அப்பாவுக்காக

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 9,241 
 

ஞாயத்துகிழமை காலை பதினொரு மணி

“வசந்திமா” னுட்டு வந்த கிருஷ்னமூர்த்தியின் கையில் ஸ்விட்பாக்ஸ் மிச்சர் பூ.

அப்பா குரல் கேட்டு வெளியே வந்த வசந்தி அப்பாவின் கையைபார்த்து.

“எதற்குபாஇது ”

“அது… இன்னைக்கு நம்ம வீட்டுக்கு பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க அதுக்குதான்”

“பொண்ணு பாக்கவ யார ”

“உன்னதமா”

“அப்பா..என்னப்ப திடீர்னு சொல்றீங்க?”

“என்னமா சொன்னேன் உன்ன பொண்ணு பாக்க வர்றாங்கனுதானே சொன்னேன்.”

“ஆமங்கப்பா சரிதான் ஆன நான்… அது விஷயமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”

“பேசணுமா என்ன பேசணும்”

“இல்லப்பா பொண்ணு பாக்குற விஷயம பேசணும் ” என்றாள்

“இல்லமா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சாயங்காலம் அஞ்சு மணிக்கு வருவாங்க அப்பா ரெண்டு மணிக்கெல்லாம் வந்துருவே அப்ப பேசிக்கலாம்” சற்று யோசித்தவளாக “சரிப்பா” என்று சொல்ல கையிலிருந்த பைகளை வாங்கினாள் வசந்தி கிருஷ்ணமூர்த்தியும் வெளியே கிளம்பினார்.

கிருஷ்ணமூர்த்தி மதியம் இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்தார். வசந்தி உணவுகளை எடுத்து வைத்து பரிமாறி சாப்பிட்டுவிட்டு வந்து இருக்கையில் அமர்ந்த அப்பாவின் எதிரில் வந்து நின்றாள்

“இப்ப சொல்லுமா” என்றார் கிருஷ்னமூர்த்தி

“அப்பா…நான் இப்பதான் காலேஜ் முடிச்சு வீட்ல இருக்கேன் இன்னும் இரண்டு வருடம் ஆகட்டும் அப்புறம் கல்யாணம் பண்ணிகிறேன்” என்றாள் அதற்க்கு கிருஷ்ணமூர்த்தி

“இன்னும் ரெண்டு வருஷமா வயசென்னாகிறது இரண்டு வருஷத்திற்கு பின் பண்ணினாலும் கல்யாணந்தான் இப்ப பண்ணினாலும் கல்யாணந்தான்” என்று சொல்ல

“அதில்லப்பா இத்தன வருஷமா படிச்சதால நான் விட்டிலேயே அதிகம இருக்கல அதுவும் அம்மா இறந்த எட்டு வருஷமாச்சு ஆன அந்த கவலையே தெரியாம எங்கள ரொம்ப கஷ்டபட்டு வளர்த்துனீங்க அதனால உங்க கூட ஒரு இரண்டு வருஷமாவது இருந்து உங்கள நல்ல பார்த்துகணும்னு ஆசையா இருக்குபா” என்றாள்.

“அட என்னமா நீ கல்யாணம் ஆகி குடும்பம் குழந்தை குட்டினு சந்தோஷ படறத விட்டுட்டு அப்பாவுக்கு சமச்சுபோட்டு சந்தோஷபடறேங்கற” “இல்லப்பா என் திருமணத்திற்கு பின் காலம் புரா கணவனுக்கும் குழந்தைகளுக்கும்னு காலம் போயிரும்பா இருபத்திமூனு வருசம வளர்த்து நம்மள ஆளக்கின உறவுக்கு எதுவும் செய்யாம உடனே கணவன்! கணவன் குடும்பம்னு மாறி போறதுல்ல எனக்கு உடன்பாடு இல்லபா” என்றாள். “அட என்னமா நீ பேசுறே பள்ளிகோடம் படிக்கிற அறிய வயசுலயே காதல் கத்திரிக்காய்னுட்டு எதாவது பன்னிட்டு பெத்தவங்கள அவமானபடுத்திட்டு புருஷன் வீட்டுக்கு போற புள்ளைகளும்! என்னதான் கஷ்டபட்டு கல்யாணம் பண்ணினாலூம் பெத்தவங்க கஷ்டத்த மறந்து புருஷன் வீட்டுக்கு போன உடனே தன் புருஷன் குழைந்தைனு அவங்களுக்கு இதுவேனும் அதுவேனும்னு கேட்கிகற காலத்துல நீ இப்படி அப்பாவுக்காகனு நினைக்கிற ஆன இத நினைச்சா எனக்கு சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்குமா இந்த எண்ணத்துக்காகவே சீக்கிறம் கலயாணம்மாகி நீ சந்தோஷம நல்லா வாழனும்மா” என்றான்.

“இல்லபா தயவுசெய்து இன்னும் இரண்டு வருஷம் போகட்டும்பா” என்று மீண்டும் கூறினாள்.

“மீண்டும் சொல்றேன் இரணடு வருஷமாயி பன்ற கல்யாணத்த இப்பவே செஞ்சுடலாம்ங்கிற…

ஏம்மா கேட்கறேன்னு தப்ப எடுத்துகாத நீ எதும் காதல் கீதல்னு” என்று கேட்கும் முன்னே

“அப்பா என்னப்பா நீங்க நான் அப்படியெல்லாம் இல்லபா”

“அப்புறம் என்ன கல்யாணம் பண்ணிக்கோ நீ இரண்டு வருஷம் களிச்சு கல்யணம் பண்ணிக்கிறேங்கற ஆன ரெண்டு வருஷம் களிச்சு இதே மாதிரி உனக்கு பொருத்தமான மாப்பள கிடைக்காதுமா” என்றான்.

அதற்கு வசந்தி

“அப்பா வாழ்க்கையில நமக்கு பிடித்த மாதிரி கிடைச்சாதான் பொருத்தம்னு நினைக்கறதவிட நமக்கு கிடைச்சதுக்கு தகுந்தவாறு நாம பொருத்திக்கனும் அப்படி சொல்லிதான என்னையும் தம்பியையும் வளர்த்தீங்க” என்றாள்.

“நான் வளர்த்துன வளர்ப்புனு சொல்லி சந்தோஷபடுத்தினாலும் அந்த வளர்ப்பை அடுத்த நிலைக்கு இன்னும் சந்தோஷபடுத்தருதாமா ஒரு நல்ல தகப்பனோட கடமை இப்ப உனக்கென்ன அப்பவ பாத்துக்கவேணும் அவ்வளவுதானே விடு உன் கல்யாணம் முடிஞ்சு இரண்டு மூனு வருஷத்துல உன் தம்பிக்கு கல்யாணம் பண்ணிட்ட போச்சு அப்ப மருமக வந்து பாத்துக்குவால்ல” என்றான்

“அப்பா என்னப்பா சொல்றீங்க மருமக பாக்கிறதுக்கும் மக பாக்கிறதுக்கும் வித்தியாசம் இல்லையாப்பா”

“என்னம்மா வித்தியாஷம் அதுவும் இன்னோரு விட்டு மகதானம்மா அங்க அவுங்க அப்பாஅம்மாவ பாத்த மாதிரி என்னையும் பார்த்துக்கும்மா”

“இல்லபா என் ஆசையும் எண்ணமும் வேறு”என்றாள்

“அப்படியெல்லாம் மனச குழப்பிக்காம ஆகவேண்டியத பாருமா” என்று கிருஷ்ணமூர்த்தி கூற வாதம் தொடர்ந்தது.

அப்பாவின் எண்ணத்தையும் பேச்சையும் மறுக்க முடியாது அதனால வர்ற மாப்பிளைட்ட பேசிக்கலாம் என்ற முடிவுடன் பெண் பார்க்கும் நிகழ்வுக்கு சம்மதித்தாள். கிருஷ்ணமூர்த்தியும் மகிழ்வோடு வெளியே கிளம்பினார்.

நாங்கு மணிக்கு கிருஷ்ணமூர்த்தி “வசந்தி!வசந்தி” என்று அழைத்த அப்பாவின் குரல் கேட்டு வெளியே வந்தாள்.

“வசந்தி என்னமா பன்ற இன்னும் ரெடியாகலையா ஐந்து மணிக்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துடுவாங்கன்னு சொல்லி இருக்கேனல்ல” என்று சொல்ல

“இதோ ரெடியாகிறேன்” என்று சொல்லி மணப்பெணாக மாற உள்ளே சென்று தயாரானாள் சரியாக மாலை 5 மணிக்கு மாப்பிள்ளை வீட்டார்கள் வந்தார்கள்.

“வாங்க! வாங்க! உள்ளே வாங்க” என்று அப்பா அழைக்கும் குரல் கேட்டு சற்று உடல் நடுக்கம் ஏற்பட்டது வசந்திக்கு. வசந்தியின் தோழி அப்பாவின் உறவினர்களும் அம்மாவின் உறவினர்கள் என்று வீட்டில் சிலர் இருக்க சிறிது நேரத்தில் அவர்கள் ஏதேதோ பேசி சிரிக்கும் குரல் கேட்டது சற்று நேரத்தில் ஒரு பெண்ணின் குரல் “எங்க வசந்திய வரச் சொல்லுங்கள்” என்று சொல்ல உடனே கிருஷ்ணமூர்த்தி “வசந்தி வசந்திமா வமா இங்க கொஞ்சம் வந்து நமஷ்காரம் பன்னிட்டு போ” என்று சொல்ல வசந்தியின் சித்தி வசந்தியிடம் “எந்திரி போ அப்பா கூப்படறாங்கல போயி ஒரு தடவை நல்ல தலை நிமிர்ந்து நமஸ்காரம் சொல்லு அப்ப அப்படியே மாப்பிளய நல்ல பாரு சரியா தெரியலைன சிறிது நேரம் அங்கே நின்னு ரெண்டு தடவை நல்லபார்துட்டு வந்து அப்புறம் முடிவு சொல்லு எதுனாலும் சித்தி சமாளிக்கிறேனு” சொல்ல சித்தி சொன்ன அந்த வார்த்தை தன் தாய் சொன்னது போல ஒரு தைரியத்துல வெளியே வந்தாள்.

வெளியே வராண்டாவில் சோபாவில் மூன்று ஆண்கள் அதில் நடுவில் அமர்ந்திருந்தவர் மாப்பிள்ளை தோற்றத்தில் மற்ற இரு ஆண்களும் மாப்பிள்ளையின் தந்தை மற்றும் உறவினர்கள் போலும் இருந்தனர். ஆண்களுக்கு நமஸ்காரம் சொல்லி பெண்களுக்கும் நமஸ்காரம் சொல்லி விட்டு சிறிது நேரம் நின்றால் அப்பொழுது கிருஷ்ணமூர்த்தியின் அப்பா நீ உள்ளே போமா என்று சொல்ல அவள் உள்ளே வந்த பிறகு வெளியே மாப்பிள்ளை வீட்டாரிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் சித்தி உள்ளே வந்து

“வசந்தி மாப்ள உன்னை புடிச்சிருக்குனுட்டாறு உனக்கு மாப்ளய புடிச்சிருக்கானு கேட்கறாங்க நீ மப்ளய நல்ல பாத்திய புடிச்சிருக்க” என்று கேட்க வசந்தி

“சித்தி மாப்ள நல்ல இருக்கார் புடிச்சிருக்கு ஆனா” என்று இழுத்தாள் “ஆனாவ ஆனான என்னான்னு சொல்லு” என்றாள் சித்தி சற்று தயக்கத்துடன் வசந்தி

“மாப்பளகிட்ட ரெண்டு நிமிஷம் பேசணும் என்றாள்”.

“மாப்பிளைகிட்ட பேசனுமா உங்கப்பாக்கு தெரிஞ்ச அவ்வளவுதான் உனக்குதான் மாப்பளய புடிச்சிருக்குல்ல அப்புறம் என்ன”

“ப்ளீஷ் ப்ளீஷ் சித்தி எப்படியாது அப்பாட்டையும் மாப்பிளைவீட்டார்ட்டையும் சொல்லுங்க ப்ளீஷ்” என்றாள். வசந்தியின் இந்த கெஞ்சலுக்கு சம்மதித்தவளாய் வெளியே செல்ல வெளியே இருவீட்டாரும் மேற்கொண்டு ஆகவேண்டியது பேசிகொண்டிருந்தனர் வசந்தி சொன்னத எப்படி சொல்றதுனு சித்தி தவிச்சப்போ கிருஷ்னமுர்த்தி

“ஏம்மா என்னமா சொல்ற வசந்தி”னு சித்தியிடம் கேட்க அவ சரினு சொல்லிட்டானு சொன்னாலே தவிர வசந்தி சொன்ன அந்த வார்த்த வரல அப்போ.. சரி எல்லோருக்கும் ரொம்ப

“சந்தோஷம்னு” மேலும் பேச அப்போது மாப்பிளை ஷியாம்

“ஏங்க” ங்க அனைவரும் ஷியாமை பார்க்க ஷியாம்

“இரண்டு நிமிஷம் பொண்ணுகிட்ட பேசணும்” னுசொன்னபோது சித்திக்கு வந்த சந்தோஷம் அளவே இல்ல ஆன அதுக்குள்ள ஷியாமோட அம்மா “இதென்ன பழக்கம் பொண்ணுட்ட பேசறது கேட்கறதெல்லாம்” என்றாள்.

ஆனால் அதற்க்குள் கிருஷ்ணமூர்த்தியே

“இந்த காலத்துல இதெல்லாம் சகஜமா கல்யாணம் பன்னிக்கற மாப்பிள்ளையும் பொண்ணும் இரண்டு நிமிஷம் பேசட்டும் பேசறதுல என்ன தப்புனு” கேட்க சித்தியும் வசந்தியும் மகிழ்ந்தனர்.

அப்போது கிருஷ்ணமூர்த்தி வசந்தியின் சித்தியிடம்

“மாப்ளய தோட்டம் பக்கம் கூட்டிட்டுபோ அப்படியே வசந்தியையும் போயி இரண்டு நிமிஷம் பேசிட்டு வரச்சொல்லு” னார் உடனே சரினு தலையசைத்தவளாய் ஷியாமை பார்க்க ஷியாம் எழுந்து சித்தியை பின் தொடர அவள் வாசல் கதவை திறந்துவிட்டு

“நீங்க போங்க நான் பொண்ண வரச்சொல்றேன்” னுட்டு வசந்திட்ட வந்து “நீ கொடுத்து வெச்சவ நீ கேட்டத மாப்ளய கேட்டுட்டார் வா போலம்” என்று சொல்லி அழைத்து மாப்ள தோட்டத்துல இருக்கார் நீ போ” என்றாள்

“வசந்தி எதுவா இருந்தாலும் தைரியமா பேசு” என்று கூறி அனுப்பினாள். ஷ்யாம் வசந்தி வந்தவுடன்

“ஹாய்”

“ஹாய்” மௌனம்

“எதாவது பேசுங்க”

“என்ன பேசறது”

” ம்ம் நான் எம் ஈ மெக்கானிக், ஒரு கம்பெனியில அசிஸ்டன்ட் மேனேஜர பெங்களுர்ல ஒர்க் பன்றேன் எனக்கு 40 ஆயிரம் சம்பளம் வாரத்தில ரெண்டுநாள் தான் இங்க மீதி ஐந்து நாள் அங்கே ஒரே பையன் அக்கா தம்பி எல்லாம் யாரும் இல்ல எங்க அம்மா ஹார்ட் பேசன்ட் அப்பா ஒரு சுகர் பேசன்ட்”னு சொல்லி தன்னையும் தன் குடும்பத்தையும் அறிமுகம் செய்தான். யாரென்று தெரியாமலே தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் ஷியாம் கூறியது வசந்திக்கு தன் மேல் உள்ள நம்பிக்கையுடன் கூறியுள்ளார் என்று ஷியாமை உணர்ந்தவளாக அதேபோல் நாமும் வெளிப்படையாக பேசி விடலாம் என்ற முடிவில்

“ரொம்ப சந்தோஷங்க நீங்க உங்களைப்பற்றியும் உங்க குடும்பத்தை பற்றியும் வெளிப்படையாக சொன்னதற்கு, என்னை பற்றியும் எங்க குடும்பம் பற்றியும் உங்களுக்கு தெரியுமா” என்று கேட்ட உடனே ஷியாம்

“தெரியுங்க நீங்க அம்மா இல்லாத பொண்ணு உங்க அப்பா தான் எல்லாமே உங்களுக்கு ஒரு தம்பி அவன் டிகிரி ஹைதராபாத்தில் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான் நீங்க bsc மேக்ஸ் முடிச்சிருக்கீங்க குடும்பத்த நல்ல பாத்துக்குவீங்க” என்று கடகடவென ஒரு துள்ளலுடன் கூறினான்.

பரவாயில்லை எல்லாம் நல்ல தெரிஞ்சுதான் வந்திருக்கீங்க ஆமா உங்க அப்பா அம்மா எங்க இருக்காங்க?”

“அவுங்க இங்கதான் இருக்காங்க நான் தான் ஊருக்குபோயிட்டு போயிட்டு வரேன்”

“அவுங்களுக்கு துணை”

“அவங்களுக்கு எதுக்குங்க துணை அப்பாவுக்கு அம்மா துணை அம்மாவுக்கு அப்பா துணை அப்ப..டி..யே நமக்கு.. திருமணம் ஆயிட்ட அவங்களுக்கு நீங்க துணை என்றான்” ஷியாம்

ம்ம்” என்று சிரித்தாள் வசந்தி

“ஏன் சிரிக்கிறீங்க”

“ஒன்னுமில்லைங்க”

“பரவாயில்லை சொல்லுங்க”

“அப்பாவுக்கு அம்மா அம்மாவுக்கு அப்பா னு இருவரும் துணையோடு இருக்கும் போதே இன்னொரு துணையாய் நான் ஆனால் இங்கே எந்த துணையும் இல்லாத என் தந்தையை பிரிந்து நான் வரனும்” என்றாள். சிறிது யோசித்து விட்டு

“என்ன சொல்லறீங்க” என்றான் ஷ்யாம்

“நான் என்னங்க சொல்றது பெண்ணா பிறந்துட்டாவே அதிகப்படியான முடிவுகள் அவள் எடுக்க இந்த சமூகத்தில் வழியில்லை பெற்றோருக்கும் சம்பிரதாயத்திற்கும் சமூகத்திற்கும் கட்டுபட்டே ஒத்துபோக வேண்டியுள்ளது என்றாள் ”

“ம்ம் புதிர்போடம சொல்லுங்க நீங்க என்ன சொல்ல வர்றீங்க.. நீங்க சொல்றதெல்லாம் போன ஜென்ரேஷன் வரை இருக்கலாம் ஆனால் இந்த தலைமுறை கொஞ்சம் மாறியிருக்குது ஆண்கள் பெண்களை மதிக்கவும் அவர்களின் உணர்வுக்கு மதிப்புகொடுத்துட்டுதான இருக்காங்க ஆனா நீங்கதான் இன்னும் நமக்கு மதிப்பதில்லை சுதந்திரம் இல்லைனு மனசுக்குள்ளே எண்ணிகிட்டு உங்களுக்குள்ளே நீங்களே கட்டுபாடு வெச்சுக்கிறீங்க” என்றான் ஷ்யாம்

“என்னங்க மாறியிருக்கு ஒரு பெண் தன் திருமணம் பற்றியோ தன் கணவன் பற்றியோ தன் விருப்பம் பற்றியோ முடிவெடுக்க இயலாமல் பெற்றோர்களின் உறவினர்களின் மகிழ்விக்காக தன் மகிழ்ச்சியை தொலைத்து வாழ்பவர்கள் எத்தனை பேர் அப்படி வாழும்போது அதில் ஏற்படும் வலிகள் தாங்கமுடியாத நிலையில் விவாகரத்து பெருபவர் எத்தனை பேர் சமுகத்தின் சம்பரதாயத்திற்கு திருமணம் செய்தும் மனபூர்வமாக காதலித்து திருமணம் செய்தும் குடும்பத்தில் வரும் பிரச்சனைகளால் குடுபத்தில் ஏற்றுகொள்ளதது என குடும்பத்தின் வீட்டில் இடம் கிடைக்காமல் தனியாக வாழ்ந்து அதன் தாக்கம் திருமணத்திற்கு பின் வரும் அன்புகிடைக்காமல் அதை உணராமல் பிரிந்து செல்பவர் எத்தனை பேர்” என்றாள்.

“ம்ம்… சரிங்க அதுக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்க? நாம நம்ம கல்யாணத்தை பத்தி பேசி நம்ம மனசு ஒத்து போகுதானுதான் பாக்குறதுக்குதான் நம்மள தனியா பேசவிட்டிருக்காங்க ஆனா நீங்க பேசறத பாத்த திருமணம் என்றாளே பெண் சம்மதம் இல்லாம கட்டாயம் கல்யாணம் பன்ற மாதிரி பேசறீங்க இப்ப இந்த கல்யாணத்துல உங்களுக்கு இஷ்டம் இருக்க இல்லையா அதசொல்லுங்க”

“பாத்தீங்களா ஒரு பெண் தன் திருமணம் பற்றி தன்னை கல்யாணம் பன்றவங்க கிட்ட கூட வெளிப்படையா பேசமுடியல பேசவாய்பில்ல என்முடிவுக்கு உன்முடிவென்னன்ற கேள்விதான் வருது

இதைதான் சொன்னேன் சமூக சம்பிரதாய சிக்கல்னு. இதற்கு உங்ககிட்டையாவது என் நிலைமை சொல்லி விடைகிடைக்குனுதான் பேசினேன் நீங்களும் அப்பாவை போல வாதாடுகிறீர்கள் உங்களின் எண்ணத்திற்க்கு என்னிடம் விடை கேட்கிறீர்கள் அதற்க்கு என்னிடம் பதில் இல்லை” என்றாள்.

“சரிங்க இப்ப நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க”

“அதுவந்து…. நீங்க…. என்னபிடிச்சிருந்த பிடிச்சிருக்குனு சொல்லுங்க ஆனா ஏதாவது காரணம் சொல்லி திருமணம் மட்டும் இரண்டு வருடம் கழிச்சு வெச்சுக்கலாம்னு சொல்லுங்க pls ஏன்ன நான் என் அப்பாவ ரெண்டு வருஷமாவது கூட இருந்து பாத்துகனும்னு நினைக்கிறேன். எங்கம்மா இறந்த பல வருஷமாகியிம் அவர் அவருக்காக வேறு திருமணம் செய்யாமல் எங்களை வளர்க்க ரொம்ப சிரமபட்டார். அப்படி வளர்த்து ஆளாக்கிய தந்தையை ஒரு ரெண்டு வருஷமாவது கூட இருந்து சந்தோஷமா பாத்துக்கனும்னு ஆசை. இதை அப்பாவிடமே சொன்னேன் ஆனால் அவர் ஒரு தந்தையாக கடமையை நிறைவேற்ற நினைக்கிராறே தவிர மகளின் ஆசையை உணர்வை புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்க ஒரு பிள்ளையாக இருப்பதால் உங்களுக்கு ஒரு மகளின் உணர்வு புரியும் என்றுதான் இதை உங்களிடம் சொல்லுகிறேன்”.

“என்னங்க நீங்க உங்கள பிடிச்சிருக்குனு தனியா பேசலாமுனு வந்த இப்பவே இப்படி பேசி ஆடரெல்லாம் போடறீங்க”

“ஆர்டரெல்லாம் போடுளிங்க உங்கவீட்டு மருமளாகரத்க்கு முன்னாடி ஒரு நல்ல மகளா இருந்துட்டு அப்புறமா உங்க விட்டு மருமகள வரேன்கறேன்”.

“ம்ம்ம்….சரி போலங்க” என்றான் ஷ்யாம்

“என்ன சொல்ல போறீங்க என்றாள்”

“என்ன சொல்றது யோசுச்சு சொல்றேன் சொல்லுவேன்” என்றான் ஷ்யாம்

“அச்சச்சோ அப்படி சொன்னீங்கன்னா

நான் தான் பேசி உங்கள கொழப்பிட்டேன் பார் எங்கப்பா”

“அதுக்கு நான் என்ன பண்ண நீங்க எப்படியோ சமாளிங்க ஆனா ஒன்னுங்க உங்க நல்ல எண்ணதுக்கு நல்லது நடக்கனும் நானும் கடவுளை வேண்டறேன் என்று சொல்லிவிட்டு வறாண்டாவை நோக்கி நடக்க”

அதற்குமேல் எதுவும் பேசாமல் வசந்தியும் நடக்க ஷோபாவில் வந்து அமர்ந்தான் ஷ்யாம்..

வசந்தியும் உள்அறையை நோக்கி நடந்து அறைக்குள் நுழைந்தாள் நுழைந்தவுடன் சித்தியும் தோழியும்

“ஏய் என்ன சொன்ன?..மாப்ள என்ன சொன்னாரு? உன்மனசுக்கு பிடிச்ச மாதிரி பேசினாரானு?..”. கேள்விகளை அடுக்கி கொண்டே இருக்க

“ஐயோ சித்தி கொஞ்சம் பேசம இருங்க என மனச புருஞ்சுக்க யாருமேயில்ல நீங்க வேற தொன தொனனு கேள்வி கேட்கிறீங்க” என்றாள்

“ஏய் என்னடி இப்படி சொல்ற மாப்பிளைக்கு உன்ன பிடிக்கலையா?

“ஐயோ சித்தி pls தயவு செஞ்சு கொஞ்சம் பேசம இருங்க” என்றவுடன்

சித்தி கோபத்துடன் சரிதான் போடினுட்டு வறாண்டவை நோக்கி சென்றாள்.

“மாமா.. என்ன மாமா எங்க எல்லாம் கிளம்பீட்டாங்கள ஒருத்தரையும் காணோம்” என்ற சித்தியின் குரல் கேட்ட வசந்தி வராண்ட நோக்கி வந்தாள்.

அதற்கு கிருஷ்ணமுர்த்தி

“ஆமாம கிளம்பிட்டாங்க” என்றார்.

“அப்பா என்னப்பா சொன்னாங்க? சொல்லாம கூட கிளம்பீட்டாங்க.. ”

“என்ன சொல்லூவாங்க நீ என்னத சொன்ன மாப்பள பையன்ட”

“நான் ஒன்னும் சொல்லுலபா”

“அப்படியா என்னானு தெரியல அவங்களுக்குள்ள ஏதோ பேசினாங்க சட்டுனு நாங்க கிளம்பறோம்னுட்டு போயிட்டு தகவல் சொல்றோம்னு கிளம்பீட்டாங்க” என்றார்

மீண்டும் “அம்மா வசந்தி மாப்ள பையன்ட்ட எதாவது எடாகூடமா பேசினியா”

“இல்லப்பா”

“அப்பறம் ஏன் சட்டுனு போனாங்ஙன்னு தெரியல சரி பாப்போம் இது இல்லைன இன்னோன்று” என்று சொல்லிகொண்டே கிருஷ்முர்த்தி அவரின் அரைக்குள் சென்றார்.

சித்தியும் வசந்தியின் வாடிய முகத்த பாத்து

“ஏய் ஏண்டி கவலபடற இவங்க இல்லாட்டி வேற மாப்ள பாக்கலாம் ஊருல வேறமாப்ள கிடைக்கமலா போயிரும் உன்மனசுக்கு இதவிட நல்ல மாப்ள கிடைக்கும் போ போயி கந்தோஷம புடவய மாத்து நம்மாள அதுதான் முடியும் ஒரு ஆண்நினைத்தால் தான் திருமணம் இல்லைனா அவங்க வேற பெண்ண பாப்பாங்க ஆனா ஒரு பெண்ணா….நம்மள ஏன் வேண்டானாங்கற கேள்வி ஏற்படுத்தும் வலி அது ஒரு பெண்ணுக்குதான் தெரியும் போ” என்றாள். வசந்தியும் சித்தியின் வார்த்தை காதில் கனக்க மாப்பிளைவிட்டாரின் நடவடிக்கை மனதை அழுத்த அப்பாவின் துவண்ட உடல் கண்ணில் கணக்க கண்ணில் நீர் வடிய அவள் அறையை நோக்கி நடந்தாள்.

அப்போது அப்பாவின் மொபைல் அழைப்பொழி கேட்க அப்பா எடுத்து பேசுவதை கேட்டாள்

….

“சொல்லபா..”

…….

“வந்தாங்கப்பா பாத்தாங்கப்பா..”

……

“இல்லப்பா போயிட்டாங்க நீ கொஞ்சம்முன்னாடி கூப்பிடிருந்த மாப்பிளைட்ட பேசியிருக்கலாம்.”

…….

“நல்லாயிருந்தார் அக்காவ பிடிச்சுதுனார் அக்கவும் பிடிச்சுதுனாத சொன்னா அவங்க போயிட்டு தகவல் சொல்றோம்னாங்கப்பா.”

……

“அக்கட்டயா அக்கா டிரஸ் மாத்த போயிட்ட நைட் கூப்பிடப்ப” என்றார்.

அவர்கள் பேசியதை கேட்வரே புடவையை மாற்றிவிட்டு வெளியே வந்தாள் வசந்தி. அப்பாவிடமும் வசந்தியிடமும் தோழிகளும் உறவினர்களும் விடைபெற்று சென்றனர்.

சித்தியும் வசந்தியிடம்

“வசந்தி ஏம்மா எப்படியோ இருக்கற தெம்ப சிரிச்சு சந்தோஷம இரு உன்ன அப்படி பாத்ததான் அப்பாவுக்கு சந்தோஷம இருக்கும் இதெல்லாம் பெண்கள் வாழ்க்கையில சகஜம் புரியுத நான் போயிட்டு நாளான்னைக்கு வரேன் வரட்டா” என்று சொல்லிவிட்டு கிருஷ்னமூர்த்தியின் அறைக்குள் சென்று

“மாமா நான் கிளம்புறேன் என்றாள்”

“ஏமா இருந்துட்டு நாளைக்கு போலம்மல்லமா என்றார்”

“இல்ல மாமா நான் அவர்கிட்ட இன்னைக்கே வந்தறேன்னு சொல்லிட்டுதான் வந்தேன் அதான் நான் வேனா நாளன்னைக்கு வரேன் மாமா”

“அப்படியா சரிமா சகலய கேட்டத சொல்லுமா”

“சரிங்கமாமா மாமா… வந்து வசந்தி சின்ன புள்ள இதுதான் முத அனுபவம் தாயில்லபிள்ளை பொக்குனு போயிட்ட முகத்த பாத்த பாவம இருக்கு என்று சொல்லிக் கொண்டே கண்ணில் நீர் வடித்தாள். அவளின் கண்ணின் நீர்கண்டதும் கிருஷ்ணமுர்த்தியும் கலங்க மாமா அழாதீங்க நீங்க தைரியஞ்சொன்னதான் அந்த கொழந்தைக்கும் தைரியம் வரும் விடுங்க மாமா நல்ல நினைத்தே நல்லதே நடக்கும் இதவிட நல்ல சம்பந்தம் கிடைக்கும் புள்ளைக்கு தைரியம் சொல்லி சந்தோஷம இருங்க நான் வரேன்” என்று எல்லோ மனதும் கனக்க சித்தியும் கிளம்ப கதவை தாளிட்டு விட்டு அப்பாவிடம் அப்பா பால் ஏதுவும் வேண்டுமா என்றாள் வேண்டம்மா என்றார்.

மனிதில் நடந்த விஷயங்களை நினைத்தவாறே படுக்கையகல் படுத்தவள் உறங்கி விட்டாள்.

“வசந்தி வசந்திமா” என்று அப்பா எழுப்ப திடுக்கென்று எழுந்தாள்

“என்னப்பா” என்றாள்

“ம்மா பசிக்குதுமா சாப்பிட என்னமா இருக்கு” என்றார்.

“அப்பா தோசமாவு இருக்கு தோச ஊத்தறேன்பா” என்று சொல்லிவிட்டு மணியை பார்த்தால் மணி இரவு இரண்டு

“அடக்கடவுளே அப்பா மணி இரண்டுபா ஏம்ப்பா மொதவே எழுப்பலாம்ல” என்றாள்

“எழுப்பளாம்னுதான் வந்தேன் நீ நல்ல அசந்து குழந்த மாதிரி தூங்கினத பாத்த எழுப்ப மனசு வரல என்று சொல்ல” போங்கப்ப என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக தோயை ஊற்றி அப்பாவுக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுவிட்டு உறங்க போன வசந்தியின் நினைவுகள் ஷ்யாமையே சுற்றியது அவர் நல்லவராகத்தான் தெரிந்தார் நல்லாதான் பேசினார் ஏன் முடிவுமட்டும் சொல்லாமல் சட்டென்று கிளம்பினார் என்று.

நாட்கள் நகர்ந்தன ஒருவாரம் களித்து கிருஷ்ணமுர்தியின் போனில் அழைப்பு வந்தது போனை எடுத்து

சொல்லங்க

…..

“ம்ம் சொல்லங்க”

…..

“நல்லாயிருக்கோம் நீங்க”

……

“அப்படியா ரொம்ப சந்தோஷம்”

…..

“அப்படிங்களா”

……

“அப்படிங்களா ரொம்ப சந்தோஷம் சரிங்க.. சரிங்க.. ம்ம் சொல்லுங்க”

…..

“அப்படியா ரொம்ப சந்தோஷம் சரிங்க…”

…..

“ஏங்க..”

……

“அப்படிங்களா..

சரிங்க.. சரிங்க… நானும் பொண்ணுட்டையும் உறவுகாறங் கிட்டையும் கலந்துட்டு சொல்றேன்”.

…..

“சரிங்க ரொம்ப சந்தோஷம் நல்ல தகவல் சொல்றேன்! உங்க அப்பா அம்மாவை கேட்டதா சொல்லுங்க..”

….

“சரிங்க வெச்சுருட்டுங்களா..

சரிங்க..”

“யம்மா வசந்தி..,.. இங்க வாம்மா இப்ப போன்ல அன்னைக்கு பொண்ணு பாத்திட்டு போனாங்கல்ல அவங்கதானு சிரிச்சுகிட்டே சொல்ல”

“வசந்தி அப்பா என்னப்பா ஆச்சு ஏன் இவ்வளோ சந்தோஷம்”

” அது உன்ன அவங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்காம் உன்னோட பேச்சு எண்ணம் எல்லாம் மாபளைக்கு ரொம்ப புடிச்சிருக்காம் அதனால கல்யாணத்துக்கு சரினுட்டாராமா ஆனா இப்ப ஏதும் வெத்தள தாம்புளம் மாத்திட்டு இரண்டு வருடம் கழித்து கல்யாணம் வெச்சுகலாம்கிறாறாம்”.

“ஏனாம்”

“ஏன்னா அவரு இத்தனை வருஷமா ஹாஸ்டல் படிப்பு வெளியூர் வேலைனு அவங்க அப்பா அம்மாவ பிரிஞ்சே இருந்துட்டாறாம். அதுனால அவுங்க அம்மா அப்பாவ கொஞ்சநாள் கூட வெச்சு பாத்திட்டு அப்புறமா கல்யாணம் பன்னிக்கிறேங்கறாராமா. இப்ப கூட அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் பெங்களுர்லதான் அவரு கூடதான் இருக்காங்கலாம் நம்ம சம்மதம் என்னானு கேட்கறாங்க. அவரேதான் அவரோட போன்ல இருந்து கூப்பிட்டிருக்காராம் என்ன கேட்டு சொல்லுங்கன்னார், அதான் நான் பொண்ண உறவுகாரங்கள கேட்டு சொல்றேன்ன என்னமா சொல்றது”

“நான் என்னப்பா சொல்றது உங்க விருப்பம்ந”

” அது இல்லமா நிச்சயதாம்பூலம் மாத்தலங்கறாங்க ஆன இரண்டு வருஷம் களிச்சு கல்யாணம்ங்கறாங்க அது மாப்ள வெளியூர்ல இருக்காரு ஆன மாப்ள அப்பா அம்மானு எல்லாம் நல்ல சம்மந்தமாதான் தெரியுது விடவும் மனசில அதான் யோசிக்கிறேன் நான் எதுக்கும் சித்தியிட்டையும் உறவுகாரங்ககிட்டையும் பேசிட்டு சொல்லலாம் ஆனா உனக்கு விருப்பம் தானே”

“அப்பா அங்களுக்கு பிடிச்சிருந்த சரிப்பா”

“சரிமா நான் குளிச்சு ரெடியாயி சித்திவிட்டுக்கு ஒருஎட்டு நேர்லயே போயி பேசிட்டு வரேன்”னுட்டு அவர் அறைக்கு போனார்.

வசந்தி போனை எடுத்து அழைப்பு வந்த எண்ணை தேடினாள்.

நல்ல எண்ணமும் பேச்சும் எப்போதும் நமக்கும் பிறர்க்கும் நன்மை பயக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *