அம்மாவின் பார்வையில்…

 

என்னங்க! அத்தையை டாக்டர்கிட்டே அழைச்சுகிட்டுப் போயிட்டு வாங்க! அவங்க இரண்டு கண்களிலிருந்தும் தண்ணீ தண்ணீயா வருதாம், உருத்திக்கிட்டே இருக்காம், யாரையும் சரியாக தெரியலைனு சொல்றாங்க! எதுவாக இருந்தாலும் மங்கலாகவும், ஜடப்பொருளாகவும்தான் தெரியுதாம், என்னன்னு டாக்டர்கிட்டே போயி காண்பித்து விட்டு வாங்க, என் தன் கணவன் சேதுராமனை வற்புறுத்திக்கொண்டு இருந்தாள் மனைவி சீதா.

இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை செய்தாச்சு, டி வி பார்க்கிறதை குறைக்கனும், இல்லைன்னா கஷ்டம்தான்.

எனக்கு இருக்கிற வேலையிலே இப்ப முடியாது, ஏன் மதுரைக்கு சின்னவன் வீட்டிற்கு போயிருந்தாங்களே அங்கேயே டாக்டர்கிட்டே காண்பித்து மருந்து வாங்கி வரலாம் இல்லே, என அலுத்துக்கொண்டான்.

ஏங்க அவங்க உங்க அம்மாங்க! அவங்களுக்கு ஒன்னுன்னா மூத்தவர் நீங்க செய்யாம யாருங்க செய்வா?

சரி சரி, ஆரம்பிச்சுடாதே! மாலை வந்து நான் அழைத்துப்போகிறேன் என்றபடி அலுவலகத்திற்கு சென்றான்.

சேதுராமனுடன் வேலை பார்ப்பவர் மாசிலாமணி, இருவருமே அடுத்த வருடம் ஓய்வு பெறும் வயதில் உள்ளவர்கள்.

மணியின் தாயார் இறந்து காரியங்கள் முடிந்து இருபது நாளுக்குப் பிறகு அன்றுதான் வேலைக்கு வந்து இருந்தவர் கவலையில் இருப்பதைப் பார்த்து,

வருத்தப்படாதே மணி, கிடந்து உடம்புக்கு முடியாம, கஷ்டப்பட்டு இறக்காம, யாருக்கும் தொந்திரவா இல்லாம போனதை நினைத்து மனசை தேற்றிக்கொள், என்றார் சேதுராமன்.

தினமும் வேலையிலிருந்து வந்துட்டானா?சாப்பிட்டானா? என இன்னும் குழந்தையாகவே நினைத்து என்னைப் பற்றிக் என் மனைவியிடம், கேட்கும்போதெல்லாம் அப்படி ஒரு சந்தோஷமாக இருக்கும் எனக்கு.

உடம்புக்கு முடியலைன்னாலும் நான் தினமும் அவர்களை பார்த்துகிட்டாவது இருந்துருப்பேன், இப்படி பொசுக்குனு என்னை விட்டுப் போயிட்டு என வருந்தினார். இனி வாழ்நாளிலே அவங்களை பார்க்கவே முடியாதே, அதை நினைத்தால்தான் எனக்கு நெஞ்சை அடைக்குது என தேம்பி அழுதார்.

சீதா, டாக்டர்கிட்டே அப்பாயின்மென்ட் வாங்கிட்டேன், நீயும் வா அம்மா கூட போயிட்டு காட்டிட்டு வந்திடலாம் என்று கூப்பிட, அவளும் கிளம்பினாள்.

அம்மா பெயரு? கேட்டார் டாக்டர்.

எங்கோ பார்த்து பார்வதி அம்மாள்.என்றார்.

என்ன வயசாகுது?

என்பத்தி ஐந்து.

இரண்டு கண்களும் அறுவை சிகிச்சை செய்து எவ்வளவு நாளாகுது? என கேட்டார் டாக்டர்.

விழித்தார்கள்..

இடது கண் செய்து ஐந்து வருடமாச்சு, வலது கண் செய்து ஆறு வருடமாச்சு, என்றாள் சீதா,

எவ்வளவு சரியாக சொல்கிறாள்!? அம்மா மீதான மனைவியின் அக்கறைப் பற்றி பெருமிதமடைந்தார்.

பரிசேதனை செய்தவர், நரம்புகள் ரொம்ப பலவீனமாக இருக்கிறது, வயசு ஆகிட்டதால் அப்படித்தான் இருக்கும், மேலும் சிகிச்சை ஏதும் செய்வதற்கு வாய்பில்லை, சில சொட்டு மருந்துகளும், சில மாத்திரைகளும் ஒரு மாதத்திற்கு எழுதித் தருகிறேன் தொடர்ந்து சாப்பிட கொஞ்சம் சரியாகலாம்,என நம்பிக்கையில்லாமல் கூறினார்.

இதைக் கேட்ட அத்தை, சரிதான் என்பத்து ஐந்து வயசு வரை உழைச்சு இருக்கு. இதுவே அதிகம் தான் என்றார்.

வீடு வந்து சேர்ந்த சேதுராமன் சோகமாக இருந்தவரைக் கண்டு, படுக்கும்போது சீதா, என்னங்க என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?

ஒன்றுமில்லை என்று சொல்லும்போதே கண்கள் கலங்கிற்று சேதுராமனுக்கு.

எனக்குத் தெரியும் உங்களைப் பற்றி, உங்களாலே எதையும் மறைக்க தெரியாது. சொல்லுங்கள் என்றாள்.

மாசிலாமணியோட அம்மா இறந்திட்டாங்க, இனி அவர் அம்மாவை பார்க்க முடியாம போனதை நினைத்து வருந்தினார், நான் ஆறுதல் கூறினேன். ஆனால் என் அம்மாவிற்கோ கண் பார்வை குறைந்து போய் என்னை இனிமேல் அவர்களால் பார்க்க முடியாமல் போய்விடுமோ என பயம் எனக்கு வந்து விட்டது,

ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த அவர்களின் விழியின் பார்வையில் இனி நானும் மறைந்து ஒரு ஜடப்பொருளாகி விடுவேன், என்பதை நினைக்கும் போதே என்னை ஏதோ செய்கிறதே, என்று மனைவியின் மடியில் முகம் புதைத்து அழத்தொடங்கினார்.

ஏங்க, அத்தையே சரியாகிடும் என்று நினைத்து தேற்றிக்கிட்டாங்க, நீங்களும் உங்களை தேற்றிக்கொள்ளுங்கள் என்று தலையைக்கோதினாள் சீதா.

பிள்ளைகள் தாயை இழந்து காணமுடியாமல் இருப்பதும், தாய் இருந்தும் தன் கண்களால் பிள்ளைகளை காணமுடியாமல் இருப்பது, இரண்டுமே வேதனைக்குறியதுதான்.

விழிகள் இருக்கும்போதே விழித்துக்கொள்வோம்! 

தொடர்புடைய சிறுகதைகள்
தம்பீ, என்னாலே முடியலைனுதான் உன்கிட்டே கொடுக்கின்றேன்.இந்த லிஸ்ட்டில் உள்ளபடி பேப்பரை எல்லாம் போடணும், யார்கிட்டேந்தும் எந்த குறையும் வரக்கூடாது. பேப்பர்களுக்கான காசைக் கூட நீ வாங்க கூடாது. மாதாமாதம் நான் போய் வாங்கிக்கொள்கிறேன். என ரவியிடம் பல கண்டிப்புகளைப் போட்டுத்தான் பேப்பர்போடும் ...
மேலும் கதையை படிக்க...
ஏங்க ,கொஞ்சம் அடுப்பிலே பாலை வைங்க, இதோ வந்து காபி தாரேன். சந்தானம், காலை நடைப் பயிற்சி முடித்து வந்தவனைப் பார்த்து குளித்துக் கொண்டு இருந்த கீதா கூறினாள். சரி சரி,வைக்கிறேன். என பாலை அடுப்பில் வைத்தான். குளித்து முடித்து வந்த கீதா, ஒன்னுத்துக்கும் லாயக்கில்லே, ...
மேலும் கதையை படிக்க...
வாசுதேவன் ஒரு பொறியாளர். அலுவலகம் கிளம்பி வாசலில் நின்று ராதிகாவை அழைத்தான்.. நான் போயிட்டு வருகிறேன்., மாலை கொஞ்சம் லேட்டாகும் எனக்காக காத்து இருக்க வேண்டாம்,அப்பா அம்மாவைச் சாப்பிட வைத்திடு,என்றுக் கூறி விட்டுச் சென்றான். அப்பா, அம்மா மீது அளவு கடந்த அக்கறை ...
மேலும் கதையை படிக்க...
தாசில்தார் அலுவலகம். காலை, ஐயா,என் பெயர் நாகம்மாள், நான் ஆதரவற்றவங்க,எனக்கு உதவித்தொகை கிடைக்கும்னு எங்க டாக்டர் ஐயா சொன்னாருங்க! ஐயாதான் பார்த்து உதவி செஞ்சு எனக்குப் பணம் கிடைக்க வழி செய்யனும், எடுத்து வந்த ஆவணங்களை அவரிடம் அளித்தார். நாகம்மாள், துணைக்கு யாரும் இல்லாத, வருமானத்திற்குச் சிலர் ...
மேலும் கதையை படிக்க...
ஏண்டி!, மீனாட்சி, நீ வேலை செய்யற ஆபிசர் காலனி வூட்டிலே கல்யாணமாமே, சொல்லவே இல்லே. ஆமா யக்கா,அது சொல்ற மாதிரி ஒன்றும் இல்ல ,என பீடிகை போட்டாள். நல்ல வூடு, நல்ல அம்மா, நல்லப் பொண்னு எல்லாமே என்கிட்டே பாசமாத்தான் இருக்கும். ஐயாதான் கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
வாய்ப்புதான் வாழ்க்கையே!
ஒன்டிக் கட்ட
தாய்ப் பாசம்
ஊழல் ஒழிப்பு
தகவல் எந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)