அழகான பெண் – ஒரு பக்க கதை

 

‘சார்..மாடம்பாக்கத்துக்கு எந்த பஸ்ல போகணும்’ -கேட்டவர் ஒரு முதியவர்.

‘டைம் கீப்பர் ஆபிஸ்ல போய்க்கேளுங்க பெரியவரே…’ சொல்லிவிட்டு தான் பொறுப்பேற்றிருந்த வண்டி ரிவர்ஸ் வருவதற்காக விசில் கொடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர் சையது.

‘சார்…பைவ் பி எங்கே வரும்?’ – கல்லூரி மாணவன் கேட்டான்.

‘படிக்கத் தெரியும் இல்லே..மேல இருக்கற போர்டைப்பாரு!’ சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறப்போனார்

‘’சார்..இது ராயப்பேட்டை போகுமா?’’ – இந்த முறை கேட்டது ஓர் அழகான இளம்பெண்.

இந்த வண்டி போகாது, ட்வெண்டி ஒன்ல போங்க அதோ அந்த ஃபிளாட்பார்ம்ல வந்து நிக்கும். ரங்கராஜூ…இந்தப் பெண்ணுக்கு ட்வெண்டி ஒன் நிக்கற இடத்தைக் காட்டுப்பா ‘’ – கீழே நின்ற கண்டக்டர் ஒருவரிடம் சிரத்தையாகச் சொல்லிவிட்டு விசில் கொடுத்தார் சையது.

‘அது என்னப்பா…பொண்ணுங்க கேட்டா மட்டும் பொறுமையா வழி சொல்றே?’’ – ஓட்டுநர் நக்கலாகக் கேட்டார்.

‘’என்ன பண்றது?’’ நானும் ஒரு பொண்ணைப் பெத்தவன். தனியா நிக்கற எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் காணாம போன எம் மகள் ஃபாத்திமா ஞாபகம் வரும்!’’- சையது கண்கலங்கச் சொன்னார்.

டிரைவரின் கற்பனையும் கிண்டலும் சடன் பிரேக் பிடித்தன.

- விசாகப்பிரயன் (ஜனவரி 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த நீண்ட உறாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருடைய பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. எதிர் வரிசையில் முதல் மேஜையில் இவரைப் பார்ப்பதுபோல் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் இவன். அப்பளம்…அப்பளம்…இன்னும் எனக்குப் போடலை…போடலை.. -கத்தினார் அந்தப் ...
மேலும் கதையை படிக்க...
“ மூணாவதும் பெண் குழந்தையா?....இனி என்னடா செய்வது?.....ஸ்ருதிக்கு ஆண் குழந்தை பாக்கியமே இல்லே!....நீ பேசாமே உங்க அத்தை பெண் மாலதியை இரண்டாம் தாரமா செய்துக்கோ!....உன் அத்தையும் பெண் கொடுக்க தயாரா இருக்கா!....நம் சொத்துக்கும், குலத்திற்கும் ஒரு ஆண் வாரிசு கட்டாயம் வேண்டுமடா!....நீ ...
மேலும் கதையை படிக்க...
”காலையிலேயே காரை கழுவ ஆரம்பிச்சாச்சா. ரிட்டயர்மென்ட் லைப்ல உங்களுக்கு நல்லா தான் பொழுது போகுது..”. மனைவியின் குரலைக் கேட்டு ஈரத்துணியைப் பிழிந்தபடியே நிமிர்ந்தார் ராமநாதன். அருகிலிருந்த பெரிய பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீர் முழுவதும் காலியாகி இருந்தது. “என்னடி கிண்டலா பண்ற...? “இல்லைங்க இப்ப இருக்குற தண்ணி ...
மேலும் கதையை படிக்க...
அறந்தாங்கி ஸ்டேஷனில் ரயில் நின்றது தான் தாமதம்; ரயிலினின்றும் ஜனங்கள் கும்பல் கும்பலாக இறங்க ஆரம்பித்தனர்; அவர்களில் குமாரசாமியும் ஒருவன். தலையில் சுமந்திருந்த பெரிய மூட்டையுடன் ரயில் நிலையத்தை விட்டு ஊருக்குள் நடந்தான். வெய்யிலின் வெக்கை சற்று தணித்திருந்தது; அந்தி மயங்கும் ...
மேலும் கதையை படிக்க...
திடீரென்றுதான் அந்தச்சப்தத்தைக்கவனித்தேன் ஒரேசீராக "சாக்,சாக்,சாக்' கென்று. கூடவே லேசாய்ப் பச்சைப் புல்வாசம் மூக்கைத் துளைத்தது. இதுநேரம் வரை வேலை மும்முரம். காபிக்கடை, டிபன், சாப்பாடு வகையா என்று மூளைசேணம் கட்டிவேலை பார்த்தது. புளிகரைத்தது. பருப்புவேகவைத்தது. இட்டிலி சுட்டு இக்கியது. சட்னி அரைத்தது. ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவின் நினைவு தினம்
ஆண் குழந்தை
கார் வாங்கிய கதை
உலகம் பொல்லாதது
கோரைப் புற்களின் கோரைப்பற்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)