அப்பா – ஒரு பக்க கதை

 

அப்பா, சீனுவோட அப்பா கார் வாங்கியிருக்கார் என்றான் பரணி.

எந்த சீனுடா? சும்மா கேட்டு வைத்தான் மாதவன். என் கிளாஸ்மேட்பா. புது கார்ல கோயிலுக்கு போனாங்களாம். ரொம்ப ஜாலியா இருந்துச்சுன்னு சீனு சொன்னான். நீயும் ஒரு கார் வாங்குப்பா.

வாங்கலாம். நாளைக்கே வாங்கணும். மகனை இழுத்து அணைத்து சொன்னான் மாதவன். கார் வாங்க நிறைய பணம் வேணும். இன்னும் அஞ்சு வருஷத்தில் சம்பாதிச்சுடுவேன். நீ ஹைஸ்கூல் போகும் போது உன்னை காரில் கொண்டு வந்து விடுவேன். சமத்து புள்ளையா விளையாடிட்டு வாப்பா.

துள்ளிக்குதித்து ஓடினான் பரணி.

நம்ம ரெண்டு பேருமே அன்றாடக் கூலி. அஞ்சு வருஷத்தில் கார் வாங்கிடுவேன்னு குழந்தைகிட்டே எதுக்கு பொய் சொன்னீங்க?

மாதவனின் மனைவி கேட்டாள்

இப்போ அவனக்கு அஞ்சு வயது அஞ்சு வருஷம் போனா நம்ம பொருளாதார நிலைமை புரிய ஆரம்பிச்சுடும். அந்த பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களை திணிக்கவேண்டாம்.என்றான் மாதவன்.

- நாமக்கல் பரமசிவம் (செப்டம்பர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
வெயில் மண்டையைப் பிளந்து உள்ளே இறங்கிவிடுவேன் என்பதுபோல ஆங்காரத்தோடு எரித்தது. பேருந்தில் இருந்து இறங்கி, அகண்ட கரும் பாம்பாகக்கிடந்த வீதியைக் கடக்கும்போது, உயிர் ஒரு நிமிடம் உதறல் எடுத்து ஓய்ந்தது. நல்லவேளை, கதிர் அவளது கையைப் பற்றி இருந்தான். பிரதான வீதியில் ...
மேலும் கதையை படிக்க...
சீதா இன்னும் ஒரு தடவை மட்டும் – கெஞ்சினான் வினோத் ச்சீய்..பேசாமல் படுங்க. பதினோரு மணிக்குள் மூணு முறை ஆகிவிட்டது. மறுபடியும் ஒன்றா..? உடம்பு என்னத்துக்கு ஆகும்..? என்றபடி திரும்பிப் படுத்துக் கொண்டாள் இல்லே, சீதா, கடைசியா… இப்படித்தான் கடைசி கடைசின்னு ஏழு மணிக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
கைப்பேசியில் ஜென்னியின் எண்ணை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, ‘நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் ஸ்ட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என்று ஒலிக்க அதை வெறித்துப் பார்த்தான் கார்த்தி. கார்த்தி. வளர்ந்து வரும் கிருத்திகா இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனன். ஜென்னி அவனுடைய தனி ...
மேலும் கதையை படிக்க...
நோக்கிப் பாய்தல்
''பேசாதடா... பேசாதடா... கல்லக் கொண்டு அடிச்சிடுவேன்'' - சொல்லிக்கொண்டே இருந்த அந்த வாலிபன், வீதியில் கிடந்த உடைந்த செங்கல் ஒன்றை எடுத்து, எதிரில் இருந்தவனின் முகத்தில் அடித்தான். அடி வாங்கியவனுக்கு நெற்றியில் பணியாரமாகப் புடைத்துவிட்டது. அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்க கூழுப் ...
மேலும் கதையை படிக்க...
சந்தோஷம்
பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து, புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைத்த பிறகு, எல்லா பெற்றோருக்கும் தோன்றும் ஆசை, எனக்கும், மனைவி சாவித்ரிக்கும் தோன்றியது.புருஷன் வீட்டில், அவள் எப்படி இருக்கிறாள் என்று, பார்க்க வேண்டுமென்ற ஆசை தான் அது.புருஷன் வீட்டுக்குச் செல்லும் பெண், ...
மேலும் கதையை படிக்க...
வாடகை வீடு
ப்ளீஸ், இன்னும் ஒரு தடவை..! – ஒரு பக்க கதை
செம்புலப் பெயநீர்
நோக்கிப் பாய்தல்
சந்தோஷம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)