரம் அற்ற நேரமாய் வழக்கம் போல் மாலை 6 மணியிலிருந்து 7மணிவரை கரண்ட கட் நேரம். இவன் போன இடம் ஒரு உலகக் கட்சி யின் அலுவலகமாய் இருந்தது.

சிவகாசி பாலத்தின் அருகே இருந்த ஏரியாவில் உள்ள தெருவொன்றில் குடி கொண்டிருந்த மக்களின் வசிப்பி டங்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட சித்தாந்தங்களை யும், கொள்கையையும் மனதில் தாங்கி ஒரு இலக்கு தாங்கிய மனதுடன் தன்னை அந்த இயக்கத்திற்காய் அர்ப்பணித்துக் கொண்ட தோழர்கள் கட்சியின் ஊழியர் களாய் உருமாறி அடையாளப்பட்ட கட்டிடத்தில் தான் தோழரும் இருந்தா ர்.

அருகில்தான் அவரது வீடும் இருந்ததால் அந்த இடம் அவருக்கு சௌகரியப்பட்டதா, அல்லது அங்கு வேறே தேனும் வேலையாய் வந்தாரா என்பது தெரியவில்லை.

கழண்டு ஓடிய நினைவுகள் ஓடோடி வந்து ஓரிடத்தில் சங்கமித்து கை கோர்த்து க்கொண்டால் எப்படி இருக் குமோ ,அப்படித்தான் இருந்தது அன்றைய தினம் இவன் தோழரை சந்தித்து பேசிய போது அலுவலகத்தின்முன்வராண்டாவில்தான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் கள். நீண்டு ஓடிய வராண்டா செவ்வக வடிவெடுத்து காண்பித்ததாய்.முன் வாசல் தவிர் த்து மூன்று பக்கமுமாய் பிங்க் கலர் அடித்து காணப்பட்ட சுவர்களில் தகவல் பலகை,நோட்டீஸ் போர்டு,சமீபமாய் ஒட்டியிருந்த வால் போஸ்டர்கள் இரண்டு எனக்காணப் படுகிறது கலவையாய் நோட்டீஸ் போர்டில் தொங்கிய பேப்பர் ஒன்று விலை அதிகரிப்பை எதிர்த்து இயக்கம் நடத்தப்போகிற போரா ட்டத்தையும்,இடத்தையும்தேதியையும் குறிப்பிட்டுச் சென் றது. அருகில் இருந்த நோட்டீஸ் போர்டில் சரியாக பின் வைத்து குத்தப்படாததால் ஒருபக்கம் கழண்டு தொங்கிய நோட்டீஸ் கதைசொன்னது. தகவல்பலகையில் எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள் வெண்மை நிறம்பூத்து அடர்த் தியாய்/ சாக்பீஸை தண்ணீரில் முக்கிஎழுதியிருப்பார்கள் போலும்.

பிங்கும்,சிவப்பும்,வெள்ளையும்காட்டியசுவரைத்தழுவியபார்வைகீழிறங்கி தரை தொட்டவேளைபிளாஸ்டிக்சேர்களில் அருகருகாய் அமர்ந்து பேசிக்கொண்டி ருக் கிறவர்களாய் சேர்களையும்அதன்மீதான் எங்களது அமர்வையும் கடந் து சுவரோரமாய் வீற்றி ருந்தநீண்டடேபிளில் மடித்துக் காணப்பட்டபோஸ்டர்களைஎண்ணிக்கொண்டிரு ந்தார் நண்பர் முருககணேசன்.கைமின்னல்வேகத்தில்செயல் படுகிறது, வாய் எண்ணிக்கையை முணுமுணுக்க, கண்கள் வேலையின் கவனத்தில் நிலை கொண்டிருக்க மூளை அதை கட்டுப்படுத்திஉடலையும்மனதையும் நூலில் கட்டி இயக்கிக் கொண்டிருப்பதாக அவர் போஸ்டரை விரித்து எண்ணும் போது மின் வெட்டு என்கிற எழுத்து இவ ன் கண்ணில் பட்டு மறைகிறது சடுதியாக/உடனே நண்பர் முருக கணேசனிடம் ஒரு போஸ்டரை வாங்கி அதன் பின்பக்க ஓரம் இப்படி எழுதி அவரிடம் கொடுக்குறான்.

”வீட்டிலும் இருட்டு,
வீதியிலும் இருட்டு,
மனசு மட்டும் 1000 வாட்ஸ் பல்பாய்”
கவிஞர் முருக கணேசன்

என எழுதி அவரிடம் தந்த கணம் அவர் அடைந்த புளகாங்கிதத்திற்கு அள வீடுகள் ஏதும் இல்லாமல் போனது.

சிறிது நேரம் இறக்கை முளைத்த பறவையாய் அங்கும் இங்குமாய் பறந்து திரிகிறார். இலக்கற்று பறந்து திரிந்து களைப்புடன் வந்தவர் இவனையும் தோழரை அகமகிழ் ந்து பார்த்தவாறே இருக்கிறார்.

பார்த்துக்கொண்டிருந்தவேலைமறந்துகண்,மனது,மூளை,உடல்எல்லாமும்இங்கே யே கவனம் குவிந்து எமர்ஜென்ஸி விளக்கின் ஒலியில் படபடத்த போஸ்டரி ன் முனை பின் பக்கம் வெள்ளையாயும், முன் பக்கம் சிவப்பு எழுத்துக்களைத்தாங்கிக் காட்டியதாகவும்
புழகாங்கிதப்பட்டமனம் தாங்கிய வரை அழைத்து பக்க த்தில் அமரவைத்து தோழர் சொன்னார். வாரம் ஒரு கவிஞ ரை உருவாக்குகிற திட்டம் எங்க ளிடம் கைவசம் இருக்கி றது.அதன் கீழ் நீங்கள் இன்று கவிஞராய் அறிமுகம் செய்யப் பட்டுள்ளீர்கள்.ஆகவே கவிஞர் என் பெயர் தாங் கிய பின் சும்மாஇருப்பது அழக ல்ல,இன்றிலிருந்து எழுது ங்கள்ஏதாவது எனச்சொல்லிக் கொண்டிருந்த வேளை யில் வால்போஸ்டரின் பின்னாலிருந்த வார்த்தை களை அவரதுடைரியில் எழுதிஅதன்கீழ்மறக்காமல் கவிஞர், முருககணேசன் எனப்போட்டுக்கொண்டார்.

சந்தோசமாய்இருந்ததுஅப்படிப் பார்க்கையில்.இதே ரீதி யில் வேகமெடுத்துப் போனா ல்,,,,,?

அப்படியாய் அவர் எழுதியும் நாங்கள் பேசியும் கொண் டிருந்த நேரங்களில் மின் சாரம் உயிர்பெற்று வந்து விடகிளம்புகிறோம்.முதலில் நான்பின்னால் அவர் என்கிற வரிசை தாங்கி அன்று இனித்த அந்த நினைவு இப்போது இங்கு நிலை கொண்டு நிற்கையில் ஞாபகம் பூப்பதாக நால்வழி அல்லாத தேசிய நெடுஞ்சாலை அது.தேசிய நெடுஞ்சாலையின் எத்த னையாவது பிரிவு அது என சரியாகத்தெரியாது.சாலைப் பணியாளர்களைக் கேட்டா ல் சரியாகச் சொல்லி விடுவார்கள்.அதிலும் குறிப்பாக ராஜப்பன் கணக்கு சரியாக இருக்கும்.

சென்ற மாதமோ என்னவோ,,,,,இதே சாலையில் கிராமத் தை அண்மித்து சாலை யின் குறுக்கே இருந்த பாலத்தை அகலப் படுத்திக்கட்டிக் கொண்டிருந்தார்கள்.

தோண்டி போடப்பட்டிருந்த மண் குவியல் ஒருபக்கம், தண்ணீர் நிரப்ப காத்திருந்த பிளாஸ்ட்டிக் ட்ரம்கள் மறு பக்கம்,வேலையாட்கள், ஜல்லி, மணல் என குவிந்த குவியல்களுக்கு மத்தியில்தான் அந்த சாலையில் பயணிக்க வேண்டியி ருந்தது.

நலம்,நலமறிய ஆவல் என எழுதப்பட்ட தூது செல்கிற கடிதப்போக்கு வரத்து வண்டிஉட்பட/கடிதங்கள் சுமந்து செல்கிற சேதிகளை அறியாதவர்கள் நிறைந்தி ருக்கிற நேரங்களில் கூட பயணிக்கிற அந்தவண்டிஅந்த பாலத் தைக் கடக்கை யில் எதிரே வந்த இரு சக்கர வாகனத் திற்கு வழிவிட கொஞ்சமாய் ஓரம் கட்டிய பொழுது எவ்வ ளவு நிறுத்தியும் கேட்காமல் மண மேட்டின் மீது ஏறி நிற்கிறது.

மனைவியும் கணவனுமாய் வந்த இருசக்கரவாகனமது. மனைவின் மடியில் கைக்குழந்தை, குழந்தையின் முகத்தையும், உடலையும் துண்டால் போர்த்தியிருந்தார்கள். பெண் குழந்தையாய் இருக்கும் போலத் தெரிகிறது. தலை முடியை வைத்து சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும் கூட அது பெண் பிள் ளை யாய் இருந்து விடாதா என ஏங்குகிறது மனது.

சென்ற வாரம் இரவு வந்த கனவுகூட அதை பிரதி பலித்துச் செல்வதாக எங்கென இடம்தெரியவில்லை. உள்ளூரா,வெளியூரா.அல்லதுஅலுவலகமாசரியா க புடிபடவில்லை.வந்தகனவு அதைச்சரியாகச் சொல்ல வில்லை. அப்பொழுது சொந்தக்காரரிடமிருந்து போன்,” உனக்குஆண்குழந்தைப்பிறந்திருக்கிறது.வரவும் சீக்கிரம்” என ஆஸ்பத்திரியின் பெயரைச் சொல்லிச் சொல்கிறார். சேதிசொல்லப் பட்டவுடன் இருந்த சந்தோஷத்தை சற்றே நேரத்தில் சூழ்க்கொண்ட எண்ணம் மாற்றி விடுவதாக இந்த ஐம்பது வயதில் பெண் பிள்ளை பிறந்து அதை திருமணம் செய்து கொடுக் கும் போது தனக்கு வயது 70தோஅல்லதுஅதற்கு மேலோஆகிப்போகலாம். தவிர இத்தனை வருட அரசு உத்தியோகத்தில் உருப்படியான சேமிப்பு எனபெரி தாக ஒன்றும் இல்லைஎன மனதில் எடுத்தஅரிப்பு முழுதாக முடியும்முன்பாகவே நிலை கொண்டிருந்தகனவு முடிந்து போய்விடவிழித்துக் கொள்கிறான்.

வேடிக்கை விதைத்த கனவு. காலை விழித்ததும் மனை வியிடம் சொன்ன போது” போ,,,,தும் இனிமேவயசு திரும் புதாக்கும்.கண்டதக் கடியத நெனைக்காம ஆபீஸீக்கு கெளம்புற வழியப் பாருங்க” என்கிறாள்.

அந்த கனவு வந்து போன நாளன்றிலிருந்து நான்கைந்து நாட்களுக்கு கனவு சூழ்ந்தஎண்ணத்தால் மனம் எட்டி உதைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.

ஒரு வேளை அப்படியான கனவு வந்து பெற்ற குழந்தை யாகக்கூட இருக்கலாம் அவர்கள் கையில் இருப்பது. என யோசித்த விநாடி இரு சக்கரவாகனத்தில் வந்த வர்கள் மணல்மேட்டில்ஏறிநின்ற வேனுக்கு மிக அருகாமையி லும்,அதை உரசிச் செல்வதுபோலவுமாய் சென்று கொண் டிருந்தார்கள்.

அவர்கள் சென்றதும் மெயில் வேனை ரிவர்சில் எடுத்த டிரைவர் தலையில் அடித்துக் கொள்கிறார். இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜோடியைப் பார்த்து/

ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊர் நோக்கி கோபம் கொண்டு ஓடுகிறசிறுபிள்ளை யின்வேகத்துடன்ஓடுகிற சாலை தன் இருபக்கத்திலும் வாய் திறந்து கிடந்த ஓடைகளை காட்சி வைத்ததாய்.

சடுதியில் நகர்ந்து சென்றவாறிருந்த சாலையோரபுளிய மர நிழலும் சாலை ஓர மாய் முளைத்துத்தெரிந்த டீக்கடைகளும்,அதன் எதிர்புறமாய் விரிந்த பெரிய கண்மாயும்அங்கு ஒரு சிற்றூர் குடிகொண்டிருக்கிறது என அடையாளம் காட்டிச் சென்றது.

மண்ணும்மனிதர்களும்வாகனங்களும்,மண்மலர்ந்த செடிகளும்,பூக்களும் கொடிகளும்,வான்பறந்த பறவை களு மாய்காட்சிப்பட்ட நேரம்ஊர்எல்லை மிதிபடுகிற இடத்தில் இருந்த கடையில் டீசாப்பிட்டுக் கொண்டிருக் கிறான் இவன்.

ஆனாலும் நன்றாகவே இருக்கிறது. நண்பர்களும் தோழர்களுமாய் செல்போனில் அழைத்துப் பேசாத பேச்சற்ற பொழுதுகளிலும், நண்பர் முருக கணேசன் வால் போஸ்டர் காட்டி சிரித்த வேளை தோனிய சொல்லை கவிதையாக்கி தந்தபோது அவர் அடைந்தஎல்லையிலாமகிழ்ச்சியின் நினைவுடனும், பெண்பிள்ளைபிறந்து விட்டதாய் சேதி சொல்லிப்போனகனவின் கைபிடித்துமாய் நின்று கொண்டிருப்பது நன்றாகவே இருக்கிறது 

தொடர்புடைய சிறுகதைகள்
இருப்பதைக்கொடுங்கள் போதும் எனச்சொல்லுகிற மனது வாய்க்கப் பெறுவது மிகப்பெரும் வரப்பிரசாதமாயும், பாக்கியாகவுமே. காலை ஒன்பது மணிக் கெல்லாம் கிளம்பி மதுரைவரை போய்விட்டு வந்து விடலாம் என்கிற நினைவு தாங்கி நேற்று இரவு தூங்கிப்போனது தான். ஆனால் காலையில் எழும்போது வழக்கமான சோம்பலும் மிதமிஞ்சிப்போன ...
மேலும் கதையை படிக்க...
இனி வேண்டாம் இருபது.ரூபாய் பத்தே போதுமானது. இளஞ் சிவப்பில் வண்ணப் படங்கள் காட்டிச்சிரித்த இருபது ரூபா ய் வலது கையிலிருந்து இடது கைக்கு மாறிய கணம் அது சடைப் பைக் குள்ளாய் பயணித்து பத்து ரூபாய் தாள் ஒன்றை கையில் எடுக்கிறது. இளம்மஞ்சளிலும்,அடர் ...
மேலும் கதையை படிக்க...
இப்படிஇலக்கிலாமல்சைக்கிளில்சுற்றித்திரிவதும்,நினைத்தஇடத்தில்நின்றுநினைத்த கடையில் டீசாப்பிடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. காலை 6.00 டூ 7.15 முகூர்த்தம்.குளிர் நேரம் எழுந்து கிளம்புவது கொஞ்சமாய் சிரமப் படுத்தி னாலும் கூட கிளம்பி விடுகிறான்.6.15ற்கெல்லாம் மண்டபம் போய் விட்டான். இவன்வீடு இருக்கிறஏரியாவிலிருந்துமண்டபம்இரண்டுகிலோமீட்டர் தூரங்களாவது இருக்கும். உழவர் சந்தைக்குஎதிர்த்தாற்ப்போல் என பத்திரிக்கையில்போட்டிருந்தார்கள். நேற்றுஇரவே ...
மேலும் கதையை படிக்க...
அப்பாக்களின் இறப்பு தவிர்க்க முடியாததும் நடப்பதும் தான் என்றாலும் கூட அவர்களின் இழப்பு எற்படுத்திவிட்டுச் செல்கிற வெற்றிடம் மிகப் பெரியாதாகவே. நண்பரின் அப்பா இறந்து போகிறார் ஒரு அதிகாலைப் பொழுதாக என போன் வந்த வேலை காலை 8.00 அல் லது 8.05 ...
மேலும் கதையை படிக்க...
வெட்டப்பட்டுக்கிடக்கிறது குழி.நாலடி ஆழமும் இரண்டடி அகலமு மாய் மண் கீறி காட்சிப்பட்ட அதன் மேனி முழுவதும் மண்ணும் புழுதியும் சிறு சிறு சரளைக்கற்களுமாய்/போதாதற்கு ஆங்காங்கே நீட்டிக் கொண்டிருந்த டெலிபோன் கேபிள் வயர்கள் அறுந்து தெரிந்த தாய்/ அரைத்தெடுத்தசட்னியும்,அவித்தெடுத்தஇட்லியும் தட்டில் வைத்துப் பரிமாறப்படும் போது ...
மேலும் கதையை படிக்க...
கடித்த கடிக்கும்,இழுத்த இழுவைக்கும் கொடுத்த பணம் போதுமா அல்லது நேர் படு மா என்கிற ஐயப்பாட்டுடனேயே இவன் கை நிறைய வைத்திருந்த பணம் கரைந்து போகிறசமயங்களிலும் கூட இவன் இப்படி வருத்தப்பட வேண்டியதில்லை. மணிகண்டனின் கடை இருக்க பயமேன் என்கிற சொல்லாக்கம் ...
மேலும் கதையை படிக்க...
ஒன்றை செய்து முடிக்கையில் பிறிதொன்று விட்டுப் போகிறதுதான் .காலை ஐந்தரை மணிக்கெல்லாம் விழிப்புத்தட்டிவிட்டது.ஆனாலும் குளிருக்குப் பயந்து போர்வையை இழுத்து மூடிக் கிடந்தான். முன்பெல்லாம் காலிலிருந்து தலைவரை முகத்தையும் சேர்த்து மூடிக் கொண்டு படுத்தாலும் ஒன்றும் தெரிவதில்லை. இப்போதெல்லாம் மூச்சு முட்டுவது போல் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
இதோ வந்து கொண்டிருக்கிறேன் பறந்து,உடனடியாகவோ இல்லை சற்று தாமதம் காட்டியோ,,,,,/ கோபப்பட்டுக்கொள்ள வேண்டாம் தயவு செய்து/ கோபம் இருபக்கமும் கூர் கொண்ட முள் முனை போன்றது. சமயத்தில் நம்மையே பதம் பார்த்து விடக்கூடும்,கூடும் என்ன கூடும் கண்டிப்பாக பதம் பார்த்து விடும்தான். பார்க்கிற பதம் கைகாலை ...
மேலும் கதையை படிக்க...
மதயானை கடையில்தான் சோப்பு வாங்கினான், மகன் யானை என்பதே மறுவி மதயானை ஆகிபோனது என்று சொல்வார்கள் கடைக்காரைப்பற்றி அந்த ஊர்க்காரர்களிடம் கேட்கிற போது,அவர் பிறந்த போது பிரசவம் பார்த்த தாதி உன் மகன் யானை ஓங்குதாங்காக வருவான், மகன் இனி யானை போல ...
மேலும் கதையை படிக்க...
கருப்பும்,வெளுப்பும்,சிவப்பும்,பிங்குமாய் கரைந்தோடுகிற சிந்தனையுடன் சாலை கடக்கிற இருசக்கர வாகனமும் அதன் மீது அமர்ந்து வருகிற இவனுமாய் எட்டித் தொட வேண்டிய இலக்காய் இருக்கிற தூரம் எவ்வளவாய் இருக்கும்? இருந்துவிட்டுதான்போகட்டுமே, தூரம் எவ்வளவாக வேண்டுமானாலும்? கடப்பதும் எட்டித்தொடுவதும் மட்டுமே உளகிடக்கையாய் இருக்கிற போது,,,,,,? பாலமேடு டூ ...
மேலும் கதையை படிக்க...
இன்வாய்ஸ்
நெளிகோட்டுச்சித்திரம்
கிளியாஞ்சட்டி…
விநாடி முள்ளின் நகர்வுகள்…
வெட்டுக்குழி
புரோட்டா சால்னா…
செதுக்குமுத்து…
வேரிலைபட்டு…
சோப்பிடலின் உருதாங்கி…
தந்திக்கம்பி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)