அறை: கறை! – ஒரு பக்க கதை

 

என்னடி இது என்னோட சட்டை, பேண்ட் எல்லாம் இங்க் கறை? மனைவியை கேட்டான் சுந்தரம்.

ஆங்… எல்லாம் உங்க புள்ள செய்யுற வேலை. ஏண்டா இப்படி செஞ்சேனு கேட்டா கறை நல்லதுங்கறான். இது மட்டும் இல்லை. சுவத்துல கண்ணுல பார்க்குற இடமெல்லாம் அசிங்கப்படுத்திட்டு கறை நல்லதுங்கறான்.

ஆறு வயசு நவீனை கண்டித்து அடக்க முடியாமல் சுந்தரமும் அவன் மனைவி ராகிணியும் தவித்தார்கள். டி.வி. குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது.

இவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தால் தான் திருந்துவான்

”நவீன் இங்கே வா”

”என்னப்பா?” துள்ளிக்குதித்து ஓடி வந்தான் நவீன்.

”என்னடா இது அப்பா சட்டை, பேண்ட் எல்லாம் இங்க் ஆக்கி வச்சிருக்கிற?”

”கறை நல்லதுப்பா…” சொல்ல வாயெடுக்கவும் பளீரென்று ஒரு அறை விழுந்தது நவீனின் முதுகில். இதுவரை மகனை அடிக்காத சுந்தரம் அடித்ததில் அவன் மனைவி கூட வாயடைத்து நின்றாள். நவீனும் அழ மறந்து உறைந்து நின்றான். நாட்கள் ஓடியது. இப்பவெல்லாம் நவீன் எங்கும் கறைப்படுத்துவதில்லை.

என்னங்க இப்ப நவீன் எங்கயேயும் கறைப்படுத்திட்டு கறை நல்லதுன்னு டயலாக் அடிக்கிறதில்ல. மனைவி கூற சுந்தரம் சில நேரத்துல அறை கூட நல்லது தான் போலிருக்குது என்றான்.

– வி.சகிதா முருகன் (மே 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
அடுத்த அறையிலிருந்து குழந்தையின் அழுகுரல், விசுக்கென்று கையைபிடித்து இழுத்ததுபோலவிருந்தது. செங்குத்தான பாதையில் பயணித்து, சட்டென்று வழுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததுபோல குரல் விசும்பலும் தேம்பலுமாக நொண்டியபொழுது, புரிதல் ஒரு செம்மறி கிடாவென நெஞ்சை முட்ட பதட்டத்துடன் விழித்தேன். சுற்றிலும் ஆழ்கிணற்றின் நீர்போல இரவு ...
மேலும் கதையை படிக்க...
எங்களின் ஒரே பெண் சுமித்ரா தலைப் பிரசவத்திற்காக நியூஜெர்ஸியிலிருந்து சென்னை வந்திருந்தாள். இது எட்டாவது மாதம். அவள் கணவருக்கு உலக வங்கி நியுயார்க்கில் வேலை. நான் மூன்று வருடங்களுக்கு முன் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. மிக நேர்மையாக என் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு கடமையாற்றியவன். ...
மேலும் கதையை படிக்க...
‘கடினமான செயலில் முயற்சியோடு உழைக்கும் எவரும் தன்மானத்தை இழப்பதில்லை..’ & பெர்னாட்ஷா சொன்னதுதான் நளினியின் நினவுகளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. கூடவே கண்ணீரும் தளும்பிக் கொண்டே இருந்தது. திவாகருடன் இனிமேல் வாழமுடியுமா என்ற கேள்வியின் தாங்கமுடியாத கனம் தன் நெஞ்சில் ஒவ்வொரு கணமும் வலியை ஏற்றிக்கொண்டே ...
மேலும் கதையை படிக்க...
சங்கு மீன்
'கோமதி காணாமல்போய் இன்றோடு 10 வருடங்கள் முடிந்துவிட்டன’ என சரஸ்வதி நினைத்துக்கொண்டிருந்த போதுதான், அவளிடம் இருந்து கடிதம் வந்தது. சரஸ்வதிக்கு உண்டான கோபத்தில் கடிதத்தைக் கிழித்துப்போட்டுவிட வேண்டும் என நினைத்தாள். ஆனால், அவளால் கிழிக்க முடியவில்லை. கோமதியின் கடிதம் அவளுக்குப் பதற்றத்தை ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு வயது தற்பொழுது சுமார் ஐம்பத்தாறு இருக்கும். அதற்கு மேலாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். தோராயமாகத்தான் சொல்கிறேன் ஐம்பத்தாறு என்று. வாழ்க்கையில் பசியையும் பட்டினையையும் மட்டுமே தெரிந்து வைத்திருந்த என் அம்மாவிற்கு நாள் நட்சத்திரம் தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் என் பிறந்த ...
மேலும் கதையை படிக்க...
அழுகுரல்
ஊடு பயிர்
பொதி மரம்
சங்கு மீன்
பாடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)