அர்த்தங்கள் – ஒரு பக்க கதை

 

மீனா அபார்ட்மென்ட்ஸ். மூன்றாவது ப்ளோரின் 21ம் நம்பர் வீடு. சமையல் முடித்து ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சியினை காண கண்ணாடி ஜன்னலின் திரைச்சீலையை மூட வந்தவளுக்கு திக்கென்றிருந்தது.

உடனே கணவனிடம் சென்று,

“இதோ பாருங்க, உங்க அப்பாவும் அம்மாவும் கீழே வந்துகிட்டிருக்காங்க, சும்மா விட்டோம்னா இங்கயே ஒரேயடியா தங்கிடுவாங்க. அதனால அவங்க வந்ததும் நாங்க திருப்பதி போறோம், வர ஒரு வாரம் ஆகும்னு சொல்லி அந்த கிழங்கள விரட்டிடுங்க ..சரியா?”

“சரி சரி”

அழைப்பு மணி அழைத்தது.

கதவை திறந்ததும் மலர்ந்த முகத்தோடு அந்த வயோதிக உள்ளங்கள் வந்தது. உடனே அவன் தன்மனைவி சொன்ன வார்த்தை பிசகாமல் படபடப்போடு அனைத்தையும் சொல்லி முடித்தான்.அவர்களும் பாவமாய்,

“சரிப்பா…பரவாயில்லப்பா, இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தோம்…இவ பேரன பாக்கனும்னா. நாங்க பார்த்துட்டு போயிடறோம்” என்றார்கள்.

குழந்தையை பார்த்ததும் சந்தோசம் கொள்ளவில்லை அவர்களுக்கு.

குழந்தையோ அழுது கதறியது.

கொஞ்சிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.

கதவை தாளிட்டு வந்து “அப்பாடா…போக வச்சாச்சு” என்று கணவனும், மனைவியும் சந்தோஷப்பட்டார்கள்.

அவ்வளவு நேரம் அழுத அந்த எட்டு மாதக் குழந்தை அவர்கள் இருவரையும் பார்த்து ‘கக்கக்கவென’ சிரித்தது.சத்தமாய் அழது அரற்றிய குழந்தை திடீரென சிரிப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.

“பாசமாய் வந்த அய்யா அப்பத்தாவை விரட்டி விட்டீர்களே.எத்தனை வருடம் உங்களுக்காக அவர்களை சிதைத்து கொண்டு உங்களை இந்த உச்சியில் வைத்திருக்கிறார்கள். அடுத்தவரோட உணர்வுகளை உணர்ந்து, மதிச்சு நடக்கிறவன் தான் மனுஷ ஜென்மம். உங்களுக்கு போய் நான் பொறந்ததுல வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு தான் என் அய்யா அப்பத்தாவோட நான் இருக்க முடியலயேன்னு அழுதேன். இப்படியும் அப்பா அம்மா இருக்காங்களேன்னு உங்கள பார்த்து சிரிக்கிறேன்” என்று அந்த குழந்தையின் சிரிப்பில் அர்த்தங்கள் இருப்பதாய் அவர்களுக்கு உரைத்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருக்கும்போது சாலையில் நின்று பச்சை விளக்கு வரும் வரை காத்திருக்க எனக்குப் பிடிக்காது. அதற்கான பொறுமையை நான் இழந்து விட்டேன். எதிர்முனையில் எந்த வாகனமும் வரவில்லையென்றால் சிவப்பு விளக்கையும் பொருட்படுத்தாமல் செல்வதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும். மோட்டாரை ...
மேலும் கதையை படிக்க...
முள் தோப்பு எங்கும் மல நாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மாதான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக பெரியம்மாவுக்கு விடியற்காலை இரண்டு மணிக்கு எல்லாம் விழிப்பு வந்துவிடும். தண்ணீர் பிடித்துக்கொண்டு இருக்கும்போதே, பறவைகள் சத்தம் கேட்கிறதா எனப் பார்க்கும்.'பறவை ...
மேலும் கதையை படிக்க...
காற்றின் விதைகள்…
வெகுநேரமாகியும் வீட்டு வேலைக்கான உதவிப்பெண் சாலம்மா வரவில்லை என்பதால், தேடிக்கொண்டு போனபோது அவள் காவேரி நகர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றிருப்பதாய்ச் சொன்னார்கள். மொபெட்டில் சென்றபோது அவ்வீட்டை தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது. மினி வேன் ஒன்றில் தட்டுமுட்டுச் சாமான்களுக்கு சிகரமாக நாற்காலி ஒன்று ...
மேலும் கதையை படிக்க...
‘’இந்தச் சண்டாளப் பாவிய கொல்லதுக்கு ஆருமேயில்லியா’’ புட்டுக்காரிப் போட்டக் கூப்பாட்டத்தில் தன் மௌனத்தைத் தவற விட்டபடி அதிர்ந்து நின்று கொண்டிருந்தது இரவு. கிணற்றுக் கரையோரம் கிடந்த நாய் சுவடி தன் ஊளையைப் பெருக்க, மேலவிளையின் சாக்குட்டன் வீட்டில் முதல் வெளிச்சம் பற்றிக் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘உறக்கம் வராதவர்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சுகுணா காலையிலேயே ஊருக்கு கிளம்பிவிட்டாள். யாருடைய பேச்சும் அருகாமையும் இல்லாமல் இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்த சபரிநாதனுக்கு மகள் சுகுணா கிளம்பிப் போனது நிம்மதியாக இருந்தது. சுப்பையா ஒரு ...
மேலும் கதையை படிக்க...
வழிப்போக்கன்
வெளிய
காற்றின் விதைகள்…
காற்றைக் கலைக்கும் ரேகைகள்
காந்திமதியின் சீற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)