அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 3,647 
 

அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அத்தியாயம்-14

அந்த ‘மானேஜர்’ மிகவும் சந்தோஷப் பட்டு “காசிக்குப் போய் இருந்து வரப் போறேளா.எல்லாரு க்கும் இந்த மாதிரி வயசு ஆன காலத்லே காசிக்குப் போய் இருக்கும் ’பாக்கியம்’ கிடைக்காது.என் அம்மாவும் அப்பாவும் காசிக்குப் போய் இருந்துட்டு ‘பிராணனே’ விடணும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டா.என்னமோ காரணத்தாலே அவா காசிக்குப் போறது தடைப் பட்டுண்டே வந்தது.காசிக்குப் போக அவளுக்கு ‘ப்ராபதமே’ இல்லே.இங்கேயே அவா ரெண்டு பேருக்கும் உடம்பு வந்து,ஒருத்தரு க்கு அப்புறம் ஒருத்தரா ரெண்டு மணி வித்தியாசத்லே இந்த ‘லோகத்தே’ விட்டுப் போயிட்டா” என்று சொல்லி தன் கண்க¨ளைத் துடைத்துக் கொண்டார்.

மஹா தேவ குருக்கள் மிகவும் வருத்தப்பட்டு “அப்படி ஆயிடுத்தா. அடப் பாவமே.நேக்கு கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு“ என்று சொன்னார்.

ஒரு நிமிஷம் ஆனதும் ‘மானேஜர்’ ‘பியூனிடம்’ தன் உதவி ‘மானேஜரை’ கூப்பிடச் சொன்னார்.

உதவி ‘மானேஜர்’ வந்ததும் “சார்,இந்த ‘ட்ராப்டை’ இவர் கணக்லே போட்டுட்டு,இவர் கணக் லே இருக்கிற மொத்த பணத்துக்கும் இவர் பேர்லே ஒரு ‘ட்ராப்டை’க் குடுங்கோ” என்று சொன்னதும் அந்த உதவி ‘மானேஜர்’ “சரி சார்.நான் தரேன்”என்று சொல்லி விட்டு மானேஜர் கையிலே இருந்த ‘ட்ராப்டை’ வாங்க்க் கொண்டு,மஹா தேவ குருக்களை அழைத்துக் கொண்டு அவர் சீட்டுக்குப் போனார்.

ஒரு அரை மணி நேரத்திலே உதவி ‘மானேஜர்’ மஹா தேவ குருக்கள் இடம் அவர் கணக்கில் இருந்த மொத்த பணத்துக்கும் ஒரு ‘ட்ராப்டை’க் கொடுத்து விட்டு,குருக்கள் கையில் இருந்த ‘பாஸ் புக்கை’ வாங்கிக் கொண்டார்.

மஹா தேவ குருக்கள் அந்த உதவி ‘மானேஜரு’க்கு நன்றி சொல்லி விட்டு,அவர் கொடுத்த ‘ட்ராப்டை’ வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

மஹா தேவ குருக்கள் வீட்டுக்கு வந்ததும் ஆத்து வாத்தியாருக்கு ‘போன்’ பன்ணீனார்.

அவர் ‘போன்லே’ வந்ததும் “நமஸ்காரம் வாத்தியார்,நான் மஹா தேவன் பேசறேன்.நீங்களும், மாமியும் சௌக்கியமா இருக்கேளா” என்று கேட்டதும் வாத்தியார் “சௌக்கியமா குருக்களே.நாங்க ரெண்டு பேரும் சௌக்கியமா இருந்துண்டு வறோம்.உங்க சம்சாரம் சௌக்கியமா இருந்துண்டு வறாளா” என்று கேட்டார்.

“நாங்க ரெண்டு பேரும் சௌக்கியமா இருந்துண்டு வறோம்.நான் என் ஆத்தே வித்துட்டு,என் கிட்டே இருக்கிற பணத்தே எல்லாம் எடுத்துண்டு,என் சம்சாரத்தையும் அழைச்சுண்டு காசிக்குப் போய் இருந்துண்டு,காசி விஸ்வநாதரையும்,விசாலாக்ஷி அம்மனையும் தினம் தா¢சனம் பண்ணீண்டு வந்து,எங்க காலம் முடிஞ்சதும் ‘பிராணனை’ காசிலே விட்டுடலாம்ன்னு இருக்கோம்.நீங்கோ எனக்கு காசிக்குக் கிளம்ப ஒரு நல்ல நாளா கொஞ்சம் பாத்து சொல்ல முடியுமா” என்று கேட்டார்.

வாத்தியார் “அப்படியா.காசிக்குப் போயிடப் போறேளா.ஒரு பேரன் பொறக்கறதே பாக்காமப் போறேளே.இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுப் போகப்டாதோ” என்று கேட்டார்.

“இல்லே வாத்தியார்.எங்களுக்கு காசிக்குப் போகணும்ன்னு இப்போ தோணி இருக்கு.கிளமப லாம்ன்னு இருக்கோம்” என்று சொன்னதும் வாத்தியார் மேலே ஒன்றும் கேட்காமல் “சித்தே இருங்கோ. நான் பஞ்சாகத்தேப் பாத்து சொல்றேன்”என்று சொல்லி விட்டு பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து “குருக்கள்வாள்,நாளே பாக்க வேணாம்.வர ஞாயித்துக் கிழமை அமாவாசை வறது.அன்னைக்கு நாள் பூரா ரொம்ப அன்னா இருக்கு.அன்னிக்கு நீங்கோ ரெண்டு கிளம்பிப் போய் காசிலே சௌக்கியமா இருந்துண்டு வாங்கோ” என்று சொன்னார்.

குருக்கள் “ரொம்ப சந்தோஷம் வாத்தியார்.நீங்கோ சொன்ன படியே நாங்க அமாவாசை அன்னிக்கே கிளம்பறோம்” என்று சொல்லி விட்டு ‘போனைக் கட்’ பண்ணினார்.

அடுத்த நாளே மஹா தேவ குருக்கள் சிதம்பரம் ரயில் நிலையத்திற்குப் போய் அமாவாசை அன்று சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு போகும் ஒரு துரித வண்டியிலும்,பிறகு சென்னையிலே இருந்து காசிக்குப் போகும் வாரணாசி துரித வணடியிலும் ரெண்டு ‘சீட்’ முன் பதிவு பண்ணிக் கொண்டு வந்தார்.

மஹா தேவ குருக்கள் வீட்டுக்கு வந்து மரகதம் இடம் அவர் பண்ணி இருக்கும் முன் பதிவு சமாசாரத்தைச் சொல்லி விட்டு,காமாக்ஷிக்கும் ‘போன்’ பண்ணி காசிக்கு முன் பதிவு பண்ணீ இருக்கும் விஷயத்தை சொன்னார்.

உடனே “சாம்பசிவன் மாமா,நாங்க மூனு பேரும் சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்து,உங்க ரெண்டு பேரையும் வழி அனுப்பி வக்கறோம்” என்று சொன்னார்.

அமாவாசை அன்று சாயங்காலம் மஹா தேவ குருக்கள் ‘காஸ்’ கடைக்குப் போய் ‘காஸ்’ ‘கனெ க்ஷனை’ ரத்து பண்ணி விட்டு,அந்தக் கடைக்காரர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டார்.அந்தக் கடைக்கார பையன் வந்து ‘காஸ் சிலிண்டரையும்’,‘ரெகுலேட்டரையும்’ எடுத்துக் கொண்டு போனான்.
மஹா தேவ குருக்கள் ஒரு பெட்டியில் தன் துணீ மணி¢களையும்,மரகதத்தின் துணீமணிகளை யும் எடுத்து வைத்துக் கொண்டார்.துணிக் கடைக்காரருக்கு ‘போன்’ பண்ணி “சார்,நான் இன்னிக்கு சாயங்காலம் ஒரு ஏழு மணிக்கா காசிக்குக் கிளம்பலாம்ன்னு இருக்கேன்.நீங்கோ யாராவது ஒருத்தரே அனுப்பி இந்த ஆத்தே பூட்டிக்க சொல்றேளா” என்று கேட்டதும் “நான் நிச்சியமா ஒரு பையனை அனுப்பறேன்” என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணினார்.

மஹா தேவ குருக்கள் வீட்டில் பலகாரத்தைப் பண்ணி விட்டு,ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு மரகதத்தை அழைத்துக் கொண்டு சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு கிளம்ப தயாராக இருந் தார்.துணிக் கடையில் இருந்து ஒரு பையன் வந்து மஹா தேவ குருக்கள் வீட்டை பூட்டிக் கொண்டு போனான்.

மஹா தேவ குருக்கள் சுவாமியை நன்றாக வேண்டிக் கொண்டு,மரகதத்தை அழைத்துக் கொண்டு,பெட்டியையும் எடுத்துக் கொண்டு சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தார்.

ராமசாமியும்,காமாக்ஷியும்,சாம்பசிவனும் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து காத்துக் கொண்டு இருந்தார்கள்.

காமாக்ஷியும்,சாம்பசிவனும் மஹா தேவ குருக்களையும்,மரகதத்தையும் பார்த்து “ஜாக்கிறதை யா காசிக்குப் போய் வாங்கோ.உங்க ரெண்டு பேருடைய உடம்பையும் ஜாக்கிறதையா பாத்துண்டு வாங்கோ.காசி உங்களு க்கு புது இடம்.குளிர் நாள்ளே குளிர் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும்.எப்பவும் ‘ஸ்வெட்டர்’ போட்டுண்டே இருங்கோ.முடிஞ்சப்ப எல்லாம் உங்க ரெண்டு பேர் சௌக்கியத்தைப் பத்தியும்,எங்களுக்கு ‘லெட்டர்’ போடுங்கோ.மறக்காம உங்க விலாசத்தே எங்களுக்கு எழுதுங்கோ. நாங்களும் உங்களுக்கு ‘லெட்டர்’ போடறோம்” என்று கண்களில் கண்ணீர் மலகச் சொன்னார்கள்.

“காசிலே ஜாக்கிரதையா இருந்துண்டு வாங்கோ” என்று ராமசாமி சொல்லிக் கொண்டு இருக் கும் போது சென்னைக்குப் போகும் துரித வண்டி ‘ப்லாட்பாரத்தில்’ வந்து நின்றது.

மஹா தேவ குருக்களும்,மரகதமும் வண்டியிலே ஏறிக் கொண்டு அவர்கள் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டார்கள்.காமாக்ஷி தன் அம்மா அப்பாவிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.வண்டி கிளம்பவே காமாக்ஷி தன்னை பின்னுக்கு தள்ளிக் கொண்டாள்.மூவரும் மஹா தேவ குருக்கள் தலை மறையும் வரையில் தங்கள கைகளை ஆட்டிக் கொண்டு இருந்தார்கள்.

பிறகு மூவரும் ஒரு ஆடோவை வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

அவர்கள் எல்லோரும் உள்ளே வந்து உட்கார்ந்துக் கொண்டார்கள்.

ஒரு மணி நேரம் ஆனதும் ராமசாமி “இனிமே நீங்கோ ரெண்டு பேரும் மீராவை நன்னா கவனி ச்சுண்டு வந்து,இன்னும் கொஞ்ச வருஷத்துக்குள்ளே ஒரு புருஷக் குழந்தேயே பெத்துண்டு, அவனை யும் முன்னுக்குக் கொண்டு வறதிலே உங்க காலத்தேல் கழிக்கணும்.நானும் இன்னும் ரொம்ப வருஷம் உங்க கூட இருக்க மாட்டேன்.எனக்கும் அந்த ஆசையே இல்லை” என்று விரக்தியாகச் சொன்னார்.

உடனே “என்னப்பா,எங்க ரெண்டு பேர் கிட்டேயும் அவாளைக் காசிக்கு போக அனுமதி குடுங் கோன்னு சொல்லிட்டு,நீங்களும் எங்களே விட்டு சீக்கிரமா போயிடுவேன்னு சொல்றேள்.எனக்கு நீங்கோ சொல்றதே கேக்க ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு அழ மாட்டாத குரலில் கேட்டான் சாம்பசிவன்.

“ஆமாம்ண்டா சாம்பசிவா.பொ¢யவா ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ ன்னு சொன்னா மாதிரி,எனக்கு ஒரு பேரன் பொறந்தவுடன்,அவனை கொஞ்ச வருஷம் கொஞ்சிட்டு நான் என் கண்ணே மூடனும்ன்னு இருக்கேன்.அதுக்கு அப்புறமா நான் இந்த ‘லோகத்லே’ இருந்துண்டு வந்து என்ன பண்ணப் போறேன் சொல்லு” என்று விரகதியாகச் சொன்னார்.

ராமசாமி அப்படி சொன்ன பிறகு சாம்பசிவனும் காமாக்ஷியும் ஒன்னும் சொல்லாம எழுந்து சாப்பிடப் போனார்கள்.

பத்து நாள் போனதும் குருக்கள் காசியிலே இருந்து சாம்பசிவனுக்கு ஒரு கடிதம் போட்டார். அந்த கடிதத்தில் அவர்:

“மாப்பிள்ளே,நாங்க ரெண்டு பேரும் சௌக்கியமா காசிக்கு வந்து சேர்ந்தோம்.இப்ப நாங்க ரெண்டு பேரும் சங்கர மடத்தில் சௌக்கியமா இருந்துண்டு வறோம்.நான் கொண்டு வந்த மொத்த பணத்தையும் சங்கர மடத்துக்குக் குடுத்து விட்டேன்.அவா எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு போட்டு, தங்க ஒரு ‘ரூம்’ குடுத்து இருக்கா.நான் இங்கே இருக்கிற வேத பிராமணாளோட தினமும் காத்தாலே ‘ருத்ரமும்,‘சமகமும்’,சொல்லிண்டு வந்துட்டு,இங்கே இருக்கிற ஒரு சிவன் கோவிலிலே பூஜை பண்ணீண்டு வறேன்.மரகதம் நிறைய அம்மனுக்கு ஸ்லோகங்கள எல்லாம் சொல்லிண்டு வறா. காமாக்ஷியும் மீராவும் சௌக்கியமா இருந்து வறாளா.உங்க அப்பாவை ரொம்ப விசாரிச்சேன்னு தயவு செஞ்சி சொல்லுங்கோ.அவர் உடம்பை ஜாக்கிறதையா பாத்துண்டு வாங்கோ.நீங்களும் உங்க உடம்பே ஜாக்கிறதையா பாத்துண்டு வாங்கோ.கோவிலுக்குத் தவறாம போயிண்டு வாங்கோ.இப்படிக்கு மஹாதேவ குருக்கள்” என்று எழுதி இருந்தார்.

கடித்ததைப் படித்த சாம்பசிவனும் காமாக்ஷியும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.சாம்பசிவன் மஹா தேவ குருக்கள் போட்டு இருந்த கடித்ததை அப்பாவுக்கு படித்து காட்டினான்.அவரும் சந்தோஷப் பட்டார்.

அடுத்த நாளே சாம்பசிவன் “மாமா,உங்க கடிதாசு எனக்குக் கிடைத்தது.நீங்கோ ரெண்டு பேரும் காசிக்கு சௌக்கியமா போய் சேர்ந்தேள்ன்னு கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.சங்கர மடத் லே உங்க ரெண்டு பேருடைய பொழுதையும் பகவான் காரியத்லே செலவு பண்ணீண்டு வருவதைக் கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.உங்க உடம்பே ஜாக்கிறதையா கவனிச்சுண்டு வாங்கோ.இங்கே நாங்க எல்லாரும் சைக்கியமா இருந்துண்டு வறோம்” என்று ஒரு பதில் கடிதம் போட்டார்.

சுந்தரத்துக்கு ரெண்டு நாளாக ஜுரம் அடித்து வந்தது.

ராதா அவனை ஒரு ஆட்டோவில் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ‘நர்ஸிங்க் ஹோமில்’ காட்டினாள்.சுந்தரத்தைப் பா¢சோதனைப் பண்ணீன டாக்டர் ராதாவைப் பார்த்து “இவருக்கு ஜுரம் 104 டிகிரீ அடிக்கறது.நான் இவருக்கு ‘ஆண்டிபாயாடிக்ஸ்’ மாத்திரை எழுதித் தறேன்.நீங்கோ அந்த மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூனு மாத்திரை குடுங்க.சாப்பிட வேறும் புழங்கல் அரிசி கஞ்சி மட்டும் குடுங்க.ஐஞ்சு நாள் ஆனதும் ஜுரம் குறையாம இருந்தா,மறுபடியும் இங்கே இட்டுக் கிட்டு வாங்க” என்று சொன்னார்.

ராதா சுந்தரத்தை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வரும் வழியிலே ஒரு ‘மெடிக்கல் ஷாப்பில்’ டாக்டர் எழுதிக் கொடுத்த மத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து,சுந்தரத்தை ‘பெட்’டில் படுக்க வைத்து விட்டு,அவனுக்கு ஒரு போர்வையை போர்த்து விட்டு மாமானார்,மாமியார் இடம் டாக்டர் சொன்னதை சொன்னாள்.ராதா சுந்தரத்துக்கு ஒரு ‘ஆண்டிபாயாடிக்ஸ்’ மாத்திரையைக் கொடுத்து குடிக்க வென்னீரைக் கொடுத்தாள்.

சுந்தரம் ஐந்து நாடகள் டாக்டர் கொடுத்த ‘ஆண்டிபயாடிக்ஸ்’ மாத்திரைகளை தவறாமல் மூன்று வேளையும் போட்டுக் கொண்டு வந்தார்.

ஐந்து நாட்கள் ஆனதும் சுந்தரம் ஜுரம் குறைந்து ‘நார்ரமலா’க இருந்து வந்தார்.ஐந்து நாட்கள் வெறும் புழுங்கல் கஞ்சியை குடித்து வந்ததாலும்,’ஆண்டிபயாடிக்ஸ்’ மாத்திரைகளை சாப்பிட்டு வந்த தாலும்,சுந்தரம் ரொம்ப ‘வீக்காக’ இருந்தான்.அவரால் எழுந்து கூட நிற்க முடியவிலை.

அன்று இரண்டு ஏக்கர் நஞ்சை நிலத்தில் அறுவடையாக நாளாக இருந்தது.சுந்தரத்தால் போக முடியாததால் கணேசன் மெல்ல போய் வர நினைத்து கமலாவைப் பார்த்து “கமலா,ரெண்டு ஏக்கர் நஞ்சை நிலத்லே அறுவடையா ஆயி இருக்கு.நான் மொள்ள போய் வரட்டுமா” என்று கேட்டார். உடனே கமலா “அங்கே முழு நாள் உக்காந்துண்டு இருக்கணுமே,உங்களால் முடியுமா.நன்னா யோஜ னைப் பண்ணுங்கோ” என்று கேட்டாள்.

கணேசன் நன்றாக யோஜனைப் பண்ணி விட்டு “சுந்தரத்துக்கு எழுந்துக் கூட நிக்க முடியலே. அவன் ரொம்ப ‘வீக்கா’ வேறே இருக்கான்.நான் மொள்ள பல்லேக் கடிச்சுண்டு போயிட்டு வறேன்” என்று சொன்னதும் கமலா “சரி, ஜாக்கிறதையா போயிட்டு வாங்கோ” என்று சொன்னாள்.

“அப்பா,இன்னும் ரெண்டு நாள் போகட்டுமே.ஒன்னும் ஆயிடாது.எனக்கு உடம்ப்லே கொஞ்சம் பலம் வந்ததும் நானே வயலுக்குப் போய் வறேன்”என்று சுந்தரம் சொன்னார்.”பரவாயில்லை சுந்தரம். இப்பவே அறுவடை ஆயி மூனு நளாயிடுத்து.என்னாலே வயலுக்குப் போய் வர முடியும்.நான் மொள்ள ‘பல்லேக் கடிச்சுண்டு ’ப் போயிட்டு வறேன்”என்று சொன்னார் கணேசன்.ஆனால் உணமை யிலே கணேசனால் வயலுக்குப் போது மிகவும் சிரமமாகத் தான் இருந்தது.

அவசியமாக போக வேண்டி இருந்ததால்,அவர் சாப்பிட்டு விட்டு,தன் செருப்பைப் போட்டுக் கொண்டு,ஒரு குடையும் எடுத்துக் கொண்டு “கமலா,சுந்தரம் நான் மொள்ளப் போயிட்டு வறேன். இப்பவே ரொம்ப நேரமயிடுத்து” என்று சொல்லி விட்டு வயலுக்குக் கிளம்பினார் கணேசன்.

அன்று ஆட்கள் குறைவாக வரவே அறுவடை முடிய ரொம்ப நேரம் ஆகி விட்டது.

கணேசன் வெகு நேரம் நிலத்தில் குடையை வைத்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தார்.

அறுவடை முடிந்ததும்,கூலிக்காரர்களுக்கு சம்பளம் கொடுத்து விட்டு,மீதி இருந்த பணத்தை தன் பணப் பையில் போட்டுக் கொண்டு,கணேசன் வயலை விட்டு புறப்படும் போது இருட்டி விட்டது.

அன்று மூன்றாம் பிறை சந்திரன் லேசாக வானில் கிளம்பியது.

கணேசன் கொஞ்ச நேரம் நின்றுக் கொண்டு,அந்த மூன்றாம் பிறை சந்திரனைப் பார்த்து சிவனை நன்றாக வேண்டிக் கொண்டு,கைக் கடிகாரத்தை தன் கண்கள் கிட்டே கொண்டு வந்து மணீயைப் பார்த்தார்.

மணி ஏழு அடித்து இருபது நிமிஷத்தைக் காட்டியது.

‘இனிமே மெல்ல மெயின் ரோடுக்குப் போய்,நாம ஆத்துக்குப் போக ரொம்ப நேரம் ஆயிடுமே. நாம மொள்ள இந்த வரப்பு மேலே போனா,ஆத்துக்கு சீக்கிரமா போயிடலாமே’ என்று நினைத்து, கணேசன் எதிரே தொ¢ந்த வரப்பு மேலே நடந்து வந்துக் கொண்டு இருந்தார்.

கணேசனுக்கு வரப்பு மேலே நடந்து பழக்கம் இல்லை.அந்த நேரம் பார்த்து மேகம் சந்திரனை மறைத்ததால் எல்லா இடமும் ‘திடீர்’ என்று இருட்டாக ஆகி விட்டது.கணேசனுக்கு வரப்பின் அகலம் சரியாகத் தொ¢யவில்லை.அவர் தன் காலை வரப்பு முனையில் வைத்து விட்டார்.அவர் கால் வழுக்கி விட்டது.அவர் காலில் போட்டு இருந்த செருப்பின் வார்கள் அறுந்து விட்டது.

வார் அறுந்த செருப்பையும்,நல்ல செருப்பையும் கழட்டி தூர எறிந்து விட்டு,வெறும் கால்களு டன் மெல்ல வரப்பு மேலே மிகவும் ஜாக்கிறதையாக நடந்து வந்துக் கொண்டு இருந்தார் கணேசன்.

அவர் மனம் ’நாம பேசாம சிரமமும்,நேரமும் பாக்காம வழக்கமா நடந்துப் போற மெயின் ரோடு வழியா ஆத்துக்குப் போய் இருக்கணும் தப்பு பண்ணீட்டோம்’ என்று சொல்லிக் கொண்டு இருந்தது.

கணேசன் பதினைந்து அடிகள் தான் வரப்பு மேலே வைத்து இருப்பார்.

அங்கே போய்க் கொண்டு இருந்த ஒரு நல்ல பாம்பு அவரை நன்றாகத் தீண்டி விட்டது.பாம்பு கடி வலி பொறுக்காமல் கணேசன் குனிந்துப் பார்த்தார்.

அப்போது மேகம் கலைந்து விடவே,மங்கலான வெளிச்சத்தில் ஒரு நல்ல பாம்பு நெளிந்து, நெளிந்துப் போவதைப் பார்த்ததும்,அவருக்கு தன்னை நல்ல பாம்பு கடித்து விட்டது என்று புரிந்து விட்டது.

வலியை மெல்ல பொறுத்துக் கொண்டு,வேகமாக வீட்டுக்கு வந்து,கமலாவைக் கூப்பிட்டு “கமலா,நான் இன்னிக்கு கூலிக்காரராளுக்கு சம்பளம் பட்டுவாடா பண்ணி விட்டு முடிக்கும் போது ரொம்ப நேரம் ஆயிடுத்தேன்னு நினைச்சு,வழக்கமா வற மெயின் ரோடு வழியா வறாம வரப்பு மேலே வந்தேன்.என் போறாத வேளை.என் ஒரு கால் செருப்போட வார் ரெண்டும் அறுந்துடுத்து.அதனால் நான் ரெண்டு செருப்பையும் கழட்டிப் போட்டு விட்டு,வரப்பு மேலே வந்துண்டு இருந்தப்ப என்னே ஒரு நல்ல பாம்பு கடிச்சுடுத்து” என்று சொல்லி அவர் வேஷ்டியை விலக்கி பாம்பு தன்னை கடித்த இடத்தை காட்டினார் கணேசன்.

கணேசன் காலில் பாம்பு கடித்த இடத்தில் இருந்து ரத்தம் கசிந்துக் கொண்டு இருந்தது.

தூக்கிப் போட்டது கமலாவுக்கு.

மின்சார விளக்கு வெளிச்சத்தில் அவள் கணவன் காலைப் பார்த்த் போது பாம்பு கடித்த அவர் கால் நீல நிறமாக ஆகி இருந்தது.

உடனே கமலா ராதாவைக் கூப்பிட்டு அப்பாவின் காலைக் காட்டினாள்.

அவ உடனே “என்னப்பா.உங்க கால் இப்படி நீல நிறமா ஆயி இருக்கு.பாம்பு கடிச்ச விஷம் உங்க கால்லே ஏறி இருக்கே” என்று அலறி கத்தினாள்.படுக்கை அறையில் படுத்துக் கொண்டு இருந்த சுந்தரம் மெல்ல எழுந்து வந்து அப்பாவின் காலைப் பார்த்தான்.

சுந்தரம் “ராதா,நீ அப்பாவே உடனே ஒரு டாக்டர் கிட்டே அழைச்சுண்டுப் போய் காட்டு.அவர் அப்பா கால்லே இருக்கற விஷம் இறங்க ஒரு ‘இஞ்செக்ஷன்’ போடுவார்” என்று சொன்னதும்,“கொஞ்ச நேரம் இருங்கோ.நான் ஓடிப் போய் ஒரு வாசல்லேப் போற ஒரு ஆட்டோவை அழைச்சுண்டு வறேன்” என்று சொல்லி விட்டு வாசலுக்கு வந்து காலியாகப் போய்க் கொண்டு இருந்த ஒரு ஆட்டோவைக் கைத் தட்டி கூப்பிட்டாள் ராதா.

ஆட்டோ வந்ததும் கமலாவும்,ராதாவும் மெல்ல கணேசனைப் பிடித்து ஆட்டோவிலே ஏற்றி னர்கள்.இருவரும் அந்த ஆடோவிலே ஏறிக் கொண்டு “டிரைவர்,கொஞ்சம் சீக்கிரமா ஒரு ‘நர்ஸிங் ஹோமுக்குப் போங்க.இவரே ஒரு நல்ல பாம்பு கடிச்சு இருக்கு” என்று சொன்னதும் அந்த ஆட்டோ டிரைவர் “சரிம்மா,நான் சீக்கிரமாப் போறேன்” என்று சொல்லி விட்டு அருகில் இருந்த ஒரு ‘நர்ஸிங்க் ஹோமு’க்குப் போனார்.

ஆட்டோவுக்கு பணத்தைக் கொடுத்து,அங்கே இருந்த ஒரு ‘வீல் சோ¢ல்’ கணேசனை மெல்ல ஏற்றிக் கொண்டு ‘எமர்ஜெண்ஸிக்கு’ப் போய் அங்கு இருந்த டாகடா¢டம் “டாக்டர்,இவர் என் ஆத்துக் காரர்.இவர் வயல்லே வந்துண்டு இருந்தப்ப,இவரை ஒரு நல்ல பாம்பு கடிச்சுட்டதாம்.இவர் கால் ரொம்ப வீங்கி இருக்கு.அவர் கால் நீல நிறமா ஆயி இருக்கு.உடனே இவருக்கு ஏதாவது ஒரு ‘இஞ்செக்ஷன்’ போட்டு,பாம்பு கடிச்ச விஷத்தே கொஞ்சம் எடுங்க” என்று கையைக் கூப்பிக் கொண்டு கெஞ்சினாள் கமலா.

‘எமர்ஜென்ஸியில்’ இருந்த இரண்டு ஆடகள் ‘வீல் சோ¢ல்’ இருந்த கணேசனை, மெல்லப் பிடித்து ஒரு கட்டிலில் படுக்க வைத்தார்கள்.

“ரொம்ப வலிக்கிறதாண்ணா.நீங்கோ வழக்கமா வற வழியிலே ஏண்ணா வறலே.இப்போ உங்க ளே ஒரு நல்ல பாம்பு கடிச்சுட்டதே.நல்ல பாம்புக்கு விஷம் அதிகமாச்சேண்ணா” என்று கமலா சொல் லிக் கொண்டு இருக்கும் போது கணேசன் வலி அதிகமாகி விட்டதால் மயக்கம் ஆகி விட்டார்.
கணேசன மயக்கம் ஆகி விட்டதைப் பார்த்த கமலாவும் ராதாவும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.

“கவலைப் படாதீங்கம்மா,நான் இவருக்கு வைத்தியம் பண்றேன்.நீங்க முதல்லே உங்க அழுகை யே கொஞ்சம் நிறுத்துங்க.இது ஒரு ‘நர்ஸிங்க் ஹோம்.இங்கே நீங்க எல்லாம் அழுதுக் கிட்டு இருக்க கூடாது.கொஞ்சம் வெளிலே போய் குந்திக் கிட்டு இருங்க” என்று அதட்டினார் டாக்டர்.

உடனே கமலாவும்,ராதாவும் தங்கள் அழுகையை நிறுத்தி விட்டு,’எமர்ஜெண்சியை’ விட்டு வெளியே வந்து,அங்கே போட்டு இருந்த சேர்களில் உட்கார்ந்துக் கொண்டு,கைகளைக் கூப்பிக் கொண்டு தங்களுக்குத் தொ¢ந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி சுவாமியை வேண்டிக் கொண்டு வந்தார்கள்.இருவருக்கும் உள்ளுர ஒரு பயம் இருந்தது.

அந்த டாக்டர் உடனே கணேசன் நாடியைப் படித்துப் பார்த்து விட்டு பாம்பு கடித்த இடத்தைப் பார்க்க கணேசன் வேஷ்டியை கொஞ்சம் விலக்கினார்.பிறகு கணேசன் ‘ஷர்ட்டை’ கழட்டிப் பார்த்தார்.

அவருக்கு தூக்கி வாரி போட்டது.

உடனே அந்த டாக்டர் ஒரு ‘நர்ஸை’க் கூப்பிட்டு “நீங்க வெளியே குந்திக் கிட்டு இருக்கிற ரெண்டு அம்மாவையும் உடனே கூப்பிடுங்க” என்று சொன்னதும் அந்த ‘நர்ஸ்’ ‘எமர்ஜென்ஸியை’ விட்டு வெளியே வந்து,கமலாவையும்,ராதாவையும் உடனே ‘எம்ர்ஜெண்சிக்கு’ உள்ளே வரச் சொன் னாள்.
கமலாவும்,ராதாவும் வந்ததும் “பாம்புக் கடி விஷம் இவர் உடம்பு பூராவும் பரவி இருக்கு.இவர் காலில் இருந்து மூஞ்சு வரைக்கும் கரும் நீலமா இருக்கு.நான் அவருக்கு மயக்கம் தெளீய ஒரு ‘இஞ்செக்ஷனை’ இப்போப் போடறேன்” என்று சொல்லி விட்டு,அருகில் இருந்த ‘நர்ஸை’ப் பார்த்து ஒரு ‘இஞ்ஜெக்க்ஷன்’ பேரை சொல்லி “நீங்க ‘பார்மஸி’க்கு போய் நான் சொன்ன ‘இஞ்செக்ஷன்’ பாட்டிலே வாங்கிக் கிட்டு வாங்க” என்று சொன்னார்.

உடனே அந்த ‘நர்ஸ்’ அருகில் இருந்த் ‘பார்மஸிக்கு’ப் போய்,டாக்டர் சொன்ன ‘இஞ்செக்ஷன்’ பாட்டிலை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாள்.டாக்டர் ‘நர்ஸ்’ கொண்டு வந்த ‘இஞ்செகஷன் பாட்டிலை’ வாங்கி அதன் நுனியை உடைத்து விட்டு,கணேசனுக்கு ’இஞ்செக்ஷனை’ போட்டார்.

டாக்டர் ‘இஞ்செக்ஷன்’ போட்டதும் கமலாவும்,ராதாவும் மறுபடியும் ‘எமர்ஜெண்ஸியை’ விட்டு வெளியே வந்து உட்கார்ந்துக் கொண்டு சுவாமியை வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.கமலா ’அவர் உடம்பு நன்னா ஆயி ஆத்துக்கு சீக்கிரமா வரணுமே,பகவானே’ என்று தன் மனதில் அடிக்கடி சொல் லிக் கொண்டு இருந்தாள்

கணேசன் கண்களை முழிக்காமல் படுத்துக் கொண்டே இருந்தார்.

கமலாவும்,ராதாவும் பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ‘எமர்ஜெண்சி’க்குள் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அரை மணி நேரம் ஆனதும் ஒரு ‘நர்ஸ்’ கணேசனை இப்படியும் அப்படியும் அசைத்துப் பார்த் தாள்.கணேசன் அசையாமல் படுத்துக் கொண்டு இருந்தார்.அவர் கையைத் தொட்டுப் பார்த்த ‘நர்ஸ்’ பயந்துப் போனாள்.கணேசன் கை ‘ஜில்’ என்று இருந்தது.

உடனே அந்த ‘நர்ஸ்’ ஓடி வந்து டாக்டா¢டம் “டாக்டர்,அந்த ‘பேஷண்ட்’ என்ன அசைச்சாலும் அசையாம படுத்துக் கிட்டு இருக்கார்.அவர் கை ‘ஜில்’ன்னு இருக்கு” என்று சொன்னதும், அந்த டாக்டர் கணேசன் படுக்கைக்கு வந்து அவரை அசைத்துப் பார்த்தார்.கணேசன் அசையாமல் படுத்துக் கொண்டு இருந்தார்.சந்தேகம் வந்த டாக்டர் தன் ‘ஸ்டெதஸ்கோப்பை’ எடுத்து கணேசனை பா¢சோத னைப் பண்ணீனார்.

அவருக்குத் தேள் கொட்டியது போல இருந்தது.

அவர் மீண்டும் மீண்டும் ‘ஸ்டெதஸ்கோப்பை’ வைத்து கணேசனை பா¢சோதனைப் பண்ணீ விட்டு,மெல்ல தன் ‘ஸ்டெதஸ்கோப்பை’ கழுத்திலே இருந்து கழட்டினார்.

’எமர்ஜெண்ஸி’யை விட்டு வெளியே வந்து கமலாவிடமும்,ராதாவிடமும் “அம்மா, பாம்புக் கடி விஷம் அவர் ரத்தம் பூராவும் பரவி இருக்கு.அந்த ரத்தம் அவர் ‘ஹார்ட்டை’ ரொம்ப பாதிச்சு இருக்கு. அவர் ‘ஹார்ட் நின்னுப் போச்சு.அவர் அரை மணி நேரத்துக்கு முன்னாடி இறந்து விட்டார்.எங்களாலே அவரேக் காப்பாத்த முடியலே.ரொம்ப சாரிங்க” என்று சொல்லி விட்டு மறுபடியும், ‘எமர்ஜெண்ஸி’யின் உள்ளே போய் விட்டார் அந்த டாக்டர்.

கமலாவுக்கும்,ராதாவுக்கும் டாக்டர் சொன்னதைக் கேட்டதும் உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.

இருவரும் கதறி அழ ஆரம்பித்தார்கள்.

ஒரு ஐந்து நிமஷத்திற்கு எல்லாம் ‘எமர்ஜெண்ஸி’ யில் இருந்து இரண்டு ஆட்கள் கணேசன் ‘பாடியை’ ஒரு வெள்ளைத் துணியைப் போட்டு மூடி எடுத்து வந்து அங்கே இருந்த ‘ஆம்புலன்ஸில்’ ஏற்றினார்கள்.

அழுதுக் கொண்டே கமலாவும் ராதாவும் அந்த ‘ஆம்புலன்ஸில்’ ஏறிக் கொண்டதும், அந்த ‘ஆம்புலன்ஸ்’ கிளம்பி கணேசன் வீட்டுக்கு வந்து நின்றது.

கமலாவும்,ராதாவும் இறங்கின பிறகு,அந்த இரண்டு ஆட்கள் கணேசன் ‘பாடியை’ வீட்டுக்குள் வந்து இறக்கி வைத்து விட்டு,அந்த ‘ஆம்புலன்ஸில்’ ஏறி அதை ஓட்டிப் போய் விட்டார்கள்.

ஒரு வெள்ளைத் துணிப் போர்த்தி இருந்த அப்பாவின் ‘பாடியை’ப் பார்த்ததும் சுந்தரத்துக்கு ஒன்னும் புரியவிலை.கணேசன் மூச்சு பேச்சு இல்லாமல் படுத்துக் கொண்டு இருந்தார்.சுந்தரத்துக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன ஆச்சு அந்த ‘நர்ஸிங்க் ஹோமிலே’.ஏன் அவா அப்பாவே இப்படி ஒரு ‘பொணமா’ கொண்டு வந்து இறக்கி வச்சுட்டுப் போய் இருக்கா.அப்பாவுக்கு அந்த ‘நர்ஸிங்க் ஹோமிலே’ ஒரு வைத்தியமும் பண்ணலையா.அங்கே இருந்த டாக்டர் அப்பா உடம்ப்லே இருந்த விஷம் இறங்க எந்த ‘இஞ்செக்க்ஷனையும்’ போடலையா” என்று அம்மாவையும்,ராதாவையும் பார்த்து சுந்தரம் கத்தினான்.

கமலா ஒன்றும் சொல்லாமல் கணவா¢ன் உடம்பு மேலே படுத்துக் கொண்டு கதறி,கதறி அழுதுக் கொண்டு இருந்தாள்.

ராதா ‘நர்ஸிங்க் ஹோமிலே’ நடந்த எல்லா சமாசாரங்களையும் அழுதுக் கொண்டே தன் கண வனிடம் சொல்லி விட்டு அழுதுக் கொண்டு இருந்தாள்.

“நீங்கோ ரெண்டு பேரும் ‘நர்ஸிங்க் ஹோமு’க்குப் போயும் ஒரு பிரயோஜனமும் இல்லாமப் போயிடுத்தே.இப்போ அப்பாவே ஒரு ‘பொணமா’ கொண்டு வந்து இருக்கேளே.அப்பாவே வயலுக்குப் ‘போக வேணாம்’,’போக வேணாம்ன்னு நான் முட்டிண்டேனே.அப்பா நான் சொன்னதே கேக்காம வயலுக்குப் போனாளே.இப்போ ஒரு நல்ல பாம்பு கடிச்சு செத்துப் போய் இருக்காளே.நான் இப்போ யாரே ‘அப்பா’ன்னுக் கூப்பிடப் போறேன்” என்று தலையிலே அடித்துக் கொண்டு அழுதான்.

விஷயம் கேள்விப்பட்டு அக்கம் பக்கத்திலே இருந்தவர்கள் எல்லாம் சுந்தரத்தின் வீட்டுக்கு வந்து கமலாவையும்,சுந்தரத்தையும்,ராதாவையும் துக்கம் விசாரித்தார்கள்.

ராதா கொஞ்சம் தன்னை சுதாரித்துக் கொண்டு அப்பாவுக்கு ‘போன்’ பண்ணி நடந்த எல்லா விஷயங்களையும் விவரமாக சொன்னாள்.

ராதா சொன்னதைக் கேட்டதும் ராமசாமிக்குத் தூக்கி வாரிப் போட்டது.

உடனே அவர் ராதா ‘போன்லே’ சொன்ன சமாசாரத்தை காமாக்ஷி இடம் சொல்லி விட்டு “காமாக்ஷி,நான் கோவிலுக்குப் போய் சாம்பசிவனுக்கு எல்லா விஷயத்தையும் விவரமா சொல்லிட்டு அவனை அழைச்சுண்டு வறேன்” என்று சொல்லி விட்டு கோவிலுக்குப் போனார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *