ஆசை ஆசை ஆசை

 

வன் கண்களை மூடிக்கொண்டான்.

மனசுக்குளே அவளை முழுசாய் நிறுத்திப் பார்க்க முயற்சித்தான்.

கிட்டத்தட்ட ஒரு மாசமாய் நினைத்துநினைத்துப் பழகி இருந்ததால் கூப்பிட்ட உடன் ஓடிவரும் நாய்க்குட்டி மாதிரி மனசுக்குள் வந்து நின்று கொண்டாள்.

அவள் ரொம்ப உயரமில்லை.

ஐந்து இருநாடு இருந்தால் அதிகம்.

அந்த உயரத்திற்கு ஏற்ற பருமன்.

அவளிடம் அவனுக்கு ரொம்பப் பிடித்தது அந்தத் சின்ன இடுப்பு. மடிப்புகள் இல்லாத அழகான இடுப்பு.

34-24-36-வேண்டும் என்று அவன் என்றைக்கும் ஆசைப் பட்டது இல்லை. அனால் எதிர்பாராத விதமாய் அப்படியே அமைந்துவிட்டது என்னமோ நிஜம்தான்.

மூக்கு முழி என்று ஒவ்வொன்றாய் துருவினால் ஏதாவது குறை தெரியுமோ என்னவோ, ஆனால் அவன் துருவவில்லை.

சொல்லப்போனால் அந்த பிகரும், எந்த வெள்ளை நிறமும் அவன் எதிர்பாக்காத பிளஸ் பாயிண்டுகள் என்று கூடச் சொல்லலாம்.

பெண் பார்க்கப் போன அன்று அவள் ஒரு கார்டன் பிரிண்டட் ஜார்ஜெட் கட்டியிருந்தாள். லெமன் கலை பூக்கள் உடம்பு பூராவும் பரவ நின்றபோது தன வீட்டு மூலையில் சரம் சரமாய் பூத்திருக்கும் மஞ்சள் சரக்கொன்றை ஞாபகம்தான் அவனுக்கு வந்தது.

தோளுக்குச் சற்றுக் கீழோடு தொங்கிய முடியை ப்ருஷ்ஷால் வாரி, காதுகளை மூடி, ஒரு கருப்பு ரப்பர் பேண்டால் கட்டி இருந்தாள்.

‘பெண்ணைப் பார்க்கறேன்னு கூட்டமா போறது, அங்கே மூக்கு பிடிக்க சொஜ்ஜியும் பஜ்ஜியும் சாப்பிடறது, அப்புறம் பெண்ணை நடக்கச் சொல்லி, பாடச்சொல்லி பார்கிறது – இந்த அசிங்கமெல்லாம் கூடாது.’ அவன் கறாராய் முன்கூட்டியே சொல்லிவிட்டதால் அப்பா, அம்மா, அவன் மூன்று பெயர் மட்டும் போயிருந்தார்கள்.

அவன் நேரில் பார்த்த முதல் பெண் அவள்தான்.

அவளுடைய நாசூக்கும், எண்ணி இரண்டு வார்த்தை பேசிய நாகரிகமும் அவனுக்குப் பிடித்துப் போயிற்று.

அன்றே அங்கேயே ‘பெண்ணைப் பையனுக்குப் பிடிக்கிறது’ என்று அப்பைவை விட்டுச் சொல்லச் சொன்னான். லக்னப் பத்திரிகை வாசிக்க நாள் குறிக்கச் செய்தான்.

பல வருசங்களாய் கல்யாணம் வேண்டாம் என்று சொன்ன பிள்ளை இப்போதாவது மனம் மாறினானே என்ற சமாதானத்தோடு வரதட்சனை கூடாது, ஆடம்பரமான கல்யாணம் கூடாது, இதைப் பண்ணலை, அதைப் பண்ணலை என்று யாரும் முணுமுணுக்கக் கூடாது என்று நீளமாய் மகன் போட்ட கண்டிஷினை பெற்றோர் ஏற்றுக்கொண்ட பிறகு அவன் தன ஊருக்கு புறப்பட்டான்.

ஹேமமாலினி கண்கள், ஸோபியா லாரன் மார்புகள், கே.ஆர்.விஜயா பற்கள், வாணி ஜெயராம் குரல் என்று தனக்கு வரபோகிறவள் இருக்கவேண்டும் என்று கனவு காணாத அவனுக்கு அவள் எப்படி இருந்தாலும் தானும் அவளும் வாழும் வாழ்கை மிஸ்டர் அண்ட் மிஸஸ் மித்ரா வாழ்வதைப்போல இருக்கவேண்டும் என்ற ஆசை மட்டும் நேசு நிறைய இருந்தது.

***

ந்து வருஷங்களுக்கு முன் வடக்கே இருந்த அந்த ஊரில், அந்த ராட்சஷத் தொழில்சாலையில் ஒரு ஜூனியர் என்ஜினீயராய் வந்து சேர்ந்த சில நாட்களில் அவன் மித்ரா தம்பதியைப் பார்த்தான்.

இவன் வீடு ‘ஸி’ டைப் ஒன்றைப் படுக்கையறை கொண்ட சின்ன ப்ளாட்.

அவர்களுடையது எதிர்சாரியில் இருந்த ‘டி’ டைப், இரண்டு பெட் ரூம் கொண்ட பெரிய ப்ளாட்.

அந்த ஊரில் எல்லாமே உல்டாதான். ‘ஏ’ டைப் சின்ன வீடு என்றால் கிழே போகப்போக பெரிய வீடுகள்.

மித்ரா ஒரு செக்க்ஷன் என்ஜினீயர். அவருடைய நேர் மேல் அதிகாரி.

வீடும், தோட்டமும் எங்களை பாரேன், பாரேன் என்று கண்களைக் கட்டி இழுப்பதை முதல் நாள் அவர்கள் வீட்டுக்கு ‘டீ’ அருந்தப் போன அன்றே அவன் உணர்ந்து கொண்டான்.

“அஞ்சு-இதர் ஆயியே ஜீ-” என்று அழைத்து, சிரித்துக் கொண்டே சல்வார் கமிஸில் வெளிய வந்த அவளை ‘என் மனைவி’ என்று மித்ரா அறிமுகப்படித்தினதும் அவன் ரொம்ப ஆச்சிரியப்பட்டுப் போனான்.

‘இங்கே வாருங்கள்’ – என்று மனைவியையா அழைத்தான்?. மனைவிக்கா ‘ஜீ’ மரியாதையை! ஹௌ நைஸ்!

இரண்டு மணி நேரம் போல அங்கே இருந்து மித்ராவையும், அஞ்சுவையும் பார்த்ததில் அவன் ஒரு புது மனுஷனாக மாறிப் போனான் என்றுதான் சொல்லவேண்டும்.

அஞ்சு ‘டீ’ போட்டால் மித்ரா டிரேயில் கப் ஸாசர்களை எடுத்து வைத்தான்.டிபன் சாப்பிட்டதும் அஞ்சு பீங்கான் கிண்ணங்களை அலம்பினால், மித்ரா அவைகளை துடைத்தான். அவனோட பேசிகொண்டிருந்ததால் அவள் வண்டியை எடுத்துக்கொண்டு பெட்ரோல் போட்டு, காற்று சரி பார்த்து வந்தால்.

“நான் அஞ்சுவுக்கு ஒரு பார்ட் டைம் ஷர்வெண்ட்” என்றன் மித்ரா.

“நான் மித்ராவுக்கு ஒரு பார்ட் டைம் டிரைவர்” என்றால் அஞ்சு.

இரண்டு பேர் முகத்திலும் சிரிப்பு-சந்தோசம். நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்ற பாவம், நான் இல்லாமல் உன்னால் இருக்க முடியாது என்ற கர்வம்.

இரண்டு வருஷங்கள் அவர்கள் அமெரிக்காவில் குடித்தனம் செய்திருகிறார்களாம். ஒரு கணவன் மனைவிக்கு எத்தனை மரியாதை தளவேண்டும் என்று அங்கே மித்ரா கற்றுக் கொண்டானாம். கணவனுக்கு மனைவி எத்தனை உபயோகமாய் இருக்க வேண்டும் என்று அவள் கற்றுக்கொண்டாளாம்; சொன்னார்கள்.

ஆ! இது என்ன அன்பு!

என்ன அருமையான தாம்பத்தியம்!

அன்று உருவான ஆச்சர்யம் அவர்களை மேற்கொண்டு பார்க்கப்பார்க்க அவனை முழுசாய் ஆட்கொண்ட பிறகு, தனக்கும் இந்த தினுசில் வாழ்கை அமைய வேண்டும் என்ற ஆசை அவனுள் ஏறி உட்காந்துகொண்டது.

‘வேலை கிடைச்சுதேடா, இனிமே பெண் பார்க்க வேண்டியதுதானே’ என்று அம்மா தொணதொணக்கிறாள் என்பதற்காக உடனே சரி என்று சொல்லி கல்யாணம் பண்ணிக்கொண்டு திண்டாடக் கூடாது.

மித்ரா முப்பது வயசில்தான் திருமணம் பண்ணிக்க்கொண்டானாம். அதுவரை உழைத்து, பணம் செய்தது வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கினானாம்.

நானும் அப்படிதான் செய்யப் போகிறேன்.

இப்போது எனக்கு வயது என்ன?

இருபத்தி நாலு.

சம்பளம்?

ஆயிரத்து இருநூறு சில்லறை.

ரைட்.

என் மனைவிக்கு வீட்டுக் காரியங்கள் கஷ்டமாய் இல்லாமல் இருக்கவேண்டும் என்றால் காஸ் அடுப்பு, மிக்ஸி, ப்ரிட்ஜ், பிரஷர் கூகர் அவசியம்.

அவளை இங்கே அங்கே கூடிப்போக எனக்கு ஒரு வெஸ்பா.

ஸோ, இவைகளை வாங்க எனக்கு எத்தனை பணம் தேவைப்படும்?. அதைச் சேர்க்க எத்தனை வருஷங்கள் ஆகும்?.

ஐந்து வருஷங்களில் சுலபமாய் தன் லட்சியத்தை நிறைவேற்றுவதுடன் கையில் ஓரளவுக்குப் பணமும் சேர்க்கமுடியும் என்று கணக்குப் போட்டபின் அம்மாவுக்கு எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம் என்று எழுதினான்.

“ஏன்டா?”

“இப்போ என்ன அவசரம்?”

“என்ன அவசரமா? வயசாச்சி, கை நிறைய சம்பளம். அப்புறம் என்னடா?”

அவன் பதில் எழுதவில்லை.

அம்மா – எனக்குப் பணம் சேர்க்கணும், சாமான்கள் வாங்கணும், வருபவளை நிம்மதியை வைத்துக் கொள்ளணும், நானும் அவளும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மித்ரா மாதிரி வாழணும் என்று எழுதினால் அம்மா புரிந்துகொள்ளப் போகிறாளா?. ம்ஹூம்-இல்லை.

இந்த பிள்ளை ஏன் இப்படி பொண்டட்டிதாசனாய் இருக்க ஆசைப்படறது என்பாள். எவளோ ஒருத்தி வர்றத்துக்கு முன்னாலே இவன் அடிக்கிற கூத்தைப் பாரேன் என்பாள். வர்ற பெண் சீர் செனத்தி கொண்டுவர மாட்டாளா? பெண்ணைப் பெத்தவா குடித்தனம் பண்ண சாமான் சஜ்ஜா வாங்கித்தர மாட்டாளா? இது என்ன கூத்து? என்று மனசுக்குள் மாய்ந்து போவாள்.

அதனால் அவன் எழுதவில்லை, ஊருக்குக்கூட அடிக்கடி போகாமல் அடுத்து வந்த வருஷங்களைத் தார்காட்டினான்.

***

திஷ்டவசமாய் நாலு வருஷங்களிலே அவன் எதிர் பார்த்த தொகை சேர்ந்துவிட்டது.

வெஸ்பா, ப்ரிட்ஜ், காஸ், மிக்ஸி, அந்த வருஷம் வாங்கின பிறகு ஐந்தாம் வருஷம் காஸட் தப்பே ரிகார்டர், சோபா செட், கோத்ரேஜ் அலமாரிக்கும் தான் தயார் என்று புரிந்ததும், அம்மாவுக்கு பெண் பார்க்கச் சொல்லி பச்சைக்கோடி காட்டினான்.

ஒரே மாசத்தில் எட்டு புகைப்படங்களோடு அம்மா பதில் எழுதினாள்.

எட்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தான். சென்னைக்குப் போனான். பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடாமல் அவளைப் பிடித்து விட்டது என்றான்.

ஊருக்குத் திரும்பும்போது மறக்காமல் அவள் புகைப்படத்தைக் கேட்டு வாங்கி வந்து மித்ரா தம்பதியிடம் காட்டினான்.

“ஓ! ஷி ஈஸ் ப்ரெட்டி…பேர் என்ன?”

“ரமா”

“என்ன படித்து இருக்கிறாள்?”

“பி.எஸ்.ஸி. ஹோம் சயின்ஸ் அண்ட் லைப்ரரி சயின்ஸ்.”

“ஆ-கிரேட். அப்படியென்றால் நம் லைப்ரரிக்கு ஒரு அழகான புது லைப்ரரியன் வரப்போகிறாள் என்று சொல்லுங்கள்”

முகூர்த்ததுக்கு இருந்த ஒரு மாச இடைவெளியில் சதா அவனைக் கேலி செய்து சிவக்கச் செய்தாலும், சோபா செட் ஆர்டர் பண்ணி வீட்டை சிங்காரிப்பதிலிருந்து ஒவ்வொன்றிலும் அவர்கள் கூட நின்று உதவினார்கள்.

வீட்டைத் தன் சொந்த செலவில் அவன் பெயிண்ட் செய்தான்.

“பிங்க் ஈஸ் ஹாட்-பெட்ரூமுக்கு அந்த நிறத்தையே கொடுங்கள்.” கொடுத்தான்.

“பாத்து க்ரோடன்ஸ் செடித் தொட்டிகளை வாங்கி வராந்தாவில் வையுங்கள்”

வைத்தான்.

“விளக்குகளுக்கு ‘ஷேட்’ வாங்கிப் போடுங்கள்”

மாட்டினான்.

இன்னும்..இன்னும்…

கண்களை அவன் திறந்தான்.

மேஜை மேல் பிரேம் போட்டு வைத்திருந்த அவள் புகைப்படத்தைப் பார்த்தான்.

சரியாய் ஒரு வாரம், அப்புறம் அவள் இங்கு என்னோடு நிஜமாய் இருப்பாள்.

நான் அவள் வருகையை ஐந்து வருஷங்களாய் பிளான் பண்ணி நடத்தியதைச் சொன்னால் அதிசயத்து நிற்பாள்.

நான் அவளுக்காகத் தயாரித்து வைத்திருக்கும் வீட்டைப் பார்த்து பிரமித்து போவாள்.

அவளுக்கு நான் எல்லா விஷயத்திலும் பக்கபலமாய், நல்ல துணையாய் இருக்க விரும்புவதை உணர்ந்து சிலிர்த்து உருகுவாள்…

அவன் அந்த ஒரு வாரத்தையும் கற்பனையில் கழித்துவிட்டு சென்னைக்குப் போனான்.

எண்ணி எழு நாட்கள்தான் லீவு, வேண்டுமென்றே அதிகம் போடவில்லை. இங்கு வந்துவிட்டு அப்புறமாய் பதினைந்து நாட்கள் மறுபடி விடுமுறை எடுத்துக்கொண்டு தேனிலவுக்கு அவளோடு காஷ்மீர் போகவேண்டும் என்று ஆசை.

***

கல்யாணம் அவன் விருப்பபடி-ஜானவாஸம் இல்லாமல், பரதேசிக்கோலம் இல்லாமல், நலங்கு இல்லாமல், ரிஸப்ஷன் இல்லாமல், சாந்தி மூஹுர்த்தம் இல்லாமல்-ஸிம்பிளாய் நடந்தது. மறுநாள் திருப்பதியில் கல்யாண உத்சவம். அதற்கும் மறுநாள் கிளம்பிவிட்டார்கள். ஒரு நிமிஷம்த் தனிமை கூடக் கிடைக்கவில்லை.

பர்ஸ்ட் கிளாஸ். கூபே கம்பார்ட்மெண்ட்.

வண்டி பொறப்பட்டு வேகம் எடுத்துவிட்டது.

ஒரு பக்கமாய் உட்கார்ந்து ஜன்னலுக்கு வெளியில் வேடிக்கை பார்த்து வந்த அவளைப் பார்க்கையில் அவனுக்கு சந்தோசமாய் இருந்தது. கொஞ்சம் படபடபாயும் இருந்தது.

கிட்டத்தில் சென்று நெருங்கி உட்கார்ந்தான். அவள் கையை எடுத்து மேலே அமுக்கினான்.

“ஹேய்! என்ன வேடிக்கை பார்க்கிறே?” என்றான்.

“ஐ லவ் யு டார்லிங்” என்றான்.

“என்னை பாரேன்” என்றன்.

அவள் திரும்பினாள். கண்களைச் சிமிட்டாமல் அவனை உற்றுப் பார்த்தாள். கையைப் பிடித்திருந்த அவன் கையை விலக்கினாள். உணர்ச்சி இல்லாத குரலில் அழுத்தமாய், நிதானமாய் பேசினாள்.

“எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லே, ஐ லவ் சம்படி எல்ஸ். அவர் வேற ஜாதிங்கறதால அப்பா செட் நோ. இந்த கல்யாணத்துக்கு நா ஒத்துக்கலைனா அப்பாவும், அம்மாவும் விஷம் குடித்து செத்துப் போயிடுவேன்னதால அவாளுக்காக நீங்க என்னைத் தொட்டு தாலி கட்ட சம்மதிச்சேன். தட்ஸ் ஆல். மனசுல அசட்டுத்தனமா எதாவது ஆசையை வளர்த்துண்டு நீங்க என்னை நெருங்கக்கூடாதுனு நா இத்தனை வெளிபடைய பேசறேன்…திஸ் மாரேஜ் ஹாஸ் நோ மீனிங் பார் மீ…ஐ’ம் சாரி…”

- வெளிவந்த ஆண்டு: 1979 

தொடர்புடைய சிறுகதைகள்
அவளுக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வதென்றால் ரொம்பப் பிரியம். கல்யாணமாகுமுன் பிறந்த வீட்டில் காலேஜ் போகும் கன்னியாக இருந்த நாட்களில் அவளுக்கு எண்ணெய் தேய்த்துவிட என்று ஒரு பெண்மணியை அம்மா நியமித்திருந்தாள். கஸ்தூரி - அதான் அந்தப் பெண்மணி - அடாது மழைபெய்தாலும் ...
மேலும் கதையை படிக்க...
அன்று இவர் ஊரில் இல்லை-தூங்கி எழுந்த எண்ணெய் தேய்த்து ஸ்னானம் செய்தேன். இவர் இல்லாததால் வீட்டில் வேலை ஒன்றுமே இல்லை. என்ன செய்து பொழுதைப் போக்கலாம் என்று தவித்தவள், இவருடைய பட்டன் இல்லாத ஷர்டுகளைப் பொறுக்கி எடுத்துப் பட்டன்களைத் தைத்துக் கொண்டிருந்தேன். சமையற்கார ...
மேலும் கதையை படிக்க...
எப்படி? எப்படி இது சாத்தியம்? யாராலும் நம்பவே முடியவில்லை. வியப்பும் தவிப்புமாகத் திணறினார்கள். அக்ரஹாரத்துக் காற்றில் சற்று முன் பலாமரத்து வீட்டம்மா சொன்ன சேதி கும்மியடித்துக் கொண்டிருந்தது. அய்யன் குளக்கரை அரச மரம் கூட இலைகளை சலசலத்துப் பேசிக்கொண்டது. பலாமரத்து வீடு, அந்த ...
மேலும் கதையை படிக்க...
தெரு வெறிச்சோடிக் கிடந்தது. வழக்கமாகக் காணப்படும் சந்தடி. ஜன நடமாட்டம் இன்றி அதிசயமாய் அமைதியாய் இருந்தது. வெயிலைப் பொருட்படுத்தாமல் வாசப்படியில் அமர்ந்து தெருவை பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த கைலாசத்துக்கு அலுப்புத் தட்டியது. எழுந்து உள்ளே போகலாமா என்று நினைத்த நொடியில் ஒன்றின்பின் ஒன்றாகத் தெருக்கோடியில் ...
மேலும் கதையை படிக்க...
ராட்சஸர்கள்
அத்தை ஊஞ்சலில் ஒரு காலை மடித்து, இன்னொன்றைத் தொங்கவிட்டபடி அமர்ந்து இருந்தார்.கைத்தறிப் புடைவை, வெள்ளை ரவிக்கை, கழுத்தில் ருத்திராட்ச மாலை, நெற்றியில் விபூதிக் கீற்று, அழுந்த வாரி கோடாலி முடிச்சாக முடியப்பட்ட வெள்ளைத் தலைமுடி.பார்வை மட்டும் வழக்கம்போலவே, பால்கனி வழியாகத் தெரிந்த ...
மேலும் கதையை படிக்க...
ட்ரங்கால்
நெடுஞ்சாலையில் ஒரு சாவு
பலாமரத்து வீடு கதை!
விழிப்பு
ராட்சஸர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)