அர்த்தம் – ஒரு பக்க கதை

 

வீட்டுக்கு வந்திருந்த உறவு சனம் வீட்டை தலைகீழாக மாற்றிப் போட்டு விட்டுப் போயிருந்தது. வீட்டைப் பெருக்கி சாமான்களை ஒழித்து சரி செய்வதற்குள் கவிதாவுக்கு இடுப்பு ஒடிந்து போனது.

இரவு… பாவம் நாள் முழுக்க வேலையில் களைத்துப் போகிறாள். நாம் வேறு அவளை “”அந்த” விஷயத்திற்காக படுத்தினால் இன்னும் அலுத்து சலுத்துப் போய்விடுவாளே என்று “”நல்லா தூங்கு” என்று பெருந்தன்மையாக போர்வையை போர்த்திவிட்டான்.

மறுநாள் கவிதாவின் பேச்சுக்குரல் கேட்டது. பக்கத்து வீட்டு மாமியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

“கொடுப்பினை அவ்வளவுதான். நாள் முழுக்க வேலை இருந்தாலும் நைட், புருஷனோட அணைப்பும் ஆக்ரமிப்பும் கொடுக்கற சுகமே அத்தனை களைப்பையும் போக்கிடும்னு
புஸ்கத்துலதான் படிச்சிருக்கேன். அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணுமே ?”

கவிதா சொன்னது கேட்டு திகைத்தான்.

- சூர்யகுமாரன் (செப்ரெம்பர் 2010) 

தொடர்புடைய சிறுகதைகள்
மணிக்கொடி, 15-01-1937 "கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?" என்று முணுமுணுத்தார் முருகதாசர். கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப் படாததால் அது நடு ...
மேலும் கதையை படிக்க...
மூன்றுஆண்டுகளாகப் பிரியப்பட்டு, பிரயத்தனப்பட்டு, இப்போதுதான் நிறைவேறப்போகிறது, மங்களம்மாளின் கேதார்நாத், பத்ரிநாத் தீர்த்தயாத்திரை விருப்பம். மங்களம்மாளுக்கு அறுபது வயதாகிறது. அவர்களுக்கு திருநெல்வேலி பூர்விகம். இரண்டு வருடங்களுக்கு முன் கணவர் கூட்டுறவுவங்கி உத்யோகத்திலிருந்து ஓய்வுபெற்ற மறுநாளே மாரடைப்பில் இறந்துபோனார். மூன்று மகன்கள். முதல்வன் மாசிலாமணிக்கு 40 ...
மேலும் கதையை படிக்க...
வீட்டுக்கு வரவேயில்லை!
"எதுக்குப்பா? இவ்வளோ அவசரமா? அதுவும் கோயிலுக்கு? அப்படியென்ன, வீட்ல பேச முடியாத விஷயம்?' - படபடவென்று மகனை வேதனை தோன்ற பார்த்தார் ராஜமாணிக்கம். திரட்டி வைத்திருந்த தைரியமெல்லாம் மகனின் இந்தத் தவிப்புக்கும் பாசத்துக்கும் முன் காணாமல் கரைந்து போவதை அவரது உள்மனம் ...
மேலும் கதையை படிக்க...
மாமர நிழலில் அமர்ந்திருந்த பெருமாளின் அருகில் வந்தனர் அவரின் மகன்கள் இருவரும். “அப்பா! உங்க நிலத்தை விற்று என்னையும், தம்பியையும் படிக்க வச்சீங்க… நாங்க இப்போ நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கிறோம்… எங்களுக்கு குறைன்னு பார்த்தா வாடகை வீடுதான். இந்த நிலத்தை ...
மேலும் கதையை படிக்க...
பாசத்தின் முகவரி அப்பா
""நம்ம அப்பா இன்னொரு மேரேஜ் பண்ணிட்டு நம்மை விட்டுட்டுப் போயிருவாரா பாபுண்ணா?'' என்று ஏக்கப் பெருமூச்சுடன் தன் கேள்வியைத் தொடுத்தாள் மீனு. ""இல்லைம்மா... நம்ம அப்பா நம்மை விட்டுட்டு எங்கேயுமே போகமாட்டார். இனிமே நாம மூணு பேர் மட்டுமே இந்த வீட்டுல ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நாள் கழிந்தது
அம்முவும் கேதார்நாத் தரிசனமும்
வீட்டுக்கு வரவேயில்லை!
மாமரம் – ஒரு பக்க கதை
பாசத்தின் முகவரி அப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)