அழகான பெண்டாட்டி

 

(இதற்கு முந்தைய ‘நாச்சியப்பனின் உரை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

“சொன்னா சொல்லிட்டுப் போறானுங்க! எதையாவது சொல்லத்தான் செய்வானுங்க! ஒனக்கு ஹாஸ்பிடல் செலவு செய்து கட்டிக் குடுக்கப்போறது இவனுங்களா நான் கேக்கேன்.

உன் அத்தை, அதான் என் வீட்டுக்காரி, அவ கூடத்தான் கண்றாவி பிடிச்சவ! பாக்க குரங்கு குசாலா மாதிரி இருக்கா! அதுவா விஷயம்? வாழ்க்கையில அவ எப்படி இருக்கா… என் பேச்சுக்கு என்னிக்காச்சும் மறு பேச்சு பேசியிருப்பாளா? மூச்சுக் காட்ட மாட்டா மாப்ளே! கட்டிப்போட்ட பசுமாடு மாதிரி வீடே கதின்னு அவபாட்டுக்கு இருப்பா…

இதுவே அழகான மவராசியா இருந்தான்னு வச்சிக்க, சீவி நல்லா சிங்காரிச்சிக்கிட்டு ஊரைச் சுத்தறதுக்கு கிளம்பிருவா.. ஸ்மார்ட் போன்ல பாதி நேரம் மொபைல்ல பேசிகிட்டு; வாட்ஸ் ஆப் நோண்டிக்கிட்டு இருப்பா. அப்புறம் எப்படி உன் பேச்சையும் என் பேச்சையும் அவ கேட்பா? கேக்க மாட்டா! நாமதான் அவ பேச்சைக் கேட்டுக்கிட்டு நிக்கணும்! நாமதான் அவளுக்கு டான்ஸ் ஆடணும். அதுக்கு நீ தயார்ன்னா போய் நில்லு.

ஆனா ஒண்ணை மட்டும் மறந்திராத மாப்ள. அழகானவ பொண்டாட்டியா வந்தா கொஞ்ச நாளைக்கு ஜோரா இருக்கும்; ஜாலியாவும் இருக்கும்… ஆசை அறுவது நாள், மோகம் முப்பது நாள்ன்னு சும்மாவா பெரியவங்க சொன்னாவ? பொறவு கொஞ்ச நாள் கழிச்சி வயித்ல பிள்ளைப் பூச்சியைக் கட்டின மாதிரி படுசங்கடமா இருக்கும். வெளியில சொல்ற மாதிரி இருக்காது போயேன்!

நான் இப்பம் சொல்றேன் தயவு செஞ்சி கேளு, கண்ணை மூடிகிட்டு வேணுகோபால் மவ கழுத்துல தாலியைக் கட்டு. ஒனக்கு எல்லா மரியாதையும், எல்லா அந்தஸ்த்தும் தானா வந்து சேரும். காரு பங்களான்னு நீயும் ஒன் டாக்டர் வேலையைப் பாத்துக்கிட்டு உன் பாட்டுக்கு இருக்கலாம். கொடி கட்டிப் பறப்ப நீ! அந்தப் பிள்ளையும் ஒனக்கு ஒரு சோத்தை ஆக்கிப் போட்டுக்கிட்டு, பிள்ளைக் குட்டிகளைப் பெத்து அதுங்களை நல்லபடியா வளர்த்துக்கிட்டு அவபாட்டுக்கு தேமேன்னு இருப்பா. ஒனக்கு ஒரு பிரச்னையும் இருக்காது…

உன்னோட பொழப்பு சொகுசா தார் ரோட்ல போற மாதிரி சுகமா அது பாட்டுக்குப் போயிட்டு இருக்கும், அதுவும் புத்தம்புது தார் ரோட்ல…” நாச்சியப்பன் இப்படிச் சொன்னதில் ராஜாராமனுக்கு சிரிப்பு வந்திருக்க வேண்டும்.

“அய்… மாப்ள மூஞ்சியில இப்பத்தான் சிரிப்பு எட்டிப் பாக்குது!”

“நீங்க எல்லாத்தையும் ரொம்ப லேசா ஜஸ்ட் லைக் தட் என்கிற மாதிரி ஈஸியாகவே பேசப் பாக்கறீங்க மாமா.. அதான் எனக்கு சிரிப்பு வந்திருச்சி. ஆனா வாழ்க்கை என்பது அப்படி எல்லாம் வெண்ணையைக் கட் பண்ற மாதிரியே எப்பவும் ஸ்மூத்தா இருந்திட்டு இருக்காது மாமா. எல்லா வாழ்க்கையிலும் எல்லாம்தான் இருக்கும். அது வேற. ஆனாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி விருப்பு வெறுப்புன்னு இருக்கத்தான் செய்யும்.

விரும்புறதை அடையணும் என்கிற ஆசையும் யாருக்கும் இல்லாம இருக்காது. எனக்கும் அந்த மாதிரி நிறைய ஆசைகள் இருக்கு. சின்னப் பையனா இருக்கிற காலத்ல இருந்தே அழகான பொம்பளைப் பிள்ளைகளைப் பார்த்தா எனக்கு ரொம்பப் பிடிக்கும்! அழகா இருக்கிறவங்களைப் பார்த்து ஆசையும் பட்டிருக்கேன். ஆனா ஆசைப்படறதை அடையறதுக்கு தகுதியான வயசுன்னு ஒண்ணு இருக்கே மாமா. வயசுன்னு நான் சொல்றது கல்யாணம் பண்ணிக்கிற வயசை.

அந்த வயசு எனக்கு இப்ப வந்திருச்சி. அழகானவளா பார்த்துப் பண்ணிக்கலாம்னு நெனைக்கிறேன்… இதுல பிடிவாதம் என்கிற மாதிரி வேற ஒண்ணும் கிடையாது மாமா… நீங்க தயவுசெய்து அதைப் புரிஞ்சுக்கணும்.”

“மாப்ளே, அழகான பொம்பளைப் பிள்ளையைப் பார்த்தா உனக்கு மட்டும்தான் ஆசையா இருக்குமாக்கும்? எங்களுக்கெல்லாம் இருக்காதாக்கும்! நீ ஒரு சரியான கூறு கெட்டவன் மாப்ள. கோட்டிக்காரப் பய…

இந்த ஒலகத்துல எல்லா ஆம்பிளைப் பயல்களுக்கும் அழகான பொம்பளையைப் பார்த்தா மண்டையைக் கொஞ்சம் சுத்தத்தான் வைக்கும் மாப்ளே! அப்படி மண்டை சுத்தலைன்னாத்தான் பிரச்சினை! அதெல்லாம் ஒரு சமாச்சாரமே கிடையாது பாத்துக்க! நான் இப்ப அதைப் பேசலை.

அழகான பொம்பளைப் பிள்ளை பொண்டாட்டியா வரணும்னு என்கிற மாதிரியே பேசற பாரு, அதுதான் ஒத்துக்கலை. அதுக்காக இப்ப நான் புதுசா ஒரு பாயிண்டைச் சொல்லி உனக்கு ஒரு வழி சொல்றேன் கேட்டுக்க…

கல்யாணத்துக்குப் பொறவு அழகா கும்னு இருக்கிற ஒருத்தியைப் பாத்து வைப்பாட்டியா வச்சுக்க! முடிஞ்சுது பிரச்சினை. அதுவும் நீ இருக்கப் போறது கேரளாவுல. அங்கே தடுக்கி விழுந்த இடமெல்லாம் செவ செவன்னு வளப்பமான மலையாளத்துக்காரிங்க. ஒவ்வொருத்தியும் தள தளன்னு சிந்திப் பசு மாதிரி ஆரோக்கியமா இருப்பாளுங்க!

அதுல ஒனக்குப் புடிச்ச மாதிரி அழகானவளா பாத்து வப்பாட்டியா வச்சுக்க!! ஜாம் ஜாம்னு அமோகமா இரு. டாக்டருக்கு வேற நீ படிச்சிருக்கே. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை வெள்ளைக் கலர் டிரஸ் போட்டிருக்கிற நர்ஸ்ஸுங்களே இருக்காளுங்க! பொறவு என்ன? ஒனக்கு ஒலகம் புரியல மாப்ளே…

நர்ஸ்ஸுங்களை வைப்பாட்டியா வச்சிருக்கிற டாக்டருங்க ஆயிரக் கணக்குல இருக்கானுங்க மாப்ளே! நீயும் இந்த மாதிரி வெள்ளைக் கலர் டிரஸ்காரியை வச்சிக்க! பணத்துக்கு பொண்டாட்டியாச்சு; ஆசைக்கு ஒரு அழகியாச்சு. அப்புறம் என்ன? ஒன்னோட வாழ்க்கை புதுசா போட்ட சிமென்ட் ரோட்ல போற வண்டி மாதிரி அலுங்காம குலுங்காம நல்லபடியா போய்ச் சேரலாம்.

நீ ரொம்பச் சின்னப் பையன்! இதை எல்லாம் நான் ஒன்கிட்ட பேசக்கூடாது! விதி விடலை. என்னைப் பேச வச்சிருச்சி. என்ன செய்யறது, ஒனக்கு ஒரு வழியைக் காட்டியாகணுமே மாப்ளே! வழியைக் காட்டியாச்சின்னு நெனைக்கிறேன். இந்த இடத்ல இன்னொன்னையும் சொல்லிடறேன் மாப்ளே.

கிளி மாதிரி பொண்டாட்டி; குரங்கு மாதிரி வைப்பாட்டின்னு சொல்றதெல்லாம் அந்தக் காலம்! இன்னைக்கு எல்லாமே அப்படியே தலை கீழ்! போ! போய் வேணுகோபால் மவளை ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்க.

அடுப்புக்கரி மாதிரி இருந்தா இருந்திட்டுப் போறா! பலாச்சுளை மாதிரி ஒருத்தியைப் பாத்து வைப்பாட்டியா வச்சிக்க. நல்லபடியா இரு… ஒன் அம்மாகிட்ட தகவல் சொல்லி அனுப்பு. மாமன் என்கிற முறையில் முன்ன நின்னு ஒன் கல்யாணத்தை நானே ஜாம் ஜாம்னு நடத்தி வைக்கிறேன்.

வேணுகோபால் மவளை நீ கட்டிக்கிட்டா அவன் எனக்கு தம்பி முறை ஆயிடுவானே! ரொம்பப் பெரிய விஷயமாச்சே அது…” 

தொடர்புடைய சிறுகதைகள்
என்னுடைய அம்மாவும், பாட்டியும் (அப்பாவின் அம்மா) அடிக்கடி போடும் சண்டைகள் மிகவும் பிரசித்தம். இருவருக்கும் புரிதல் என்பது சற்றும் . கிடையாது. இருந்தும் நாங்கள் கூட்டுக் குடும்பத்தில்தான் உழன்று கொண்டிருந்தோம். என்னுடைய அறியாப் பருவத்திலேயே வாயில் விரல் வைத்துச் சூப்பும் பழக்கம் என்னைத் ...
மேலும் கதையை படிக்க...
தி.நகர். சென்னை. சதாசிவ ஐயர் காலையிலேயே குளித்து பூஜை செய்துவிட்டு அன்றைய செய்தித் தாளில் மூழ்கியிருந்தார். எட்டு மணி இருக்கும். வாசலில் நிழலாடவே ஐயர் நிமிர்ந்து பார்த்தார். ஒரு இளைஞன் அவரிடம், “சார் என் பெயர் நரசிம்மன். ...
மேலும் கதையை படிக்க...
அடையாறு, சென்னை. புதன்கிழமை, காலை பதினோருமணி. வெயில் சுட்டெரித்தது. டாக்டர் மூர்த்தி தன் கிளினிக்கில் நோயாளிகளுடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். குடிப்பவர்களை அதிலிருந்து மீட்பதுதான் அவருடைய டாக்டர் தொழில். நிறையப்பேர் அவரிடம் தகுந்த ...
மேலும் கதையை படிக்க...
நம் சரித்திரத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் (கி.மு); கிறிஸ்து பிறந்ததற்குப் பின் (கி.பி) என்று இருப்பது போல, தற்போது கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் (கொ.மு; கொ.பி.) என்று தற்போதைய சரித்திரத்தை புதிதாக எழுத வேண்டும் போல. ஒரு காலத்தில் பர்த்டே பார்ட்டி; ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘வராஹ அவதாரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) எங்கும் வியாபித்திருந்த தண்ணீரில் இருந்து விஷ்ணு தோன்றினார். அதன் பின்னர் பிரும்மதேவன் தோன்றினான். அசரீரி வாக்கு அவனை தவம் செய்யுமாறு பணித்தது. அவன் கடும் தவம் புரிந்த பின்னர், அவன் ...
மேலும் கதையை படிக்க...
நாம் அனைவரும் குழந்தைப் பருவத்தை தாண்டி வந்திருக்கிறோம் என்றாலும் தற்போதைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். ஏன், எதற்கு, எப்படி என்கிற கேள்விகள் அவர்களிடம் ஏராளம். அவர்களுக்குப் புரியும்படி பதில் சொல்ல நமக்குத்தான் புத்திசாலித்தனமும் பொறுமையும் வேண்டும். அது நம்மில் பலருக்கு இருப்பதில்லை. என் தாத்தாவைவிட ...
மேலும் கதையை படிக்க...
சுதர்சன் எம்.டெக் படித்துவிட்டு, தொடர்ந்து யுபிஎஸ்சி எழுதி பாஸ் செய்தான். தற்போது அதற்கான போஸ்டிங் ஆர்டர் வரவேண்டும். இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். சின்ன வயசு. பகலில் வீட்டினுள் சும்மா அடைந்து கிடப்பது என்பது மிகக் கொடுமையான விஷயம். ஒரு பெண்ணின் ...
மேலும் கதையை படிக்க...
சென்னையின் பரபரப்பான தி.நகரில், பெண்கள் பலர் தங்கியிருக்கும் கட்டுப்பாடுகளற்ற ஒரு விடுதி அது. மாதம் ஏழாயிரம் கொடுத்து கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பலர் அங்கு தங்கியிருந்தனர். ஒரே ரூமில் நான்கு பெண்கள். மிகப் பெரும்பாலோர் கல்யாணமாகாத இளம் வயதுப் பெண்கள். அவரவர் கைகளில் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘சுயநலக் குணம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) சமையல்காரர் சிவக்குமார் உள்ளே போய் பாலக்காடு கிளம்புவதற்காக ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தார். சபரிநாதனுக்கு இது ஒரு புது எரிச்சல். காலையில் எழுந்ததும் இனி அவர்தான் கையில் கரண்டியைப் பிடிக்கணும். அவசரத்திற்கு ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘அறிவும் மதமும்‘ கதையைப் படித்த பின், இதைப் படித்தால் புரிதல் எளிது). சுவாமி விவேகானந்தர் “அறிவு பயன் படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பலனாக நூற்றுக்கணக்கான விஞ்ஞான சாஸ்திரங்கள் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன. அவைகளின் பயனாக சொல்பமானவைகள் அதிகமாக உள்ளதை அடிமையாக்கிவிட்டன.” என்றார். அதாவது செய்யப் ...
மேலும் கதையை படிக்க...
மாமியாரும் மருமகளும்
ஐயர் தாதா
சைக்கிள் ப்ராண்ட்
கொரோனா பாடங்கள்
மாங்கனிக்காக அல்ல…
குழந்தைகள்
மூன்றாம் பாலினம்
சோரம்
கோணல் பார்வை
தற்கால நாகரீகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)