ஆசையில் ஓர் கடிதம்

 

சிவா இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க என்று ஆரம்பித்த ஜானகியின் கடிதத்தை படித்துக் கொண்டிருந்தேன்.

ஸ்கூலிருந்து வந்ததும் யூனிபார்மைக் கூட கழற்றாமல் அம்மா இன்னைக்கு ஸ்கூல்ல என்று ஆரம்பிக்கும் குழந்தை மாதிரி ஆர்டர் செய்யப்பட்ட காபி, குவளைகளின் நுண்ணிய துளைகள் வழியாக வெப்பத்தை இழந்து கொண்டிருக்க,காது வளையங்கள் அசைய அசைய நேரில் அமர்ந்து பேசுவது போல,அன்புள்ள,நலம் நலமறிய ஆவல் போன்ற சம்பிரதாய வார்த்தைகளற்று கடிதமெழுத ஜானகியால்தான் முடியும்.

சிவா எப்படி இருக்கீங்க?பாக்கணும் போல இருக்கு. சிவா இந்த வரியை எழுதும்போது ஸ்கூல் குழந்தைகள் போறது ஜன்னல்ல தெரியுது.

ததும்பி வழியும் பூக்குடலையாய் கான்வென்ட் பஸ் அவிழ்ந்து பரவும் குவியலில் எது எனது மலர்?ன்னு நீங்க எழுதினது ஞாபகத்துக்கு வருது.

சிவா, குட்டிக் குழந்தைகள், மழை, ஜேசுதாஸ் பாட்டு,ட்ரெயின்,யானைன்னு உங்கள ஞாபகப்படுத்த எத்தனை விஷயங்கள் இருக்கு. சரி,அங்க எப்பவாவத என் ஞாபகம் வருமா? இல்ல பஸ்ல ஏறி கையசைத்ததும் அப்படியே மறந்துட்டீங்களா?

சும்மா வா வான்னா உடனே வர முடியுமா? வீட்ல எத்தன பொய் சொல்லணும் எத்தன பேர சமாளிக்கணும் வழியில யாராவது பாத்துருவாங்களோன்னு திக்திக்குனு இருக்கும். இதெல்லாம் புரியாது. வரலலேன்னா கோபம் மட்டும் அப்படி வருது. எப்பத்தான் புரிஞ்சுக்க போறீங்களோ.

சரி ஊர்லருந்து கெஸ்ட் வந்திருக்காங்க.எப்படி வரமுடியும்னு தெரியல. நானே போன் பண்றேன். அதுக்கப்புறம் நீங்க கிளம்பினா போதும். இல்லேன்னா வெயிட் பண்ணேன் நீ வரல்லேன்னு வழக்கம் போல குதிப்பீங்க சரியா?

ஜானகி.

கடிதத்தை குழந்தையைப் போல் மார்பில் சாய்த்தபடி என் உயிரில் கலந்த ஜானகியின் நினைவுகளில் முழ்கினேன்.

எத்தனை யுகங்களோ அலைபேசி அதிர்ந்து அழைத்தது.

ஹலோ என்றேன்.

நான்தான். இன்னும் ரெடியாகாம என்ன பண்ணிட்டிருக்கீங்க,பங்ஷன் ஆரம்பிக்கப் போகுது.இன்னும் உன் விட்டுக்காரர் வரலையான்னு எல்லாரும் கேட்கறாங்க.

வர்றேன்.

சிக்கிரம் வாங்க என்றாள் எதிரில் இருந்த புகைப்படத்தில் கழுத்து நிறைந்த மாலையுடன் என்னருகில் சிரித்துக் கொண்டிருந்த பவித்ரா.

சரி என்றபடி திரும்பினேன்.

ஒரு மலரைப் போல மின்விசிறியின் காற்றில் மெல்ல அசைந்து கொண்டிருந்தது ஒரு இனிமையான கனவைப் போல இனி மீளவே முடியாதபடி என் வாழ்வை விட்டு விலகிப் போய்விட்ட ஜானகியின் கடிதம். 

தொடர்புடைய சிறுகதைகள்
ஹலோ என்றதும் மறுமுனையில் உற்சாகமாய் வழிந்தது அம்மாவின் குரல். பேத்தி பொறந்திருக்காடா அப்படியே உன்னை உரிச்சு வச்சிருக்கு. சுகப்ரசவம். ஜானகி நல்லாருக்கா நீ உடனே புறப்பட்டு வந்துரு. அப்பாவாகி விட்டேன். கடவுளே நன்றி. பத்து மாத புதிர் அவிழ்ந்து கிடைத்த விடை. ஒரு புதிய ...
மேலும் கதையை படிக்க...
சொன்னா கேளுங்க இப்ப அவ தூங்க மாட்டா என்று சமையலறையிலிருந்து வந்த திவ்யாவின் குரல்,தமிழ் சினிமாக்களில் சேலன்ஞ் என்று இடைவேளை விடும் சமயத்தில் திரையெல்லாம் ஆக்ரமித்து நிற்கும் கட்டைவிரல் மாதிரி என் ஈகோவின் முன்னே சவாலாய் விரிந்து நின்றது. பாப்பா தூங்கு பாப்பா ...
மேலும் கதையை படிக்க...
மிகப்பெரிய அற்புதமொன்று நிகழப் போவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் வழக்கம் போலத்தான் விடிந்தது இன்றைய காலைப் பொழுது. மணி கடையில் இலக்கின்றி எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்த பேச்சை,அச்சா,ஆன ஆன என்று கலைத்த மலையாளச் சிறுவன்,யானையின் அசைவுகளை பரவசத்துடன் கவனித்துக் கொண்டிருந்தான்.கிட்டிப்புள்,கோலி,பம்பரம்,திருடன் போலீஸ் எல்லவாற்றையும் ...
மேலும் கதையை படிக்க...
எம் மேல கோபமா? அலைகளின் மேல் தாழப்பறந்து விழுந்து பரவும் அலைகளின் இரைச்சலில் விலகி பின்னும் பறந்து காகமொன்று ஏதோ ஒரு சிவப்பு நிறப் பொருளை அலகுகளில் கவ்வி வந்தது. ஈரமணலில் அமர்ந்து பரவும் அலைகளுக்கு விலகி அலகுகளால் குத்தியது. சுற்றுமுற்றும் ஒர ...
மேலும் கதையை படிக்க...
மூடியிருந்த பிரஸ் வாசலில் ராஜா சித்தப்பா உட்கார்ந்திருந்ததை வண்டிக்கு ஸ்டாண்ட் போடும்போது தான் கவனித்தேன். நரைத்த ரோமம் மண்டியிருந்த ஒட்டிப்போன கன்னங்களுக்கு மேலே சாராயம் வழிந்து கொண்டிருந்த பிதுங்கின பெரிய விழிகள் என்னைப் பார்த்ததும் நொடி நேரத்தில் தாழ்ந்து பதுங்கின. ஆர் ஏ ஜே ...
மேலும் கதையை படிக்க...
மகாலட்சுமி
காட்டில் வாழும் நரி
ஆனைச்சாமி
கானல் வரி
ஆர்ஏஜேஏ ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)