அன்பு – ஒரு பக்க கதை

 

சந்துரு பள்ளிப்பாடம் எழுதிக் கொண்டிருந்தான்.

அம்மா ஆபீஸுக்குப் போகுமுன் காலை, மதிய சாப்பாட்டை தயார் செய்து கொண்டிருந்தாள்.

டேய் சந்துரு, கடையிலே போய் காய்கறி வாங்கிவா. பரிமளம் வேலை ஏவினாள். வாங்கி வந்தான்.

அம்மா சேலையை லாண்டரியிலே கொடுத்து அயர்ன் பண்ணி வாங்கி வா. அம்மா செருப்பைக் கொஞ்சம் துடைத்து வை. முகம் சுளிக்காமல் செய்தான்.

அம்மா ஆபீஸ் போக ரெடியானாள்.

பிள்ளையைப் படிக்கவிடாமல் வேலை வாங்கி விட்டேனே என்று கவலைப்பட்ட அம்மா, அவனுக்கு பாக்கெட் மணியாக ஐந்து ரூபாய் கொடுத்தாள்.

சந்துரு திருப்பிக் கொடுத்தான்.

அம்மா உங்க மேலுள்ள அன்பினால் இந்த வேலையை எல்லாம் செய்தேன். அதற்கு இது என்னம்மா கூலியா?

அந்த வார்த்தை பரிமளத்தின் நடையைப் பின்னியது.

– பி.எஸ்.ஜேம்ஸ் (மே 2010) 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘ஞானோதயம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) தன்னுடைய வாழ்க்கையில் ஏதோவொரு பெரிய சதித்திட்டம் போட்டு நடப்பது போல இருந்தது சபரிநாதனுக்கு. அப்படி இல்லாமலா இந்த நேரம் பார்த்து மச்சக்காளை மண்டையைப் போட்டு வைப்பான்? ஒரு விதத்தில் பார்த்தால் சாவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
''அப்ப, உங்க பெண்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுடுங்க, மாப்பிள்ளை பிடிச்சிருக்கானு...'' என்றார் மாப்பிள்ளையின் தகப்பனார். ''ராதா ரொம்பவும் பயந்த சுபாவங்க. மாப்பிள்ளை உனக்குப் பிடிச்சிருக்கானு கேட்டா, அதுக்கு வியர்த்து வெலவெலத்துப் போகும். ஆம்பிளைங்களைக் கண்டாலே அதுக்கு வெட்கம்'' என்றார் பெண்ணின் தந்தை. ''ஆமாங்க. வளர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
அந்த நட்சத்திர ஹோட்டலில் நடந்த இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி செமினார் ஃபிரேக்கின் போது ராமனைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் விதி வியப்பானது. 25 வருடங்களுக்குப் பிறகு இருவரும் சந்திக்கிறோம். இந்த 25 வருடங்கள் எங்கள் சந்திப்பின் இடைவெளி மட்டுமல்ல; உடையவே உடையாது ...
மேலும் கதையை படிக்க...
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
சொந்த ஊரிலிருந்த அப்பா திடீரென்று இறந்துவிட்டதாக ராஜபாண்டிக்குத் தகவல் வந்தது. அவனுள் பல கேள்விகள் எழுந்தன. மீதி எழுத வேண்டிய எம்.பி.ஏ. தேர்வுகளை எப்போது எழுதுவது? அடுத்த முறை எழுதினால் ரேங்க் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இருக்காதே... கேம்பஸ் இண்டர்வியூவில் ...
மேலும் கதையை படிக்க...
தி.மு. : காதலி கடிதத்தில் உங்களை முதன் முதலில் பார்த்தபோது அது இளம் பச்சையா கரும் பச்சையா என்று தெரியவில்லை. எனக்கு எல்லாமே புதியதாகவும், இளமையானதாகவும், அதிகாலை பனித்துளியைப்போல் பிரெஷ்ஷாகவும், தெரிந்தது. என் கண்களை இமைக்க முடியாமல் போனதற்கு காரணம் கண்டுபிடிக்க ...
மேலும் கதையை படிக்க...
தாமிரபரணி
பயந்தாங்கோள்ளி
எது துரோகம்?
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
திருமணத்துக்கு முன் – திருமணத்துக்குப் பின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)