அவசர முடிவு எடுத்தது தப்பு தான்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 3,870 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

ராஜா ஆபீஸில் நுழைந்ததும் அவன் பின்னாலே வந்து “குட் மார்னிங்க் சார்” என்று அவனுக்கு வணக்கம் தெரிவித்தாள் அவன் ‘செகரட்ரி’ லதா. ”சார் நீங்க இன்னைக்கு ரொம்ப ‘ட்ரிம்மாக’ இருக்கீங்க.’யூ லுக் க்ரேட் டுடே சார்” என்று ‘ஐஸ்’ வைத்தாள் லதா.

“என்ன இன்னைக்கு காத்தாலேயே எனக்கு ஐஸ் வைக்கிறே,என்ன விஷயம் லதா” என்று சொல்லி வழிந்தான் ‘ஆபீஸ்’ மானேஜர் ராஜா. ”நான் ஐஸ்ஸெல்லாம் வக்கலை சார். நான் ’சின்சியரா’த் தான் என் மனசிலே பட்டதை சொறேன்.சார்,ரியலி யு லுக் க்ரேட்”என்று சொல்லி விட்டு ராஜா முகத் தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

”நானும் ‘ஜஸ்ட் பார்’ ஜோக்க்குகாகத் தான் சொன்னேன். நீ எனக்கு எல்லாம் ஏன் ஐஸ் வைக்கணும்.நாம் இருவரும் ஒருவரை ஒருவர் நல்லா புரிஞ்சு வச்சு இருக்கோம் .சரி இன்னைக்கு என்ன முக்கியமான ‘மீட்டிங்க்’ இருக்கு. அதற்கு ‘பேப்பர்ஸ்’ எல்லாம் ரெடி பண்ணிட்டாயா” என்று கேட்டான் ராஜா. அன்றைய முக்கியமான் ‘மீட்டிங்கை’ச் சொல்லி அதற்கு தேவையான ‘பைல்கள்’ எல்லாம் ராஜாவிடம் கொடுத்து விட்டு கிளம்ப ஆரம்பித்தாள் லதா.

ராஜாவுக்கு ‘லதா இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்க மாட்டாளா அவள் குயில் போல பேசும் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருக்கலாமே’ என்று ஆசைப் பட்டான்.

ஆனால் லதா ‘பைல்களை’ ‘டேபிள்’ மேலே ராஜாவிடம் கொடுத்து விட்டு, அன்ன நடைப் போட்டுக் கொண்டு ரூமை விட்டு வெளியே போனாள். கொஞ்ச நேரத்திற்கு ராஜாவின் இதயம் நின்றுப் போனது போல இருந்தது. ‘பைல்களை’ எல்லாம் கொடுத்து விட்டு தன் சீட்டுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டாள் லதா.

அவள் மனம் கனவுலகில் பறந்தது.

‘இவ்வளவு அழகும், அறிவும், பர்சனாலிட்டியும், ஒன்னா இணைஞ்சு இருக்கும் ராஜா போனற ஒரு ஆண் மகன் தனக்கு கணவராக இருந்தா எவ்வாளவு சந்தோஷமா இருக்கும். இவர் மட்டும் இன்னும் கல்யாணம் பண்ணிக் கொள்ளாம இருந்த்திருந்தா,நான் என்னையே அவருக்கு ‘அற்பணித்து’ இருப்பேனே. நம்ம வாழ்க்கை எவ்வளவு இனிமையா இருந்து இருக்கும். அவருக்கு கல்யாணம் ஆகி இருந்தா என்ன, அவர் மட்டும் ‘நீயும் எனக்கு வேணும் லதா’ ன்னு கேட்டா நான் என்னை அவருக்கு தர தயாராய் இருக்கேனே. இது அவருக்கு தெரியுமோ தெரியாதோ’ நினைத்து ராஜாவையே எண்ணி ஏங்கினாள் லதா.

“மேடம் காபீ” என்ற குரல் கேட்டு தான் அவள் கனவவுலகில் இருந்து வெளியே வந்தாள் லதா.

‘லதா வெளியில் போய் விட்டாளே. இன்னும் கொஞ்ச நேரம் நம்மோடு பேசிக் கிட்டு இருக்க கூடாதா என்று மனதுக்குள் ஏங்கினான் ராஜா. அவள் உடம்பிலிருந்து வரும் செண்ட் மணம் அவனை சொர்க்க லோகத்துக்கே கொண்டு சென்றது. அவள் பக்கத்தில் இருக்கும் போது தனி சுகம் நமக்கு தெரிஞ்சுதே.அந்த சுகம் நிறைய நேரம் நமக்கு இருக்க,அவ இன்னும் நிறைய நேரம் நம்மோடு பேசிக் கிட்டு இருக்கக் கூடாதா.எவ்வளவு இனிமையா இருக்கும்.நமக்கு ஆசை தான்.ஆனா அவ ஒரு கல்யா ணம் ஆகாத பெண்ணாசே. நம்மோடு அவ இருக்க முடியாதே. அவ யாருக்கு சொந்தமா ஆவப் போறாளோ, ரொம்ப குடுத்து வச்சவன் அவன். நமக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆவாம இருந்து இருந்தா அவளை நாம் பக்கத்திலேயே வச்சு கிட்டு வரலாமே, என்ன பண்ணுவது.’அது வரைக்கும் நாம கூப்பிடும் போதெல்லாம்,உடனே வந்து நம்மோடு பேசிக் கொண்டு வந்து சந்தோஷம் தராளே’ என்று நினைத்து மனதில் சந்தோஷப்பட்டான் ராஜா.

லதாவின் செக்ஸி உடல் கட்டு, மாம்பழ நிறம்,வட்ட நிலா போன்ற மூஞ்சி,அவ கொஞ்சி,கொஞ்சி பேசும் அழகு, அவ சுறு சுறுப்பு எல்லாம் ராஜாவுக்கு அவளிடம் தீராத மயக்கத்தை கொடுத்து வந்தது. சில நேரங்களில் ‘தனக்கு ஏன் கல்யாணம் ஆகி இருக்குது’ன்னு கூட எண்ணி வருந்தினான் ராஜா.

ஒரு நாள் ராத்திரி ராஜாவுக்கு ஒரு கனவு.

அந்த கனவிலே அடிக்கடி ‘லதா இந்த பைல் எங்கே,அந்த பைல் எங்கே’ன்னு கேட்டு விட்டு, அவ அழகை புகழ்ந்து கிட்டு இருப்பது போல் வாய் பினாத்திக் கொண்டு இருந்தான்.

தூக்கம் வராத ராஜாவின் மனைவி சுதா தன் கணவன் வாய்க்கு வாய் ‘லதா’ ‘லதா’ என்று சொல்லி வாய் பிணாத்துவதையும் கேட்டாள். அவள் காலையில் எழுந்ததும் ராஜாவைப் பார்த்து ”என்னங்க,தூக்கத்திலும் கூடவா அந்த லதாவை பத்திப் புகழ்ச்சி பேச்சு. நீங்க ஒரு கல்யாணம் ஆன ஒரு ஆம்பிள்ளைங்க. நல்லா இல்லீங்க நீங்க பண்றது. அவ அழகானவ தான். நான் இல்லேன்னு சொல்லலே. அதுக்காக எப்போதும் அவ பேச்சுத் தானா இந்த வீட்லே. எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கலீ ங்க” என்று கோவத்துடன் சொன்னாள் சுதா.

“’ஆபீஸ்’ நினைவோட நான் படுத்துக் கிட்டேனா சுதா அதான் அப்படி ஒரு எனக்கு கனவு வந்திச்சி. வேறு அந்த விதமான தப்பு எண்ணமும் எனக்கு இல்லை சுதா” என்று சொல்லி அசடு வழிந்தான் ராஜா.

சுதா தன் கணவரிடம் ஏதாவது முக்கியமா சொல்ல நினைத்து ராஜாவுக்கு ‘போன்’ பண்ணி னால் லதா தான் ‘போனை’ எடுத்துப் பேசி விட்டு,அப்புறமா தான் ராஜாவிடம் ‘போனை’’ கனெக்ட்’ பண்ணுவது வழக்கம். இது லதாவுக்கு பிடிக்கவே இல்லை. அதனால் லதா சில சமயம் ராஜாவின் ‘செல் போனு’க்கே ‘போன்’ நேரிடையாகவே பேசி வந்தாள்.

அன்று சாயந்திரம் ஒரு ஆறு மணிக்கு ராஜா லதாவுக்கு ‘போன்’ பண்ணி “லதா,நான் வீட் டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும். லதாவுக்கு மத்தியானத்தில் இருந்து நல்ல ஜுரம் அடிக்குது. அதனாலே நான் லதாவை என் காரிலே அவ வீட்லே ‘ட்ராப்’ பண்ணிட்டு வறேன்” என்று சொன்னதும் சுதாவுக்கு ரொம்ப கோவம் வந்தது.

‘லதா ஒரு வயசு பொண்ணு தானே. அவ என்ன தள்ளாத கிழவியா. இவர் எதுக்கு லதாவை அவ வீட்லே போய் ‘ட்ராப்’ பண்ணனும். வீட்டுக்கு வரட்டும், அவரை கொஞ்சம் மிரட்டிக் கேக்கணும். அவருக்கும் லதாவுக்கும் ‘ஆபீஸ்’லே இருக்கிற பழக்கம் போதும்’ என்று நினைத்து கறுவிக் கொண்டு இருந்தாள் சுதா.

ராஜா காரைப் பார்க் பண்ணி விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும்,துழையாததுமாய் சுதா ராஜாவை ப் பார்த்து “ஏங்க நான் கேக்கறேன்னு என்னே தப்பா எடுத்துக்காதீங்க. லதா ஒரு வயசு பொண்ணு தானே.தள்ளாத கிழவி இல்லையே. ஜுரம் அடிச்சா என்ன.அவ ஒரு ஆட்டோவை கூப்பிட்டு அதிலெ ஏறி அவ வீட்டுக்குப் போவலாமே. நீங்க எதுக்கு அவளை உங்க கார்லே அழைச்சுக்கிட்டுப் போய், அவ வீட்லெ ‘ட்ராப்’ பண்ணணும். எனக்கு இது சுத்தமா பிடிக்கலீங்க” என்று கொஞ்சம் கோவமாகச் சொன்னாள்.

உடனே ராஜா “அப்படி இல்லே சுதா, லதா சின்னப் பொண்ணு. அவளாலே அவ கொண்டு வந்த ‘ஸ்கூட்டர்லே’ வீட்டுக்குப் போறது ரொம்ப கஷ்டமா இருக்கும். அவ பாக்க ரொம்ப அழகா வேறே இருப்பா.அவ ஆட்டோலே போனா அவளுக்கு ‘ஏதாவது’ ஆகலாம். நான் அவ மானேஜர் இல்லையா. பரிதாபப் பட்டுத் தான், நான் அவளை அவ வீட்லே என் கார்லே கொண்டு போய் விட்டேன்” என்று சொன்னான்.

ராஜா சொன்ன பதில் சுதாவுக்கு பிடிக்கவில்லை.”சரி, சரி, வாங்க சாப்பிட உக்காருங்க”என்று சொல்லி விட்டு தட்டை கோவத்துடன் ‘டைனிங்க் டேபிள் மேலே வைத்தாள் சுதா.

‘அஸிஸ்டெண்ட் மானேஜர்’ சேகருக்கு லதாவின் மீது ஒரு கண்.அவளிடம் அவன் மேலே விழுந்து பேசியும் பழகியும் வந்தான். தன் அழகு,பண பலம்,பதவி இவைகளை காட்டி அவள் காதலை அடைய முயற்சி செய்து வந்தான் அவன்.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வலிய வந்து லதாவிடம் பேசி வந்தான்.

லதாவும் சேகரிடம் ஒரு ‘ஆபீஸ்’ நண்பன் என்கிற முறையில் நிறையவும், நன்றாகவும்,பழகி சிரித்துப் பேசி வந்தாள்.இருப்பினும் சேகர் எதிபார்க்கும் காதல் அவளிடம் இருந்து வரவில்லை.இது சேகருக்கு புரியாத புதிராக இருந்தது.மனம் தளராமல் அவன் லதாவின் காதலை அடைய என்ன வெல்லாமோ முடியுமோ அதை எல்லாம் செய்து வந்தான்.

‘ஏன் நம்மே லதா காதலிக்க மாட்டேன்கிறா.அவ வேறு யாரையாவது காதலிக்கிறாளா’ என்று சேகருக்கு சந்தேகமாய் இருந்தது இதை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்று அவன் தீவிரமாக முனைந்தான். அவ நடவடிக்கைகளை மறைமுகமாக கவனித்து வந்தான் .ஒரு நாள் அவ ‘சீட்’ பின் புறமாகப் பேசப் போனான் சேகர்.

லதா தன் டேபிள் டிராயரை திறந்து வைத்துக் கொண்டு,அதில் மானேஜர் ராஜாவின் போட் டோவின் முகத்தின் மீது தன் கையை தடவிக் கொண்டு இருந்தாள்.

இதைப் பார்த்ததும் சேகருக்கு தூக்கி வாரிப் போட்டது.‘அடி பாவி,நான் ஒரு கட்டை பிரமச்சாரி. உன் மீது தீராத காதலோடு உன் கிட்ட பழகி வறேன். என்னை விட்டுட்டு,கல்யாணம் ஆன அந்த மானேஜர் கிட்டே உன் மனசை பறி கொடுத்து இருக்கியே.நீ ஒரு துரோகி. இது தானா நீ என்னை காதலிக்காம இருக்கக் காரணம்’ என்று கறுவிக் கொண்டே தன் சீட்டுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டான் சேகர்.

அவன் மனது வேதனை அடைந்தது. அவன் மிருக குனம் தலை தூக்கியது.தீவிரமாக யோஜ னைப் பண்ணினான். மனதில் பல ‘ப்ளான்களை’ போட்டு வந்தான்.

மணி ஆறு அடித்து விட்டது.

“என்ன சார் மணி ஆறடிச்சுடிச்சி.இன்னும் ஏதோ யோஜனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க.வூட்டுக்கு கிளம்பலையா”என்று கேட்டார் பியூன் பீட்டர். ”இல்லே பீட்டர்.மத்தியானத்திலே இருந்து என் மனசு கொஞ்சம் சரியில்லை” என்றான் சேகர் வருதத்தோடு.

“எங்கிட்டே சொல்லுங்க.நான் உங்க அப்பா மாதிரி“ என்று விடாமல் கேட்டார் பீட்டர். “பாருங்க பீட்டர் நான் அந்த லதா மீது அளவிலா காதலை கொட்டி பழகி வாரேன். அவளுக்கு எவ்வளவோ ‘கிப்ட்டெல்லாம்’ வாங்கிக் குடுத்தும் இருக்கேன். அவ என்னடான்னா என்னை காதலிக்காம, நம்ம மானேஜர் ராஜாவைக் காதலிக்கிறா. எனக்கு உலகமே வெறுத்து விட்டது பீட்டர்” என்றான் அழாக் குறையாக.

”இந்த பொண்ணுங்க பண்றதே புரியாத புதிரா இருக்கு சார்.விட்டுத் தள்ளுங்க. இந்த லதா இல்லீன்னா என்ன சார். வேறு நல்ல பொண்ணா பாத்து நீங்க காதலிங்க. ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் நல்லா விரும்புங்க. அப்புறமா கல்யாணம் கட்டிக்கீங்க” என்று புத்திமதி சொன்னார் பீட்டர்.

சேகரின் நெருங்கிய நண்பன் பாலு ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்து இருந்தான். சேகர் அவன் கிட்டே போய் தன் கதையைச் சொல்லி அவன் உதவியை கேட்டான்.அதற்கு அவன் “நீ என்ன ‘ஹெல்ப்’ வேணாமானலும் என் கிட்டே தைரியமா கேள். நான் உனக்கு நிச்சியமா பண்றேன்” என்று உறுதி அளிக்கவே, தன் மனதில் இருக்கும் ‘ஐடியா’வை அவனுடன் ரகசியமாக சொன்னான்.

பாலு நான் அதை நிச்சியமாக் செய்றேன் என்று சொல்லி,அதுக்கு வேண்டியதை எல்லாம் சேகரைத் தயார் பண்ணச் சொன்னான். அன்று ‘ஆபீஸி’ல் வருடாந்தர பார்ட்டி.எல்லோரும் நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு ஜாலியாக இருந்தார்கள். சேகர் தன் ‘டிஜிட்டல் காமிராவில்’ ஆபீஸ் பார்ட்டி போட்டோக்களை எல்லாம் எடுத்தான். அதில் அவன் மானேஜர் ராஜாவின் போட்டோ, லதாவின் போ ட்டோக்களை பல போஸ்களில் எடுத்து கொண்டான்.

பாலு சொன்னது போல் லதாவின் போட்டோ, மானேஜர் ராஜாவின் போட்டோ, ராஜா பார்ட்டி யில் அணிஞ்சு இருந்த ‘ஷர்ட்’ மாதிரியே ஒன்று, லதா பார்ட்டியில் அணிஞ்சு இருந்த ‘ட்ரஸ்’ மாதிரி ஒரு ‘டிரஸ்’ எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து பாலுவிடம் கொடுத்தான்.

உடனே பாலு தன் நண்பர்களில் ராஜா ‘பெர்சனாலிட்டியை’ப் போல இருக்கும் ஒருவனை வரச் சொல்லி,சேகர் கொண்டு வந்த ‘ஷர்ட்டை’ அணிய வச்சு,ராஜா ‘ஹேர் ஸ்டைல்’ போலவே ஒரு ‘விக் கும்’ தயார் பண்ணி அவனை அணிய வைத்தான். அந்த வட்டாரத்தில் இருந்த ஒரு ‘தொழில்’ பண்ணும் ஒரு பெண்ணை அழைத்து வந்து அவளுக்கு லதா அணிந்து இருந்த ‘டிரஸ்’ போல ஒரு ‘டிரஸ்’ போட்டு, அந்த நண்பனுடன் பல மோசமான ‘போஸ்களில்’ கட்டிப் பிடிப்பது போல் போட்டோக்களை எல்லாம் எடுத்தான். பிறகு அவன் ஸ்டுடியோவில் போய் தன் தொழில் நுணுக்கங்களை உபயோகப் படுத்தி அந்த மோசமான போஸ்களில்’ இருக்கும் ஆண் முகம் இருக்கும் இடத்தில் ராஜா முகமும் அந்த ‘தொழில் செஞ்சு வந்த பெண்’ இருந்த இடத்தில் லதாவின் முகதையும் இணைய வைத்து, ராஜாவும் லதாவும் பல விதமான மோசமான ‘போஸ்களில்’ இருப்பது போல் தயார் பண்ணி சேகரிடம் கொடுத்தான்.

சேசகருக்கு மிகவும் சந்தோஷப் பட்டான். அவனால் நம்பவே முடியவில்லை. பாலுவைக் கட்டி பிடித்து நன்றி சொன்னான். சேகரின் ‘கிரிமினல் மூளை’ வேலை செய்ய ஆரம்பித்தது.

அவன் முதலில் ஒரு லெட்டர் எழுதினான்.

அந்த லெட்டரில் அவன் “மிஸஸ் ராஜா, அவங்களுக்கு.நான் உங்க நலம் கருதி இந்த போட் டோக்களையும்,இந்த லெட்டரையும்,அனுப்பி இருக்கேன். உங்க கணவர் தினமும் ஆபீஸ் ‘செகரட்ரி’ லதாவுடன் அடிக்கும் கொம்மாளம் நாளுக்கு நாள் அதிகமாகி வருதுங்க. உங்க ஆசைக் கணவர் முதல்லே ‘ஆபீசை’ விட்டு வெளியே போய் லதாவுடன் கொஞ்சி செஞ்சு வந்த லீலைகளை எல்லாம் இப்போது ‘ஆபீஸி’லேயே அவர் செஞ்சு வர ஆரம்பிச்சு இருக்கார். வெளியே இந்த மாதிரி லீலைகளை செஞ்சு வந்தார்ன்னு நான் வெறுமனே கேள்விப்பட்டேன்.ஆனா பாத்ததில்லே. ஆனா இப்போ அவர் ‘ஆபீஸி’லேயே அந்த லீலைகளை செஞ்சு வந்ததை நான் பாத்ததும் அசந்து விட்டேன். உடனே என் காமராவில் நான் அந்த லீலைகளை எல்லாம் படம் பிடிச்சு அந்த போட்டோங்களை இந்த லெட்டருடன் உங்களுக்கு அனுப்பி இருக்கேன். இனி நீங்க அவரை நம்பி மோசம் போக வேணாம். எந்த நேரமும் அவர் உங்களை கை கழுவி விட்டு விட்டு லதாவோடு சேர்ந்து விடுவாருங்க. அவரை நீங்க இனிமே நம்பி ஏமாற வேணாம்.இப்படிக்கு உங்கள் நலன் கருதும் ஒரு உங்கள் கணவர் வேலை செஞ்சு வரும் ‘ஆபீஸ்’ நல்லவன் ஒருவன்” என்று எழுதி முடித்தான்.

ஒரு நல்ல கவரில் பாலு கொடுத்த போட்டோக்களையும்,அவன் எழுதிய லெட்டரையும் வச்சு ராஜாவின் வீட்டு விலாசத்திற்கு ‘கொரியரில்’ அனுப்பி வைத்தான் சேகர்.

அடுத்தது இன்னொரு லெட்டர் எழுதினான்.

“‘லதாவின் அப்பா அம்மா அவங்களுக்கு.உங்க நலம் கருதி இந்த போட்டோக்களையும் இந்த லெட்டரையும் நான் அனுப்பி இருகேன். உங்க மக லதா தினமும் எங்க ‘ஆபீஸ்’ மானேஜருடன் வெளிலே நெருங்கி பழகி வறதே, என் நண்பர்ங்க சொன்ன போது நான் நம்பலே.ஆனா இப்போ அந்த காதல் லீலைகளை ‘ஆபீஸி’ லேயே செஞ்சு வறா.அதுக்கு இந்த போட்டோங்க தான் ஆதாரம். நீங்க மோசம் போகக் கூடாதே என்கிற நல்ல என்ணத்தில் தான் இந்த போட்டோங்களையும், இந்த லெட்டரையும் அனுப்பி இருக்கேன். நீங்க காலம் கடத்தினா, லதா அந்த மானேஜரை திருட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு விடுவான்னு எனக்குப் படுது. அப்புறம் உங்கள் இஷ்டம். இப்படிக்கு உங்கள் நலம் கருதும், உங்க பெண் லதா வேலை செஞ்சு வரும் ‘ஆபீஸி’ல் லதா கூடவே வேலை செஞ்சு வரும் ஒரு நல்லவன்” என்று எழுதி முடித்தான்.

ஒரு நல்ல கவரில் பாலு கொடுத்த போட்டோங்களையும்,அவன் எழுதிய லெட்டரையும் வச்சு லதாவின் வீட்டு விலாசத்துக்கு ‘கொரியரில்’ அனுப்பி வைத்தான் சேகர்.

தனக்குள் சந்தோஷப் பட்டான் சேகர்.

ராஜா ஆபீஸ் கிளம்பும் போது “சுதா, இன்னைக்கும் நாளைக்கும் எங்க ‘ஹெட் ஆபீசில்’ மீட்டிங்க்’.நான் அந்த ‘மீட்டிங்க்’க்கு அவசியம போய் ஆகணும்.நான் ‘டே’ பூராவும் அங்கே தான் இருப்பேன். நான் வீட்டுக்கு வர ரொம்ப லேட்டாவலாம்.நீ குழந்தயே ஜாக்கிறதையா பாத்து கிட்டு, நீயும் ஜாக்கிறதையா இருந்து வா என்ன” என்று சொல்லி கார் கதவை மூடினான். சுதாவுக்கு ‘பை’ ‘பை’க் காட்டிக் கொண்டு இருந்தான் ராஜா.

உடனே சுதா “சரிங்க, நாங்க ரெண்டு பேரும் ரொம்ப ஜாக்கிறதையா இருந்து வரோமுங்க. நீங்க கவலைப் படாதீங்க” என்று சொல்லி விட்டு கணவனுக்கு ‘பை’ ‘பை’ காட்டி விட்டு,ராஜா காரை ‘ஸ்டார்ட்’ பண்ணிக் கொண்டு போன பிறகு வீட்டுக்குள்ளே வந்து கதவைச் சாத்தி தாழ்பாள் போட்டாள்.

சுதா வீட்டுக்குள்ளே வந்த பத்தாவது நிமிஷம் கூட ஆகவில்லை.’காலிங்க் பெல்’ அடித்தது.

சுதா ‘காலிங்க் பெல்’ அடித்ததும் வாசல் கதவைத் திறந்தாள்.‘கொரியர்’ நின்றுக் கொண்டு இரு ந்தான்.கை எழுத்துப் போட்டு ‘கொரியர்’ கொடுத்த ‘லெட்டரை’ வாங்கினாள்.கொரியரில் வந்த கவரை பிரித்துப் படித்தாள் சுதா.

சுதாவுக்கு தலையே சுற்றியது.

’சீ,என்ன மோசமான மனுஷர் இவரு. கல்யாணம் ஆகி ஒரு வயசு குழந்தை இருக்கு.அப்படி இருக்கும் போது அவர் ‘ஆபீஸி’ல் வேலை செஞ்சு வரும் ‘செகரட்ரி’ கூட இப்படி லீலைகளா. எவ்வளவு கேவலமான மனுஷர் இவர்’. இதற்கு மேல் சுதாவுக்கு யோஜனை பண்ணவேப் பிடிக்கவில்லை.

தன் செல் ‘போனை’ எடுத்து ராஜாவுக்குப் போன் பண்ணினாள். எத்தனைத் தரம் போன் பண்ணினாலும் ‘இந்த போன் ‘ஸ்விட்ச்’ ஆப் பண்ணி இருக்கிறது’ என்கிற பதிலே வந்துக் கொண்டு இருந்தது.

‘கொரியரில்’ வந்த பத்து போட்டோக்களும் மாறி மாறி அவள் கண்களில் வந்துக் கொண்டு இருந்தது. சுதா யோஜனைப் பண்ணினாள்.

அவளுக்கு ராஜாவின் முகத்தை பார்க்கக் கூடப் பிடிக்க வில்லை.’நாம இனிமே இவர் கூட குடித்தனம் பண்ணி வரக் கூடாது.அந்த ‘செகரட்ரி’ கூடவே இவர் வாழ்ந்துக் கிட்டு வரட்டும்’ என்று முடிவு பண்ணினாள். அவளுக்கு கட்டுக்கு அடங்காத கோவம் வந்தது.

அந்த கோவத்தில் வேகமாக ஒரு லெட்டர் எழுதினாள்.

“எனக்கு இனி ஒரு நிமிஷம் கூட உங்க கூட குடும்பம் நடத்த பிடிக்கலே. நீங்க இனிமே உங்க லதாவோடவே இஷ்டம் போல கூத்தடிக்கலாம். நான் குழந்தையே அழைச்சுக்கிட்டு என் அம்மா வீட்டுக்கு போறேன். இத்துடன் நம்ம திருமணம் முறிஞ்சு போச்சுன்னு நினைச்சுக்குங்க”

இப்படிக்கு உங்க ‘மாஜி மனைவி’ சுதா.

என்று எழுதி விட்டு மேஜை மேலே வைத்து விட்டு,பக்கத்திலேயே ‘கொரியர்’ கொடுத்த ‘லெட்டரில்’ வந்த போட்டோக்களை பரப்பி வைத்து விட்டு,வாசல் கதவை நன்றாகப் பூட்டி விட்டு, தன் குழந்தையை கூட்டிக் கொண்டு பஸ்ஸில் ஏறி திருச்சி கிளம்பிப் போய் விட்டாள் சுதா.

இரவு பத்து மணிக்கு ‘ஆபீஸி’லிருந்து வீடு திரும்பிய ராஜா தன்னிடம் இருந்த வீட்டு சாவி யால் வீட்டைத் திறந்து வீட்டுக்கு உள்ளே வந்தான் ராஜா.

வீடு ‘இருளோ’ என்று இருந்தது.’சா¢,மணி பத்துக்கு மேலே ஆவப் போவுது.சுதாவும் குழந்தை யும் தூங்கப் போய் இருப்பாங்க’ என்று நினைத்து ‘ஹால்’ விளக்கைப் போட்டான்.

‘ஹால்’ ‘டேபிள்’ மீது இருந்த கடிதத்தைப் பார்த்தான்.கூடவே பக்கத்தில் இருந்த போட்டோக் களையும் பார்த்தான்.அந்த போட்டோ எல்லாவற்றையும் மறுபடியும்,மறுபடியும் பார்த்துக் கொண்டு இருந்தான். பத்து போட்டோக்களிலும் அவனும் லதாவும் பல விதமான ஆபாசமான ‘போஸ்களில்’ இருந்தது. ‘எங்கே இந்த மாதிரி ஆபாசமான ‘போஸ்களில்’ நாமும் லதாவும் இருந்தோம். நாம அந்த மாதிரி லதாவோட இருந்ததே இல்லையே. எப்படி,யார் இந்த போட்டோக்கள் பிடிச்சி இருப்பாங்க’ என்று மூளையை கசக்கிப் பிழிந்துக் கொண்டான்.

அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பிறகு மனதை திடமாக்கிக் கொண்டு சுதா எழுதி வைத்து விட்டுப் போன ‘லெட்டரை’ப் படித் தான்.அவனுக்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.

‘சுதா, அவசரப் பட்டு என்கிட்டே கேக்காம ஏன் இந்த முடிவுக்கு வந்து வந்து இருக்கா.நான் வீட்டுக்கு வந்ததும் என் கிட்டே, இந்த போட்டோக்களை எல்லாம் காட்டி ‘ஏங்க,என்னங்க இந்த போட்டோ எல்லாம்’ன்னு கேட்டு இருந்தா,நான் அவ கிட்டே ‘சுதா, இந்த போட்டோ எல்லாம் உண்மை இல்லே.ந மக்கு பிடிக்காதவங்க யாரோ தான் இந்த மாதிரி போட்டோங்களே உனக்கு அனுப்பி இருக்கா ங்க.அந்த மாதிரி செஞ்சது யாருன்னு நான் நாளைக்கு ‘ஆபிஸ்’ போனதும் கண்டுப் பிடிக்கறேன்னு சொல்லி இருப்பேனே.எனக்கு அந்த ‘சான்ஸை’யே குடுக்கலையே” என்று நினைத்து மிகவும் வருத்த ப் பட்டான்.

தன் ‘ஷூவையும்’, ’சாக்சையும்’ கழட்டி வைத்து விட்டு,தன் டிரஸ்சை கழட்டி விட்டு,‘பாத் ரூமு க்குப் போய் தன் கை கால்களை கழுவிக் கொண்டு, தன்னுடைய ‘நைட் டிரஸ்’சைப் போட்டுக் கொண் டான்.

கொஞ்ச நேரம் ஆனதும் சுதாவிடம் பேசலாம் என்று நினைத்து ராஜா சுதா ‘செல் போனு’க்கு ‘போன்’பண்ணினான். சுதா ‘செல் போன்’ ‘சிவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருக்கிறது’ என்கிற பதிலே வந்துக் கொண்டு இருந்தது.

ராஜா ‘ஏன் சுதா தன் ‘செல்போனை’ ‘சிவிட்ச் ஆப்’ பண்ணி இருக்கா. நான் எப்படி இப்ப அவளே ‘காண்டாக்ட் பண்றது’ என்று வழி ஒன்றும் தெரியாமல் கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு ‘ஹாட் பாக்கில்’ சுதா செய்து வைத்து இருந்த ‘டிபனை சாப்பிட்டு விட்டு படுக்கப் போனான்.

படுத்த ராஜாவுக்கு தூக்கமே வரவில்லை. அவன் படுத்துக் கொண்டே ‘நாம கல்யாணம் ஆயி ஒரு குழந்தையே பெத்துக் கிட்டு இருக்கோம். அப்படி இருக்கும் போது நான் லதா மேலே ஆசைப் பட்டு இருக்கவே கூடாது. தகாத எண்ணத்தே என் மனசிலே வச்சுக்கிட்டு வந்த எனக்கு அந்த கடவுள் எனக்கு இந்த தண்டனையே குடுத்து இருக்கார்’ என்று எண்ணி தன் தவறுக்காக மனம் வருந்தினான்.

‘சரி, எதுக்கும் நாம காத்தாலெ எழுந்ததும் சுதாவுக்கு திருச்சிக்கு ‘போன்’ பண்ணி சுதாவிடம் உண்மையை ச் சொல்லலாம்’ என்று நினைத்து தூங்க முயற்சி பண்ணினான்.

லதா வீட்டுக்கு உள்ளே நுழைந்ததும் “போதும்டீ, நீ ஆபீஸ் போய் சம்பாதிக்கிற அழகு.இப்படி கண்டவனோடு கும்மாளம் போடவா தினம் வித விதமான ‘டிரஸ்’ போட்டுக் கிட்டு போய் வறே. நீ ஒரு வயசு பொண்ணு.போவட்டுமேன்னு நாங்க ரெண்டு பேரும் பொறுத்துக் கிட்டு சும்மா இருந்தோம். நாளையிலிருந்து நீ ‘ஆபீஸ்’ எல்லாம் போக வேணாம்.நம்ம வீட்டு கல்யாண ‘ப்ரோக்கர்’ கிட்டே சொல்லி உன்னை ஒத்தன் கையில் பிடிச்சுக் குடுக்க உடனே ஏற்பாடு பண்றேன். இந்த கண்றாவி போட்டோக்களையும் எல்லாம் நல்லா பாரு. இதே விட கேவலமா எந்த பையனும் பொண்ணும் ஒரு போட் டோலே இருக்க முடியாது. கூடவே இந்த ‘லெட்டரையும் நல்லா படி.நல்ல வேளையா யாரோ ஒரு நல்லவர் ஒருவர் தக்க சமயத்தில் நமக்கு இதை எழுதி எங்களுக்கு அனுப்பி இருக்கார்” என்று சொல்லி விட்டு போட்டோக்களையும் ‘லெட்டரையும்’ லதா மீது வீசி எறிந்தார் லதாவின் அப்பா.

“ஆமாங்க உடனே நம்ம ‘ப்ரோக்கரை’ ப் பாத்து மேலே ஆக வேண்டியதை கவனிங்க.விஷயம் நம்ம காதுக்கு வந்தும் நாம சும்மா இருந்து வரக் கூடாது.இந்த சமாச்சாரம் நாலு பேருக்குத் தெரிய வந்தா,அப்புறமா நம்ம லதாவுக்கு ஒரு நல்ல குடும்பத்து பையனே கிடைக்க மாட்டாங்க.லதா கல்யா ணத்தே நாம சீக்கிரமா முடிச்சே ஆவணுங்க.’டிலே’ பண்ணக்கூடாதுங்க” என்று கோவமாக கத்தினாள் லதாவின் அம்மா.

லதாவுக்கு அப்பாவும் அம்மாவும் சொல்வது என்ன என்றே புரியவில்லை.

பிறகு நிதானமாக அப்பா வீசி எறிந்த போட்டோக்களையும் கடிதத்தையும் குனிந்து எடுத்து பார்த்தாள் லதா.

பத்து போட்டோக்களிலும் லதா ‘ஆபீஸ்’ மானேஜர் ராஜாவுடன் பல விதமான ஆபாசமான ‘போஸ்களில்’ இருந்தது. உடனே லதா ‘எங்கே இந்த மாதிரி ஆபாசமான ‘போஸ்களில்’ நாமும் ‘ஆபீ ஸ்’ மானேஜர் ராஜாவும் இருந்தோம்.நாம அந்த மாதிரி ‘ஆபீஸ்’ மானேஜர் ராஜாவுடன் இருந்ததே இல்லையே. எப்படி,யார் இந்த போட்டோக்களே பிடிச்சி இருப்பாங்க’ என்று தன் மூளையை கசக்கிப் பிழிந்துக் கொண்டாள். அந்த சமயம் பார்த்து சேகர் தனக்கு ‘கிப்ட்’ எல்லாம் வாங்கிக் கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தது. ’இந்த அயோக்கியன் தான் இந்த திருட்டு வேலேயே செஞ்சு இருக்கணும்’ என்ற முடிவுக்கு வந்தாள்.

அவளுக்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.

மெல்ல தன்னை சுதாரித்துக் கொண்டு அப்பா வீசி எறிந்த ‘லெட்டரை முழுக்கப் படித்தாள். அவளுக்கு ஒன்னும் புரியவில்லை.பூமி பிளந்து அதள பாதாளத்தில் விழுவதைப் போல் இருந்தது.

ஐந்து நிமிஷம் கழித்து தன்னை சுதாரித்துக் கொண்டு ”நான் சொல்றதே கொஞ்சம் கோபப் படாம கேளுங்க. இந்த ‘லெட்டரில்’ இருப்பதைப் போல் நான் நடந்துக் கொள்ளவே இல்லைப்பா. இந்த போட்டாக்களையும் எல்லாம் ‘ஆபீஸி’லே எனக்குப் பிடிக்காத எவனோ ஒருத்தன் தான் திருட்டுத் தனமா செஞ்சு இருக்கான்.அவனே இந்த ‘லெட்டரையும்’ எழுதி உங்களுக்கு அனுப்பி இருக்கான். என்னே கொஞ்சம் நம்புங்கப்பா.இந்த போட்டோங்க எல்லாம் உண்மையே இல்லேப்பா” என்று அழு துக் கொண்டே சொன்னாள் லதா.

”இனிமேலே ஒரு நிமிஷம் கூட நாங்க பொறுக்க முடியாது லதா. நீ ஒரு கல்யாணம் அவாத ஒரு பொண்ணு.நாளைக்கே இந்த வதந்தி ஊரெல்லாம் பரவிச்சுன்ன,அப்புறமா அம்மா சொல்றா மாதிரி உன்னை யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க.அதனாலே நீ நாளையில் இருந்து ‘ஆபீஸ்’ எல்லாம் போக வேணாம்.உனக்கு ஒரு கல்யாணம் ஆயிடிச்சின்னா அப்புறமா எங்களுக்கு கவலை இல்லே. அது வரைக்கும் வரை நீ வூட்டிலேயே இருந்துக் கிட்டு வா” என்று சொன்னதும் லதாவின் அம்மாவும், “ஆமாங்க,நீங்க முதல்லே ஒரு கல்யாண ‘ப்ரோக்கரெ’ பாத்து, லதாவுக்கு ஏத்த ஒரு பையனாப் பாத்து, கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.அது வரைக்கும் நீ சொன்ன மாதிரி லதா ஆபீஸ்க்கு எல்லாம் போகவே வேணாம்” என்று சொன்னாள்.

“சரி, ராஜி, நான் அதுக்கு சீக்கிரமா ஏற்பாடு பண்றேன்”என்று சொல்லி விட்டு,லதாவின் அப்பா வெளியே போய் விட்டார்.லதா தன் ‘பெட் ரூமு’க்குப் போய் கதவை சாத்திக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டு விக்கி விக்கி அழுதாள்.

இரவு பூராவும் தூங்காததால், ராஜா அதிகாலைலே அசதியால் கொஞ்ச நேரம் தூங்கினான். அவன் காலை எட்டு மணிக்குத் தான் எழுந்தான்.பல்லைக் கூட துலக்காமல் போனை எடுத்து திருச்சிக்கு ‘போன்’ பண்ணினான்.சுதா தான் ‘போனை’ எடுத்தாள்.சுதா கோவத்துடன் “நம்ம உறவு முறிஞ்சி போச்சுங்க.இனிமே நீங்க அந்த லதா கிட்டேயே உங்க உறவை வச்சுக்குங்க. அவளையே கல்யாணமும் கட்டிக்குங்க.என்னேயும் குழந்தையையும் மறந்திடுங்க.இனிமே நீங்க தயவு செஞ்சு எனக்கு ‘போன்’ பண்ணாதீங்க” என்று சொல்லி விட்டு ‘‘போனை’ வைத்து விட்டாள் சுதா. சுதா சொன்னதைக் கேட்டு அசந்துப் போய் விட்டான் ராஜா.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *