அம்மா போயிட்டு வரேன் – ஒரு பக்க கதை

 

விஜயாவுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது.

வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் போது இந்த வேலைக்காரி சொல்லிக் கொண்டு போக மாட்டாளோ? ஒரு நாளைப் பார்த்தாற் போல் சத்தம் போடாமல் பூனை மாதிரிப் போய் விடுகிறாளே!

ஏதாவது மிச்சம் மீதியிருந்தால் கொடுக்கலாம். இல்லை, ஏதாவது அதிகப்படியாக வேலையிருந்தால் செய்யச் சொல்லலாம் என்று பார்த்தால், வருவது, செய்வது, வந்த சுவடு தெரியாமல் போய்விடுவது என்று இருக்கிறாளே! இவளை என்ன செய்வது?

இதுதான் விஜயாவின் தலையாய பிரசினையாக இருந்தது. கணவன் வெங்கிட்டுவிடம் சொல்லிப் புலம்பினாள்.

“ரொம்ப நான்றாய் இருக்கிறதே! போகும்போது சொல்லிக் கொண்டு போகாவிட்டால், இவளை யார் கண்காணிப்பது? முதலில் அவளைக் கணக்குத் தீர்த்து அனுப்பு!” என்று முடிவாகச் சொல்லி விட்டான்.

மறுபடியும் அடுத்த வேலைக்காரிக்கான வேட்டை ஆரம்பமானது. கடைசியில் திருப்தியாக ஒருத்தி கிடைத்தாள். முதல் நாள் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, “அம்மா! போயிட்டு வரேன்!” என்று சொல்லிவிட்டுச் சிறிது நின்றாள். இவள் “சரி” என்று சொன்ன பிறகே நகர்ந்தாள். விஜயாவுக்குத் திருப்தியாக இருந்தது.

மறு நாளும் இதே போல் தான். ஆனால இந்த முறை விஜயா அவளை நிறுத்தி, முதல் நாள் மீந்து போன சாதமும், குழம்பும் கொடுத்தனுப்பினான்.

அதற்கடுத்த நாள்முதல் சரியாக அவள் சொல்லிக் கொண்டு போகும் நேரத்திற்கு விஜயாவுக்குள் ஒரு சங்கடம் புகுந்து கொள்ள ஆரம்பித்தது.

“அம்மா! போயிட்டு வரேன்!” என்று சொல்லிவிட்டு நிற்கும் அந்த நேரம் அவள் எதையோ எதிர்பார்ப்பதும், தன் வெறும் கையைப் பார்த்துவிட்டு அவள் ஏமாறுவதும், அந்த ஏமாற்றத்திற்குத் தான் காரணமாக இருப்பதும் விஜயாவுக்குப் புரிந்து செய்வதறியாது திகைத்தாள்.

அவள் மனம் முதல் வேலைக்காரி திரும்பி வர பிரார்த்தித்தது.

–குமுதம் ஒருபக்கக் கதை – 9-6-1988ல் பிரசுரமானது. 

தொடர்புடைய சிறுகதைகள்
கலாசாரம், தர்மம், விஞ்ஞானம் ​ ...​ இவையனைத்தும் பரம்பரையாக வரக்கூடியவை. ஒருவரிடமிருந்து ​மற்றவருக்குக் கிடைப்பவை. ஒரு காலத்தில் அல்பமாகத் தோன்றுவது பின்னால் வரும் வம்சாவளிக்கு அதிக பலத்துடன் கூடியதாகிறது. எனவே தான் ஒவ்வொரு பரம்பரையினரும் தம் பின் வரும் பரம்பரைகளுக்காகத் தகுந்த கவனம் செலுத்த ...
மேலும் கதையை படிக்க...
பிரபஞ்சத்திற்கு மூலமாகவும், சாட்சியாகவும், சக்தியாகவும் இருந்து நடத்துவிக்கும் இறைவனின் சைதன்யத்தை பல விதமாக தரிசித்து, கண்டடைந்த அற்புதங்களை தியான சுலோகங்களாகவும் ஸ்தோத்திரங்களாகவும் நம் மகரிஷிகள் நமக்களித்துள்ளார்கள். அதிலிருந்து ஒரு தியான சுலோகத்தை ஆராய்ந்து பார்த்து, அதில் உள்ள தெய்வீக விஞ்ஞானத்தை அறிந்து கொள்ள ...
மேலும் கதையை படிக்க...
மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள் மிக உயர்ந்தவர்களாக பெரியோர்களால் போற்றபடுகிறார்கள். யார் அந்த உத்தம தாய்மார்கள்? ராமாயணத்தில் லக்ஷ்மணனின் தாயான சுமித்திரை. பாகவதத்தில் துருவனின் தாய் சுநீதி. மார்கண்டேய புராணத்தில் வரும் இளவரசி மதாலசா. இந்த மூன்று தாய்மார்களும் உலக வழக்கப்படி சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால் ...
மேலும் கதையை படிக்க...
தாயும், குழந்தையும் கட்டிக் கொண்டு இருப்பது போல...குழந்தை பத்துப் பதினைந்து கைகளைக் கொண்டு தாயை இறுக்கிக் கொண்டு கிடப்பது போல...குழந்தையின் அணைப்புக்குக் கொஞ்சமும் குறையாமல் தாயும் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போல...பூமித்தாயில் வேர்கள் பரந்து படர்ந்து அடி ஊடுருவிக் கிடந்தன. தாயிடமிருந்து ...
மேலும் கதையை படிக்க...
தங்க கிரீடமும் ஆபரணங்களும் தரித்த மகாராஜாக்கள் கூட கௌபீனம் தரித்த பிரம்ம ஞானியின் முன்பு தலை வணங்கிய மேன்மை பொருந்திய நாடு நம் பாரத தேசம். செல்வம், வினயத்துடன் சிரம் தாழ்த்துவது வித்யையிடமே. தொன்று தொட்டு நம் நாட்டு கலாசாரம் அறிவுக்கும் ...
மேலும் கதையை படிக்க...
பரம்பரையின் மகத்துவம்
இறைவனின் சொரூபம் – சாந்தாகாரம் புஜக சயனம்!
மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள்
வேப்ப மரத்தை வெட்டிய போது …
கல்விக்கு முதலிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)