அம்மா மனசு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 11,107 
 

“அம்மா……..”

“…………….”

“அம்மா……..”

“என்னடா செல்லம்? அம்மா வேலையா இருக்கேன்ல……..,பாரு அப்பாவுக்கு ஆபீஸுக்கு நேரமாச்சு. இப்பத்தான் குக்கரே வைக்கறேன், சாயங்காலம் பேசலாமேடா கண்ணா!”

“அதில்லமா நான்தான் உங்கிட்ட ஒன் வீக் முன்னாடியே சொன்னேனே மா.., அந்த மேட்டர் மா..”

“ஓ..,ஓ…அதுவா.., ரைட் ரைட் இப்ப ஞாபகம் வந்துடுச்சு. எஸ்கர்ஷன் தானே.., மஹாபலிபுரம் க்ரோகோடைல் ஃபார்ம்….பீச் எல்லாம், நான்தான் அப்பவே இன்னொரு சமயம் பாத்துக்கலாம்னு சொன்னேனேடா..”, பத்மினி எப்படியாவது தன் ஏழு வயதுக் குழந்தை அம்மு என்கிற ப்ரியாவை சமாதானப்படுத்தப் பார்த்தாள்,

“போம்மா….நீ அப்பாவைக் கேட்டாலும் இதையேதான் சொல்றார், ஸ்கூல்ல மிஸ் வந்து எல்லாரும் வரணும் உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்னு சொல்லியிருக்காங்க. அதோட என் ஃப்ரெண்ஸ் மாலா, ஜெஸி, ஃபாத்திமா, நூர்ஜஹான் எல்லோரும் மணி கொடுத்தாச்சு, அவங்க வீட்ல எல்லாம் டாடி.மம்மி உடனே ஓ.கே. சொல்லிட்டாங்க தொரியுமா?. நீங்கதான் எல்லாத்துக்கும் வேணாம்கறீங்க..”, மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டு விசும்ப ஆரம்பித்தது.

ப்ரியா அழுவதை அவளால் சகிக்க முடியவில்லை, “இதோ பார் அம்மு இதுக்கெல்லாம் அழுவாளாடா? உனக்கு பீச் காத்தெல்லாம் ஒத்துக்காதுடா கண்ணா அதனாலதான்……அப்படி சொன்னோ”, எந்த சமாதானத்ததையும் குழந்தை ஏற்பதாக இல்லை.

“போம்மா.., எப்பப்பாரு ஏதாவது சொல்லிகிட்டே இருக்கீங்க, நான் எத்தனை வாட்டி பீச்சுக்கு போயிருக்கேன், எப்பவோ பேபியா இருந்த போது உடம்புக்கு முடியாம போச்சுன்னா அதுக்காக இப்ப நான் பெரிய பொண்ணுதானே! அதோட நீதான் எனக்கு பாடி ரெஸிஸ்டன்ஸ்க்கு காம்ப்ளான். ஹார்லிக்ஸ் அது இதுன்னு கொடுத்துட்டே இருக்கியே. ஆதனால எனக்கு ஒண்ணும் ஆகாது, நான் கண்டிப்பா எஸ்கர்ஷன் போயே தீருவேன்”, ஒரு லெக்சரே கொடுத்துவிட்டது அம்மு.

“ஓ,கே, அதெல்லாம் சரிதான், இருந்தாலும் இப்ப நீ ஸ்கூலுக்கு போகறதுக்கு ரெடியாகு, மத்ததெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்”.

“மம்மி….,இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிடறேனே.., ப்ளீஸ்..”, பத்மினியின் முகவாய்க்கட்டையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சியது. அதனுடைய குண்டு ரோஜாக் கன்னங்களில் சற்று முன் விசும்பி அழுததற்கான நீர்க் கோடுகள். கண்களில் ஒரு விதமான தயக்கமும் ஏக்கமும் பிரதிபலித்தது. அது மம்மி, டாடி தன் எஸ்கர்ஷனுக்கு “எஸ்” சொல்ல வேண்டுமென்பதற்கான எதிர்பார்ப்பு போலவும் தெரிந்தது. பத்மினிக்கும் இது புரியாமல் இல்லை. ஆனால் மணமாகி பத்து வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்து ஷஷ்டி விரதம். சதுர்த்தி விரதம், அரச மரம் சுற்றுதல் போன்ற பலவும் செய்து பிறந்தவள்தான் அம்மு. அந்தக் குழந்தையை எப்படி பள்ளிசுற்றுலாவுக்கு நம்பி அனுப்புவது?. அதுதான் அவளின் முதல் கவலை.

