அமைதி – ஒரு பக்க கதை

 

‘’உங்களைப் பார்த்திட்டுப் போகணும்னு சுந்தரம் வந்தாரு, இதோ இப்பதான் போறாரு’’, வாசற்படியை மிதித்தபோது பக்கத்து வீட்டம்மா இராமநாதனிடம் கூறினாள்.

அதற்குள் வெடுக்கென அமுதா சொன்னாள். ‘இதப் பாருங்க, உங்க நண்பர் வர்றப்ப எல்லாம் ஆயிரம், ஐநூறு வாங்கிட்டுப் போறார். இதுவரைக்கும் நீங்க செய்தது போதும். இப்ப வந்தார்னா . ‘எங்கிட்ட சல்லிக்காசு இல்லை. என்னைத் தேடி வராதே’னு சொல்லிடுங்க’’

‘’பாவம்டி, சம்சாரத்தை இழந்திட்டு தனி ஆளா நிறகிறான். எதோ நம்மால முடிஞ்து’ என அவர் சொல்லி முடிக்கவிலிலை. அதற்குள் அவள் மறுபடியும் வெடித்தாள்.

அன்று சாயந்திரமே மீண்டும் சுந்தரம் வந்தார். இருவரையும் கூப்பிட்டார்.

‘என் மனைவியோட எல்.ஐ.சி. பணம் இன்னிக்குத்தான் கிடைத்தது. இதுல ஒரு லட்ச ரூபா இருக்கு. நாளைக்கு உங்க பெண்ணோட கல்யாணத்திற்கு ஏதோ என்னால முடிஞ்ச உதவியா இருக்கட்டுமே’ என்றார்

அமுதாவோ உறைந்து போய் நின்றாள்.

- வி.அங்கப்பன் (26-11-2008) 

தொடர்புடைய சிறுகதைகள்
கேட்டை யாரோ தட்டுகிற சப்தம் கேட்டது. வேணுகோபால், "டிவி' ஒலியைக் குறைத்தான். எழுந்து, ஜன்னல் திரையை விலக்கி, தெருவைப் பார்த்தான். வெளியில் முருகானந்தம். முகம் மலர்ந்த வேணுகோபால், திரையை மூடிவிட்டு, வாசல் கதவைத் திறந்தான். சாவி கொண்டு போய் கேட்டை திறந்து, ""வா... வா...'' ...
மேலும் கதையை படிக்க...
ஆரஞ்சு பழம் இருக்கு கீதா... கொஞ்சம் ஜூஸ் போட்டு கொடு... வெளியே என்ன வெயில்... என்றபடி ரமேஷ் உள்ளே வர , ஆதித்யாவும், அம்மாம் அம்மா வெரி ஹாட் எனக்குப் பசி வேற என்று ஓடினான்... பழங்களை எடுத்து சாறு பிழிந்த போது மனதுக்குள் ஒரே ...
மேலும் கதையை படிக்க...
திவ்யாவுக்கு எரிச்சலாக இருந்தது. புதிதாக வந்திருந்த ஜி.எம். சுதாகர் அவளை விழுங்கி விடுவதைப்போல் அடிக்கடி உற்றுப் பார்ப்பதும், இரட்டை அர்த்தம் தொனிக்க செக்ஸியாகப் பேசி அதிகமாக வழிவதும் வர வர அதிகமானது. அவளுக்கு சுதாகரை சமாளிப்பது சிரமமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. திவ்யா ...
மேலும் கதையை படிக்க...
“ஹலோ குணா, பீ நெகட்டிவ் ரத்தம் தேவைப்படுது... ஹாஸ்பிட்டல் வரைக்கும் வரமுடியுமா?” தேவ் பேசும்போதே, அவசரத்துக்கான அவதி தெரிந்தது... தேவ், ஜேகே மருத்துவமனையில் பணிபுரியும் என் சமீப கால நண்பன்... கண் தானம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று எங்கள் அலுவலகத்தில் நடந்தபோது தொடங்கிய ...
மேலும் கதையை படிக்க...
மறுபடி ஒரு தரம் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். மாணிக்கவாசகம். பத்திரமாக இருந்தது. மொறமொறவென்று சலவை நோட்டாய் பத்து நூறு ரூபாய், நேற்றைக்கு பேங்க்கில் வாங்கி மடித்துப் பையில் சொருகியது. வாங்கியபோது, புதுசுக்கு உண்டான சுத்தமும் மொட மொடப்பும் தொடத் தொடச் ...
மேலும் கதையை படிக்க...
சாட்சி
காரணம் – ஒரு பக்க கதை
முள்ளை முள்ளால்
ஏன் இப்டி செஞ்சேன்?
கற்றதனால் ஆன பயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)