அனுபவம் – ஒரு பக்க கதை

 

“என்னம்மா…டவுனில் போனமாதம் புதுசா ஒரு ஜவுளிக்கடை திறந்திருக்காங்க…அதை விட்டுட்டு பழைய கடைகளில்தான் அண்ணன் கல்யாணத்திற்கு
துணி வாங்கணும்னு சொல்றே, ஏதாவது சென்டிமென்டா..?” – மேனகா தன் தாய் கனகாவிடம் கேட்டாள்.

”அந்தப் பழைய கடையில் இரண்டு துணிகள் எடுப்போம் அதே மாதிரி துணிகளின் விலையை புதுக்கடையில் விசாரிப்போம், அப்ப காரணம் புரிஞ்சிக்குவே” என்றாள் கனகா.

துணிகளின் விலையை ஒப்பிட்டுப் பார்த்தபொழுது புதுக்கடையில் விலை சற்று ஏற்றமாக இருந்தது.

“விலை இப்படித்தான் இருக்கும்னு உனக்கு எப்படிம்மா தெரியும்?”, மேனகா ஆச்சரியமாக கேட்டாள்.

“வட்டிக்கு கடன் வாங்கி, பிரபலங்களை அழைத்து புதுசா கடை திறக்கறவங்க, அந்த செலவையெல்லாம் வாடிக்கையாளர்களிடமிருந்து குறுகிய காலத்தில்
எப்படி வசுலிக்கலாம்னுதான் முயற்சிபண்ணுவாங்க. பழைய கடைக்காரங்க, பெரும்பாலும் கடனிலிருந்து மீண்டு வந்திருப்பாங்க, அதனால அம்மாதிரி செலவுகள்
அவர்களுக்கு தற்பொழுது இருக்காது. அதனால்தான் புதுக்கடையில் இந்த ஏற்றவிலை”.

படிக்காத தன் தாயின் அனுபவ அறிவைக்கண்டு வியந்து போனாள் மேனகா.

- எஸ்.எஸ்.ராமன் (பிப்ரவரி 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
மாண்புமிகு மாணவன்
எனக்குள் பதற்றம் பொங்கிப் பரவிக் கொண்டிருந்தது. தாலி கட்ட இன்னும் சில நிமிடங்கள்தான் இருந்தன. சோதிடர் குறித்துக் கொடுத்த நேரப்படி அழைப்பிதழில் போட்டிருந்த நேரப்படி, இன்னும் பத்து நிமிடங்களுக்குள் தாலி கட்ட வேண்டும். திருமண வீட்டில் யாரும் இதைப்பற்றி பரபரப்படைந்ததாகவே தெரியவில்லை. எல்லாரும் வடக்கே ...
மேலும் கதையை படிக்க...
நான் எனது திருமணப் போட்டோவை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றோடு எனக்கும் மோகனாவுக்கும் திருமணமாகி சரியாக ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.அவள் மட்டும் என்னுடன் இருந்திருந்தால் கோவில்,சினிமா,பீசா ஹட் என்று இந்நாள் மகிழ்ச்சியாக கழிந்திருக்கும்.அவள் தான் என்னோடு கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டாளே.மோகனா ...
மேலும் கதையை படிக்க...
தாயைப்போல் பெண்ணா…
""ரேணு... எத்தனை தடவை கூப்பிடறது... காது என்ன செவிடா?'' அப்பாவின் கத்தல், ஊரைப் பிளந்தது. ""இல்லீங்க... குக்கர் சப்தத்தில கேக்கலை.'' ""அந்த துண்டை எடுத்துக் குடு.'' அப்பாவின் கைக்கெட்டும் தூரத்தில், அவர் கால் கீழ் விழுந்து விட்ட துண்டை எடுத்து, பவ்யமாக கொடுத்து விட்டு, சமையலை கவனிக்க ...
மேலும் கதையை படிக்க...
ஆதவன் கிழக்கில் உதிக்க, ஈரக் கூந்தலை உலர்த்திய படி பால்கனியில் வந்து நின்றாள் வெண்மதி. பனிப் புகை முற்றி--லும் விலகாத நிலையிலும் மலை மேல் ஏறுபவர்களும், தரிசனம் முடிந்து கீழிறங்கு-பவர் களுமாக.. திருமலை சுறுசுறுப்பாக, பரவசமாக இருந்தது. பிரம்மோற்சவம் நெருங்கிக் கொண்டிருந்த ...
மேலும் கதையை படிக்க...
இந்த வாழ்க்கையை வாழ்ந்து தீர வேண்டியிருப்பதால் கட்டிலில் காட்சிப் பொருளாய் நான்…மக்கள் என்னைப் பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அவர்களின் கழுத்தைப் பார்க்கிறேன். இல்லை; அது இல்லை. ஐயோ… அது வேண்டும். கட்டாயம் வேண்டும். எப்படிச் சொல்வது? புரிந்து கொள்வார்களா? அவர்களுக்குச் சொல்ல என்னிடம் நிறைய ...
மேலும் கதையை படிக்க...
மாண்புமிகு மாணவன்
ஆணாதிக்கம்
தாயைப்போல் பெண்ணா…
நிம்மதி!
இறப்பின் விளிம்பில். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)