சட்டென்று நினைவு கலையப் பெற்றாள்.

“ம்….ம்…, சொல்லுடா? என்ன விஷயம்?”.

“மம்மி….மம்மி..,ஜெஸி. ஃபாத்திமா இரண்டு பேரும் பரோட்டா, குருமா கொண்டு வராங்களாம், மாலா சப்பாத்தி தாலாம், நூர் வந்து இடியாப்பமாம். ஆனா அவங்க எல்லாம் எங்கிட்ட “லெமன் ரைஸ்” கேட்டாங்க மா. நீங்க லஞ்சுக்கு அடிக்கடி செய்து தருவீங்க இல்லை அதை அவங்க எல்லாருமே டேஸ்ட் பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு அது ரொம்ப ரொம்ப பிடிக்கும், அதோட நீங்க அதில இஞ்சி. கேரட். எல்லாம் திருவி போட்டு கலர்ஃபுல்லா இருக்குல்ல. அதனால அவங்க முணு பேரும் என்னைக் கண்டிப்பா லெமன் ரைஸ் கொண்டு வரச் சொன்னாங்க, அப்பறம் தொட்டுக்க ஓமப்பொடி வடகம் கொண்டு வரச் சொன்னாங்க அது வாயில போட்டா அப்படியே கரையுமில்ல, அதனாலதான் என்ன……..,மம்மி….ஓ,கே,யா? முகத்தில் துடைத்த டியூப் லைட் போல் அப்படி ஒரு வெளிச்சம், உற்சாகத் துள்ளலோடு பேசியது, கண்ணைச் சுழற்றிச் சுழற்றிப் பேசும் போது கண் காது வரை நீண்டு கண்களே சிரிப்பது போலத் தோன்றியது பத்மினிக்கு, இப்படிப்பட்ட அழகுப் பெட்டகத்தை பள்ளிக்குச் செல்லும் நேரங்களில் மட்டுமே பிரிந்திருந்தாள் அதுவும் அவள் எதிர்காலம் கருதி.

அம்மு அவள் அம்மா என்ன சொல்லப்போகிறhள் என்று ஆவலோடு அவள் முகத்தையே பார்த்தது, அப்போது அம்முவின் நெற்றி முன்னே வந்து விழுந்த சுருள் சுருளான கேசத்ததைக் கோதி விட்டாள்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் சுற்றுலா….முருகா ஏதாவது ஒரு நல்ல வழி காட்டு….,நான் உனக்கு வர கிருத்திகைக்கு பாலாபிஷேகம் பண்றேன், என் குழந்தை என்னை விட்டுப் பிரியக்கூடாது, (எஸ்கர்ஷனுக்காக) பள்ளி செல்வதைத் தவிர, “அ……அது வந்து சாரிடா கண்ணு, டாடி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு “மணி” கொடுத்திடலாம், நீ சொன்ன மாதிரி “லைம் ரைஸ்” இல்ல…., இல்ல…. “லெமன் ரைஸ்” ஓ,கே.. கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். அதுவும் பதில் மரியாதைக்கு ஒன்றை அவள் கன்னத்தில் “நச்”சென்று கொடுத்து விட்டு பட்டாம்பூச்சி போல அவ்விடத்தை விட்டு உற்சாக ஊஞ்சலாகப் பறந்து விட்டது.

காலை டிபனுக்கு நேரமாகிவிட்டதால் கோகுலோடு பேச நேரமிருக்காது, அதனால் வேலைகளை மடமடவென்று முடித்து விட்டு கோகுலிடம் இதைப் பற்றி லேசுபாசாக கோடிட்டு வைத்தாள். அதுவும் அம்மு இதைப் பற்றி தன் தோழிகளிடம் தொலைபேசியில் பேச அவ்விடத்தை விட்டு அகன்ற போது,

“என்னங்க?……உங்ககிட்ட சாயங்காலம் சாவகாசமாகப் பேசலாம் என்றிருந்தேன், அதாங்க..”. அவன் புருவம் சுருக்கி என்னவென்பது போல் பார்க்க. “அதாங்க நம்ம அம்மு எஸ்கர்ஷன் விக்ஷயமாத்தான். உங்க அபிப்ராயம் என்ன? அனுப்ப போறீங்களா?”, கேட்டு முடிப்பதற்குள்ளேயே அம்மு வந்து விட.

“ஹாய் அம்மு..,உங்க ஸ்கூல்ல எஸ்கர்ஷன் போறதைப் பத்தி நீ அப்பாவே கேட்ட இல்ல..? நானும் ஏதோ ஞாபகத்தில அப்புறம் பாத்துக்கலான்னு சொன்னேனே…. அதுதானடா..?”

“ஆமா டாடி அதேதான் என்று உற்சாகத் துள்ளலுடன் ஓடி வந்து அவனைக் கட்டிக்கொண்டது, என் அம்மு எஸ்கர்ஷன் போக “பெர்மிஷன் கிரான்டட்” சொன்னதுதான் தாமதம், அம்மு அப்பாவின் மேல் இருந்த தன் பிடியை இன்னும் இறுக்கி அப்பா கழுத்ததை மேலும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அவன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டது.

“ஆல்ரைட்..,அப்பாவுக்கு ஆபீஸூக்கு டயம் ஆச்சுடுடா, மீதியை சாயங்காலம் வச்சுக்கலாம், அது சாp உனக்கு பாக்கெட் மணி ஃபிப்டி. எஸ்கர்உக்ஷன் மணி உறண்டிரட் சாpதானே..1 இந்தா பிடி என்றதும் அம்முவின் முகத்தில் வீடியோ கேமராவை ஃபோகஸ் செய்தது போல் அப்படி ஒரு வெளிச்சம்,

“தேங்க்யூ டாடி என்று சொல்லி. பொன்மகள் வந்தாள் பாட்டை உறம் செய்து கொண்டே அம்மா பிசைந்த நெய் மணக்கும் பருப்பு ரசம் சாதத்தை பீன்ஸ் பொறியலோடு துளிக்கூட அடம் பண்ணாமல் (அதிசயமாக) மிச்சம் வைக்காமல் (அதுவும் அதிசயமாக) சாப்பிட்டு விட்டு ரெடியாகி வாசலில் வேனை எதிர்பார்த்துக் காத்திருந்தது. பத்மினிக்கு செம கோபம், வேன் வந்து குழந்தையை ஏற்றி “டாட்டா” காட்டி விட்டு வந்து படபடவென தீபாவளிப் பட்டாசாய்ப் பொரிந்தாள் கோகுலிடம்.

“ஏங்க. உங்க மனசில நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? அடியேய்ங்குறதுக்குப் பொண்டாட்டியைக் காஹணுமாம், குழந்தை பெறந்து கோபாலகிருஷனன்னு பேர் வச்சாளாம், நான் எஸ்கர்ஷனையே எப்படி தடுக்குறதுன்னு பாக்கறேன், நீங்க என்னடான்னா கை செலவுக்கும் சேத்து பணத்தை கொடுக்கறீங்க. குழந்தை என்ன நினைப்பாள்,?டாடி ரொம்ப நல்லவங்க மம்மிதான் தடுக்கறாங்கன்னு நினைக்க மாட்டாளா? ஏங்க நான் தவமா தவமிருந்து முன்று அபார்ஷனும் ஒரு குறைப்பிரசவம் அதுவும் ஏழரை மாதத்தில் நடந்து ஐந்தாவதாகப் பிறந்த குழந்தை, அதுவும் பதினைந்து நாட்கள் இங்குபேட்டால் வைத்து சுவாசம் வருகிறதா இல்லையா என்றே தெரியாமல் ஊரில் உள்ள அத்தனை கடவுள்களுக்கும் வேண்டுதல் அப்ளிகேஷன் போட்டு “செலக்ட்” ஆன குழந்தை, டாக்டரும் அவளை எவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக வளர்க்க வேண்டும் என்று சொன்னதையெல்லாம் மறந்து விட்டு ஏதோ எடுத்தேன். கவிழ்த்தேன்னு நீங்க செய்யுறது ஒண்ணும் சரியாக இல்லை”, சொல்லி முடிக்கும்போதே நுனி மு்க்கு சிவந்து கண்களில் கண்ணீர்க் குளம், தான் தவம் செய்து மிக மிக எதிர்பார்ப்புடன் பெற்ற குழந்தைக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்ற கவலை. கலக்கம்,ஒரு இரண்டு நிமிடங்கள் போல் கோகுல் அமைதி காத்தான், இனிமேல் பேசினால் அவள் காதுகொடுத்துக் கேட்பாள் என்ற முடிவுக்கு வந்தவுடன் பேசத் தொடங்கினான்.

“பப்பி. நீ எவ்வளவு கஷ்டப்பட்டு அம்முவைப் பெற்றாய் என்று எனக்குத் தெரியாதா? எனக்கு மட்டும் என்ன அவளை அனுப்பி வைக்க பூரண சம்மதம் என்றா நினைக்கிறாய்? இல்லவே இல்லை……,ஆனால் ஒன்று யோசித்துப்பார், அந்தக் குழந்தை அதன் அதன் பருவத்தில் ஏற்படக்கூடிய ஆசைகளுக்கு ஒத்துழைத்து அவர்களும் அம்மா அப்பாவைத் தவிர வெளியேயும் ஒரு உலகம் இருக்கிறது அதைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? ஒரு நிமிடம் யோசித்துப் பார், நாம் எப்பொழுதும் நம் ஆளுமையின் கீழேயே குழந்தையை வைத்துக் கொண்டிருந்தால் அது நாம் அவர்களை ஒரு கைதியாகப் பிடித்து வைத்திருப்பதாகத்தான் அர்த்தம், அதோடுகூட இன்னும் ஒரு பத்து பன்னிரண்டு வருடம் கழித்து அவள் மேற்படிப்பக்காக நம்மை விட்டு பிரிந்து விடுதியில் தங்கிப் படிக்க வேண்டியிருந்தால் என்ன செய்வாய்?அதனால்தான் இனிமேல் நீயும் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள். என்ன புரிகிறதா?……”, கோகுல் அவள் தோள்களைப் பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தி அவளையே பார்த்தான், அதில் அவனுக்கு ஒரு “பெரிய” அம்முதான் தெரிந்தாள், தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். எப்படி இரண்டு அம்முக்களையும் சமாளிக்கப்போறேனோ?

“சாரி சாரி ஆபீஸீக்கு நேரமாச்சு..,கவலைப்படாதேடா ஒண்ணும் ஆகாது, நம்ம அம்மு கெட்டிக்காரி உன்னைப்போலவே ஸோ, டோண்ட் வொர்ரி பி சியர்ஃபுல்.. பை……”

என்னதான் ஆறுதல் சொல்லி அவன் அலுவலகம் சென்று விட்ட போதிலும் பத்மினியால் அம்மு எஸ்கர்ஷன் செல்வதை அனுமதிக்க முடியவில்லை, எனவே மறுபடியும் “முருகா….. உனக்கு பாலாபிஷேகம் பண்றேன்பா என் குழந்தை எஸ்கர்ஷன் போகக்கூடாதப்பா….என்னை விட்டுப் பிரியக்கூடாதப்பா..,ப்ளீஸ்……..?”

அன்று காலை..,சுற்றுலா செல்வதற்கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன, அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து லெமன் ரைஸ் செய்து வடகம் வறுத்து. பிஸ்கட். மலை வாழைப்பழம். ஆலு சிப்ஸ் எல்லாம் வாங்கி போதாததற்கு பிரட்டூஜாம். டப்பர்வேர் டப்பாவில் ஆரஞ்சு ஜுஸ் மினரல் வாட்டர் எல்லாம் ரெடி, அம்முவுக்கு முதல் நாள் ராத்திரியிலிருந்தே தூக்கம் வரவில்லை, மம்மி ஐஞ்சு மணி ஆயிட்டுதா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தாள், பத்மினி எழுந்தவுடன் அவளும் கூடவே எழுந்து விட்டாள், தன் அயிட்டம்ஸ் எல்லாத்தையும் பேக் செய்ய ஆரம்பித்தது, அதன் கண்களிலும் செய்கைகளிலும் ஒரு அளப்பாரியதான ஆவல். குதூகலம் உற்சாகம்,வெந்நீரில் குளிப்பாட்டி போனி டெய்ல்ஸ் போட்டு நீல ரிப்பன் வைத்துக்கட்டி ரெடியாகி அயர்ன் செய்து வைத்து நீலம் வெள்ளை பினோஃபோர்ம் உக்ஷர்ட் போட்டு வெள்ளை சாக்ஸ் மற்றும் கேன்வாஸ் ஷூஸ் போட்டு குட்டி தேவதையாய் அம்மு, இரவு வாங்கி வைத்த வெள்ளை ரோஜhக்கள் இரண்டையும் இரு பக்கமும் வைத்து உறர்பின் போட்டாள் பத்மினி, ஆனால் அவள் மனது மட்டும் அமைதியாய் இல்லை.

எல்லாம் முடிந்து அம்முவை பிக்அப் பாயின்டில் ஏற்றி விடுவதற்காக கோகுலோடு கிளம்பினார்கள், மு்ச்சுக்கு முன்னூறு முறை “அம்மு. ஜாக்கிரதைடா கண்ணா. உங்க மிஸ் பக்கத்திலேயே இரு, எங்கே இறங்கினாலும் மிஸ் கூடவே போ, பீச்சுல ரொம்ப ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும்….என்ன புரிஞ்சுதா?….,வார்த்தைக் கோர்வை முடிந்ததும் பத்மினியின் கண்களில் வாட்டர் டேங்க்….அவளால் அடக்கமுடியவில்லை,

“என்ன மம்மி நீ….இத ரெண்டு நாளா ஒரு தௌசன் டைம்மாவது சொல்லியிருப்ப தெரியுமா?….எனக்குத் தெரியும் மம்மி நான் கேர்ஃபுல்லா இருப்பேன், நீதான் இப்ப ரொம்ப பயப்படுறே….,எனக்கு இப்ப எப்படி உன்னை விட்டுட்டுப் போறதுன்னு இருக்கு..,அது பேசப் பேச பத்மினி மனதுக்குள் நினைத்தாள், அப்படியாவது டிரிப் கேன்சல் ஆனால் சரிதான்.

இப்படி ஏதேதோ நினைப்பில் அவள் பள்ளிப்பேருந்திலிருந்து அம்முவை பிக்அப் செய்வதற்காக இறங்கிய அவள் வகுப்பு ஆசிரியையிடம் தனியாக அம்முவை கவனித்துக் கொள்ளச் சொல்லும் ஆவலில் . அம்முவிடம் ‘நீ டாடியோடு வா நான் முதலில் சென்று உங்க மிஸ்கிட்ட உன் பேக்கேஜ எல்லாம் கொடுக்கிறேன் என்று சொல்லி சாலையைக் கடந்தாள், மனம் இன்னும் குழம்பிய நிலையில்தான் இருந்தாள், அப்போது அவள் வீட்டு வேலைக்காரி இருளாயி யாருடனோடு பேசியது எதேச்சையாகக் காதில் விழுந்தது.

“ஏங்க்கா கடைசில இப்டி பண்ணிட்ட..,? ஒங்குளந்தை மாரிச்சாமியை ஒம் மூத்தாருக்கு தத்து கொடுத்துகினியாமே? எப்டிக்கா உனக்கு மனசு வந்துச்சு? அதும் ஒனக்கு இரண்டு கொறைல போய் முருகனுக்கு நேந்துகிட்டு பொறந்த குளந்தை அது? கேக்கசொல்ல மனசு ஆறல”.

……………………………………….

“ஏங்க்கா.., என்னன்னு சொல்லேன்?”

“சரசு ஒனக்கு தெரியாததில்ல…. எம் புருஷன் மாரி புறக்குறவரைக்கும் ஒயுங்காத்தான் இருந்துச்சு, அப்புறம் குடி சீட்டுன்னு ஆரம்பமாச்சு, அதுக்கு துட்டு? இந்த நேரத்தில மூத்தாரு வந்து புள்ளையை கேட்டாரு, நானும் யோசிச்சேன், இந்த குடிகாரனோட ஆயசுமுச்சுடும் அல்லல்படறத வுட இது எவ்வளவோ மேல்ன்னு தோணிச்சு, நம்ம கொளந்த காலம் மூச்சுடும் நம்மோட இருந்து கஞ்சிக்கே கஷடப்படறத விட எங்கேயோ நல்லா இருந்தா அதுவே போதும்ன்னு தோணிச்சு, புள்ளையோட எதிர்காலத்தை நினைச்சு எம் மனச கல்லாக்கிட்டேன், எங்க இருந்தாலும் எம்புள்ளதானே….”, சொல்லிக்கொண்டே புடவைத்தலைப்பால் கண்ணைத் துடைத்துக்கொண்டே போகும் அவளை சரசுவும் பத்மினியும் அவரவர் கோணத்தில் பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டே சென்றனர்.

Print Friendly, PDF & Email

1 thought on “அம்மா மனசு

  1. மித நல்ல கதை. அருமையான தமிழ். அம்மா அபியும் நானும் பிரகாஷ்ராஜைஉம அப்பா ஐஷ்யர்யவையும் நினையுபடுதுகிரர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *