அப்படிப் போடு – ஒரு பக்க கதை

 

‘’கொட மிளகா பஜ்ஜி போடுன்னு ஒரு மாசமா சொல்லிட்டிருக்கேன்.

காதுல போட்டுக்க மாட்டேங்கறே’’ கண்ணுசாமியின் குரலில் ஏக்கம் கலந்த வருத்தம்.

‘யோவ், முந்தா நாள் போட்டேனே, போடப் போடத் தின்னு தீர்த்தியே, மறந்து போச்சா?’’ என்றாள் கல்யாணி.

‘ஏண்டி பொய் சொல்றே?’’

‘நான் எதுக்குப் பொய் சொல்லணும்? பத்து நாள் முந்தி, சுடச் சுடச் குழிப்பணியாரம் வேணும்னே, போட்டுத்தந்தேன். வயிறு முட்டத் தின்னே.

அடுத்த நாளே, ‘பணியாரம் கேட்டேனே, ஏன் போடலேன்னு கோவிச்சுக்கிட்டே. நல்லா போதை ஏத்திட்டு வந்து திங்கறே. தூங்கி முழிச்சா எல்லாம் மறந்து போயிடுது…!’’

முகம் சிவக்கச் சொன்னாள் கல்யாணி.

‘என்னை மன்னிச்சிடு புள்ளே’’ குழைவாகச் சொல்லிக் கொண்டே கல்யாணியின் கையைப் பற்றினான் கண்ணுச்சாமி.

குடிச்சிட்டு வந்து என்னைத் தொடுற வேலையை வெச்சுக்காதே. நான் கர்ப்பம் ஆயிட்டா, ‘எப்பத் தொட்டேன்’னு சந்தேகமா பார்ப்பே’

குடிசையின் ஒரு மூலையில் முடங்கிப்படுத்துக் கொண்டான் கண்ணுச்சாமி.

- ப.பரமசிவம் (8-9-10) 

தொடர்புடைய சிறுகதைகள்
தெருவில் யாரோ வெள்ளையுஞ் சள்ளையுமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஊருக்குப் புதுசா? திண்ணையிலிருந்த சுப்பன் கிழவன் கண் களை இடுக்கிக் கொண்டு பார்த்தான். ஒரு மண்ணுந்தெரியல. “ஆரது.” “அக்ரி ஆபீஸர்.” “ம்..ம்..ம்..பயிர் பச்சை டாக்டரா?.” ------ஆபீஸர் சிரித்தார்.கிட்டே சென்றார். கிழவன் உட்காருமாறு திண்ணையைத் தட்டவும்,உட்கார்ந்தார். “என்னவோ புதுசு புதுசா ...
மேலும் கதையை படிக்க...
கல்யாண வீட்டிலே முதல் பந்தியிலே உட்கார்ந்து சாப்பிடற மாதிரி சாப்பாடு ஆனதும் முதலிலே உட்கார்ந்து இவ ஒரு புடி புடிச்சிடறா…முட்டையைக் கூட விட்டு வைக்கிறதில்லே! எனக்கே பார்க்க அசிங்கமாயிருக்கு! அந்தப் பள்ளிக்கூடத்தில் வேலை செய்யும் பெண்கள் சத்துணவைக் கவனிக்கும் தன் தோழி மாலதியைப் பற்றிப் ...
மேலும் கதையை படிக்க...
பப்பாளி மரம்
தனி மரம். யார் இருக்கிறார்கள். பேசிக் கொள்வதென்றால்கூட அவருக்கு அவரே தான். சில சமயங்களில் அந்தப் பப்பாளி மரத்தோடு பேசிக் கொண்டிருப்பார். அது அவருடைய வலி குறித்த பிலாக்கணங்களைத் தினம் கவனத்தோடு கேட்கும். இதமாய் அசைந்து ஆறுதலாய் வருடிக் கொடுக்கும். படபடப்புத் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு முக்கியமான வைபவத்திற்காக இரண்டு நாட்கள் நாங்கள் சென்னை போய் வந்தவுடன் என் மாமியார் ஒரே புலம்பல். மொலு மொலுவேன்று பொரிந்து தள்ளினார். “இங்கே பாரு சுசீலா, இப்படி முன்னே பின்னே பழக்கமில்லாத புது எடத்துல என்னத் தனியா விட்டுட்டு இனிமே ...
மேலும் கதையை படிக்க...
குண்டுகளில் பலவகை உண்டு. வெடிக்கக்கூடிய குண்டுகளைப்பற்றி நான் சொல்ல வரவில்லை. இது ரசிக்கக்கூடிய குண்டு. அழகிய குண்டு. அந்த வகையைச் சேர்ந்தவள்தான் அசியா. வழமையாக அவள் அணியும் உடலிறுக்கமான காற்சட்டையும் மேற்சட்டையும் அவளது குண்டு போன்ற தோற்றத்திற்குக் காரணமாயிருக்கலாம். அசியாவைக் காணும் சந்தர்ப்பம் ...
மேலும் கதையை படிக்க...
வியூகம்
முதல் பந்தி – ஒரு பக்க கதை
பப்பாளி மரம்
நேற்றைய நினைவுகள் கதை தான்
இளமையின் ரகசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)