அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 18, 2021
பார்வையிட்டோர்: 2,644 
 

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

“நீ என்னே ஆச்சா¢யமாப் பாக்காதே.உண்மை அது தான்.எல்லாருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது.அவர் லீலையே லீலை” என்று கண்களை மூடிக் கொண்டு நடராஜரைப் பார்த்து கையைக் காட்டி சொன்னார் மஹா தேவ குருக்கள்.

நிறைய சேவார்த்திகள் அர்ச்சனைத் தட்டுடன் நின்றுக் கொண்டு இருக்கவே மஹா தேவ குருக்கள் “சாம்பசிவா,நிறைய பக்தா அர்ச்சனைத் தட்டுடன் நின்னுண்டு இருக்கா.நீ அவா அர்ச்சனைத் தட்டை வாங்கிண்டு போய் பகவானுக்கு அர்ச்சனைப் பண்ணு” என்று சொல்லி அனுப்பினார்.

அன்று சாயங்காலம் மஹாதேவ குருக்கள் ஆத்துக்கு வந்து செருப்பை கழட்டி வைத்துக் கொண்டே” மரகதம்,மரகதம் காமாக்ஷி, காமாக்ஷி ”என்று உரக்கக் குரல் கொடுத்தார்.பதறிப் போய் கேட்டுக் கொண்டே சமையல் ரூமை விட்டு வெளீயே வந்தாள் மரகதம்.

அப்பா தன் பேரை உரக்கச் சொல்லி கூப்பிடுவதைக் கேட்ட காமாக்ஷியும் சமையல் ரூமில் இருந்து அம்மாவிடன் ஹாலுக்கு வந்தாள்.

“என்ன இன்னிக்கு ஆத்துக்கு உள்ளே நுழைஞ்சதும்,நுழையததுமா என் பேரேயும்,காமாக்ஷி பேரையும் உரக்கக் கூப்பிட்டுண்டே வறேள்.ஏதாவது ரொம்ப அவசர விஷயமா.அந்த பையனைப் பாத்து கேட்டேளா.அவன் என்ன சொன்னான்.’பழமா’ ‘காயா’” என்று கேட்டாள்.

மஹா தேவ குருக்கள் உள்ளே வந்து மெல்ல செருப்பைக் கழட்டி வைத்து விட்டு “ரொம்ப அவசரப்டாதே மரகதம் உனக்கு.இரு உள்ளே வந்து சொல்றேன்” என்று சொல்லி விட்டு ‘ஹாலில்’ போட்டு இருந்த ஒரு கை வைத்த சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டார்.

இன்னிக்கு கோவில்லே கொஞ்சம் கூட்டம் கம்மியா இருந்த ப்ப,நான் அந்த பையனைக் கூப்பிட்டு, நீ சொன்ன ரெண்டு ‘பாயிண்டையும்’ நோ¢டையாவேக் கேட்டேன்.அதுக்கு அந்தப் பையன் ‘நான் உண்மையை உங்க கிட்டே சொல்றேன்.என் உறவிலே என் கல்யாணத்துக்கு எந்தப் பொண்ணும் இல்லே.என் மனசிலே எந்தப் பொண்ணும் இல்லே மாமா”ன்னு சொன்னான்”என்று சொன்னார் மஹா தேவ குருக்கள்.

நான் உடனே “அவனேப் பாத்து ரொம்ப சந்தோஷம் சாம்பசிவன்.நான் உன்னே இதேக் கேட் டேன்னு என்னே நீ தப்பா எடுத்துக்காதே’ன்னு சொன்னப்பா,அந்த பையன் ‘நான் என்னேக்கும் நீங்கோ கேக்கறேதே தப்பாவே எடுத்துக்க மாட்டேன் மாமா..அன்னைக்கு மட்டும் நீங்கோ கோவில் நிர்வாகத்துக்குக் கிட்டேசொல்லி ஒரு ‘ரூம்’ வாங்கிக் குடுத்தேள்.நீங்கோ பொ¢ய மனசு பண்ணி, என்னே ரமணி குருக்கள் கிட்டே அனுப்பாம இருந்தா.நான் இன்னிக்கு எப்படி இந்த சிதம்பரம் நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் வேலேயே பண்ணீண்டு வந்துண்டு இருக்க முடியாதே மாமா. நான் ஒரு வேலேயும் பண்ணீண்டு வறாம,இன்னிக்கு ஒரு ரொடிலே தானே நின்னுண்டு இருப்பேன்’ ன்னு சொல்லும் போது சாம்பசிவன் கண்களில் கண்ணீர் வழிஞ்சுண்டு இருந்தது.நேக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது மரகதம்” என்று சொன்னார் மஹா தேவ குருக்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் மஹா தேவ குருக்கள் “அந்தப் பையனுக்கு இந்த தை வந்தா இருபத்தி நாலு வயசு ஆறதாம்..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது மரகதம் “நம்ம காமாக்ஷிக்கு ஈடா இருப்பான் அவன்.நல்ல வேளையா ரெண்டு பேருக்கும் வயசு ஒரு ‘ப்ராப்லெம்’ இல்லே இந்தக் கல்யா ணத்துக்கு.அது ஒரு நல்ல ‘சகுனம்’ இல்லையா” என்று சொன்னாள்.

உடனே காமாக்ஷி “அம்மா,கொஞ்சம் இறேன்.அப்பா எல்லாத்தையும் முழுக்கச் சொல்லட்டும். அதுக்குள்ளே நீ அவசரப் படறயே” என்று சொன்னதும் மரகதம் “காமாக்ஷி என்னே அவசரப் படறே ன்னு கத்தறா.நான் நீங்கோ சொல்ற வரைக்கும் பொறுமையா இருந்துண்டு வறேன்.எல்லாம் என் தலெ எழுத்து” என்று சொன்னதும் “ரொம்ப சாரிம்மா.நான் சொல்ல வந்தது எல்லாம் அப்பா முழுக்க சொல்லட்டுமே என்கிற அர்த்தத்லே தான் சொன்னேன்.நீங்கோ அதேத் தப்பா எடுத்துண்டு இருக் கேள்.நான் உன்னே இனிமே ‘கத்தறே’ன்னு எல்லாம் சொல்ல மாட்டேம்மா” என்று வருத்தப் பட்டுக் கொண்டேசொன்னாள்.

“உங்க வாக்கு வாதத்ததே.அப்புறமா வச்சுக்குங்கோ.நான் சொல்ல வந்த சமாசாரத்தே இப்போ முழுக்க சொல்றேன்.அந்த பையனுக்கு அவன் அப்பா மட்டும் தான் உயிரோடு இருக்கா.அவன் பத்தாவது ‘பாஸ்’ பண்ணீ முடிச்சப்ப, திடீர்ன்னு ஒரு நாள் அவன் அம்மா நெஞ்சு வலி வந்து நம்ம ஊர்லே இருக்கிற ‘ராதா நர்ஸிங்க் ஹாஸ்பிடல்லே’ செத்துப் போயிட்டாளாம்.அவனுக்கு ஒரு அக்கா இருக்காளாம்.அவளே சாம்பசிவன் அம்மா உயிரோடு இருக்கும் போது,அவன் அப்பா சம்மத்தோட சிவபுரிலே இருக்கிற அவ தம்பிக்கேக் கல்யாணம் பண்ணி குடுத்தாளாம்.இவன் அப்பாவும்,அத்திம் பேரும் சிவபுரியிலே விவசாயம் பண்ணீண்டு வறாளாம்” என்று சொல்லி முடித்தார் மஹா தேவ குருக்கள்.

மஹா தேவ குருக்கள் சொல்லி முடிக்கவில்லை மரகதம் ”அந்த அம்பாள் அனுகிஹத்தாலே, இந்த இடம் காமாக்ஷிக்கு அமைஞ்சா நல்ல வேளையா மாமியார் பிடுங்கல் இருக்காது” என்று சொல்லி முடிக்க வில்லை மஹா தேவ குருக்களுக்கு கோவம் வந்து “மரகதம்,வீணா ‘பரலோகம்’ போயிட்ட என் அம்மாவே பத்தி ஒன்னும் சொல்லாதே.என் அம்மா மாதிரி ஒரு மாமியார் உனக்குக் கிடைக்க நீ குடுத்து வச்சு இருக்கணும்” என்று சொன்னார்.

“உங்களுக்கு என்ன தொ¢யும்.உங்க அம்மா கிட்டே நான் பட்ட கஷ்டம்.கொஞ்ச நஞ்சாமா சொல்றதுக்கு.நீங்கோ காத்தாலேயே கோவிலுக்கு கிளம்பிப் போயிடுவேள்.உங்க அம்மா கிட்டே நான் பட்ட கஷ்டம் எனக்குத் தானே தொ¢யும்.அப்போ எனக்கு கல்யாணம் ஆன புதிசு.சாயங்காலமா நீங்கோ ஆத்துக்கு வந்தா உங்க கிட்டே சொல்ல எனக்கு ரொம்ப பயம்.அதைத் தவிர உங்க கிட்டே சொன்னா வீணா அம்மா பிள்ளை சண்டை வந்துடுமோன்னு வேறே பயம்.அப்போ நான் தவிச்ச தவிப்பு எனக்குத் தானே தொ¢யும்.உங்க அம்மா உங்களுக்கு ஓசத்தியா இருக்கலாம்.ஆனா…” என்று மரகதம் சொல்லிக் கொண்டு இருக்கும் போது காமாக்ஷி தன் பொறுமையை இழந்தாள்.

“அம்மா,அது எப்பவோ நடந்த கதை.அதே இப்போ என் சொல்லிண்டு இருக்கே”என்று காமாக்ஷி சொன்னதும்,மரகதம் விடாமல் “உனக்குக் கல்யாண ஆசை வந்துடுத்து காமாக்ஷி.அதான் என்னே பேச விட மாட்டேங்கறே.உனக்கு என்னத் தொ¢யும்.என் மாமியார் கிட்டே நான் பட்டுண்டு வந்த கஷ்டம் கொஞ்ச நஞ்சமா.இன்னிக்கெல்லாம் சொல்லிண்டு இருக்கலாம்” என்று விடாமல் சொல்லி வருத்தப் பட்டாள்.
மஹா தேவ குருக்கள் அம்மாவும் பொண்ணும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தார்.

கொஞ்ச நேரமானதும் மஹா தேவ குருக்கள்” நான் அந்தப் பையனை பத்தின எல்லா விவரமும் சொல்லிட்டேன்.இந்த பையனே காமாக்ஷிக்குப் பாக்கலாமா மரகதம்” என்று கேட்டவுடன்” நான் தான் ஏற்கெனவே சொன்னேனே.இந்தப் பையனை காமாக்ஷிக்கு கல்யாணம் பண்ணா,அவ மாமியார் பிடுங்கல் எல்லாம் இருந்து சந்தோஷமா குடித்தனம் பண்ணிண்டு வருவோன்னு.எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சு இருக்கு.நீங்கோ இந்த இடத்தே பாருங்கோ” என்று சொன்னாள் மரகதம்.

மஹா தேவ குருக்கள் காமாக்ஷியைப் பார்த்து “நீ என்ன சொல்றேம்மா.உன் அபிபிராயத்தே சொல்லாம இருக்கே.உனக்கு அந்த குருக்கள் வேலே பண்ற பையனை கல்யாணம் பண்ணிக்க ஆசையா.இல்லே உத்யோகத்துக்குப் போற ஒரு பையனாப் பாக்கட்டுமா.குருக்கள் பையனை பண்ணீ ன்ண்டா,நம் மாத்லே இருக்கிறா மாதிரி மடி,ஆசாரம், பூஜை, புனஸ்காரம்,சந்தியாவந்தனம்,நாள் கிழமை,அமாவாசை,கிரஹணம் இதெல்லாம் தான் பாத்துண்டு வரணும்.அப்படி இல்லாம இந்த உத்யோகத்துக்கு போய் வர பையனாப் பாத்தா,அவ உகலம் வேறே.அதே தவிர உத்யோகத்துக்குப் போய் வர பையனாப் பாக்கணும்ன்னா நான் ஒரு கல்யாணத் தரகரேத் தான் பாக்கணும்” என்று சொன்னார்.

“இத்தனை வருஷமா நம்ம காமாக்ஷி,நம்ம ஆத்து வழக்கத்திலே வளந்து வந்து இருக்கா. உத்யோகத்துக்குப் போய் வர பையன் ஆத்லே,நாம பாக்கறாமா மாதிரி ஆசாரம் எல்லாம் பாக்க மாட்டா.காமு அவா ஆத்துக் வழக்கப் படி வாழ்ந்துண்டு வரணும்.எனக்கு என்னவோ அது ரொம்ப கஷ்டமா இருக்கும்ன்னு தோன்றது.இல்லையா காமு.நீ என்ன சொல்றே” என்று கேட்டாள் மரதம்.

‘நீங்கோ சொல்றது ரொம்ப சா¢.எந்த புது ஆத்துக்கும் நான் கல்யாணம் பண்ணீண்டு போனா, அவா ஆத்து வழக்கப் படி தான் இருந்து வர பழகியாகணும்.நம்ம ஆத்து வழக்கபடி,அந்த ‘ஆம்’ இருந்தா ஒரு கஷ்டமும் இருக்காது.வேறே விதமா இருந்தா முதல் ரெண்டு வருஷம் ரொம்ப சிரமாத் தான் இருக்கும்.என்ன பண்ண முடியும்மா.அந்த பகவான் என் தலையிலே எனக்குக் கல்யாணம் ஆயி எந்த மாதிரி ஆத்துக்குப் போகணும்ன்னு எழுதி இருக்காரோ.யார் கண்டா.எது வந்தாலும் நான் ஏத்து ண்டு வாழந்துண்டு தான் வரணும்” என்று கொஞ்சம் விரக்தியாகப் பேசினாள் காமாக்ஷி.

உடனே மரகதம்”இதோ பாருங்கோ.நேக்கு காமாக்ஷி கஷ்டப் பட்டுண்டு வறதேப் பாக்க என் மனசு தாங்காது.நீங்கோ எப்படியாவது உங்களே மாதிரி இருக்கிற குருக்களையே ஒரு பையனையே அவளுக்குப் பாருங்கோ.நீங்கோ கல்யாணத் தரகரை எல்லாம் பாக்க வேணாம்.அவர் எந்த பக்க உண்மையையும் பேசவே மாட்டார்.பிள்ளை ஆத்துக்காரா கிட்டே நம்ம ஆத்தேப் பத்தி ஒசத்தியாச் சொல்லுவார்.நம்ம கிட்டே பிள்ளே ஆத்தேப் பத்தி ஒசத்தியாச் சொல்லுவார்.அவருக்கு எப்படியாவது இந்தக் கல்யாணம் நடந்தா நமக்கு ‘கமிஷன்’ வருமேன்னு தான் பாடு படுவார்.இதே தவிர அந்த உத்யோகம் பண்ணீ வர பிள்ளையாண்டானே பத்தின சமாசாரத்தே நாம தொ¢ஞ்சுக்கணும்ன்னா, யாராவது மூணாம் மனுஷாளேத் தான் கேக்கணும்.இல்லையா சொல்லுங்கோ” என்றாள்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு குருக்கள் “இதிலே இன்னொரு சிக்கல் இருக்கு மரகதம்.உத்யோகத்துக்கு போய் வர பையனா ஆசைப் பட்டு நாம பாக்கப் போனா,உத்யோகத்துக்குப் போய் வர பையனுக்கும்,அவன் அம்மாக்கும், அப்பாவுக்கும் ஒரு குருக்கள் ஆத்து சம்மந்தம் பிடிச்சி இருக்கணுமே.அவா சொந்தக்காராளுக்கும் பிடிச்சி இருக்கணுமே.தவிர அவா ஆத்லே இருக்கிறா மாதிரி ‘சோபா செட்.ஏ.ஸி.ஸ்கூட்டர்,கார் எல்லாம் நம்மாத்லே இல்லையே.நாம் ரொம்ப ‘சிம்பிலா’ தானே இந்த ஆத்லே இருந்துண்டு வறேம்” என்று தன் சந்தேகத்தை சொன்னார்.

மரகதம் பொறுமை இழந்து “என்னமோ நானும் நீங்களும் தான் மாத்தி மாத்திப் பேசிண்டு இருக்கோம்.நாமா கல்யாணம் பண்ணீக்கப் போறோம்.கல்யாணம் பண்ணிக்கப் போறப் பொண்ணு ஒன்னும் சொல்லாம் சும்மா நாம பேசறதேக் கேட்டுண்டு சும்மா உக்காந்துண்டு இருக்கா.காமு, நீ என்ன சொல்றே.உனக்கு எந்த மாதிரி பையனை நானும்,அப்பாவும் பாக்கட்டும்” என்று கேட்டாள்.
காமாக்ஷி “அப்பா,அம்மா நான் பத்தாவது படிக்கும் போது என்னுடைய இங்கிலிஷ் வாத்தியார் ஒரு பழமொழியேச் சொன்னார்.அவர் சொன்ன பழமொழி: A bird in the hand is worth two in the bush….” என்று சொல்லி முடிக்கவில்லை “ஏண்டி காமு,நாங்க ஒன்னே எந்த மாதிரி பையனே உனக்குப் பாக்கட்டும்ன்னுக் கேட்டா,நீ என்னமோ பத்தாவது படிக்கும் போது உங்க இங்க்லிஷ் வாத்தியார் ‘தஷ்’ ‘புஷ்’ன்னு சொன்ன பழ மொழியே சொல்லிண்டு இருக்கே.நீ சொல்ல வந்ததே சித்தே விவரமாத் தான் சொல்லேன்” என்று பொறுமை இழந்துக் கேட்டாள் மரகதம்.

உடனே காமாக்ஷி “அம்மா,நான் உனக்கு முழுக்கச் சொல்றதுக்குள்ளே, நீ அவசரப் படறே. அவர் சொன்ன பழ மொழியின் தமிழ் அர்த்த பழமொழி வந்து “எங்கோ இருக்கிற பலாக்காயே விட கையிலே இருக்கிற களாக்காவே மேல்”.அப்பாவுக்கு இவரே நன்னாத் தொ¢யும்.உத்யோகத்துக்குப் போய் வர பையனைப் பத்தி ஒன்னும் தொ¢யாது.அவா ஆத்து பழக்க வழக்கமும் நமக்கு ஒன்னுமேத் தொ¢யாது.முன்னே பின்னே தொ¢யாத ஒரு ஊருக்குப் போய் கஷ்டப் படறதே விட,நமக்குத் தொ¢ஞ்ச ஊருக்கு போய் நாம சௌக்கியமா இருந்து வருவது நல்லது இல்லையா சொல்லு.நமக்கு ஒரு சௌக் கியம் கண்லே தொ¢யும் போது,அதே விட்டுட்டு எதுக்கு ஒரு கஷ்டத்தேத் தேடிக்கணும்” என்று சொன்னாள் காமாக்ஷி.

உடனே மரகதம் “பாத்தேளா உங்க பொண்ணு பேச்சு சாதுர்யத்தே.அவ பத்தாவது ‘பாஸ்’ பண்ணீ இருக்கா இல்லையா அதான்.என்னாட்டும் மூணாம் கிளாஸ் இல்லே அவ.இது தான் படிச்ச வாளுக்கும்,படிக்கதவாளுக்கும் இருக்கிற வித்தியாசம்.அவ நாசூக்காச் சொல்லிட்டா.இனிமே நாம தான் அவ சொன்னதே பண்ணனும்.நீங்கோ நாளைக்கு அந்தப் பிள்ளயாண்டானை கோவில் லேப் பாத்து அவ அப்பா சிவபுரி ‘அடரஸ்ஸை’ கேட்டு வாங்கிண்டு வாங்கோ” என்று சொன்னாள்.

மஹா தேவ குருக்கள் தன் பெண்ணின் பேச்சுச் சாதுர்யத்தே நினைத்து சந்தோஷப் பட்டார்.

“காமாக்ஷி அவ மனசேத் தொறந்து சொல்லிட்டா.அவ சொல்றதிலே ஒரு நியாயம் இருக்கு. ‘எந்த புத்லே எந்த பாம்பு இருக்குமோ’.எதுக்கு விஷப் பா¢¨க்ஷயிலே இறங்கணும்.காமாக்ஷி நமக்கு ஒரேப் பொண்ணு.அவ கண் கலங்காம இருந்து வரணும்.நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சினைன்னு வந்தா,நான் ¨தா¢யமா அந்தப் பையனைப் பாத்துக் கேக்க முடியும்.உத்யோகம் பண்ணீண்டு வர பையன் சம்மந்தம் பண்ணீண்டா,அவா ஆத்துக்குப் போய் நானோ,இல்லே நீயோத் தான் போய் கேக்கணும்.வேண்டாமே இந்த அநாவசிய தலை வலி.நீ சொன்னா மாதிரி நான் நாளைக்கு கோவில் லே அந்தப் பையனைப் பாத்து அவ அப்பாவோட சிவபுரி ‘அட்ரஸ்ஸை’ நான் கேட்டு வாங்கிண்டு வறேன்.ரொம்ப நேரமா நாம மூனு பேரும் பேசிண்டு இருக்கோம்.நான் சந்தியாவந்தனத்தை பண்ணீ ட்டு வறேன்.ரொம்ப நேரமாயிடுத்து”என்று சொல்லி எழுந்தார் மஹா தேவ குருக்கள்.

அந்தக் காலத்தில் ஒரு பெண்ணை,அதுவும் ஒரே பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க பெற்றோர்கள் எவ்வளவு யோஜனை பண்ண வேண்டி இருக்கு.இந்தக் காலம் மாதிரி இல்லேயே மஹா தேவ குருக்கள் வாழ்ந்து வந்த காலம்!!

கோவிலுக்கு போக ரெடி ஆன மஹா தேவ குருக்களைப் பார்த்து” மறக்காம அந்தப் பையன் சிவபுரி ‘அடரஸ்ஸை’வாங்கிண்டு வாங்கோ.’மரகதம் மந்திரி வந்தார்,வி.ஐ.பி.வந்தார்,நான் ரொம்ப ‘பிஸியா’ இருந்துட்டேன்.அதனால்லே நான் கேக்க மறந்துட்டேன்னு எல்லாம் சொல்லிண்டு ஆத்து க்கு வறாதேள்” என்று சொன்னதும் மஹா தேவ குருக்கள் ”நீ கவலைப் படாம இருந்து வா.எனக்கும் காமாக்ஷியோட கல்யாண பொறுப்பு இருக்கு.உனக்கு மட்டும் தான் அந்த பொறுப்பு இருக்குன்னு நீ நினைச்சுண்டு இருக்காதே” என்று கொஞ்ச கோவமாகச் சொல்லி விட்டு தன் செருப்பைப் போட்டுக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பினார்.

பதினொன்னறைக்கு மணிக்கு கோவிலில் கொஞ்சம் கூட்டம் குறைந்து இருந்தது.’கோவில்லே கூட்டம் கம்மியா இருக்கு.அந்த பையனோட பேசலாம்’ என்று நினைத்தார் மஹா தேவ குருக்கள்.
மஹா தேவ குருக்கள் சாம்பசிவனை தன் அருகில் கூப்பிட்டு “சாம்பசிவா,இந்த வெள்ளீக் கிழமை ஒரு முஹ¥ர்த்த நாள்.அன்னிக்கு நானும் என் ஆத்துக்காரியும் சிவபுரிக்குப் போய் உன் அப்பாவைப் போய் பாத்துட்டு,கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்து விட்டு.எங்க அபிபியாயத்தே அவர் கிட்டே சொல்றோம்.அவருக்கு எங்க சம்மதம் பிடிச்சு இருக்குன்னு சொன்னா,நாங்க எங்க பொண்ணு காமாக்ஷியோட ஜாதகத்தேக் குடுத்துட்டு,உன் ஜாதகத்தே பா¢வர்த்தணை பன்ணீண்டு வரலான்னு நினைக்கிறோம். நீ உங்க அப்பா சிவபுரி விலாசத்தே கொஞ்சம் இந்த காகிதத்லே எழுதித் தர முடியுமா” என்று கேட்டார்.
மஹா தேவ குருக்கள் கேட்டதை சாம்பசிவனால் நம்ப முடியவில்லை.அந்த வயதில் எல்லா வயது பையன் களுக்கும் வரும் ‘கல்யாண ஆசைக்கு’ சாம்பசிவன் ஒரு விதி விலக்கு இல்லையே!!. அவன் சந்தோஷப் பட்டான்.

அவன் உடனே மஹா தேவ குருக்கள் கொடுத்த காகிதத்திலே தன் அப்பா சிவபுரி விலாசத்தை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தான்.மஹா தேவ குருக்கள் சாம்பசிவன் எழுதிக் கொடுத்த விலாசத் தை தன்னுடைய சின்ன கைப் பையிலே பத்திரமாக வைத்துக் கொண்டார்.

அன்று சாயங்காலம் மஹா தேவ குருக்கள் கொஞ்சம் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்தார்.

உள்ளே வந்து தன் செருப்பைக் ஒரு ஒரமாகக் கழட்டி வைத்து விட்டு ”மரகதம்,நான் அந்தப் பையன் கிட்டே இருந்து அவ அப்பா விலாசத்தே வாங்கிண்டு வந்து இருக்கேன்.இந்த வெள்ளீ கிழமை நல்ல முஹ¥ர்த்த நாள்.நாம ரெண்டு பேரும் சிவபுரிக்குப் போய் அந்தப் பையனோட அப்பா வைப் பாத்து கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்துட்டு,அவர் நம்ம குடும்பத்தோட சம்மந்தம் வச்சுக்க ஆசைப் படறாரான்னுக் கேப்போம்.அவர் சா¢ன்னு சொன்னா,நாம காமாஷியோட ஜாதகத்தை அவர் கிட்டேக் குடுத்துட்டு,அவா பையன் ஜாதகத்தே வாங்கீண்டு வரலாம்.நீ என்ன சொல்றே மரகதம்” என்று கேட்டார் மஹா தேவ குருக்கள்.

“நீங்கோ சொல்றது ரொம்ப நல்ல ஐடியா.நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.நாம சிவபுரிக்குப் போய் அவர் கிட்டேக் கேட்டுண்டு வரலாம்.சிவபுரிலே என் ஒன்னு விட்ட அத்தே கூட இருக்கா. ஆனா அவா விலாசம் எனக்குத் தொ¢யாது” என்று சொன்னதும் “மரகதம் நாம அங்கே எல்லாம் போயிண்டு இருக்க முடியாது.முதல்லே சாம்பசிவனோட அப்பா விலாசத்தே கண்டுப் பிடிக்கணும். அவரோட சித்தே நேரம் பேசிண்டு இருக்கணும்.அப்புறமா நாம வந்த விஷயத்தே சொல்ல ணும்.அவர் அபிபிராயத்தேக் கேக்கணும்.அவர் ‘சா¢’ன்னு சொன்ன ஜாதகப் பா¢வத்தணையைப் பண்ணிக்கணும். இதுக்கு எல்லாம் நேரம் பிடிக்கும்” என்று சொன்னார் ம்ஹா தேவ குருக்கள்.

உடனே மரகதம்” நான் மெல்ல விசாரிச்சு என் அத்தே விலாசத்தேக் கேட்டு வச்சுக்கறேன்.நாம அடுத்த தடவை சிவபுரிக்குப் போகு போது என் அத்தேயேப் பாத்துட்டு வரலாம்.பாவம் அவ ‘தலை’ இல்லாதவ.ரொம்ப கஷ்டப் பட்டுண்டு வறான்னு கேள்வி.அவளே பாத்துட்டு ஒரு நூரோ எரனூரோ ரூபாயேக் கொடுத்துட்டு வந்தா,அவோ ரொம்ப சந்தோஷப் படுவோ.அதுவும் நான் வந்து அவளே பாத்தேன்னு தொ¢ஞ்சதுன்னா அவ இன்னும் ரொம்ப சந்தோஷப் படுவோ” என்று சொன்னாள்.

மஹா தேவ குருக்கள் வெள்ளி கிழமைக் காத்தாலே எழுந்து குளித்து விட்டு நெற்றியிலே விபூதியை இட்டுக் கொண்டு சந்தியாவந்தனத்தை பண்ணி விட்டு,மரகதம் கொடுத்த ‘காபி,யைக் குடித்து விட்டு,பீரோவில் இருந்த மயில் கண் வேஷ்டியை எடுத்து பஞ்ச கச்சமாகக் கட்டிக் கொண்டு, மயில் கண் மேல் துண்டை தன் தோளில் போட்டுக் கொண்டு, மர பீ£ரோவில் இருந்த காமாக்ஷியின் ஜாதகத்தை எடுத்து மரகதத்தின் கையிலேக் கொடுத்தார்.

“மரகதம்.இந்தா காமாக்ஷியோட ஜாதகம்.இதே அம்பாள் பாதத்திலே வச்சுட்டு,இந்த சம்மந்தம் கூடி வரணும்ன்னு நன்னா வேண்டிண்டு வந்து,எடுத்துண்டு வந்து என் கிட்டேக் குடு” என்று சொன்னார் மஹா தேவ குருக்கள்.

உடனே மரகதம் தன் கணவர் கொடுத்த காமாக்ஷியின் ஜாதகத்தை அம்பாள் படத்தின் பாதத்திலே வைத்து நன்றாக வேண்டிக் கொண்டு,ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்து கணவர் கையிலே கொடுத்தாள்.

மணைவி கொடுத்த ஜாதகத்தை ஒரு சின்னக் கைப் பையில் வைத்துக் கொண்டு,தன் ‘பர்ஸை’ யும் எடுத்துக் கொண்டு ரெடி ஆனார் மஹா தேவ குருக்கள்.

மரகதம் ஒரு பட்டுப் புடவையை பீரோவில் இருந்து எடுத்து மடிசார் வைத்துக் கொண்டு,கட்டிக் கொண்டு ரெடி ஆனதும்,காமாக்ஷியை ஜாக்கிறதையாக இருக்க சொல்லி விட்டு ‘பஸ்’ ஸ்டாண்டுக்குக் கிளம்பிப் போனார் மஹா தேவ குருக்கள்.

மஹாதேவ குருக்கள் ‘பஸ்’ ஸ்டாண்டுக்கு ஒரு ‘மினி பஸ்’ ஏறி சிவபுரிக்கு வந்தார்.வழி நெடுக அவர்கள் இருவரும் ‘அந்தப் பையனோட அப்பாவுக்கு நம்ம சம்மந்தம் பிடிச்சி இருக்கணுமே’ என்று கவலைப் பட்டுக் கொண்டே போய்க் கொண்டு இருந்தார்கள்.

ராமசாமி காலையிலே எழுந்துக் குளித்து விட்டு ‘காபி’யைப் போட்டுக் குடித்து விட்டு, குளித்து விட்டு நெற்றியிலே விபீதியை இட்டுக் கொண்டு சந்தியாவந்தனத்தை பண்ணி விட்டு, சமையலைப் பண்ணி விட்டு ஹாலுக்கு வந்து ‘பானை’ப் போட்டுக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.

‘மினி பஸ்சை’ விட்டு கீழே இறங்கின மஹா தேவ குருக்கள்,அந்த வழியிலே போய்க் கொண்டு இருந்த ஒருவரைப் பார்த்து ராமசமியின் விலாசத்தை விசாரித்துக் கொண்டு வந்து,அவர் வீட்டுக்கு வந்து வாசல் கதவைத் தட்டினார்.

‘யார் இந்த நேரத்லே நம்மாத்து வாசல் கதவைத் தட்டறா’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு மெல்ல எழுந்து வந்து வாசல் கதவைத் திறந்துப் பார்த்தார் ராமசாமி.
அவருக்கு ஆச்சா¢யமாக இருந்தது.

அவர் உடனே “தம்பதி சமேதரா எங்காத்துக்கு வந்து கதவைத் தட்டி இருக்கேளே, யார் நீங்கோ.உங்களுக்கு யார் வேணும்.என் பேர் ராமசாமி.நான் உங்களே இது வரைக்கும் இந்த சிவபுரிலே பாத்ததே இல்லையே” என்று ஆச்சா¢யமாகக் கேட்டார் ராமசாமி.

உடனே மஹா தேவ குருக்கள்”என் பேர் மஹாதேவன்.இது என் தர்ம பத்தினி மரகதம்,நான் நடராஜர் கோவில்லே ஒரு குருக்களா முப்பது வருஷத்துக்கு மேலேயே வேலே செஞ்சிண்டு வறேன்” என்று சொன்னதும் ராமசாமி குருக்களையும் அவர் சம்சாரத்தையும் பார்த்து “வாங்கோ, வாங்கோ, உள்ளே வாங்கோ”என்று வரவேற்று ஹாலில் இருந்த இரண்டு காலி சேர்களில் உட்காரச் சொன்னார்.
குருக்களும் மரதகதமும் ராமசமி காட்டின சேர்களில் உட்கார்ந்துக் கொண்டார்கள்.

ராமசாமி தன் கைகளை கூப்பிக் கொண்டு “நீங்கோ தானா மஹாதேவ குருக்கள்.உங்களையும் உங்க தர்ம பத்தினியையும் பாத்ததுக்கு ரொம்ப சந்தோஷம்.உங்களுக்கு எப்படி நான் நன்றி சொல்றது ன்னே தொ¢யாம திண்டாடறேன்.நீங்கோ பொ¢ய மனசு என் பையன் சாம்பசிவனை ரமணி குருக்கள் கிட்டேஅனுப்பி,அவனுக்கு ருக்கள் வேலேயேச் சொல்லிக் குடுக்க வச்சு இருக்கேள்.கூடவே உங்க சிபாரிசை உபயோகப் படுத்தி அவனுக்கு கோவில்லே இருக்க ஒரு ‘ரூமை’யும் ஏற்பாடு பண்ணிக் குடுத்து இருக்கேள்.அவன் குருக்கள் ஆகி,உங்க கிட்டே ஜூனியரா வேலே செஞ்சுட்டு,இப்போ ஒரு குருக்களா வேலே பண்ணீண்டு வறான்.நீங்க சாம்பசிவனுக்கு இந்த உதவியே பண்ணதுக்கு என் நன்றியே நான் தொ¢விச்சுக்கறேன்” என்று கண்களில் கண்ணீர் வழியச் சொன்னார்.

கொஞ்ச நேரம் ஆனதும் ராமசாமி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “சாம்பசிவன் என் கிட்டே வந்து உங்களேப் பத்தி நிறைய சொல்லி சந்தோஷப் பட்டான்.அந்த புண்ணீயம்,உங்க குடும்பத்தே நிச்சியமா காக்கும்” என்று சொன்னார்.

“நான் ஒன்னும் பொ¢சா பண்ணலே.ரமணி குருக்கள் எல்லா பையன்களுக்கும் சொல்லிக் குடுக்கறாப் போலத் தான் உங்க பையனுக்கும் சொல்லிக் குடுத்தார்.அவன் சீக்கிரமா எல்லா மந்திர ங்களையும் கத்துண்டு வந்து இன்னிக்கு ஒரு குருக்களா வேலே பண்ணீண்டு வறான்” என்று மஹா தேவ குருக்கள் சொல்லிக் கொண்டு இருக்கும் போது மரகதம் அந்த வீட்டைஒரு நோட்டம் விட்டாள்.
ராமசாமி இருந்த வீட்டில் இரண்டு ‘ரூம்’கள் இருந்தன.ஒரு ‘ஹாலும்’ ஒரு சமையல் ரூமும் இருந்தது.

அந்த வீடு ரொம்ப பழமையாக இருந்தது.

“நான் உங்க ஆத்துக்கு வந்த விஷயத்தே நோ¢டையாவே சொல்றேன்.எனக்கு ஒரு பொண்ணு இருக்கா.அவ பேர் காமாக்ஷி.காமாக்ஷிக்கு அப்புறமா எங்களுக்குக் குழந்தயே பொறக்கலே.அவளுக்கு இந்த மாசி மசம் வந்தா இருபது வயசு ஆறது.நான் உங்க பையன் கிட்டே இந்த புதன் கிழமை தான் ‘என் பொண்ணே உனக்குக் கல்யாணம் பண்ணீக் குடுக்க ரொம்ப ஆசைப் படறேன்’ன்னு சொன் னேன்.அவன் கிட்டே இருந்து உங்க ஆத்து விலாசத்தேக் கேட்டு வாங்கிண்டு வந்து இருக்கேன்.எங்க கோத்திரம் பாரத்வாஜ் கோத்திரம்.உங்க பையன் ‘அபிவாதயே’ சொல்லும் போது, உங்க கோத்திரம் ‘ஆத்ரேய கோத்திரம்’ன்னு தொ¢ய வந்தது” என்று சொன்னார் மஹா தேவ குருக்கள்.

உடனே ராமசாமி “ஓஹோ,அவன் தான் என் விலாசத்தே உங்களுக்கு குடுத்தானா” என்று கேட்டார்.

கொஞ்ச நேரம் கழித்து குருக்கள் ”நாங்க எங்க பொண்ணே உங்க பையனுக்குக் கல்யாணம் பண்ணிக் குடுக்க ரொம்ப ஆசைப் படறோம் உங்களுக்கு எங்க சம்மந்தம் பிடிச்சி இருக்கா. இல்லே நீங்கோ உங்க பையனை வேறே எந்தப் பொண்ணுக்காவது கல்யாணம் பண்ணிக் குடுக்க நினைச்சி ண்டு இருக்கேளா” என்று நோ¢டையாகவே கேட்டார் மஹா தேவ குருக்கள்.

உடனே ராமசாமி “நான் எந்தப் பொண்னையும் சாம்பசிவனுக்கு கல்யாணம் பண்ண யோஜனை யே பண்ணலே.எப்ப என் பையன் உங்களுக்கு என் விலாசத்தைக் குடுத்து அனுப்பி இருக்கானோ, அவனுக்கு உங்கப் பொண்ணே கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைப் படறான்னு நேக்குத் தோன்றது.என் பையன் எங்க குடும்ப நிலவரத்தை சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன் நான் மறுபடியும் அதே எல்லாத்தையும் உங்களுக்கு சொல்ல தேவை இல்லேன்னு அபிப்பியாயப் படறேன்” என்று சொல்லி நிறுத்தினார்.

மஹா தேவ குருக்கள் “உங்க பையன் எனக்கு எல்லா விவரமும் சொன்னார்.பாவம் இந்த வயசிலே,நீங்கோ தனியா சமைச்சு சாப்பிட்டுண்டு வறேள்.இதே நினைச்சா எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

“எல்லாம் என் தலே எழுத்து.என் சம்சாரம் தன் உடம்பு சின்னதா இருக்கும் போதே சொல்லி இருந்தா,அவளே காப்பாத்தி இருக்கலாம்.வியாதியே உடம்ப்லே ரொம்ப முத்த விட்டுட்டா.சிதம்பரம் ‘ராதா நர்ஸிங்க் ஹாஸ்பிடல்’ டாக்டராலே அவளே காப்பாத்த முடியலே.அவ என்னேயும்,சாம்பசிவ னையும் தனியா தவிக்க வீட்டுட்டு சந்தோஷமா பரலோகம் போயிட்டா” என்று சொல்லி தன் கண்க ளில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் ராமசாமி.

மஹா தேவ குருக்கள் ராமசாமி அழும் போது தன் பெண்ணின் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்க வேண்டாம் என்று நினைத்து “நீங்கோ உங்க பொண்ணே உங்க மச்சினருக்கே கல்யாணம் பண்ணிக் குடுத்து இருக்கேள்ன்னு சாம்பசிவன் என் கிட்டே சொல்லி இருக்கான்.அவா ‘ஆமும்’ சிவபுரி தானே. அவா ‘ஆம்’ ரொம்ப தூரமா இல்லே பக்கமா” என்று கேட்டு பேச்சே மாத்தினார்.

“ஆமாம் என் ஆத்துக்காரி ரொம்ப ஆசைப் பட்டா.நான் ‘சா¢’ன்னு சொல்லிட்டேன்.’பிராப்தம்’ இருந்தது.கல்யாணம் ரொம்ப நன்னா நடந்தது.அவா ‘ஆம்’ இங்கே இருந்து ஒரு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்லே இருக்கு.எப்பவாவது முடிஞ்சப்ப என்னே வந்துப் பாத்துட்டுப் போவா என் பொண் ணும் மச்சினனும்” என்று சொன்னார் ராமசாமி.

கொஞ்ச நேரம் ஆனதும் மஹாதேவ குருக்கள் அவர் கையிலே இருந்த சின்னப் பையைத் திறந்து,தன் பெண் காமாக்ஷியின் ஜாதகத்தை கையிலே எடுத்து “இது தான் என் பொண்ணு காமாக்ஷியின் ஜாதகம்.உங்க பையன் ஜாதகத்தை நீங்கோ குடுத்தேள்ன்னா,நான் அவா ரெண்டு பேருடைய ஜாதகப் பொருத்தம் பாக்க சௌகியா¢யமா இருக்கும்” என்று சொல்லி காமாக்ஷியின் ஜாதகத்தை நீட்டினார்.
உடனே ராமசாமி” கொஞ்சம் இருங்கோ.நான் என் பையன் ஜாதகத்தே சுவாமி பாதத்திலே வச்சுட்டு வேண்டிண்டு வந்து,எடுத்துண்டு வந்து உங்க கிட்டே குடுத்துட்டு,உங்க பொண்ணோட ஜாதகத்தே நான் வாங்கிக்கறேன்” என்று சொல்லி விட்டு மெல்ல எழுந்துப் போய் பீரோவை த் திறந்து சாம்பசிவன் ஜாதகத்தை எடுத்து சுவாமி பாதத்திலே வைத்து நன்றாக வேண்டிக் கொண்டார்.
பிறகு ராமசாமி ஜாதகத்தை சுவாமி பாதத்திலே இருந்த ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்து குருக்கள் கையிலே கொடுத்து விட்டு,அவர் கொடுத்த ஜாதகத்தே வாங்கிக் கொண்டு வந்து சுவாமி யின் பாதத்திலே வைத்து விட்டு வெளியே வந்தார்.

“நீங்கோ ஜாதகப் பொருத்தம் பாருங்கோ.நானும் பாக்கறேன்.அந்த நடராஜர் அனுக்கிரஹம் இருந்தா இவா ரெண்டு பேர் கல்யாணமும் நடக்ககட்டுமே” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேரம் இருங்கோ.நான் உங்க ரெண்டு பேருக்கும் ‘காபி’ப் போட்டுக் கொண்டு வந்துத் தறேன்” என்று சொன்ன்னார்.

உடனே மரகதம் ”இந்த சம்மந்தம் சுபமா முடியற வரைக்கும் நாங்க உங்க ஆத்லே கையை நனைக்க ஆசைப் படலே.எங்களே தப்பா எடுத்துக்காதீங்கோ”என்று சொன்னதும் குருக்கள் நிலமை யை சமாளிக்க “இந்தப் பழக்கம் எல்லாம் ரொம்ப சா¢யே இல்லே.என்னமோ அந்த காலத்லே இருந்தது இந்த பழக்கம்.இவ இன்னும் அதே பண்ணீண்டு வறா” என்று சொன்னார்.மரகதம் குருக்களை ஒரு விதமாகப் பார்த்தாள்.அவள் முகத்தில் கோவம் தொ¢ந்தது.

ராமசாமி “நான் எதையுமே தப்பா எடுத்துக்க மாட்டேன்.என் சுபாவம் அப்படி.நீங்கோ உங்க ஆத்து வழக்கப் படியே பண்ணுங்கோ”என்று சொன்னார்.கொஞ்ச நேரம் ஆனதும் மஹா தேவ குருக்கள் “என் சம்சாரம் சொன்னதே நீங்கோ தப்பா எடுத்துக்காததுக்கு என் நன்றியே சொல்றேன்.

சில ஆத்லே அவ சொன்னதே தப்பா எடுத்துப்பா.எல்லார் ஆத்லேயும் இந்த வழக்கம் இப்போ இல்லே” என்று சொல்லி விட்டு கொஞ்சம் நேரம் ஆனதும் “அப்போ நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்” என்று சொல்லி எழுந்தார் மஹா தேவ குருக்கள்.மரகதமும் எழுந்துக் கொண்டாள்.

“ஜாக்கிரதையா போய் வாங்கோ”என்று சொல்லி விட்டு வாசல் வரைக்கும் போய் மஹா தேவ குருக்களையும் அவர் சமசாரத்தையும் அனுப்பி விட்டு வீட்டுக்குள்ளே வந்தார் ராமசாமி.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *