ஆசை – ஒரு பக்க கதை

 

கணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு் வெளியே செல்ல வேண்டும். இதுதான் பாமாவின் ஆசை.

திருமணத்தன்று கைபிடித்தது. அப்போது 20 வயது.

திருமணமான புதிதில் ஊட்டி போனபோது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டாள்.

”என்னங்க நாம கைகோர்த்துக்கிட்டு போலாமா..”

கிண்டலாய்ப் பார்த்தவர் சொன்னார்.

”நீ கண்ட சினிமாவையும் பார்த்து கண்ட புஸ்தகத்தையும் படிச்சு கெட்டுப் போயிருக்குறே.”.

40 வயதில் ஒரு முறை இந்த ஆசை வந்தது.

“பிள்ளைகள் முன்னாடி என்ன இதெல்லாம் வேண்டாத ஆசை “என்றார்.

அதன்பின் எப்போதுமே அவள் கேட்பதில்லை.

அந்த ஆசை நிறைவேறவேயில்லை.

எங்கே சென்றாலும் கணவன் முன்னே வேகவேகமாக செல்ல பின்னே ஓடியே பழக்கமாகிவிட்டது. பின்னால் மனைவி வருகிறாளா இல்லையா எனக்கூட திரும்பிப் பார்க்காமல் செல்பவரிடம் எப்படிக் கேட்பது?

60 வயதில் சஷ்டியப்த பூர்த்தி வரப்போகிறது. அப்போதாவது கையைப் பிடித்துக் கொள்ளலாம் என ஆசையோடு இருந்தாள்.

படியில் ஸ்லிப்பாகி கால் ஃப்ராக்சராகி விட்டது கணவருக்கு.

கால் கட்டோடு எழுந்து பால்கனிக்கு செல்ல முயன்றவர் தடுமாறினார். தடுமாறியவரைத் தோள்பிடித்து நிற்க வைத்தாள். கைபிடித்து அழைத்துச் செல்ல கை நீட்டியபோது,

“நீ போய் கிச்சன் வேலையைப் பாரு” என்றபடி அப்போதும் கைபிடிக்காமல் பிடிவாதமாய் வாக்கரைப் பிடித்து நடக்கும் கணவரைக் கண்டு விக்கித்து நின்றாள் பாமா.

- தேனம்மை லக்ஷ்மணன் (நவம்பர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஒரு பிரபலமான நிறுவனத்தை நடத்தி வரும் பரமசிவம், அமெரிக்காவில் இருந்து சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியதும். அவரை வரவேற்க அவரது கம்பெனி இந்திய நிர்வாகிகள்,மூவர் நவ நாகரிக உடையணிந்து வரவேற்றனர்..”வெல்கம் சார்” என்று கை குலுக்கிய மூவருக்கும் நன்றி ...
மேலும் கதையை படிக்க...
தோழர்களே… இன்னும் இருக்கிறது காலம்!
அகிலா, கொல்லைப் புறத்துக் கதவைத் திறந்து, துணி காயப் போடுவதற்காகச் சென்ற போது, ""அம்மா... ஒரு நிமிஷம் வாயேன்,'' என்று பாபுவின் குரல் கேட்டது. ""இருடா பாபு... துணி காயப் போட்டுட்டு வர்றேன்,'' என்று பதில் சொல்லும் போது தான் கவனித்தாள்... கயிறு ...
மேலும் கதையை படிக்க...
யாக்கை
குமார் ரொம்ப உற்சாகமான ஆள். எப்போதும் எதற்காவது சிரித்துக்கொண்டே இருக்கிறவன். அவன் சிரிக்க வேண்டுமெனில், பெரிய நகைச்சுவைகள் தேவை இல்லை. 'ஆபீஸ் வாசல்ல பாத்தியா குமார்... ஒருத்தன் ரௌடி மாதிரி நிக்கிறான். முதுகுல ஏதோ பொருளைச் சொருகிவெச்சிருக்கான்’ என்றால்கூட சிரித்தபடியே, 'ஆமாமா... ...
மேலும் கதையை படிக்க...
நான் மனைவியைத் தேடி வீட்டிற்குள் சென்றபோது அவள் குளிப்பை முடித்து, அழகான சேலையில்… சுவாமி தரிசித்து, பூச்சூடி, குங்குமப் பொட்டிட்டுப் புனிதமாகத் தோன்றினாள். “இந்த வீட்டுக்குக் குடிவந்த நாளிலிருந்து இப்பதான் என்ர மனம் நிறைஞ்சிருக்கு!” என்றேன். அவள் நாணம் மேலிட, “எப்பிடி வெளிக்கிட்டாலும் உங்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
சிதம்பரம் இவர் கோயம்புததூரை சேர்ந்தவர் .கல்லூரியில் இவருடன் படித்த நஜிம என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். பெற்றோர்களின் எதிர்ப்பால் இருவரும் விட்டை விட்டு வெளியேறுகின்றனர் .கல்லூரியில் இவர் படிக்கும் போதே மென்பொருள் ஒன்றை உருவாக்கி தங்க பதக்கம் ...
மேலும் கதையை படிக்க...
தந்தை பட்ட கடன்
தோழர்களே… இன்னும் இருக்கிறது காலம்!
யாக்கை
அடைக்கலம்
கிஷோர் சிதம்பரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)